தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 24, 2016

குட்டையில் ஊறிய மட்டைகள்


நண்பர்களே... மேலே பார்த்தீர்களா ? கொடுமைகளை இந்தியக் குடியுரிமை பெற்ற அனைவரும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று மேடைகளில் முழங்குகின்றார்கள் இதை தீர்மானித்தவர்களுக்கு இது சரியென்று தோன்றுகின்றதா ? கைவண்டி இழுத்து உழைக்கும் தொழிலாளிக்கு ஒருவிலை ஒரு லட்சத்தை நெருங்கும் சம்பளத்தை பெறும் நாடாளுபவர்களுக்கு ஒருவிலை இதிலும் இவர்களுக்கு வீடு இலவசம், தொலைபேசி கட்டணம் இலவசம், அரசு போக்குவரத்து இலவசம், உயரிய மருத்துவசெலவு இலவசம், இறுதியில் ஓய்வூதியமும் உண்டு இவர்களுக்கு செலவு என்பதே கிடையாது மேலும்... மேலும்... உங்களுக்கு விளக்கமும் வேண்டுமா ? இன்று அரசியல்வாதிகள் திரு. காமராஜர், திரு. கக்கன் இவர்களுக்குப் பிறகு யாராவது ஏழையாகவே வாழ்ந்து ஏழையாகவே இறந்திருக்கின்றார்களா ? நாட்டுக்காக உழைத்த திரு. கக்கன் அவர்களின் மகன் இன்றும் மனநலம் தெளிந்தும் 31 ஆண்டுகளாக மனநல மருத்துவ மனையில் இருக்கின்றார் அவரை மீட்டு இனியெனும் வாழ்வளிக்க யாருமில்லை நல்ல மனிதருக்கு இந்த மக்கள் கொடுத்த பரிசு இதுதானே ? அவருக்கு சிலை வைத்து மாலை மரியாதை செய்கின்றார்கள் அவரின் வாரிசு சிலையாகவே வாழ்கின்றார் சிறையில் நல்லவேளை கர்மவீரர் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.

நாட்டில் மதக்கலவரங்கள் வந்தால் முன் வருகின்றோம் தலைவர்கள் கூட்டம் நடத்தினால் கேட்டு புரிந்தாலும், புரியாவிட்டாலும் அவர்களின் FAVORITE வார்த்தைகள் வந்து விழுந்ததும் கை தட்டுவதற்காக இரவு முழுவதும் காத்துக் கிடக்கின்றோம் இப்பொழுதெல்லாம் மக்கள் கூடும் இடங்களில் வெடுகுண்டு வெடிக்கின்றது அது நமக்கு தெரிந்தும் கண்டிப்பாக தலைவனுக்காகவோ, தலைவிக்காகவோ செல்கின்றோம் ஆனால் மேற்கண்ட விடயங்களை கேட்பதற்கு யாருமே முன்வருவதில்லை ஏன் ? சரி முன் வராததற்க்கு அதிகார வர்க்கங்களைக் கண்டு பயம் (என்னையும் சேர்த்து) இது தெரிந்த விடயமே இவர்களை மௌனமொழியால் கேள்வி கேட்பதற்க்கு 5 ஆண்டுகள் கடந்தவுடன் ஒரு சந்தர்ப்பம் வருகிறதே... அப்பொழுதாவது கேட்ககூடாதா ? (நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்) மழை பெய்து வெள்ளக்காடாகி விட்டது நிவாரண நிதி தரவில்லை என்று மக்கள் அரசை குற்றம் சுமத்துகின்றார்கள் இது எவ்வகை நியாயம் ? பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓட்டுப்போட்ட மக்களுக்கு சுயசிந்தனையே கிடையாதா ? செய்த வேலைக்கு கூலி கிடைத்து விட்டது பணம் மட்டுமே கொடுத்தால் இந்த மறதியுள்ள மக்கள் மறந்து விடுவார்கள் என்று தெரிந்தே கண்முன் நினைவில் நிறுத்திக் கொள்ளத்தானே இலவசம் என்ற பெயரில் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், சைக்கிள், ஆடு, கோழி, பூனை, எலி, தாயக்கட்டை, பல்லாங்குழி, வெளக்கமாறு என்று கொடுக்கின்றார்கள் பிறகு என்ன... மசுத்துக்கு அரசியல்வாதிகள் சேவை செய்ய வேண்டும் ? அவர்கள் சம்பாரிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரிகின்றது தேர்தல் விதிமுறைகளை மீறியே தேர்தல் செலவு செய்கின்றார்கள் அப்பொழுதே தெரியவில்லையா ? இந்த முதல் போடும் தொழில் லாபத்துக்காகத்தான் என்று நான் சொல்லிக் காண்பித்ததை அரசியல்வாதிகள் சொல்ல மாட்டார்கள் ஆனால் ? உண்மையிலேயே அவர்கள் அவர்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும்தான் இருக்கின்றார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

பிறரை நியாயஸ்தானாக நடக்கவில்லை என்று குற்றம் சுமற்றுமுன் நாம் நியாயஸ்தானா ? என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் அவர்கள் நமது கண்களுக்கு குற்றவாளியாகத் தோன்ற மாட்டார்கள் நாமும், அவர்களும் ஒன்றே ஆம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே... அவர்கள் முதல் போட்டார்கள் நாம் அதில் முழம் போடுகிறோம்.

சாம்பசிவம்-
வில்லங்கத்தார் இவரை பிரதமர்’’னு சொன்னதுலருந்து இவரும் ஒரு மாதிரியாகத்தான் எழுதுறாரு....
சிவாதாமஸ்அலி-
வில்லங்கத்தார் மாதிரி தலைப்பாக்கட்டி விடுற ஆளுகளால்தான் நாட்டில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் உருவாகின்றார்கள்
Chivas Regal சிவசம்போ-
நினைப்பு (அபுதாபி) பொழைப்பை கெடுத்துறாம.....

 நிலையான அரசு நிலைத்து நிற்கும்.
காணொளி

36 கருத்துகள்:

  1. நிிலையான் அரசு நிலைத்து நிற்பதை பார்த்தேன் நண்பரே...!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அப்படின்னா இதுக்குத்தானே ஓட்டுப் போடுவீங்க....

      நீக்கு
  2. அரசியல் வியாதிகளுக்கு எதையுமே இலவசமாகவோ மலிவாகவோ கொடுக்க கூடாது. இருமடங்காக விற்க வேண்டும். இன்று ஒரு மந்திரியின் பினாமியிடம் இருந்து 250 கோடி பறிமுதல் செய்திருக்கிறார்கள். ஏழைகளுக்கு ஒருவேளை உணவு கிடைக்காத போது இவர்களிடம் மட்டும் எப்படி கோடிகளில் குவிகிறது. காசுக்கு மயங்காமல் நல்ல வேட்பாளர்களை தேடி கண்டுபிடித்து வாக்களித்தால் மாற்றம் வரும். அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மக்கள் மனதில் மாற்றம் வராதவரை நமக்கு மாற்றமில்லை வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. மக்களின் நாடியை நன்கறிந்தவர்கள் அரசுத் தலைவர்கள் அதனால்தான் இலவசங்களுக்கு விலை இல்லாதது என்று வேறு பெயர் சூட்டிவிட்டார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப் படாதவர்களுக்கும் நிவாரணப் பணம் கொடுக்கப்பட்டது வசதி இருப்பவர் வீட்டிலும் இல்லாதோர் வீட்டிலும் விலையில்லா மிக்சிகளும் மின் விசிறிகளும் இருக்கின்றனவே எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு எந்த முகத்தில் அரசைக் குறை கூற முடியும் கில்லர் ஜீ நம்மில் பலரும் வாய்ச் சொல்லில் வீரர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எனது கருத்துடன் இணைவதில் மகிழ்ச்சி வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. அலாவுதீனோட அற்புத விளக்கில இருக்கிற பூதம் கூட இவிங்க கிட்ட பிச்சை தான் எடுக்கணும்..

    ஆனா - நம்ம ஊரு ராப்பிச்சை தேவலாம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. எரியுற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அதை நாம் உள்ளே நுழைந்து தேடும்பொழுது நமது கதையே முடிந்து விடுகின்றதே... பிறகு நமது சந்ததி.....

      நீக்கு
  6. டாஸ்மாக் லாபத்துல வழங்கினது அண்ணா.... அதான் நிலையான அரசு கொடுத்த மின்விசிறி கூட தள்ளாடுது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அதனால்தான் தள்ளாடுகின்றதோ..

      நீக்கு
  7. ஜி! உங்கள் கருத்துதான் எமதும்.

    அரசின் இலவசங்களை நான் பெறுவதில்லை. இதுவரை பெற்றதும் இல்லை. ஏனென்றால் நான் அந்த அளவிற்கு ஏழை இல்லை. மட்டுமல்ல, அப்படிக் கொடுக்கப்படும் பொருள்களில் நடக்கும் ஊழல். இலவசங்கள் என்பது ஏழைககளுக்குத் தக்க தருணத்தில் வழங்கப்பட வேண்டும். அது பணக்காரர்களுக்கோ இல்லை நடுத்தரவர்க்கத்தினருக்கும் அல்ல. நான் பெறாததால் நான் நிச்சயமாக ஆட்சியாளர்களைக் குறை சொல்ல முடியும்.

    மற்றொன்று அரசிற்கும் ஆட்சிக்கும் சற்று வித்தியாசம் உண்டு என்பது என் புரிதல். அரசு என்பது எப்போதும் இருக்கும்.ஆட்சியாளர்கள் மாறுவார்கள். அரசின் பணம் மக்களுக்கானது. பொதுப்பணம். அரசு ஏழைககளுக்கு மட்டுமே அதுவும் அரசின் பணத்திலிருந்துதான் கொடுக்க வேண்டும். அதில் எந்தக் கட்சியின் சின்னமோ, படங்களோ ஆட்சியாளரின் படங்களோ இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அந்தப் பொருள்கள் கட்சியாளர்கள் தங்கள் கட்சியின் பணம் இல்லை தங்கள் சொந்தப் பணத்தில் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் அரசின் பணத்தில் தங்கள் படங்களுடன் கொடுப்பது என்பது ஊழல்.

    ஒரு சில பதிவுகளுக்கு முன் யாரோ கையெடுத்துக் கும்பிடு போட்டு ஓட்டுக் கேட்ட நினைவு. நீங்கதானே?!!! ஹிஹிஹி வாங்க வந்து நிலையான ஆட்சி அமையுங்க ஜி! ஹஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நல்ல கருத்தை முன் வைத்தீர்கள் வெள்ளம் வந்தபொழுது பொதுமக்கள் கொடுத்த உதவிப் பொருள்களிலேயே.... ஸ்டிக்கர் ஒட்டியபோது தங்களது கேள்விக்கு விடை கிடைக்குமா ? மான, ரோசமுள்ள மக்கள் குறிப்பாக சென்னை மக்கள் இதை மறக்க மாட்டார்கள் பார்ப்போம்.

      ஓட்டு வாங்கும் போது அரசியல்வாதிகள் அப்படித்தானே ‘’கைகளால்’’ கும்பிடணும் வெற்றி பெற்ற பிறகு.....

      நீக்கு
  8. தாங்கள் கூறுவது உண்மைதான் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. நாமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்று யதார்த்தமாக கூறியவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமது கருத்தை ஆமோதித்த முனைவருக்கு நன்றி

      நீக்கு
  10. வாஸ்தவமாச் சொல்லி இருக்கீங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. நண்பரே எங்கள் வீட்டில்
    அம்மா என்ற ஸ்டிக்கர் மூதேவி
    கொடுத்த மின்விசிறி மதுபானம்
    குடித்து தள்ளாடியது போல் தெரிந்தது....
    இப்போது அதன் போதை தெளிய வேண்டும்
    என்பதற்காக தலை கீழாக கட்டி தொங்க
    விடப்பட்டிருக்கிறது....
    அவர்களின் கிரைண்டர் சரியாக வேலை
    செய்யாததால் மல்லாக்க வச்சு செடி வளர்க்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே அந்த மல்லாக்கப் போட்ட சட்டியில் எனது உழைப்பும் துளியளவும் உண்டு இவர்கள் கொடுத்த இலவசம் மக்கள் பணமே இது இன்னும் பல மக்கு’’களுக்கு தெரியவில்லை ஆகவே தமிழ்நாடு சுடுகாடாகிக்கொண்டு இருக்கின்றது கிரைண்டரை இதற்காகவாவது உபயோகம் செய்தீர்களே...

      நீக்கு
  12. சுமார் ஆறு மாதங்கள் முன்னரே விலை ஏற்றியாச்சு. இது பற்றி தினசரிகள், தொலைக்காட்சிகளிலும் வந்தது. முகநூலிலும் பகிர்ந்திருந்தாங்க! விலைவாசிப் பட்டியல் தான் சரியா நினைவில் இல்லை. ஆனால் வெளியே விற்கும் விலையில் பாதியாவது இருக்கும்னு நினைக்கிறேன். எதுக்கும் நண்பர் ஒருத்தரிடம் கேட்டால் சரியாகப் பதில் கிடைக்கும். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இருக்கட்டும் அதேநேரம் இதே அரசு நிறுவனங்களின் உழைக்கும் தொழிலாளர்களுக்கு இந்த சலுகைகள் இல்லையே ஏன் ? அவர்கள் மட்டும் இந்நாட்டு மன்னர்கள் இல்லையா ? தங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி

      நீக்கு

  13. என்றைக்கு வாக்காளர்கள் விலைபோக ஆரம்பித்துவிட்டார்களோ அப்போதே (ஊழல்) அரசியல்வாதிகள் ஆழமாக இங்கே கால் ஊன்றிவிட்டார்கள்.

    ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது’ என்று பட்டுக்கோட்டையார் சொன்னதுபோல நாமே பார்த்து நல்லவர்களை தேர்ந்தெடுத்தாலொழிய நாட்டை திருத்த முடியாது. அந்த நாள் வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியாக சொன்னீர்கள் ஆனால் நாம் அனைவரும் நினைத்தால் மாற்றம் வரும் மலையாளிகளின் ஓட்டு அனைவரும் ஒன்று கூடி பேசி வைத்தது போலவே இருக்கும் தேர்தல் முடிவுகள் மலையாளிகள் ஏமாற்றுவார்கள் ஆனால் ஏமாற மாட்டார்கள்.

      நீக்கு
  14. நண்பரே! அரசியலாளர்களைக் கண்டிக்கத் தொடங்கிய பதிவைக் கடைசியில் அவர்களைக் கேள்வி கேட்க மக்களுக்கு உரிமையில்லை என்று முடித்து விட்டீர்களே! வாக்கை விற்பது குற்றம்தான், ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதனால் மக்களுக்குக் கேள்வி கேட்கும் உரிமை போய்விடும் என்பதில்லை. மேலும், எல்லோருமே வாக்கை விற்பதும் இல்லை. அது யாரோ சிலர் செய்யும் தவறு. மக்கள் என்றால் தவறு செய்யத்தான் செய்வார்கள். அவர்களை நல்வழிப்படுத்தத்தான் தலைவர்கள். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்! யாருமே தவறு செய்யாதவர்களாக இருந்து விட்டால் தலைமை எதற்கு? வழிகாட்டல் எதற்கு? தேர்தல் எதற்கு? தெருக்கூட்டல் எதற்கு? பதிவின் இடையில் நீங்களே குறிப்பிட்டிருப்பது போல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது இந்த அரசியலாளர்களைக் கேள்வி கேட்கக் கிடைக்கும் வாய்ப்பை மக்கள் தவறவிடக்கூடாது!

    அதே நேரம், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது போலவே வாக்களிக்காமலே இருப்பதும் தவறுதானே? அதுவும் இந்த ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பைத் தவறவிடும் பிழைதானே? அதையும் கண்டித்து, இளைஞர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டியதன் கட்டாயத்தை வலியுறுத்துங்களேன்! அதுவும், வழக்கத்துக்கு மாறாக, இளைஞர் வாக்குகள் முடிவைத் தீர்மானிக்கப் போகும் இந்தத் தேர்தலில் இளைஞர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டியது எந்தளவு இன்றியமையாதது என்பதைச் சுட்டிக் காட்டி அதற்கு ஒரு பதிவு எழுதுங்களேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அருமையாக சொல்லி காட்டினீர்கள் நன்றி இதற்கு எனது பதில் சிறிய வார்த்தையில் சொல்கின்றேன் நாளைய பதிவு //வெற்றி நிச்சயம்// அதில் கிடைக்கும்

      நீக்கு
  15. மக்கள் இலவசத்துக்கு கியூவில் நிற்கும் வரை மாற்றம் என்பது ஏது அரசியலில் .சிந்திக்கத்தூண்டும் பகிர்வு ஜீ.

    பதிலளிநீக்கு
  16. ஆசான் குறிப்பிட்டது உண்மை...

    எப்போதும் இருக்கும் அரசின் முதுகெலும்பு அதிகாரிகள். அரசியல்வாதிகள் மாறுவார்கள்.. அதிகாரிகள் நிரந்தரம் ! இந்திய ஜனநாயக ஆட்சி, முக்கியமாய் தமிழக ஆட்சி அலங்கோலமானதற்கு அதிகாரிகள் தங்கள் முதுகெலும்பை தொலைத்ததும் ஒரு முக்கிய காரணம் !

    வாக்குசீட்டு எண்ணும் போது, " லீடிங் " அதிகமாக தொடங்கிவிட்டாலே பூங்கொத்துடன் " வருங்காலத்தின் " வாசலில் பவ்யம் காட்டும் அதிகாரிகளும் கண்டிக்கப்படவேண்டியவர்கள் !

    எது எப்படி இருந்தாலும் ஜனநாயகத்தை மீறிய மாற்று எதுவும் கிடையாது என்பதும் நிதர்சனம். ஐந்து ஆண்டுகள் வானத்தில் பறந்தாலும் தேர்தலுக்காக தெருவில் இறங்கி ஓட்டு கேட்பது ஜனநாயகத்தில் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட பிரம்மாஸ்த்திரமான ஓட்டினை புறக்கணிப்பது சரியல்ல. யாரையும் பிடிக்கவில்லையென்றால் எல்லோருக்கும் பிடித்த ஒருவரை ஊரே சேர்ந்து நிறுத்தி வெல்லவைக்கவும் ஜனநாயகத்தில் இடமுண்டு !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா தங்களின் கருத்து சரிதான் இருப்பினும் அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றதே அதன் காரணமாகவே பாவம் அவர்களும் இந்த வட்டத்துக்குள் நுழைந்து விடுகின்றார்கள் என்ன செய்வது நன்றி நண்பா.

      நீக்கு
  17. நீங்கள் சொல்வது சரிதான் சகோ . நாங்கள் இப்போ அமெரிக்காவில் மகள் வீட்டில் இருக்கிறோம் . கொஞ்சம் பிஸி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா வாங்க சகோ சந்தோசம் சந்தோஷமாய் தங்களது பெயரன் அபியுடன் கழியட்டும் இனி வரும் நல்ல தினங்கள்.

      நீக்கு
  18. தலைப்பு பொருத்தமாய்,,, அதுவாது பயன்படும் ஊறினாலும்,,அருமை சகோ,,

    பதிலளிநீக்கு