தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 12, 2016

பிரார்த்தனை


இந்தக் குழந்தையை பார்த்து நான் பொறாமைப்படுகின்றேன் யாருக்கு கிடைக்கும் ? இந்த வகை தந்தை.

01. சித்தியின் கொடுமையில் சிக்கி சின்னா பின்னமாகும் குழந்தையை தட்டிக் கேட்க துப்பில்லாத தந்தைக(ல்)ள் வாழும் இந்த சமூகத்தில்.
02. பெற்ற குழந்தையை அன்றாடம் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்து செல்லும் தாய்க(ல்)ள் வாழும் இந்த சமூகத்தில்.
03. மனைவிக்கு பயந்து தாய்-தந்தை, சகோதர, சகோதரிகளிடம் பாசத்தை மறை(ந்)த்து வாழும் சுயநலவாதிகள் நிறைந்த இந்தக் கலியுத்திலும்.

எத்தனை உயர்ந்த மனம் படைத்த தந்தையை பெற்றிருக்கிறது, தற்காலம் வறுமை வாட்டினாலும், நிச்சயமாக இனிவரும் காலங்களில் அதிர்ஷ்டம் இந்தக் குழந்தைக்கு உண்டு, இந்தக் குழந்தை நீடூழி வாழ்ந்து இந்த தந்தையின் கடைசி காலத்தில் போற்றி பாதுகாக்க எமது ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்.

முகநூலில் (FACE BOOK ) இந்த புகைப்படத்தை பார்த்தேன் இவரது முகவரியோ, தொலைபேசி இலக்கமோ யாருக்காவது தெரிந்தால் ? தெரியப்படுத்தவும் காரணம் இவரை இரண்டொரு வார்த்தையில் பாராட்டவாவது வேண்டும் நன்றி.
My, I.D

38 கருத்துகள்:

  1. வாழ்க, அந்த நல்ல தந்தை..

    பதிலளிநீக்கு
  2. மனதை நெகிழ்த்திவிட்டது ஜி! தெரிய வந்தால் நிச்சயமாகப் பகிர்கின்றோம். எங்கள் ப்ளாகில் கிடைக்க வழி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ரிக்க்ஷாவைப் பார்த்தால்,இது தமிழ்நாடு இல்லையென்பது உறுதி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் ஜி நண்பர் வெங்கட் ஜி ஏரியாவாக இருக்கலாம்.

      நீக்கு
  4. சிறந்த தந்தைதான் சகோ.
    ஆனாலும் அந்த குழந்தை இப்படி வெயிலிலும் குளிரிலும் அலையவேண்டிய நிலையைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ அவர்களின் சூழ்நிலை எப்படியோ.... இது ஆபத்தும் கூடத்தான் பாவம்

      நீக்கு
  5. அருமையான தந்தை சகோ. எல்லோரும் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  6. அவரைப் பற்றிப் பகிர்ந்து எங்களை நெகிழ வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. பகவான்ஜி சொல்வது உண்மைதான்...

    பதிலளிநீக்கு
  8. என் தந்தையும் இவர் போலவே நண்பரே....

    பதிலளிநீக்கு
  9. போற்றப்பட வேண்டிய தந்தை!
    த ம 7

    பதிலளிநீக்கு
  10. தம 8
    மனதை என்னமோ செய்கிறது. இறைவன் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ பிரார்த்திக்கிறேன்.
    தந்தையின் அன்பு மனம் வாழ்க. கொடுத்துவைத்த சிசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கண்டிப்பாக பிரார்த்திப்போம்.

      நீக்கு
  11. அன்பின் ஜி..

    இந்தப் படம் ஓராண்டுக்கு முன் எனது Fb - க்கு வந்தது.. மனம் ரணமாகிப் போனது..

    எத்தனை எத்தனையோ படங்களச் சேகரித்து வைத்துள்ளேன்.. ஆனால் இதைக் காணவும் வலுவில்லாததால் சேகரித்துக் கொள்ள வில்லை..

    இதனை நேற்றிரவு மீண்டும் காண நேர்ந்தது..

    இந்தச் சூழலிலும் உழைக்கும் அந்த தந்தையைப் பாரட்டத்தான் வேண்டும்..

    ஆனாலும் -
    இவருக்குக் கை கொடுத்துக் காப்பாற்ற விரும்பாத ஜடங்களை என்ன செய்யலாம்?..

    சமூக அவலத்தை என்ன செய்வது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி எத்தனையோ பணமுதலைகள் வாழ்கின்றார்கள் இதையெல்லாம் அரசு கவனம் கெள்ளவேண்டும் அவர்கள் இதற்காகவா நேரம் ஒதுக்கப் போகிறார்கள் நேற்று நண்பர் திரு. ஸ்ரீராம் அவர்களின் தளத்தில் ஒரு கதை படித்தேன் உலகத்தில் பிச்சைக்காரர்களே இல்லாமல் செய்து விட முடியாதா ? - ராமசாமி தீவிரமாக நினைக்கிறார். "என்னிடம் மட்டும் நிறையப் பணம் இருந்தால், எல்லாவற்றையும்... என்று நினைக்கும் ராமசாமியைப் போன்றவர்களில் நானும் ஒருவனே மனிதநேயம் உலகில் சுருங்கி கொண்டே செல்கின்றது அதன் காரணமாகவே மனிதன் மனித வெடிகுண்டாகவே வெடிக்கின்றான் விடை ஒருநாள் கிடைக்கும் அன்று உலகம் அழியும் நாளாகவே இருக்கும்.
      மீண்டும் உலகம் தோன்றுமா ? என்பது வேறு விடயம்.

      நீக்கு
  12. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    சித்திரையாள் வருகை
    இத்தரையில் எல்லோரும்
    எல்லாமும் பெற்று வாழ
    எல்லோருக்கும் வழிகிட்டுமென
    புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
    இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும் உரித்தாகுக.... வாழ்த்துகளுடன்....

      நீக்கு
  13. உண்மையிலே அந்த குழந்தைக் கொடுத்து வைத்தது தான்,,, தாங்கள் சொன்னது போல் இச்சமூக சூழலில் இப்படியும் ஓர் தந்தை,,
    அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை,,காலம் மாறும்,, அவர்கள் சூழலும்,,,

    பகிர்வுக்கு நன்றி சகோ,,

    பதிலளிநீக்கு
  14. தந்தைக்குப் பாராட்டுக்கள் இதுவும் ஒரு வேளைப் பரிவை சம்பாதிக்கும் வழியோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஐயா தாங்கள் சொல்வது போல சவாரி கிடைப்பதற்காக இந்த யுக்தியை கையாளலாம் அதேநேரம் இந்தக் குழந்தையை ஒப்படைத்து விட்டு வேலைக்கு செல்ல இவருக்கு சொந்தங்கள் இல்லாமலும் இருக்கலாம், அல்லது காப்பகத்தில் இட மனமில்லாமல், பணமில்லாமல்கூட இருக்கலாம் வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  15. வாழ்க்கை சில மனிதர்கள் வழி சமூகத்திற்குப் பாடம் போதிக்கிறது. இப்படியான பெற்றோர் இருக்கும் சமூகத்தில் தான் தாங்கள் கூறியதைப் போன்றவர்களும் பெற்றோர்களாக இருக்கிறார்கள். என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சமூகம் மனிதநேயத்தை தொலைத்து விட்டதில் அதிக சதவீதம் இடம் பெறுவது உலக அழிவுக்கு வழி வகுக்கும்

      நீக்கு
  16. மனதைத் தொட்ட படம். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  17. அருமையான தந்தை. குழந்தையும், தந்தையும் சுகமாக வாழப் பிரார்த்தனைகள். மனதை நெகிழ வைத்த படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே.

    அருமையான பதிவு. படமும், தங்களின் அருமையான எழுத்தின் விமர்சனமும்,படித்ததும் மனதை நெகிழச்செய்து விட்டது. அந்த தந்தையும், குழந்தையும், நலமே வாழ நானும் உங்களுடன் சேர்ந்து உளமாற பிரார்த்திக்கிறேன். தங்களின் ஏராளமான பதிவுகளை படிக்க தவறியமைக்கு வருந்துகிறேன். நேரம் கிடைக்கும் சமயங்களில் அவசியம் படிக்கிறேன்.நன்றி!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும் தொடர்ந்து படிப்பதற்கும் நன்றி

      நீக்கு
  19. அந்த குழந்தை வாழ்வில் முன்னேற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் அக்குழந்தையின் தந்தைக்கு எனது நன்றிகள்.தங்களுக்கு அவரின் விலாசம் கிடைத்தால் எனக்கும் பகிருங்கள் நானும் தொடர்கிறேன் ஐயா.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

      நீக்கு