சாலையில்
கடந்து
செல்லும்
மங்கையவள்
சோலையவளை
கவனிப்பேன்
பாலைவன பறவையவள்
காலையிலும்
கலையாத
அலையாய்
மாலையிலும்
சிலை
போல் நிலையாய்
அவளுக்காக
காத்திருப்பேன்
அந்த
இடத்தை விட்டு
நகர
மாட்டேன்
சொல்லி
விடத்தான் ஆசை
விழுந்திடுமோ
செருப்படி பூசை
யோசித்தேன்...
யோசித்தேன்...
நாட்களாய்...
வாரங்களாய்...
மாதங்களாய்....
வருடங்களாகியது...
இந்தியாவிலிருந்து
அழைப்பு
உனக்கு
பெண்
தயார் உடனே வா
திருமணம்
என்று
பொறுத்தது
போதும்
இன்று
கொட்டி விடுவதே...
நலம்
விடிய விடிய
கொட்டக்
கொட்ட விழித்திருந்து
அதிகாலையில்
குளித்து விட்டு
அழகு
மீசையை
அழகாக
முறுக்கி விட்டு
சாலையில்
காத்திருந்தேன்
அழகுத்
தேர் அசைந்து
வழக்கம்
போலவே வந்தது
சொல்ல
வாயெடுத்தேன்
சட்டென
குறுக்கே பாய்ந்த சீரூந்தால்
பதறியடித்து பின் வாங்கினேன்
அவள் மறைந்து விட்டாள்
மாலையில் அவளுக்காக காத்திருந்தேன்
பதறியடித்து பின் வாங்கினேன்
அவள் மறைந்து விட்டாள்
மாலையில் அவளுக்காக காத்திருந்தேன்
வந்தவளிடம்
எஸ்க்யூஸ் மீ
என்றேன்
திரும்பி பார்த்த
என்
தேவதை இதழ்களை
அசைத்து
கேட்டாள்
என்ன
ஸார் வேணும் ?
மறு நொடி திடுக்கிட்டேன்
தே’’வதை மனதை வதை’’த்தாள்
காரணம்
அப்படியே
சீர்காழி
எஸ். கோவிந்தராஜனின்
கணீரென்ற
வெங்கலக்குரல்
ச்சே
அவனா நீ ?
Chivas Regal சிவசம்போ-
ச்சே
கடைசியில் நட்டு.
சிவாதாமஸ்அலி-
கூந்தல்
நீளமாக வளர்ந்த பெண்ணும், மீசை பெரிசா வளர்த்த ஆணும் சேர்ந்தால் தரித்திரம்’’னு சரித்திரமே இருக்கு.
அது சரி... கவிதையை கதைபோல் ஆக்கிவிட்டீர்கள்...
பதிலளிநீக்குஅதென்னா நீளமாக் கூந்தல் வச்ச பொண்ணும் மீசை வச்ச ஆணும் சேர்ந்த தரித்திரமா...? இது ஆரு சொன்னது....
என்னிடம் கேட்டால் ? சொன்ன, சிவாதாமஸ்அலியிடம் கேளுங்கள்
நீக்குகண்டதெல்லாம் கனவோ?
பதிலளிநீக்குசோலை,பாலை,காலை,மாலை,அலை, சிலை என லையாவை நினைத்து எழுதினீர்களோ சார்?
வாங்க, லைலாவை நினைத்து மஜ்னு ஆனதே மிச்சம்
நீக்குஹா.... ஹா.... ஹா...
பதிலளிநீக்குசிரித்தமைக்கு நன்றி
நீக்குஇரசித்தேன் ஐயா.
பதிலளிநீக்குரசிப்புக்கு நன்றி
நீக்குகாத்திருந்து
பதிலளிநீக்குகாத்திருந்து
இப்படியாகி விட்டதே?
தம +1
எல்லாம் அறியாமைதான் நண்பரே...
நீக்குரசித்தேன் நண்பரே.
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குகண்ணால் காண்பதும் பொய் என்று இதைதான் சொன்னார்களோ :)
பதிலளிநீக்குஇருக்கலாம் ஜி வருகைக்கு நன்றி
நீக்குஹஹஹ ரசித்தோம் ஜி.
பதிலளிநீக்குஅது சரி இவ்வளவு நீளமான முடியுடன் எல்லாம் அங்கு அதான் உங்க பாலைவனத்தில் பெண்கள் இருக்கின்றார்களா என்ன?!!!!! ஹிஹிஹிஹி
இந்தியப்பெண் அப்படினு நினைச்சு இப்படி ஆகிப்போச்சு
நீக்குஏன்?.. இது வரைக்கும் நல்லாத் தானே போய்க்கிட்டு இருந்துச்சு!..
பதிலளிநீக்குரொம்பவும் திடுக்கிட்டு இருந்தால் -
இருக்கவே இருக்கின்றார் உடுக்கையடி உலகநாதன்!..
வாங்க ஜி அவரு தொடையில் சவுக்கடி கொடுப்பாரே...
நீக்குஹா ஹா ...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜி
நீக்குஎன்னா ஜி அப்படி முடிச்சிட்டிங்க?
பதிலளிநீக்குசீர்காழி குரல் அத்தனை மட்டமா போச்சா..உங்களுக்கு...
வருக கவிஞரே நான் தினமும் கேட்கும் வெங்கலக்குரலோன் இவர் எனக்கோ. உங்களுக்கோ இவர் குரல் இருந்தால் சந்தோசம் ‘’அவள்’’ என்று நினைத்தவளுக்கு இருந்தால் ?
நீக்குகூந்தல் நீளமாக இருந்தால் என்ன
பதிலளிநீக்குமீசை பெரிதாக இருந்தால் என்ன
அன்பால் இணைந்த பின்னே!
வாங்க நண்பரே அதற்காக தெரிஞ்ச பிறகுமா ?
நீக்குஇதைப் படித்ததும் பின்னழகில் மயங்கும் சிலர் பற்றிய கதை நினைவுக்கு வந்தது.இங்கு அதைச் சொன்னால் பலரும் விரும்பமாட்டார்கள்
பதிலளிநீக்குவாங்க ஐயா நாசூக்காக தங்களது நடையில் எழுதுங்கள் ரசிப்போம்.
நீக்குரசித்தேன் சகோ.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ
நீக்குகவிதையை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் ரசிப்புக்கு நன்றி நண்பரே
நீக்குஎப்படியோ உங்களின் எண்ணம் தீர்ந்ததல்லவா?
பதிலளிநீக்குவருக முனைவரே வருஷங்கள் வீணாப்போச்சே....
நீக்குரசிக்கும்படி இருந்தது....
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅய்யோ...முதல் காதலே...வெங்கலமா...???(என்னாது சடா கூந்தலும் கடா மீசையும் ஆகாதா....!!!!
பதிலளிநீக்குஆமாம் நண்பரே அப்படித்தான் அந்த ஆளு சொல்றாரு...
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குதே... வதை கவிதை... நன்கு இரசித்து வடித்திருந்தது... பிடித்திருந்தது... திரு நங்கையை...?
த.ம. ஒன்பது.
வருக மணவையாரே நீங்களும் காத்திருந்துதான் பொருத்தமான வாக்கு அளித்து இருக்கின்றீர்கள்.
நீக்குஐயோ ஐயோ ..இப்படி ஆயிருச்சே!
பதிலளிநீக்குஇருந்தாலும் அந்தக் கூந்தல்போலவே உங்கள் கவிதையும் அழகு!
வருக கவிஞரே அந்தக் கூந்தலைக் கண்டு மயங்கியதால் வந்த வினையே இது
நீக்குகாதல் வதை கவிதை அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நீக்குதலைப்பு அபாரம்.வார்த்தை விளையாட்டுகள் உங்களுக்கு கைவந்த கலை ஆயிற்றே
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
இரசிக்கவைக்கும் வரிகள் வேலையின் காரணமாக வலைப்பக்கம் வரமுடியாமல் ஆயிட்டு இனி தொடரலாம் ஜி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் தொடர்ந்தால் நலமே...
நீக்குAhaa....ninechen ivlo jolly vidum pothe
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ.
நீக்குகூந்தல் நீளமாக வளர்ந்த பெண்ணும்,
பதிலளிநீக்குமீசை பெரிசா வளர்த்த ஆணும் சேர்ந்தால்
தரித்திரம்’’னு சரித்திரமே இருக்கு.
சூப்பர் பஞ்ச் நண்பரே.....
தாமத வருகைக்கு மன்னிக்கவும் நண்பரே....
சரித்திரத்தில் முன்னோர்கள் இப்படித்தானே எழுதி வைத்தார்கள் நாமும் அவ்வழியில் ஏதாவது...
நீக்கு