மனிதன்
இப்படி வாழ்ந்து இப்படித்தான், மரணிக்க வேண்டும் என்பதை மேலே
உள்ளவன் தீர்மானித்திருக்கிறான் என்கிறது பொதுவான சமூகம். இல்லை
உன் வாழ்க்கை உன் கையில் என்கிறது மறுபுறத்து சமூகம்.
இப்படித்தான்
வாழவேண்டும் என ஒரு வட்டத்துக்குள் தன்னை நிலை நிறுத்தி வாழ்கிறவர்களும் உண்டு, எப்படி
வேண்டுமானாலும் வாழலாமென சித்தன் போக்கு 7 O'clock என்று போகிறவர்களும் உண்டு, இதில் எமது
போக்கு எந்த வகை ? யாமறியேன் பராபரமே.... வாழும்
முறை சரியோ... தவறோ ? ஒன்று மட்டும் சர்வ நிச்சயம் அது யாருக்கும்
தீங்கு செய்யாமை அதற்கு முன் நினையாமை, இது இன்றுவரை உண்மையென சத்தியம்
செய்ய சாத்தியமே !
இறைவன்
மீதோ, இறை வணக்கத்தின் மீதோ நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ
வாழ்க்கையின் நடைமுறையில் நேர்மை, நியாயம், உண்மை, இருந்தால் ? ? ? அவனை இறைவன் ஏற்றுக் கொள்வான் என்பதில்100 க்கு 100% எமக்கு
நம்பிக்கை உண்டு, இறைவனை வணங்குகிறவன் பசியால் தர்மம்
கேட்கிறவனிடம் இருந்தும் இல்லை என்பதேன் ? இதை இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்
என்பது அவன் கண்ணுக்கு புலப்படவில்லையே ஏன் ? அப்படியானால் உனது
இறை வணக்கத்தின் நேரம் வீண் விரையம்தானே ! அதற்குப்பதில் அந்த பொன்னான
நேரத்தை உனக்காகவோ, அல்லது உன்னை சார்ந்தவர்களுக்காகவோ உணவுக்காக உழைத்திருக்கலாமே இறை
வணக்கத்திலேயே இருப்பவனைவிட உழைத்துக் கொண்டே இருக்கும் உழைப்பாளி சொர்க்கத்திற்கு
அனுப்பப்படுவான் என ஒரு வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது அது எந்த வேதமென சொல்ல, நான் விரும்பவில்லை காரணம்...
சுப்பையா
சொன்னது சுல்த்தானுக்கும், சூசைக்கும் பிடிக்காது
சூசை
சொன்னது. சுப்பையாவுக்கும்,
சுல்த்தானுக்கும் பிடிக்காது
சுல்த்தான் சொன்னது சூசைக்கும், சுப்பையாவுக்கும் பிடிக்காது
யார் சொன்னார்கள்
என்பதைவிட, என்ன
சொன்னார்கள் ? என்று ஆராய்ந்து பார்த்தால்
நமக்குள் ஜாதி, மதச்சண்டைகள்
இருக்காது. என்பதை எமக்கு சொன்னவர் அருமை நண்பர் திரு. சிவாதாமஸ்அலி
ஜாதிச் சண்டைகள் இல்லா சமூகம் வேண்டும்
பதிலளிநீக்குதம +1
வருக நண்பரே உண்மையான வார்த்தை
நீக்குஎல்லா விஷயத்திலும் இரு வகைக் கருத்துகளும் இருக்கும்! சும்மா இருத்தலே சுகம் என்பார்கள். சோம்பித் திரிதல் தப்பு என்றும் சொல்வார்கள். இது ஒரு நேரம், அது ஒரு நேரம்! இடைத்தைப் பொறுத்து!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குநம் வாழ்க்கை நம் கையில் என்றாலும் மரணம் என்பதை நாம் தீர்மாணிக்க முடியாது... அதை தீர்மானிப்பவன் கண்ணுக்குத் தெரியாத இறையே....
பதிலளிநீக்குநம் மரணம் இப்படித்தான் இருக்க வேண்டும் என நாம் தீர்மானித்தால் அது கோழைத்தனமான தற்கொலையாக இருக்கும்...
அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி நண்பரே
நீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குத ம 4
வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குஎதுவும் அவரவர் மனதைப் பொறுத்தே.
பதிலளிநீக்குமுனைவரின் வருகைக்கு நன்றி
நீக்குமிகச் சுருக்கமாக எனினும்
பதிலளிநீக்குமிக மிக அருமையான கருத்து
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கவிஞரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஅருமையான பதிவு சகோ.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி சகோ
நீக்குஒருவருக்குப் பிடிக்காது என்பதால் நமக்குச் சரி என்று தோன்றுவதை அடுத்தவர் மனம் புண்படுத்தாமல் சொல்லலாம் என்பதே என் கருத்து
பதிலளிநீக்குவாங்க ஐயா தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குமூவரில் இருவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அது மெஜாரிட்டி கருத்து ,அதுதான் உண்மையும் கூட !
பதிலளிநீக்குஇதனால் நான் அறிவது ,மூன்று மதத்துக்காரனும் சொல்வது புரூடா தான் :)
ஜி தங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி
நீக்குஇன்றைய நிலையில் நல்ல 4மூகம் தானாக வருவதாக கண்ணுக்கெட்டியதூரம் பார்த்தாலும் தெரிகிற மாதிரி இல்லையே நண்பரே...
பதிலளிநீக்குதெரியவைப்பது மக்களின் மனங்களில் இருக்கின்றது நண்பரே
நீக்குதலைப்பும் கருத்தும் அருமை.
பதிலளிநீக்குமன்னிக்கவும்உ கில்லர்ஜி. உங்களை சந்திக்க முடியாமல் போனதில் வருந்துகிறேன்.அன்று அலுவலக ஆய்வுக் கூட்டம் முடிய இரவு வரை ஆகி விட்டது.
பதிலளிநீக்குமன்னிப்பு எதற்கு ? முதலில் பிழைப்பு பிறகே வலைப்பூ அடுத்தமுறை சந்திக்கலாம் நண்பரே
நீக்குகருத்து அருமை. சமூகத்திற்கு நம்மால் முடிந்த அளவு என்ன நன்மை செய்ய முடியுமோ அதைச் செய்து வந்தாலே போதும். எல்லாம் இன்ப மயம்!!
பதிலளிநீக்குஉண்மையான விடயம் சொன்னீர்கள் நன்று
நீக்குஅவையெல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன..
பதிலளிநீக்குயார் சொன்னாலும் கேட்கப்பட மாட்டாது..
ஆனாலும் - காலையிலேயே கருத்தான பதிவு..
வாழ்க நலம்!..
வருக ஜி வருகைக்கு நன்றி
நீக்குஶ்ரீராம் சொன்ன சும்மா இருத்தல் என்பது தனி! பொருளே தனியானது. எல்லோராலும் சும்மா இருக்க முடியாது! மனதையும் கட்டுப்படுத்திக் கொண்டு தியானத்தில் லயிப்பதே சும்மா இருக்கும் சுகம். சோம்பித் திரிதல் வேறுனு நினைக்கிறேன். :))))))) இப்போப் பாருங்க, இதைப் படிச்சுட்டு எனக்குச் சும்மா இருக்க முடியலை! ஏதானும் சொல்லத் தோணுது! இந்தச் சும்மா வேறே! :))))
பதிலளிநீக்குசொல்ல நினைத்ததை சொல்லுங்கள் வருகைக்கு நன்றி
நீக்குதலைப்பு அருமை!
பதிலளிநீக்குJawaharlal nehru once said you cannot talk of GOD to a starving person
பதிலளிநீக்குYou must give him food first.....
நல்லதொரு விடயம் நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு
தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குயார் சொன்னார்கள் என்பதைவிட என்ன சொன்னார்கள் என ஆராய்ந்து பார்த்தால் நமக்குள் ஜாதி மதச் சண்டைகள் இருக்காது என தங்கள் அருமை நண்பர் திரு சிவதாமஸ்அலி சொன்னதை நானும் வழிமொழிகின்றேன். அருமையான பதிவு. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநண்பரின் வழிமொழிதலுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி
நீக்குநல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி ஜி வருகைக்கு
நீக்கு