உணவைத்தேடி
அலைந்தேன்
கிடைத்தது
அமிர்தமாய்
ஒரு
முழு இட்லி
இடமோ
குப்பைத்
தொட்டியாம்
எனக்கு
அது
வயிற்று
குளிரூட்டியாம்
கண்டேன்
கனியிடத்தை
எமக்கு
அதுவே
இனி
அட்சய பாத்திரம்.
பாத்திரத்தில்
ஒருநாள்
பார்த்தேன்
பால்
கேட்டு
அழுத
பச்சிளம்
பிஞ்சு
இதோ
என்னை அப்பா
என்றழைக்க
எனக்கும்
ஒரு
உறவு
எச்சியில்
ஒரு பங்கு
கொடுத்து
வளர்த்தேன்
மகனை
கோடீஸ்வரன்
என்று
பெயர் சூட்டி
அழைத்தேன்
நிச்சயம்
ஒரு நாள்
அது
நிஜமாகும்
என்ற
கனவுகளோடு
பிச்சை
முத்து நானும்
கோடீஸ்வரன்
என் மகனும்
பிச்சை
கேட்டு
நம்பிக்கையோடு
நடுத்தெரு
நாராயணன்
வீட்டில்
அம்மா...
தாயே...
பிச்சை
போடுங்க....
பிச்சைக் காரனா பிறக்கலாம் ,பிச்சைக் காரனாவே இறப்பது தவறு :)
பதிலளிநீக்குபகவான்ஜி சொல்லியிருப்பதை வழி மொழிகிறேன்.
பதிலளிநீக்குஇந்தச்சமுக அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது நண்பரே
பதிலளிநீக்குதம +1
நம்பிக்கை - அது தானே வாழ்க்கை!..
பதிலளிநீக்குஜி.. நீங்கள் எழுதிய சிறுகதையின் - தொடர்ச்சி நமது தளத்தில் வெளியாகியுள்ளதே - கவனித்தீர்களா!..
பதிலளிநீக்குYes Jee...
நீக்குபிச்சைக்காரர்கள் உருவாக்கப்படுகிறார்கள் இந்தச் சமூகத்தால்...
பதிலளிநீக்குகோடிஸ்வரன் என்று பெயர் வைத்து அழைத்த வளர்ப்பு மகன் ஒருநாள் கோடிஸ்வரன் ஆகட்டும்.(பெண் குழந்தையை குப்பையில் போட்டார்கள்) ஆண் குழந்தையையும் குப்பைதொட்டியில் போட ஆரம்பித்து விட்டார்களா?
பதிலளிநீக்குகடவுளே! இது என்ன சோதனை! :(
பதிலளிநீக்குபிச்சைக்காரன் கோடீஸ்வரன் ஆகலாம் பிச்சை எடுப்பதைத் தவிர்த்தால் ஆனால் சில பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரகளாக இருப்பதும் கேள்விப்படுகிறோமே
பதிலளிநீக்குகவிதையிலும் கலக்கறீங்க! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபெயர் சூட்டிய விதம்
பதிலளிநீக்குமிகவும் இரசித்தேன்
மனம் கவர்ந்த கவிதை
வாழ்த்துக்களுடன்...
கவிதையின் மூலம் வலியை உணர்ந்தேன் ஐயா.பிச்சைக் காரர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் ஐயா.
பதிலளிநீக்குபிச்சைக்காரர்கள் இல்லாத நிலை வரவேண்டும்...சகோ...நலமா?
பதிலளிநீக்குகதை, நகைச்சுவை, கட்டுரை, கவிதை.... தங்களின் ஒவ்வொரு பதிவும் முத்திரையே.
பதிலளிநீக்குகவிதை மனதை நெருடுகின்றது ஜீ.
பதிலளிநீக்குஇந்த அவலநிலை என்று மாறும்?
பதிலளிநீக்குகவிதை நல்லாருக்கு! ஆனால் ஏன் ஜி! இப்படிப் பொழப்பு! நம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்வில் முன்னேறலாம்...என்று முடியுங்களேன்...நேர்மறையாய்...
பதிலளிநீக்குஒரு பிச்சைக்காரன் கூடக் குழந்தையை வளர்க்க முடிகிற இச்சமூகத்தில் ஒருவருக்குப் பிச்சை இடும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் குழந்தைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது ஏன் என வாழைப்பழத்தில் செருகிய ஊசி போல எழுதப்பட்ட கவிதை அருமை நண்பரே! நான் படித்ததிலேயே உங்கள் கவிதைகளில் சிறந்தது இதுதான் என்பேன். இலக்கியம் என்பதன் உண்மையான வடிவம் இதுதான். எல்லாவற்றையுமே வெளிப்படையாய் எடுத்துப் பிட்டுப் பிட்டு வைப்பது கட்டுரை - செய்தி. சொல்ல வந்ததை இலைமறை காயாக இலக்கிய நயத்தோடு பதிவு செய்வதே உண்மையான இலக்கியம். மீண்டும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குலட்சுமி என்ற பெயரிட்ட பல பெண்கள் மிகவும் கஷ்டபடுகிறார்கள் என்பதாக ஒரு கருத்து. அதை இப்பதிவில் நிறைவேற்றி உள்ளீர்கள்
பதிலளிநீக்குஎங்கிருந்து பிடித்தீர்கள் இந்தப்படத்தை? அகற்றி விடுங்கள். பதிவும் படமும் மனதை கனக்க வைக்கின்றன கில்லர்ஜீ!
பதிலளிநீக்குநல்ல கவிதை அண்ணா...
பதிலளிநீக்குமனம் கனக்க வைத்த பகிர்வு.
பதிலளிநீக்கு