வணக்கம் நட்பூக்களே... கடந்த
வாரம் அபுதாபியில் பரவலாக மழையும்,
காற்றும் துபாயில் சற்றுப்பலமாகவும் இதை நமது நாட்டில் தூறல் என்றுதான் சொல்வோம்
இன்னொரு அதிசயம் நான் இந்த நாட்டுக்கு வந்து கடந்த இருபது வருடங்களில் முதல் முறையாக இடி முழக்கம்
கேட்டேன் இதில் வேடிக்கை என்னவென்றால் ? அரேபியர்களுக்கு மழை என்றால்
அதியசமாக வேடிக்கை பார்ப்பார்கள் பெண்கள் அதைவிட நம்மூரில் குழந்தைகள் மழையில்
நனைந்து விளையாட ஆசைப்படுமே அதைப்போல மழையில் நனைவது பிடிக்கும்.
அடடா மழை.. .!
பதிலளிநீக்குஎன்று உங்களின் ஒரு கவிதை இருக்கும் என நினைத்தேன் ..
மெயிலின் தமிழ் மொழி பெயர்ப்பு ....சூப்பர்
வீடியோ எடுத்தவங்க ... ஐயோ பாவம்
வாங்க சகோ வீடியோ நான்தான் எடுத்தேன் எதுக்கு பாவம் ?
நீக்குஐய்யோ ..உங்க வீடியோ வுக்கு அந்த...ஐயோ பாவம் ..இல்ல
நீக்குவீடியோ எடுக்க போன அந்த பெண்ணுக்கு ... ஐயோ பாவம் ..
சின்ன குழப்பம் ஹி ஹி ...
அதுக்கெல்லாம் பாவமா ? பழகிப்பார்த்தால் தெரியும் அரபிப் பெண்களின் குணம்
நீக்குஓஹோ ..
நீக்குமீள் வருகைக்கு நன்றி
நீக்குஅடி ஆக்கங்கெட்டகூவை கூமுட்டைத்தனமா நீ செய்துப்புட்டு ஆரம்பத்துலயே போகாதேன்னு சொன்னேனே... கேட்டியா ? நீங்க என்னைக்கிடி கேட்டீங்க ? புருஷனையே மதிக்க மாட்டீங்க நான் சொல்றதையா கேட்கப் போறீங்க.. ? நாளைப்பின்னே தேவகோட்டை பக்கம் வாங்க அப்ப வச்சுக்கிறேன் உங்களைச் சொல்லி குற்றமில்லை வயக்காட்டுல நின்னு நாத்து நட்டு இருந்தீன்னா உங்களுக்கு பணத்தோட அருமை தெரியும் ஏதோ வருது எப்படியோ... செலவு செஞ்சுக்கிட்டு பணத்தை விரையம் பண்ணுறீங்க அப்படின்னு மனசுக்குள்ளேயே திட்டிவிட்டு வேறென்ன ? நேரில் சொல்ல முடியுமா ? சொல்லலாம் ஆனால் ? விசா ரத்து பண்ணி ஃப்ளைட்ல ஏத்தி விட்ருவாகளாமே... ச்சே இப்படியே விட்டால் இந்த மக்களை எப்படி வழி நடத்துவது ?
பதிலளிநீக்குஇங்கேதான் நண்பரே சிரிப்பே
வந்து விட்டது....
மரங்கள் எல்லாம் ஒட்டப்பட்டவைகளே...
ஆம் நண்பரே மரத்தை சோற்றுப் பருக்கை வைத்து ஒட்டி இருக்கின்ரார்கள்.
நீக்குஅதிசயமா மழை பெய்திருக்கிறது. அப்போ இன்னுமொரு மழை இருக்குனு சொல்லுங்க ஜி..அப்படித்தானே நாம் சொல்லுவோம்.அதிசயமாக ஏதாவது நிகழ்ந்தால் "மழை வரப்போகுதுனு" அதான்...ஹிஹிஹி..மழைக்கே மழையா!!!!
பதிலளிநீக்குநம்ம ரமணன் சொன்னது போலவே இங்கு ரகுமான் சொன்னாரு மறுநாள் பார்த்தால் வெயில் பட்டையை கிளப்பிருச்சு எல்லா நாட்டுலயுமே இப்படித்தான் படிச்சு கொடுப்பாங்களோ...
நீக்குவழக்கம்போல தமிழ்மணம் ஓட்டு, உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஃப்ளைட் இன்னும் லேன்ட் ஆகலை உங்க ஊர்ல.
பதிலளிநீக்குவாங்க மழையில் அடித்துப் போய் விட்டதோ...
நீக்குடீ.வி நியுஸில் பார்த்தேன்! அப்போதே உங்களது பதிவு வரும் என்று நினைத்தேன்! விரிவான பதிவிட்டு என் நம்பிக்கையை காப்பாற்றி விட்டீர்கள். வேலைப்பளு காரணமாக இணைய உலா வர இயலவில்லை! நேரம் கிடைக்கையில் பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.
நீக்குமுக நூலில் சில காணொளிகள் கண்டேன். மழை அவ்வளவு அபூர்வமா அங்கே!!
பதிலளிநீக்குமழை இங்கு அரிய விடயமே நண்பரே....
நீக்குஅதிசய மழை நண்பரே
பதிலளிநீக்குஆம் நண்பரே அதிசயமே...
நீக்குபல பேருக்கு கிடைக்காத அதிசயமாக பாலைவன மழையை பார்திருக்கிரீர்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகள் தோழர்.
தம +
உண்மை தோழரே வருகைக்கு நன்றி
நீக்குஅலோ எங்கே தமிழ்மண இணைப்பு ?
பதிலளிநீக்குவருக தோழரே தாங்கள் வந்த இன்று இப்படியா ?
நீக்குகூமுட்டையின் படத்தை போட்டிருந்தால் ரசித்து இருப்பேனே :)
பதிலளிநீக்குஹாஹாஹா போட்டு இருப்பேன் என்றாவது அது தவறாகி விடும் ஆனால் காணொளியில் உண்டு ஜி.
நீக்குமழையைப்பற்றியும் காற்றைப்பற்றியும் எனக்கும் தகவல்களும் புகைப்படங்களும் வந்தன. அபுதாபியில் தான் பாதிப்புக்கள் அதிகம் என்றார்கள். அமீரகம் வந்த புதிதில் [ 40 வருடங்களுக்கு முன்] எங்குமே பாலைவனமாக இருந்தது! எப்போதாவது மழைத்துளிகள் விழும்போது மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று கைகளில் மழைத்துளிகளை வாங்கி ரசிப்போம். இப்போது பாலவனத்தில் நிறைய சோலைகள் வந்து விட்டதால் அவ்வப்போது மழையும் பெய்கிறது!
பதிலளிநீக்குவருக சகோ அத்தனை பெரிய பாதிப்பு இல்லை கட்டடங்களில் மழை வெள்ளம் ஒழுகியது உண்மை காரணமென்ன ? இவர்கள் மழைக்காக கட்டடங்களை கட்டவில்லை வெயிலுக்காகத்தானே கட்டினார்கள் இப்பொழுதுதானே மழையின் தாக்கம் புரிகின்றது இனிமேல் சரியாகி விடும்.
நீக்குமழை என்பது தேவகோட்டைக்கே அபூர்வமாக மாறிவிட்டப் பிறகு தேவகோட்டையார் வாழும் இடத்தில் எப்படி இருக்கும்? வெறும் தூறலுக்கே இந்த கதி என்றால் சென்னை மழை பெய்தால் என்னவாகும். அருமையான அனுபவப் பதிவு.
பதிலளிநீக்குத ம 5
உண்மைதான் நண்பரே அவ்வகையில் நாம் எவ்வளவு பெரிய பேரிடர்களையும் சமாளித்து வருகிறோம்.
நீக்குஎன்னையும் நினைவில் வைத்து எனது தளம் வருகை தந்தமைக்கு நன்றி.
மழை அபூர்வம் என்று கேட்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.
பதிலளிநீக்குவருக முனைவரே மழை இங்கு அதிசய விடயமே....
நீக்கு
பதிலளிநீக்குமழையை பெய்யாத ஊரிலும் மழை பெய்தால் இப்படித்தான் நடக்கும்போல.
“நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யு மழை”
என அவ்வை பாட்டி பாடியது சரிதான். அந்த நல்லவர் யாரென்று நான் சொல்லத் தேவையில்லை!
شكرا على المعلومات (ஷூக்ரான் ஈலா அல்மேயலுமத்) இது சரியான சொற்பயன்பாடா எனத் தெரியவில்லை. இருப்பினும் கூகிளாருக்கு நன்றி!
வருக நண்பரே
நீக்குالمعلومات (அல் மஆலுமாத்) என்றால் தகவல் என்று அர்த்தம்
شكرا (ஷுக்ரான்) என்றால் நன்றி என்று அர்த்தம்
على ஈலா அல்ல ! அலா என்பதே சரி இரண்டுக்கும் இரண்டு அர்த்தங்கள் உண்டு
இலா என்றால் To என்று அர்த்தம்
அலா என்றால் For என்று அர்த்தம்
தாங்கள் ஆங்கிலத்தில் அடித்து கூகுளாண்டவரிடம் உதவி கேட்டிருப்பீர்கள் அவர் பெரும்பாலும் குழப்பமாகத்தான் தகவல் தருவார் பாவம் அவரும் எத்தனை மொழிகளைத்தான் நினைவில் வைத்துக் கொள்வார் ? மனுஷப்பயலுக ஸ்டேட்டுக்கு ஒரு மொழி வைத்தால் இப்படித்தான்
தங்களுக்கே தெரியும் ஆங்கிலத்தில் அடித்து தமிழில் கேட்டால் படிப்பதற்கு சிரிப்பாகத்தான் இருக்கும் வருகைக்கு நன்றி.
இது தான்..
பதிலளிநீக்குஉங்களை மேற்கொண்டு தொடரச் சொன்னது இதுக்குத் தான்..
மரம் மட்டையெல்லாம் புடுங்கிக்கிட்டுப் பறந்தாலும் -
தலைக் கட்டுங்க அடங்க மாட்டானுங்க!..
பொன்னுத்தாயி போனு பொசுக்குனு போனது தான் மிச்சம்!..
இனிய பதிவு தந்தமைக்கு நன்றி.. ஜி!..
அன்பின் ஜி இவர்களைப் பற்றித்தான் தெரிந்ததுதானே... வருகைக்கு நன்றி.
நீக்குமழை........காணாதவன் கண்ட மாதிரி.. அந்த ஊர் காரங்களுக்கு
பதிலளிநீக்குவருக நண்பரே காணதவங்க கண்டால் இப்படித்தானே...
நீக்கு2008-ல் நாங்கள் துபாய் சென்றிருந்தோம் மழையையும் கண்டோம் ஆனால் நாங்கள் இருந்த குடியிருப்புகளுக்கு அருகில் நீர் வடிய இரண்டு நாட்கள் ஆயிற்று.
பதிலளிநீக்குஆம் ஐயா 2008-லும் அதற்கு முன் 1996-ல் நான் வந்த மறு மாதம் பெரிய மழை பெய்தது.
நீக்குபாலையில் மழை!! பாவையின் போனிலும் மழை!
பதிலளிநீக்குபத்திரமா இருங்க சகோ
வருக சகோ நன்றி
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குஇருபது வருட அனுபவத்தில் இது புதுமை இல்லையா ! ஆமா அவள் கைப்பேசியில் மழைபட்டா என்ன மண் பட்டா என்ன பேசாம இருந்திருக்கலாமே பாஸ் ( தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் இல்லையா ஹா ஹா ஹா )
அரிவையர் அழகைக் காண
அடிமனம் ஏங்க வைக்கும்
அரபியின் நாட்டில் அந்தோ
அடைமழை வெளுத்துக் கட்டப்
புரவியில் போன கில்லர்
புகைப்படம் எடுத்து நன்றே
மரபினில் கவிதை ஆக்க
மகிழ்ந்தொரு பதிவை இட்டார் !
உழைப்பதன் வலியை என்றும்
உயிரிலே உணரா மங்கை
மழையினில் நனைந்த வண்ணம்
மகிழ்ந்தொளிப் படமெ டுக்க
அழைப்பிதழ் இன்றிக் கில்லர்
அறிவுரை சொல்லும் வேளை
கழைவழி நீராய்க் கையின்
பேசியுள் நின்று போச்சே !
இருபது ஆண்டு காலம்
இளமையைப் பாலை உண்ண
வருவது வரட்டும் என்றே
வாஞ்சையோ டுழைத்த கில்லர்
பெருமனக் கூட்டில் வாழும்
பிள்ளைகள் எதிர்கா லங்கள்
விருத்திகள் காணும் என்றே
விதந்துனான் வாழ்த்து கின்றேன் !
அருமை ஜி தொடர வாழ்த்துகள்
தம +1
பாவலரின் கவிதை மழையில் நனைந்தேன் நன்றி
நீக்குமழைபற்றிய பகிர்வு அருமை. மழை அனுபவம் புதுமை போலும் அரேபியர்களுக்கு இடையில் மழைப்பாட்டையும் போட்டிருக்கலாம் சின்னச்சின்ன மழைத்துளிகள்)))
பதிலளிநீக்குதங்களது கருத்தும் நன்று நண்பரே...
நீக்குபதிவோடு உள்ள கருத்துப்படமும் ஒரு கதை சொல்கிறதே!
பதிலளிநீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
20 வருடங்கள் என்னும் போது திகைத்து விட்டேன்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றி
நீக்குமழை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
நீக்குமழை அதிசயம்...இனிமேல் பழகிவிடும்...அங்கும்:)))...
பதிலளிநீக்குதம...என்ன ஆச்சு...
வருக சகோ நன்றி
நீக்கு