தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 26, 2016

வெற்றி நிச்சயம்

இன்றைய அரசியல் நிலவரங்களைக் குறித்த YouTube காணொளிகளைக் காணும் பொழுது எனக்கு கோபம் கோபமாக வருகின்றது நண்பர்களே... யாரை நோவது கோமாளிகளையா ? இல்லை கோமாளிகளை அறிவுஜீவிகளாக நினைக்கும் அறியாமை கோமாளிக் கூட்டங்களையா ? சில காணொளிகளை கண்டேன் கீழ்காணும் இந்த காணொளியைக் காணும் பொழுது எனக்கு அரேபியர்கள் அடிக்கடி சொல்லும் பழமொழி ஒன்று எனது நினைவோட்டங்களில் நுழைந்து செல்கின்றது இதோ இதுதான்...

//சவலைப் புள்ளையக் கொடுத்து குவளை வாங்குற கதையாவுல இருக்கு// ஆம் நண்பர்களே எனக்கென்னவோ.. இது எதையோ காண்பித்து எதையோ பறிப்பது போல்தான் தோன்றுகின்றது தெளிந்த சிந்தனையோடும், நல்ல மனநிலையோடும், இருக்க வேண்டிய ஒரு மக்கள் தலைவன் செயல் போல் இருக்கின்றதா ? மனைவியும், மைத்துனரும் கிலுகிலுப்பையை காண்பித்து மக்களை உறங்க வைத்து விடலாம் என்று நினைப்பது போல்தான் தெரிகின்றது இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ? நான் நினைத்துப் பார்க்கின்றேன் உகாண்டா நாட்டில் சொல்லும் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகின்றதுகூதரைகள் ஊருல பேக்கொதக்கு நாட்டாமையாம்இப்படித்தான் போகுமோ ?

தொ(ல்)லைக்காட்சி பெட்டியைத் திறந்தால் இவர்கள் பேசும் பேச்சு கேட்டு முடிந்தவுடன் பார்த்தால் காதோரம் லோலாக்கு இல்லை காதோரம் குருதி ஒழுகுது. எனக்கு யாருமே இல்லைன்னு சொல்றவங்களுக்கு இவ்வளவு சொத்து எதற்கு ? இன்றே இப்பொழுதே தனது சொத்துக்களை மக்களுக்கு எழுத வேண்டாம் இந்திய மக்களுக்கு வேண்டாம் தமிழ் நாட்டு மக்களுக்கு அரசு வைத்திருக்கின்ற கடன் தொகையைக் கொடுத்து பொருளாதாரத்தை உயர்த்தி விலைவாசியை குறைக்கட்டுமே... வெற்றி நிச்சயம்.

அங்கிட்டு நான் கட்டையில போறவரை கட்டு மரமாவேன் என்னைப் பிடித்துக் கொண்டு கரையேறலாம் என்றால் இது நம்புற மாதியா இருக்கு ? இதைக்கேட்கும் பொழுது எனக்கு இந்தோனிஷியா நாட்டு பழமொழி ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது ‘’கேக்கிறவன் கேப்மாரியா இருந்தா... வானத்திலிருந்து SOAPமாரி பொழியும்னு சொல்லுவாங்களாம் உம்மைத் தள்ளிக்கிட்டு போகவே நாலுபேரும், கைவண்டியும் தேவைப்படுது இதுல நாங்க எங்கே கட்டு மரத்துல ஏறி கரையேற ? எனக்கு வயதாகி விட்டது நான் மக்களுக்காக உழைத்தது போதும் ஓய்வெடுக்கப் போகிறேன் நான் சம்பாதித்த சொத்திலிருந்து பகுதியை மட்டும் (இது போதும் ஏழு தலைமுறைக்கு) எனது குடும்பத்தாருக்கு ஒதுக்கி விட்டு பகுதி பணத்தில் நான் மறைந்தாலும் என் பெயர் மக்கள் மனதில் இருக்கும்படி தமிழ்நாடு முழுவதும் திடகாத்திரமான சாலை போட்டு தருகிறேன் என்மீது நீங்கள் அனைவரும் நடக்கலாம், தவழலாம், பயணிக்கலாம் இன்றே பணியைத் தொடங்கி வைக்கிறேன் இளைஞருக்கு (?) வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னால் வெற்றி நிச்சயம்.

(ஒரு இந்திய குடிமகன் பொது மக்களுக்காக தனது பணத்தை செலவு செய்ய சட்டத்தில் இடமுண்டு ஏற்கனவே தேவகோட்டையில் பொதுமக்கள் குளிப்பதற்காக தனது இடத்தை ஊரணியாக வெட்டிக் கொடுத்த ஆச்சிமார்களும் உண்டு ஆகவே அந்த ஊரணியின் பெயர் தேனம்மை, கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம்வரை தனது பணத்தில் சாலை போட்டுக் கொடுத்த கீழக்கரை செல்வந்தரும் உண்டு, நமக்கு தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டிக் கொடுத்து பெயரை நிலை நாட்டியது போல், எனது ஐயா ஞானி ஸ்ரீபூவு எங்க அப்பத்தாவை கட்டியது போல் செய்யலாமே)

இங்கிட்டு தமிழன் என்ற வார்த்தையை கையிலெடுத்து போர்களம் குதித்தது பாராட்டத்தக்கது தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று நினைப்பவனே உண்மையான தமிழன் அந்த வட்டத்துக்குள் நானும் நிரந்தரமாய் உண்டு பேச்சுக்களும், சிந்தனைகளும் ஏதோ புது மாதிரியாகத்தான் தெரிகின்றது இருப்பினும் உணர்ச்சிகளையும், கோபத்தையும், பெரியவர்களை பொது இடத்தில் மதித்துப் பேசும் பக்குவமும் வளர்த்துக் கொண்டால் அடுத்த தேர்தலில் வெற்றி நிச்சயம்.

உண்மையிலேயே தமிழக மக்களிடம் ஜாதி, மத உணர்வுகள் இல்லை அதனால்தான் தமிழ் நாட்டில் ஜாதீய உணர்வுகள் உள்ள கட்சிகள் நுழைய முடியவில்லை இருப்பினும் அங்கங்கு இந்த பிரச்சினைகளால் சில உயிர்ப் பலிகள் போவது அரசியல்வாதிகளால் மட்டுமே இதுதான் நடைமுறை உண்மை இது அறிந்தும் ஆட்சியைப் பிடிக்கும் முன்பே இந்தப்படை போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்ற பழைய வசனங்களைப் பேசுவதை நிறுத்தி விட்டு ஜாதீய உணர்வுகளை களைந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி நிச்சயம்.

கழகப் போர்வாள் என்ற பெயர் ஒரு காலத்தில் இருந்தது உண்மையே இன்று நாரதர்போல கலகம் உண்டு பண்ணும் உம்மை இனி மக்கள் நம்புவதாக இல்லை உமது தமிழ்ப் பேச்சுக்களை ரசித்தவர்களில் நானும் ஒருவனே இன்று பேசுவதெல்லாம் அக்கப்போராக இருக்கின்றது இப்படியெல்லாம் பேசுவதற்கு வடிவேல் என்று ஒருவர் இருந்தார் என்னமோ தெரியலை அவரைக் காணோம் ஏதோ பாவம் இப்ப என்னாச்சு ? ஆமை புகுந்த வீடும், ஆமீனா புகுந்த வீடும் விளங்காது அப்படின்னு நான் எழுதவில்லை இதைப் படிக்கும் பதிவுலக நண்பர்கள் நினைக்கிறாங்க போல காரணம் எனக்கு பொரை ஏறுது இந்த தேர்தல் மட்டுமல்ல.........................................................................................நிச்சயம்.

எதற்கெடுத்தாலும் கம்பு எடுக்கும் கூட்டம்கூட கம்யூனிஸ்ட் என்ற வார்த்தைக் கேட்டால் கம்னு போயிடுவாங்க இது ஒரு காலத்தில் இப்ப என்னாச்சு ? இடது, வலது, சோத்தாங்கை, பீச்சாங்கை, லெப்டு, ரைட்டுன்னு ஆளாளுக்கு ஒரு பக்கமாக போனீர்கள் என்னாச்சு எல்லாம் மண்ணாச்சு உங்களை கையையும், காலையும் ஒடிச்சுப் போட்டது யாரு ? திராவிடக்கட்சிகள் இரண்டும்தானே உங்களிடம் சோஸலிசம் இன்னும் இருக்கின்றது வார்த்தைகளில் மட்டுமே நீங்கள் இனியும் வருவோம் என்ற நம்பிக்கை உண்டா ? ஆகவே உங்களுக்கும்......................................................நிச்சயம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு இதுக்கு நான் விளக்கம் வேறு சொல்ல வேண்டுமா ? நீங்களே கொஞ்சம் அதிலும் தெற்கும், வடக்குமாக போனால் என்ன மிஞ்சும் ? எனக்கு பொரை ஏறுது அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்கள் என்னை நினைக்கின்றார் போல எதுக்கு ஜி ? விரலுக்குப் புடிச்ச கேடு என்று ஆமா ஜி இதுக்கு மேல எழுதுனா அப்புறம் கண்ணேறு பட்டு விரலில் நகச்சுத்தி வந்துரும் அப்புறம் தொடர் பதிவு எழுதுறாப்ல வந்துரும் எதுக்கு ?

மக்களிடம் ஒரு விழிப்புணர்வு வரவேண்டும் என்று நாம் அரசியலைப்பற்றி கொஞ்சம் சொல்லலாம் நமக்கு அரசியலும் தெரியாது சரி தெரிந்ததை சொல்லுவோமே அப்படினு நினைக்கும் பொழுது எனக்கு நைஜீரியா நாட்டு மக்கள் சொல்லும் பழமொழி ஒன்று நினைவு வருகின்றது அது ‘’கோவளம் பீச்சுல கோணிச்சாக்கு கட்டிக்கிட்டவன் கேனயனாம்’’ என்று என்னை யாரும் சொல்லி விடுவார்களோ... என்று யோசித்துக் கொண்டு எனது அறையின் மூலையில் மூளையைக் குழப்பிக்கிட்டு ஒக்காந்து இக்கேன் கில்லர்ஜி

இந்த புகைப்படம் எப்படி  மீசை மாமா தளத்துல வந்துச்சு யாரும் வேண்டாதவங்க சொருகி விட்ருப்பாங்களோ..... ? - பர்ஹானா அபுதாபி
சிவாதாமஸ்அலி-
இந்தப் போட்டோவைப் பார்த்தால் ஒரிஜினல் ஒதுங்கியது போல இருக்கே....
சாம்பசிவம்-
ஆமா அத்தாரிட்டி அடங்கியது போலத்தான் இருக்கு...
Chivas Regal சிவசம்போ-
நம்மூருல மூத்த தாரத்துக்குத்தான் முதல் மரியாதை.

காணொளி

43 கருத்துகள்:

  1. என்ன ஆச்சு ஜி...அங்க வரைக்கும் வந்துருச்சா சேதி....பாருங்க அத்தனை நாட்டு பழமொழியும் நம்ம நாட்டுக்கே..சொன்ன மாதிரி இருக்கு..இப்பத்தான் ரெண்டு நாளுக்கு முன்னாடி புல.ம்பி அழுதேன்....தனியா அழுகிறேன்னு நினைச்சு...கவலைய ஆத்த உங்க பக்கம் வந்தா....செக்கோஸ்லோவாகியாவுல ஒரு பழமொழி சொல்வாங்கலாம்...கொடுமை கொடுமனு கோயிலுக்கு போனா...அங்க ரெண்டு அவுத்துப்போட்டுட்டு ஆடுதாம் நு....
    என்னத்த சொல்ல...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே இங்கே வந்துட்டுப் போனவர்கள் சிரிக்கணும் அழக்கூடாது.

      நீக்கு
  2. மே 16 வரை இந்தத் தமாஷ் தொடரும்! அப்புறம்? அது தனி தமாஷ். அவர்கள் நம்மை வைத்துக் காமெடி பண்ணுவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே சரியாக சொன்னீர்கள் முடிவில் நாம்தானே ஜோக்கர்களாக இருக்கின்றோம்.

      நீக்கு
  3. இடையில வர்ற பழமொழிகள் கில்லர்ஜியின் ஸ்பெஷாலிட்டி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ‘சிப்பிக்குள் முத்து’வை விடவா....? வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. அங்கிருந்துகொண்டு இவ்வளவு எழுதுகின்றீர்கள். இங்கே உங்களது ஓட்டை வேறு யாராவது போடப்போகிறார்கள் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே நான் இருந்தால் கண்டிப்பாக நோட்டோதான்.

      நீக்கு
  5. கருணாநிதியை விமர்சனம் செய்தது மாதிரி... ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததாக தெரியவில்லை நண்பரே.. முடிந்தால் கீழ் உள்ள சுட்டியின் பதிவை படித்துப் பாருங்கள் நண்பரே http://www.vinavu.com/2016/04/26/brahminical-cleverness-in-equating-dmk-admk/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே என்னை அப்படி நினைக்காதீர்கள் பதிவுகள் இன்னும் வரும் இந்த இணைப்பை மின்னஞ்சலிலோ. அல்லது சாட்டிலோ அனுப்பினால் நலம்.

      நீக்கு
  6. அரசியல் தெரியவில்லை என்று கூறியே அரசியலைக் கிழிக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எனக்கு தெரியாததனால்தான் உங்களுக்கு கிழிப்பது போல் தெரிகின்றதோ ?

      நீக்கு
  7. அங்கிட்டு நான் கட்டையில போறவரை கட்டு மரமாவேன் என்னைப் பிடித்துக் கொண்டு கரையேறலாம் என்றால் இது நம்புற மாதியா இருக்கு?

    இதை நினைத்து இப்பொழுதும் சிரிப்பேன் நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே அது சிரிக்கிறது மாதிரி மட்டுமா ? இருக்கு அழுவது மாதிரியும்தானே இருக்கு.

      நீக்கு
  8. தேர்தல் நாள் அறிவிப்பு பதிவோடு மட்டும் முடித்துக்கொண்டேன். அதற்கு மேல் இங்கே அரங்கேற்றப்படும் நாடக அரசியலை வலைப்பதிவில் எழுதினால் நிச்சயமாய் எனக்கே வலிதாங்க முடியாது. நல்லா நறுக்குணு கிழிச்சி தொங்க விட்டிருக்கீங்க தோழர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தோழரே தேர்தல்வரை இப்படித்தான் நேரமிருந்தால் முந்தை பதிவுகளை நோட்டமிடுங்கள் தோழரே...

      நீக்கு
  9. மெஜாரிட்டி நோட்டாவுக்கு வாக்களித்து ,யாரும் ஆட்சி பிடிக்க முடியாது என்றால் ..என் வோட்டும் நோட்டாவுக்கே !மக்கள்,தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்க தயாரா யிருக்காங்களே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதுதான் நமது தமிழ் நாட்டின் சாபக்கேடு.

      நீக்கு
  10. வணக்கம் ஜி !

    கட்டுமரத்தின் குடும்ப மரம் கலக்கலா இருக்கு !

    எல்லா நாட்டுப் பழமொழிகளும் சொன்னீங்க தமிழ்நாட்டுப் பழமொழி ஒன்றும் சொல்லவில்லையே ஜி ! ஆமா அம்மாவும் வேண்டாம் கட்டுமரமும் வேண்டாம் கப்டனும் வேண்டாம் வைக்கோவும் வேண்டாம் சீமானும் வேண்டாம் அப்போ யார்தான் முதலமைச்சரா வரணும் என்று ஆசைப் படுறீங்க சீமானின் எண்ணங்கள் சரி சொன்னீங்க ஆனால் அடுத்தமுறை வெல்லலாம் என்று அவருக்கும் சொல்லிட்டீங்க ம்ம்மம்மம்ம்ம்ம் ஒண்ணுமே புரியலையே ஜி !

    தொடரட்டும் ஜி வாழ்க வளத்துடன்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே ஏதேதோ பெயர்கள் சொல்றீங்க இவங்கெல்லாம் யாருன்னு தெரியலையே..... நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லையே..... நீங்களாக கற்பனை செய்த பெயர்களோ.....

      நீக்கு
  11. கில்லர்ஜி ரொம்ப கோபபடாதீங்க........உடம்புக்கு நல்லதில்லை...அப்புறம் எல்லா நாட்டு பழமொழியையும் சொன்ன நீங்க எங்க நாட்டு பழமொழியை மட்டும் சொல்லாமல் ஒதுக்கி வைத்தது ஏனோ? இதற்காகவே உங்களை அமெரிக்க நாட்டின் சூப்பரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கலாம் என நினைக்கிறேன் அடுத்த பதிவிலாது அமெரிக்க பழமொழியை பயன்படுத்த வில்லை என்றால் அப்புறம் என்ன நடக்கும் என்பதை என்னால் இப்ப சொல்ல முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அமெரிக்க பழமொழிகள் இனிமேல்தான் பழக வேண்டும் இன்ஸ்டிடியூட் சென்று விட்டு வருகிறேன் வருகைக்கு நன்றி அதுவரை கேஸ் போட வேண்டாம்.

      நீக்கு
  12. ரொம்பவே இதை எல்லாம் நினைக்காதீங்க. உடம்புக்கு ஆகாது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா இதுவும் நல்லாத்தான் இருக்கு வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  13. சகோ திருமதி. கோமதி அரசு, சகோ திருமதி. மஹேஸ்வரி பாலச்சந்திரன் மற்றும் நண்பர் திரு. தளிர் சுரேஷ் அவர்களுக்கு மன்னிக்கவும் தங்களது கருத்துரை தவறுதலாக டெலைட் ஆகி விட்டது - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  14. ஏமாற்றி விட்டீர்களே நண்பரே! கடைசியில், யாருமே சரியில்லை என்பதாக முடித்து விட்டீர்களே!

    ஐயா! அரசியலாளர்கள் மட்டும் தேவதூதர்கள் இல்லை. அவர்களும் நம்மிடையே இருந்து வருபவர்கள்தாம். அவர்களும் நம்மைப் போலவே குறைநிறையுள்ள மனிதர்கள்தாம். சராசரி மனிதர்களில் யார்தாம் குறையில்லாதவர்கள்? அது போலத்தான் தலைவர்களும். எனவே, இருப்பவர்களில் தேறக்கூடியவர் யார் எனப் பார்த்துத்தான் வாக்களிக்க வேண்டுமே தவிர, யாருமே சரியில்லை என வீட்டில் உட்கார்ந்திருந்தாலோ, 49ஓ-க்கு வாக்களித்தாலோ அது மீண்டும் இதே ஐயாவும் அம்மாவும் ஆட்சிக்கு வரத்தான் உதவும். எனவே, இருப்பவர்களில் ஓரளவு நல்லவர், வல்லவர் யார் எனப் பார்த்து வாக்களிப்பதும் அப்படி வாக்களிக்குமாறு மக்களைத் தூண்டுவதும்தாம் உண்மையான குடிமகனி/ளின் கடமையாக இருக்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எந்த திருடன் நல்ல திருடன் என்பதை எப்படி சொல்ல முடியும் நான் இன்னும் அரசியல் பதிவு எழுதுவேன் நண்பரே என்னைப்பொருத்தவரை 49ஓ-தான் எனது ஆதரவு

      ஒரு மாற்றத்தை காண்போம் என்னதான் நடக்கிறது என்று....

      நீக்கு
    2. வாய் கூசாமல் இப்படிச் சொல்கிறீர்களே! கருணாநிதி, ஜெயலலிதா, இராமதாசு, பா.ஜ.க-வினர் ஆகியோர் திருடர்கள், சரி. ஆனால், வைகோ, விஜயகாந்த், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், சீமான் ஆகியோர் இதுவரை என்ன திருடினார்கள்? ஒரு புகாராவது உண்டா இவர்கள் மீது? எப்படி நீங்கள் இப்படிச் (திருடர்கள் என்று) சொல்லலாம்? வருந்துகிறேன் நண்பரே!

      எல்லோருமே கெட்டவர்கள் எனப் போகிற போக்கில் பேசுவதற்குப் பெயர் நடுநிலை இல்லை. யார் நல்லவர் என்பதை எடுத்துச் சொல்வதும், நல்லவர்கள் பக்கம் நிற்பதும் மட்டுமே நடுநிலை.

      நீக்கு
    3. நண்பரே ஒவ்வொருவரின் கொள்கைகளைப்பற்றி விரிவாக எழுதி வந்துதான் சொல்கிறேன் இவர்கள் திருடுவதற்கு நாம் இன்னும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை காரணம் சீமானை நான் வெகுவாக எதிர்பார்த்தேன் இவருக்கு பெரியவர்களை மதிக்கும் பண்பு இன்னும் தெரியவில்லை.

      அவசியமின்றி உணர்ச்சி வசப்படுகின்றார் இதனால் மக்கள் இவரை நம்பி விடுவார்களா ? கம்யூனிஸ்ட் தேர்தலுக்கு தேர்தல் மாறுதல் இதுவா கொள்கை ?

      வைகோ பேசியே ஓய்ந்து போனவர்
      விஜயகாந்த் பேசவே தெரியவில்லை
      பாஜக மதவாதம் பேசிகின்றது
      பாமக ஜாதிவாதம் செய்கின்றது
      திருமா சினிமா நடிகையுடன் வலம் வருகின்றார்.
      எப்படி..... ?

      பார்க்கலாம் நண்பரே.... என்னைப்பொருத்தவரை 49-ஓ- இதனை வலியுறுத்தியே அடுத்த பதிவு
      ‘’அரசியல் வியாதிகள்’’

      மீள் வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
    4. மனைவி மீது ஐயம் கொள்பவர்களைப் பார்த்துக் காலம் காலமாகச் சொல்லப்படும் பழமொழி ஒன்றை உங்களுக்கு இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

      பெண் ஒருத்தி கெட்டுப் போக வேண்டும் என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் கெட்டுப் போவாள். இன்னின்ன மாதிரி சூழல் அமைந்தால்தான் கெட்டுப் போக வேண்டும் என்பதில்லை. அரசியலும் அப்படித்தான். ஊழல் செய்பவர்கள் ஆட்சிக்கு வந்துதான் செய்ய வேண்டும் எனத் தேவையில்லை. எந்த ஒரு சிறு பதவியிலிருந்து கொண்டும் பெருத்த ஆதாயம் பார்க்க இயலும். அப்படித்தான் எல்லாரும் செய்து கொண்டும் இருக்கிறார்கள். வைகோ, விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோர் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்தாம். அதுவும், பின் இருவரைத் தவிர முதலாமவர் பல ஆண்டுகளாகச் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராகப் பல முறை இருந்திருக்கிறார். ஆனால், இன்று வரை இவர்கள் மீது எந்த ஓர் ஊழல் புகாரும் இல்லை. மற்றபடி, நீங்கள் கூறும் நடிகையுடன் சுற்றுகிறார், மிகுதியாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார் என்பவையெல்லாம் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் குறைகளோடு ஒப்பிடும்பொழுது ஒன்றுமேயில்லை. ஆனால், நீங்கள் கூறுவது போல் 49-ஓவுக்கு வாக்களித்தால் அது மீண்டும் இதே முன்னாள் முதல்வர்களின் ஆட்சியைத்தான் கொண்டு வரும். அதுதான் உங்கள் விருப்பமா?

      நீக்கு
    5. நண்பரே சுற்றி வளைத்து நீங்களும் எரியிற கொள்ளியில் நல்ல கொள்ளியை வைப்போம் என்றுதான் சொல்கின்றீர்கள்

      52 வருட அரசியல் அனுபவம் உள்ள வைகோ நேற்று வந்த விஜயகாந்தை தலைவனாக ஏற்றுக்கொண்டு பேசுவது எப்படி சரியாகும்
      மொத்தத்தில் அதிக சதவீதத்தினர் எண்ணங்கள் சரியில்லைதவர்கள்தான் மக்களையும் சேர்த்து.....

      இராணுவ ஆட்சியாவது வரட்டும் மக்கள் அப்பொழுதுதான் கட்டுப்பாடான வாழ்க்கைக்கு வருவார்கள்

      மீள் வருகைக்கு மீண்டும் நன்றி

      நீக்கு
    6. சுற்றி வளைத்தெல்லாம் இல்லை. நான் நேரடியாகச் சொல்ல வருவதே அதுதான். தேர்தல் என்பதே இருக்கிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்பதைத் தேர்ந்தெடுப்பதாகத்தான் இப்பொழுது இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாக, இதை விட அந்தக் கொள்ளி நல்லது, அதை விட இது நல்லது எனப் படிப்படியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டே வந்து கடைசியில் கொள்ளிக்கட்டைகள் அனைத்துக்கும் மாற்றாக ஒரு செங்கோலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாறாக, எடுத்த எடுப்பிலேயே செங்கோல்தான் வேண்டும் என்றால் கிடைக்காது.

      என் நண்பன் ஒருவனைப் போலவே நீங்களும் இராணுவ ஆட்சி வேண்டும் என்கிறீர்கள். படை வீரர்கள்தாம் உண்மையில் உலகிலேயே மிக மிகக் கொடூரமானவர்கள்! இலங்கையில், ஈராக்கில், இந்தியாவின் வட மாகாணங்களில் எல்லாம் போய்ப் பாருங்கள்! அங்கே உள்ள பெண்களின் கதையைக் கேட்டீர்களானால், இப்படிப்பட்ட உலகில் வாழ்வதற்குப் பதில் தூக்குப் போட்டுக் கொள்ளலாம் என்று தோன்றும். அவர்களுக்கு ஜெ-வும் கருணாநிதியும் எவ்வளவோ மேல்.

      நம்முடைய இந்த விவாதம் இங்கு தீராது. நான் எழுதி வரும் 'தேர்தல் - 2016' தொடரில் யாருக்கு வாக்களிக்கலாம் என அடுத்த பதிவில் சொல்ல இருக்கிறேன். அதை வந்து படித்துப் பாருங்கள்!

      நீக்கு
    7. வருக நண்பரே இராணுவ வீர்ர்கள் இல்லையெனில் எந்த நாடுமே பாதுகாப்பாக இருக்க முடியாதே நண்பரே ஒரு சில இடங்களில் அப்படி நடந்தது என்பதற்காக எல்லா இராணுவத்தினரையும் இவ்வளவு கீழ்த்தரமாக சொல்லி விட்டீர்களே... நண்பரே

      இதற்கு காரணமும் சட்டத்தில் ஒழுங்குமுறை இல்லாமையே.... அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தருணத்தில் அவர்களுக்கு விடுமுறை கொடுக்கப்படுவது விதிமுறையாக்கப்பட வேண்டும் அதைப்பற்றி விளக்கம் சொன்னால் பதிவு போலவே ஆகும் மீள் வருகைக்கு நன்றி
      தங்களது பதிவு வரட்டும் பார்க்கிறேன்.

      நீக்கு
    8. மன்னியுங்கள் நண்பரே! படை வீரர்கள் பற்றிய என் பொதுவான கருத்து இதுதான். உங்களை வருத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். இந்தக் காலத்தில் மட்டுமில்லை எல்லாக் காலங்களிலும் படை வீரர் என்போர் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என்பதாகத்தான் வரலாறுகளைப் படிக்கும்பொழுது எண்ணம் மேலிடுகிறது.

      ஆனால், படை வீரர்கள் சில இடங்களில் நடந்து கொள்வதனால் பொதுப்படையாக அப்படிச் சொல்வது தவறு என்றால், அரசியலாளர்கள் சிலர் தவறாக நடந்து கொள்வதால் யாருமே ஆட்சிக்கு வரக்கூடாது என்பதும் தவறுதானே? :-)

      நீக்கு
    9. நண்பரே அரசிலாளர்களையும், இராணுவத்தினரையும் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள இயலாதது சராசரி மனிதர்களைப் போல்தான் அவர்களும் உழைக்கின்றார்கள் ஆனால் ? அவர்கள் எந்த நொடியும் உயிர் துறந்திடத் தயாரானவர்கள் என்பதை மனதில் கொள்ளவும்.
      அரசியல்வாதிகள் போல, திரைப்பட நடிகர்கள் போல, கிரிக்கெட்காரர்களைப் போல கோடிகள் சம்பாரிக்க சாத்தியம் இல்லை ஒரு சில பெரிய அதிகாரிகளைத் தவிற மேலும் இந்த ஜென்மங்களுக்கு பெண்புணர்ச்சிக்கு வேண்டியவை கிடைக்கின்றது அதிகாரத்தாலும், பணபலத்தாலும், ஏன் ஒரு சில அறியாமைப் பெண்களின் மோகத்தாலும் கூட என்று சொல்லலாம்.

      அரசியல்வாதிகள் நாட்டையே விற்க கூடியவர்கள்.
      இராணுவவீரர்கள் நாட்டையே இரவும் பகலும் காவல் காப்பவர்கள் இன்றைய இரவு தாங்கள் நிம்மதியாக உறங்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் எல்லையில் நிற்கும் இராணுவவீரர்களே...

      அரசியல்வாதிகள் இல்லாமல் இராணுவத்தால் நாட்டை இயக்க முடியும், இராணுவத்தினர் இல்லாமல் அரசியல்வாதிகளால் ஒரு தினம் கடக்க முடியாது.
      உலகம் முழுவதுமே உண்மையான நாயகர்கள் இராணுவவீரர்களே...

      குறிப்பு – எனது குடும்பத்தில் இதுவரை யாரும் இராணுவத்தில் பணியாற்றவில்லை என்ற முக்கியமான கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்

      அடிக்குறிப்பு - நான் நான்கு பதிவுகள் கடந்து விட்டேன் தாங்கள் இங்கேயே நிற்கின்றீர்கள்.

      நீக்கு
    10. ஒப்பிடவில்லை நண்பரே! எல்லாத் துறைகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்கிறேன் அவ்வளவுதான். மற்றபடி, உங்கள் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது. "அவன் மெதுவாத்தேன் வருவான்... மெதுவாத்தேன் வருவான்" எனும் 'தேவர் மகன்' பட வரிகளை நினைவுபடுத்திக் கொள்க!

      நீக்கு
    11. நண்பரே அவர்களுக்கும், இவர்களுக்கும் வெகுதூரமுண்டு உலக அளவில் நல்லவர்களும், கெட்டவர்களும் உண்டுதானே அரசியல்வாதிகளில், திரு. காமராஜர் இல்லையா ? திரு. கக்கன் இல்லையா ?
      நான் வேகமாக போகவில்லை என்னை விரட்டுகின்றார்கள் நீங்கள் மெதுவாகவே வாருங்கள் நான் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடுகின்றேன் மீள் மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. நீங்கள் குழம்பிக் கிடக்கறீங்களோ இல்லையோ நாங்க ரொம்பவே குழம்பிக் கிடக்கிறோம். நல்ல கூத்துகள் நடக்கின்றன. தினமுமே சிரிப்பதற்கு நிறைய கிடைக்கின்றன. ஆனால் பாருங்கள் தேர்தல் முடிந்தவுடன் நாம் வடிவேலு ஸ்டைலில் எங்கள வச்சுக் காமெடி கீமடி பண்ணலியேனு சொல்ல வைக்கப் போறாங்க பாருங்க. ஏற்கனவே தமிழ்நாட்டு மக்கள் கோமாளிங்கதான்...ஏமாளிங்கதான்...

    ஆனால் ஒன்று ஜி நிச்சயமாக வலைத்தளப் பதிவுகள் குறிப்பாக அரசியல் பதிவுகளின் தாக்கம் இருக்கும் இந்தத் தேர்தலில் என்று பட்சி சொல்லுது காதுக்குள் பார்ப்போம்...இதை அடித்து கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரமாகிறது...இப்போதான் அனுப்ப முடிகிறது. இணையம் பிரச்சனை.அடுத்துப் போவதற்குள் இது அபுதாபிக்கு வந்துவிடும் என்று நினைக்கின்றேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் நீக்கள் சொல்வதுபோல தேர்தல் என்பது கோயில் திருவிழா என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. நான் அப்பவே சொன்னேன்...இந்த தேர்தல், தலைவர், இதெல்லாம் நமக்கு வோணாம். யாரோ எதோ சொல்லிட்டு போராக, யாரோ வின் பண்றாக, யாரோ லூஸ் ஆராங்க.. நமக்கென்ன..நாம பாட்டுக்கு , நம்ம உண்டா, நம்ம வேலை உண்டா அப்படின்னு பார்த்துகினே போயிட்டனும்.
    இந்த தேர்தல் பேச்சு கேட்டு கேட்டு இந்த ஆளும் இப்படி போகும் அப்படின்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலயே...
    கவலை எல்லாம் 16ம் தேதிக்கு முன்னாடி உடம்பு சரியாகி, இவர் பத்திரமா தொகுதிக்கு வந்து வோட் போடனுமே.. இங்கேயே வெயில்லு 40 டிகிரி அங்கன 46 டிகிரி ஆ ? வெளிலே வெய்யில் லே போகாதீக அப்படின்னா கேட்டாதானே !! இன்னா சொல்றாரு அப்படின்னே புரியல்லையே !!


    மாரியாத்தா !! கில்லர்ஜீ யைக் கெட்டியா பாத்துக்க...

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வாங்க தாத்தா இங்கே வெயிலு மண்டையைக் காய்ச்சுது என்ன செய்யிறது மாரியாத்தாளே துணை

      நீக்கு
  17. பதிவின் இடையே வரும் ‘அயல்நாட்டு’ பழமொழிகள் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே

      நீக்கு