தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 01, 2016

Weekly Book


அண்ணே... ஆண்மீகத்துல ஈடுபட்டா ஆண்மீகவாதினு சொல்றாங்க சரி அப்படீனா பெண்மீகத்துல ஈடுபட்டா ஏன் பெண்பித்தன்னு சொல்றாங் ?
அடமூதேவி K-9 கிட்டே கேட்கிற கேள்வி எல்லாம் எங்கிட்டே கேட்கிறியடா... அது ஆண்மீகம் இல்லை ஆன்மீகம். அடுத்தது பெண் மீகம் இல்லை பெண் மோகம்.

ஆண்மீகம் புக் படிச்சேன் அதான் சந்தேகம் கேட்டேன்.
நீ முதல்ல ஒழுங்கா... பாடத்தை படி.

அண்ணே நடிகை நளினா போனவருஷம் 17 வது பிறந்தாள் கொண்டாடுனாங்க அப்படீனா... இந்த வருஷம் 18 தானே அப்பயேன் 17 வது பிறந்தநாள்னு கொண்டாடுறாங்க ?
அவங்க படிக்கும்போதே... கணக்குல வீக்காம்.

யேண்ணே உலக அழகி கிளியோ பாரட் அவுங்க இங்கிலீஷ்காரங்களா ? தமிழ்க்காரங்களா ரெண்டு மொழியையும் சேர்த்து பெயர் வச்சு இருக்காங்களே ?
அடமுண்டமே அவுங்க பேரு கிளியோ பாரட் இல்லை கிளியோ பாட்ரா.

அப்படியா நான் தமிழ்ல வீக்ல அதான்...
நீதான் வீக்லீ புக் படிக்கிறதுலகூட வீக்தானே...

அவுங்க சகோதரனை கல்யாணம் செய்து கிட்டாங்களாமே... ஏன் அந்த நாட்டுல வேறஆள் கிடைக்கலையா ?
ஆமா அதுக்கு சானியா மிர்ஷா எவ்வளவோ... தேவலை.

அப்படீனா அவங்களுக்கு பிறந்த குழந்தை அவுங்க அம்மாவை அம்மாயினு கூப்பிட்டுச்சா ? இல்லை அப்பத்தானு கூப்பிட்டுச்சா ?
வரலாறுல வராத கேள்வியெல்லாம் கேட்கிறியடா நான் எங்கேடா போவேன் நீ வரலாறுலயும் வீக்கா ?

யேண்ணே அறிவு வளரணும்னா அறிவியல் படிச்சா போதும்னு சொல்றாங்களே... உண்மையா ?
அய்யோ... அறிவுக்கொழுந்து அதுக்கு நிறைய படிப்பெல்லாம் இருக்கு இங்கிலீஷ் படிக்கணும்.

அதுக்கு ஜாக்கிஷான் சினிமா பார்த்தால் போதாதா ?
இப்படியே பார்த்தால் நீ இங்கிலீஷ் படம் டைரக்ட் பண்ணலாம்.

அப்படீனா புவியியல் எதுக்கு படிக்கிறாங்க ?
எனக்கு பூமி சுத்துடா... ஆளை விடுடா சாமி.

52 கருத்துகள்:

 1. அதனால தான் - நான் படிக்கவேயில்லே..

  ஆனாலும், பூமி (உற்சாக பானம் இல்லாம) சுத்துனா -
  புவியியல் தானே..

  பதிலளிநீக்கு
 2. ஹாஹா!ரசித்தேன்!

  ஆன்மீகம் எப்போதோ ஆண்மீகம் ஆகி விட்டதே!
  த.ம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த ஆண்களின் மீது ஆண்களுக்கும் மோகம் இருப்பது கேவலமானது

   நீக்கு
 3. நகைச்சுவை அனைத்தும் ரசித்தேன் சகோ.

  பதிலளிநீக்கு
 4. அன்பரே யாரந்த ஏழரை உங்க கிட்ட வந்து வம்பு இழுத்துருக்கு போல ...!!!
  அருமையான நகைச்சுவை பதிவு ஜி
  அருமையோ அருமை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்காகவே விரைவில் ஒரு 7 ½ பதிவு.

   நீக்கு
  2. சரி அன்பரே
   7½ பதிவா எனக்காகவா....?
   ம்ம்ம் பதியுங்கள் அன்பரே...

   நீக்கு
 5. அன்பின் ஜி..

  நேற்று நடந்தது அதேதான்.. தினார் தான் காரணம்..

  பணம் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தாலும்
  நல்ல மனம் நட்பினை வாழ வைக்கும்!..

  தளத்திற்கு வந்து கருத்துரைத்ததற்கு மகிழ்ச்சி..

  வாழ்க நட்பு..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி இதைத்தான் கருத்துரையில் பதிந்தேன் மீள் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 6. அண்ணே..வீக்லி புத்தகத்து அட்டைப்படத்துல ஒருத்தரு அழகா இருக்காருண்ணே...அது எப்படிண்ணே......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே Photoshop.com செல்லுங்கள் அதில் நம்மை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்.

   நீக்கு
 7. எத்தனை கேள்விகள்! ரசித்தேன் நண்பரே!

  பதிலளிநீக்கு
 8. சூப்பர்.... மிகவும் இரசித்துப் படித்தேன்

  பதிலளிநீக்கு
 9. இதே மாதிரி ஒரு நூலை முன்பொரு முறை உங்களது பதிவில் பார்த்த நினைவு. அதுதானா? இது வேறா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவருக்கு பதிவு புதிதுதான் புகைப்படம் முன்பு நகைச்சுவை பதிவுக்கு (பயபுள்ள எந்திரிக்காமல் படிக்கிறானே ?) என்ற வசனத்துக்கு பயன் படுத்தி இருக்கிறேன் தங்களின் ஞாபகசக்தி அபாரம்

   நீக்கு
 10. பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   வீக்லி புத்தகத்தில் ஜோரா இருக்கிறார்...! பூமி சுத்த வச்சிட்டீங்க...!

   த.ம.10

   நீக்கு
  2. வருக மணவையாரே சில பதிவுகளை நீங்களும் சுற்றி விட்டுறீங்களே...

   நீக்கு
 11. சகோதரனைக் கட்டிகிட்ட கிளியோபாத்ரா ,உண்மையில் சரித்திரப் புருஷி தான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த புருஷி புரூஸ்லீயை கட்டியிருந்திருக்கலாமோ... ஜி

   நீக்கு
 12. ஆஹா...கில்லர்ஜி ..மீண்டுவிட்டார்..
  இதைதான் எதிர்பார்த்தேன் ...அழகு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே எல்லாம் கலந்து நவரசமாக இருந்தால்தானே அனைவரையும் கவரும் வருகைக்கு நன்றி

   நீக்கு

 13. நகைச்சுவை நடிகர் செந்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியிடம் கேள்விகள் கேட்டது போன்று இருந்தது அந்த இருவரும் பேசிக்கொண்டது. இரசித்தேன்! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே அந்த எண்ணப்படியேதான் நினைத்து எழுதினேன் சரியாக சொல்லி விட்டீர்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 14. ஆன்மீகம் - ஆண்மீகம் நல்லா தான் இருக்கு, தொடர்கிறேன் சகோ,,

  பதிலளிநீக்கு
 15. என் முந்தைய பின்னூட்டம் என்னவாயிற்று?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களின் கருத்துரையை கணினியில் கண்ணை வைத்து பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் இப்பொழுதுதான் வந்தது.

   நீக்கு
 16. இதற்கு முந்தைய ஓட்டும், இதற்கான ஓட்டும் போட்டும் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. விழுந்ததா தெரியவில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க லொள்ளுன்னா இப்படித்தானே இருக்கும்.

   நீக்கு
 17. கொஞ்சம் ரிலாக்ஸ். கொஞ்சம் தகவல். அதைத் தாண்டி அட்டைப்படம் வடிவமைக்க ஒரு குறிப்பு - அருமை ஜி.

  பதிலளிநீக்கு
 18. அண்ணே ...நல்லா இருக்குனே ..

  பதிலளிநீக்கு
 19. வீக்லி புக் படம் நிறைய சிரமம் எடுத்தீரோ! சூப்பர்ப். அந்த ரகசியத்தினையும் ஒரு பதிவா போடுங்க! நாங்களும் தெரிஞ்சிக்கறோம்... அருமை நண்பரே!

  பதிலளிநீக்கு
 20. தம 13
  பதிவும் சூப்பர்....புத்தகத்தில்படமும் சூப்பர்.

  பதிலளிநீக்கு