தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மார்ச் 21, 2016

என் நூல் அகம் 10


 மனசு தளத்தின் பதிவர் நண்பர். திரு. சே. குமார் அவர்களின் மூலம் பழக்கத்துக்கு ஆனவர் மூஞ்சிப் புத்தகம் நண்பர் திரு. கனவுப் பிரியன் அவர்கள் நல்லதொரு பண்பான பழக்கத்துக்குறியவர் இவர் எழுதிய நூல்தான் ’’கூழாங்கற்கள்’’ நல்ல மனசுடன் நண்பர் சே. குமார் அவர்கள் வீட்டில் பெய்த மழை ரோட்டிலும் பெய்யட்டுமே என்று எனக்கும் இந்நூலை ஓசியில் படிக்க கொடுத்தார் ரோட்டிலும் பெய்த மழையின் பலனை ஏட்டிலும் கொடுப்போமே என்று கருதியது எனது மனசு இதோ தங்களுக்காக இணைய ஏட்டில் உங்களின் வீட்டில் A/c யை போட்டுக் கொண்டு கணினியின் தூசியை தட்டி விட்டு படியுங்கள் சிறுகதைகளின் கதம்பக் குவியல்.
திரு. கனவுப்பிரியன், திரு. கில்லர்ஜி, திரு. சே. குமார்.
Abu Dhabi Indian Social Center ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த பொழுது இருபுறமும் சீருடை அணிந்து என்னை அன்புப்பிடியில் சிறை பிடித்தவர்களுடன் நான்

நூலின் முதல்கதை இந்த மடம் இல்லைன்னா சந்த மடம் இதில் வரும் ஐயப்பன் என்பவரை இந்த சமூகம் ஞானியைப் போல் பார்கின்றது ஆனால் ? அதேபோல் தனது குடும்பத்து நபர் இருப்பது பிடிக்கவில்லை இதுதான் இந்த சமூகம் என்பதை சொல்லாமல் சொல்லும் யதார்த்தநடை அழகு.
திக்குவாய்க் குழந்தையை குணப்படுத்த நாட்டை விட்டே போனவனுக்கு அந்தக் குழந்தையால் கிடைத்த அற்புத வாழ்க்கையை கூழாங்கற்கள் சொல்லியது சில கூமுட்டைகளுக்கு மனதில் தோன்றலாம் நம் மகளும் திக்குவாயானால் ?

களிமண் என்ற கதையில் இன்றைய சமூகம் நவீன வசதிகளில் மாறி இழந்தவைகளை காணும் பொழுது எல்லோருடைய மனதிலும் களிமண் அப்பிக் கொள்கின்றது.
குண்டு பாக்கிஸ்தானி என்ற கதையில் பயணத்தில் கிடைக்கும் ஒரு மனிதரின் விடயங்களை அழகாக விளக்கி இருக்கின்றார் இதிலும் பாக்கிஸ்தானியரின் சில மறைமுக விடயங்களை நாசூக்காக சொல்லிச் செல்வது மிகவும் யதார்த்தம் இது அயல் தேசத்தில் வாழ்பவர்களுக்கு சட்டென புரிந்து விடும்.

வடிவு என்ற கதையில் முடிவில் கல் மனதையும் கலங்கடித்து விடுகின்றார்.
Made in China என்ற கதையில் கோல்மால் விடயங்களை அழகான நகைச்சுவையாக சொல்கின்ற விதம் அழகு

நெற்றித் தழும்பு என்ற கதையில் //வானமும் கடலும் பயணிக்கத்தான் லாயக்கு, மற்றபடி தரைதான் எப்பொழுதும் சுகம்// என்ற உண்மையான வரிகளை மிகவும் உணர்ந்து ரசித்தேன்.
சாட்சிப்பிழை என்ற கதையின் சங்கரன் என்பவனின் வாழ்க்கை அரசியல் தொண்டர்களுக்கு நிச்சயமாக நல்லதொரு படிப்பினையை கொடுக்கும்.

உப்புக் காற்று இதில் உப்பளத்து வாழ்க்கையைப் பற்றிய விடயங்களோடு இரண்டு பெண்டாட்டிகாரனின் கதையை அழகிய நடையுடன் தருகிறார்.
கடல் தாண்டிய உறவு இதில் இறந்து போன பழைய காதலைச் சொல்லுகின்றார்.

பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா ? என்ற கதையில் நல்ல நகைசுவையான விடயத்தை தருகின்றார்.
நாடு துறந்தவன் கதை இதில் ஒரு பாலஸ்தீனியரின் வாழ்க்கையை அழகாக சொல்லிச் செல்கின்றார் அவர்களின் இயல்பு குணங்களை சாதாரணமாக சொல்லிச் சென்ற விதம் அறிந்து பிரமித்தேன் காரணம் நானும் பாலஸ்தீனியர்களுடன் பழகி அவர்களின் குணநலன் அறிந்தவனே.

இனி ஒரு விதி செய்வோம் என்ற கதையில் இவர் சொல்லும் விடயங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தால் ? நாட்டில் மருத்துவமனைகளை மூட வேண்டியது வருமோ ? என்றே எனக்கு தோன்றுகின்றது இதுவொரு உரத்த சிந்தனையின் விளைவு.
மனிதரில் இத்தனை நிறங்களா ? இதில் எதையுமே ஆராயாமல் ஒரு மனிதனை அயோக்கியன் என்று தீர்மானித்து விடுகின்றது இந்த சமூகம் இதை சாதாரணமாக சொல்லிச் செல்கின்றார்.

பனங்கொட்டைச் சாமியார் இதில் //மனைவி இருக்கும்வரை தான் இந்த உலகம் இனிக்கும் புரியாதவர்கள் மனைவியுன் சண்டையிட்டு கொள்வார்கள்// என்ற இந்த உயிர்ப்பான வரிகளைக்கண்டு பிரமித்தேன் காரணம் இது என்னைப் போன்ற அனுபவசாலிகளுக்கு வரவேண்டிய சிந்தனை இவருக்கு எப்படி ? என்ற எண்ணமே எனக்கு தோன்றியது.
ஓ... ரசிக்கும் சீமானே நான்கூட நாம் தமிழர் கட்சித் தலைவரைப்பற்றி சொல்லப் போகின்றாரோ என்று நினைத்து விட்டேன் கதையைப்  படித்தால் ஒரு ஜோக்கான வாழ்க்கை வாழ நினைக்கும் ஒரு ஜோக்காளி.

அவரு அனில்கும்ளே மாதிரி இதில் இந்தியர்களும், பாக்கிஸ்தானியர்களும் கிரிக்கெட் விளையாடுவது நல்ல நகைச்சுவை.
ரபிக் @ ஜிமெயில்.காம் இதில் ஒரு விபத்துகூட நன்மையை கருதியே என்பதை சொல்லியது மனதை கனக்கச் செய்தது.

ஜைனப் அல் பாக்கர் இதில் அரேபியர்களின் குணங்களைப்பற்றி சொல்லி இருக்கிறார் சில இடங்களில் அரபு வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறார் இதில் ஓரிடத்தில் ‘’நான் ஸ்டார் கம்பெனியிலிருந்து வருகிறேன்’’ என்று சொல்வதை அரபு மொழியில் பேசியிருப்பது படிப்பவர்களுக்கு விளங்குவது கஷ்டமானது காரணம் இதைப்படிக்கும் தமிழர்கள் அனைவருக்கும் அரபு மொழி தெரியும் என்பதை சொல்ல முடியாது இதில் தமிழாக்கமும் கொடுத்திருக்கலாம் என்பது எமது கருத்து மேலும் அரேபியர்களுடன் பேச்சை தொடங்கும் பொழுது முதலில் அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லிய பிறகே பேசமுடியும் இதில் ஓரிடத்திலும் அதை சுட்டிக்காட்டாதது சிறிய குறை போன்று தோன்றுகிறது இதை நான் குறிப்பிடக் காரணம் அரபு வார்த்தைகளை பயன் படுத்தி இருப்பதால் இதன் முடிவில் இவர் சொல்லி இருக்கும் சில விடயங்கள் இவரது தைரியத்தை பாராட்டலாம் என்றாலும்கூட அதில் ஒன்றை மட்டும் தவிர்த்திருக்கலாம் காரணம எழுத்தாளன் ஜாதி மத பேதமற்றவனாக அறியப்படல் வேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்து மன்னிக்கவும் ஆசிரியரே
ஜூவானா என்றொரு பிலிப்பைனி பெண் இதில் ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் வேதனையை உணர்த்தியது இது உண்மையான சம்பவமாககூட இருக்கலாமோ ? என்ற எண்ணம் வந்தது இருக்க வேண்டாமே என்பதும்கூட.

அக்கா நீங்க அழகா இருக்கீங்க ! இதில் முகநூல் பழக்கத்தால் சில சஞ்சலங்கள் வருவதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கின்றார்.

இப்படி 21 பாகமாக அழகிய நகைச்சுவை நடையில் படித்து ரசிக்க வேண்டிய நூல் நூலின் ஆசிரியர் நண்பர் கனவுப்பிரியன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.

எனது முந்தைய விமர்சனங்கள் படிக்காதவர்கள் கீழே சொடுக்க...


தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

தாங்கள் விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன் நண்பரே.

46 கருத்துகள்:

  1. மிக அருமையான விமர்சனம் அண்ணா...
    கனவுப் பிரியன் அண்ணாவுக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. நண்பர் கனவுப்பிரியன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. மிகச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
    முன்னர் எழுதியது எப்படியோ படிக்க விட்டுப் போனது
    படிக்கத் துவங்குகிறேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் கருத்துரைக்கும், தொடர்வதற்கும் நன்றி

      நீக்கு
  4. இதுவரை படிக்கவில்லை. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது தங்களின் விமர்சனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான நூல் அறிமுகம். பாராட்டுகள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. தங்களுக்கும் கனவுப்பிரியன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே
    நூலைப் படித்திட மனம் ஆவல் கொள்கின்றது
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.

      நீக்கு
  7. அன்புள்ள ஜி,

    கனமிகு. கனப்பிரியன் அவர்களின் ‘கூழாங்கற்கள்’ நூல் அறிமுகம் கண்டு மகிழ்ந்தோம்.

    நன்றி.

    தமிழ்மணம் ஆறு.

    பதிலளிநீக்கு
  8. தங்களுடைய அறிமுகமே - நூலில் சிறப்புக்குக் கட்டியம் கூறுகின்றது..

    நூல் விமர்சனம் அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. விமரிசனம் மிக அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  10. சுருக்கமான விமர்சனம் என்றாலும் சொல்லவேண்டியவற்றை தெளிவாக சொலி விட்டர்கள் கவிப்ரியன் அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்களும் விரிவாக கருத்துரை தந்துள்ளீர்கள்.

      நீக்கு
  11. சுட்டிக் காட்ட வேண்டிய விஷ்யத்தையும் அழகாய் சுட்டிக் காட்டி பாராட்டவேண்டிய விஷயங்களை பாராட்டி அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். கனவுபிரியன் அவர்களுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது நன்றி

      நீக்கு
  12. கவிப் பிரியனா ,கனவுப் பிரியனா ,கடைசி வரியில் குழப்பி விட்டீர்களே !
    ஜோக்காளி உண்மையில் இவர்தான் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கனவுப்பிரியன் என்பதே சரி திருத்தி விட்டேன் நன்றி

      நீக்கு

  13. அத்தனை கதைகளையும் படித்து, நறுக்குத் தெறித்தாற்போல் தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! கனவுப்பிரியனுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  14. அருமையான விமர்சனம் நண்பரே! நூலினை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
    த ம 12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துரைக்கும்...

      நீக்கு
  15. அத்தனை கதையையும் படித்ததெனும் அத்தாட்சியாய் அத்தனை கதை குறித்தும் அழகிய விமர்சனம்,எழுத்தாளன் ஜாதி மதம் பேதமையற்றவனாய் அறியப்பட வேண்டும் எனும் கருத்துடன் அருமை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது குறிப்பிட்ட கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி

      நீக்கு
  16. நன்றி நண்பரே.. முன்னமே படித்துவிட்டேன் ..நல்ல கதைகள்...உங்கள் விமர்சனம் மிக அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. நல்ல விமர்சனம் கில்லர்ஜி! பல தளங்களிலும் அவரது நூல் பற்றி நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி ஜி! கனவுப்பிரியன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  18. வணக்கம்
    ஜி

    விமர்சனத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் நூலில் சொல்லிய விடயத்தை முழுமையாக அறியத்தந்தமைக்கு நன்றி ஜி த.ம 15
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  19. நூல் விமர்சனம் அருமை......

    பதிலளிநீக்கு
  20. சிறப்பான விமர்சனம் ...குறைகளை சுட்டி காட்டி ..நிறைகளை பாராட்டி என ...
    வாழ்த்துக்கள் ...உங்களுக்கும் ..கனவுப்பிரியன் அவர்களுக்கும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கருத்துரை தந்த விதம் நன்று

      நீக்கு
  21. கதைகளைப் படித்து அதில் நீங்கள் ரசித்தவற்றைக் கூறும் பாங்கு பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  22. பொதுவாக, விமரிசனங்களில் நிறைகளை மட்டுமே பட்டியலிடுவார்கள். தாங்கள் நிறை குறைகளையும் பட்டியலிட்டு, நடு நிலையான விமரிசகர் என்னும் பட்டம் பெற்றிருக்கின்றீர் நண்பரே! அசத்துங்கள்... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் எப்போதுமே உண்மைகளை மறைப்பதில்லை வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. நூலக விமர்சனம் அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு