தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 03, 2016

உரிமையாளர் யார் ?















திரைப்படங்களில்,
பாடலாசிரியர் தன் திறமையால் பாடல் தீட்டுகிறார்.
அதற்கு இசையமைப்பாளர் தன் திறமையால் இசை மீட்டுகிறார்.
இவர்களின் ஒத்துழைப்போடு பாடகர் பாடகிகள் தங்களின் திறமையால் பாடுகிறார்கள். இந்தப் பாடல்கள் இசைத்தட்டில் வெளிவரும்போது யார் பாடல் என்று சொல்வது ? இந்த 3 பேருமே இதற்கு தகுதியானவர்கள் உரிமையாளர்கள் என்றுகூட சொல்லலாம் ஒரு சதி பதியின் ஒத்துழைப்பால் ஒரு குழந்தை எப்படி பிரம்மனால் படைக்கப்படுகிறதோ ? அதைப்போல இந்த 3 பேருக்கும் சம்பளம் கொடுத்து இவர்களை இணைய வைத்து இப்பாடல்கள் படைக்கப்பட அடிப்படை காரணகர்த்தாவாக பிரம்மனைப்போல் வருகிறார்களே தயாரிப்பாளர்கள் இவர்களின் பாடல் என்று கூட சொல்லலாம். காரணம் இவர்களுக்கு அதிகாரப் பூர்வமான உரிமை இருக்கிறது, ஆனால் என்ன சொல்கிறார்கள் ?

யார் ?
இந்த அற்ப பதர்கள், வீட்டில் பூச்சிகள், அறியா மடந்தைகள்.
திரைப்படங்களில் வார்த்தைகளுக்கு அர்த்தம் மட்டுமல்ல மொழியே  தெரியாமல் ஆ...ஈ...ஊ... என்று பொம்மைகளைப் போல் வாயசைக்கும் நடிகர் நடிகைகளின் பெயர்களைச் சொல்லி அவர்களின் பாடல்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ? ஞானசூன்யங்களே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இது எந்த வகையில் தர்மம் ? இந்த நடிகர், நடிகைகள் உனக்கு பிடித்தவர்கள்தான் இல்லையென நான் சொல்ல வரவில்லை
(அதனால்தானே கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிறாய்)
உனக்கு பிடித்தவர்கள் என்பதற்காக பொய் சொல்லலாமா ? இவர்களை விட்டு நீ வெளியே வரமுடியாது வந்தால் நீ செத்து விடுவாய் எங்கே வரமுடியும் என்கிறாயா ? எங்கே வந்து பார்.
சவால் ?

சாம்பசிவம்-
சவால் விட்டு தோற்றாலும் பரவாயில்லே இவங்களே வெளியே கொண்டு வரலாம்னு நினைக்கிறீரு நல்லகாரியம்தான் ஆனா இவங்கே உம்மை உள்ளே இழுத்து விடாமல் இருந்தால் சரிதான்.

 காணொளி

19 கருத்துகள்:

  1. நடுவிலே ,மோடி எதற்கு வந்தார் ?
    காணொளியில் ஜேசுதாஸ்...இல்லை இல்லை ...கில்லர்ஜி பாடலை ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  2. ஐயா உங்க அப்பன் காலத்திலே பாடத்தெரிந்தவர்கள் தான் நடிகர் நடிகை ஆனார்கள். ஏன் என்றால் நாடகங்களின் திரை வடிவமாக சினிமா கருதப்பட்டது. அப்போது பாடல் யார் எழுதியிருந்தாலும் அது பாடிய நடிகரின் பெயரராலேயே கூறப்பட்டது. சின்னப்பா பாடியது,கிட்டப்பா பாடியது,சுந்தராம்பாள் பாடியது என்றே அறியப்பட்டன.

    பின்னர் பின்னணி பாடகர்கள் வந்தாலும் அதுவே சிவாஜி பாடியது எம் ஜி ஆர் பாடியது என்று வழங்கப்பட்டது. ஜெமினி பாடியது பத்மினி பாடியது அல்லது சாவித்திரி பாடியது என்று சொல்லப்படவில்லை. ஏன் என்றால் டி எம் எஸ் என்ற ஒரு மாபெரும் வித்தகர் இருவருக்கும் வேறு வேறு குரல்களில் பாடியது தான்.

    பின்னர் இளையராஜா போன்ற இசை அமைப்பாளர்கள் வந்தவுடன் அவர்களின் தனித்தன்மை புலப்பட இது இளையராஜா பாட்டு, இது ரஹ்மான் பாட்டு, என்று இசை அமைப்பாளரின் பெயரால் பாட்டுக்கள் குறிப்பிடப்பட்டன.

    தற்போது இந்தப் பாட்டு இது ரஜனி பாட்டு என்றோ அல்லது கமல் பாட்டு என்றோ குறிப்பிடுவதில்லை. பொதுவாக இசை அமைப்பாளர் பெயராலேயே அல்லது படத்தின் பெயராலேயே அறியப் படுகின்றன.

    ஆகவே தங்களின் கூற்றை நான் மறுக்கிறேன்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. திரை என்னும் மயக்கத்தில் இருந்து இளைஞர்கள் வெளியே வந்துதான் ஆகவேண்டும் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொல்வது சரி. நான் நடிகர்கள் பெயரைச் சொல்லி அவர்கள் நடித்த பாடல் காட்சி என்று சொல்வது வழக்கம். ஆயினும் எம் ஜி ஆர் தனது பாடல் காட்சிகளுக்கு எடுத்துக்கொள்ளும் அக்கறை பற்றித் தெரிய வந்தபோது அவற்றை எம் ஜி ஆர் பாடல்கள் என்று சொல்வதில் தவறில்லை என்றும் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  5. தம 5

    ஆமா இல்ல....நல்லா சொன்னீங்க சகோ

    பதிலளிநீக்கு
  6. பாட்டு சூப்பர் அண்ணே...
    ஊருப்பக்கம் கச்சேரி கிடைக்குதான்னு பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  7. அவிச்ச முட்டையை அடை வைக்கமுடியுமா!?..

    அவந்தான் ஞானசூன்யம்..ன்னு ஆகிட்டானே..
    அப்புறம் எங்கிட்டு கூடி சிந்திக்கிறது!?..

    பதிலளிநீக்கு
  8. தங்களின் ஆதங்கமும், பாடல் பாடிய விதமும் நன்று

    பதிலளிநீக்கு
  9. ம்ம்ம்ம்ம், பாட்டு எழுதினவர் பெயராலே சொல்லலாமோ!

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு ஆதங்கம்! இப்போதைய பாடல்களுக்கு வேண்டுமானால் சரி! அப்போதைய பாடல்களில் சிவாஜி எம்.ஜி.ஆர் போன்றோரின் பங்களிப்பும் பாடல்களுக்கு உண்டு. அவர்களின் நடிப்புத்திறன் சில பாடல்களை தூக்கி நிறுத்தி உள்ளன.

    பதிலளிநீக்கு
  11. JK22384 அவர்களின் கூற்றை நான் வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. நடுவில் மோடி ஏன் சகோ?? காட்சி கைபேசியில் வரவிலை தொழில்நுட்ப தடங்கள் என்றுசொல்லி பால் அபிசேஷம் செய்யுது))) உங்களுடன் நானும் உடன் படுகின்றேன் ஜீ!

    பதிலளிநீக்கு
  13. திரு ஜெயக்குமார் அவர்கள் சொன்னது போல சிவாஜி எம்ஜியாருக்குப் பிறகு யாரும் நடிகர்களின் பெயரைச் சொல்லி பாடலை சொல்வதில்லை. இவ்வாறு நடிகர்கள் பெயரை சொல்லி பாட்டைக் கேட்பதில் திரு TMS அவர்களுக்கே மன வருத்தம் தான். ஒரு முறை அவர் பெங்களூருவிற்கு வந்தபோது (நான் அப்போது அங்கே பணி புரிந்துகொண்டிருந்தேன்) ஒரு இசை நிகழ்ச்சியில் பாடும்போது இரசிகர்கள் சிவாஜி பாட்டு,எம்ஜியார் பாட்டு வேண்டும் என சத்தம்போட்டபோது அவர் உடனே TMS பாட்டு வேண்டாமா என்று சொல்லிவிட்டு ‘கேட்டவரெல்லாம் பாடலாம். என் பாட்டுக்குத் தாளம் போடலாம்” என்று பாடினார்.

    பாடியவர்கள் பெயரை சொல்லி பாடலை சொல்வது தான் அவர்களுக்கு நாம் தரும் தரும் மரியாதை. அதே நேரத்தில் பாடலாசிரியர் மற்றும் இசை அமைப்பாளர் ஆகியோரின் பங்களிப்பையும் மற(றை)க்கூடாது.

    தங்கள் குரலில் பாட்டை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  14. விரிவான எங்கள் கமென்ட் எங்க போச்சு என்று தெரியவில்லை....நல்ல பகிர்வு. உங்கள் பாட்டு செம...தாசேட்டண்ட ரூபத்தில் ...அது சரி எப்ப கான மேளா ஆரம்பிச்சீங்க ஜி?!!

    பதிலளிநீக்கு