விதி என்பது உண்மையா ? எனக்கு இதில் நம்பிக்கை இருந்ததில்லை பிறகு நம்பிக்கை
வந்தது 1991-ல் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்திருந்தால் என் வாழ்க்கை
நாசமாய் போயிருக்காது ஒரு செல்வந்தரிடம் போய்க் கேட்டேன் அவர் நினைத்திருந்தால்
கொடுத்திருக்கலாம் என் வாழ்வை காப்பாற்றி இருக்கலாம் மறுத்து விட்டார். எனக்கு பத்தாயிரம் பெரிய பணமே அல்ல ! காரணம் அன்றைய காலத்தில் நான் வாரம் 1000/ ரூபாய் வரை சம்பாரித்துக் கொண்டு
இருக்கின்ற தொழிலாளி, என் வாழ்வு நாசமாக அவரும் காரணமாகி விட்டாரே எனக்கு கோபமாய்
இருந்தது பின்னாளில் என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன் அவர் மீது கோபப்படுவது
எந்த விதத்தில் நியாயம் ? அவர் எனக்கு கொடுக்க வேண்டும் என்பது
கட்டாயமில்லையே எனது விதி இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது அவர் என்ன செய்வார் ?
என்னைப் போல் பத்துப்பேர் அவரிடம் போய் பத்தாயிரம் கேட்டால் ? அவர் பிறரிடம் போய் பத்தாயிரம் கேட்கவேண்டிய நிலை அவருக்கு
வந்து விடுமே அதனால்தான் அவர் நமக்கு தரவில்லையோ ? பின்னாளில் நான் கேட்காமலேயே எனக்கு பல ஆயிரங்கள்
கொடுக்கமுன் வந்தார் நான் மறுத்து விட்டேன், காரணம் எனது பொருளாதாரம் உயர்ந்து
விட்டது, அன்றைய காலம் மட்டுமில்லை இன்றைய காலம் வரை அவர் செல்வந்தரே.... என் மரணகாலம்
கடந்தும் நிலைக்கட்டும் அவர் செல்வந்தர் வாழ்வு என இந்த தருணத்தில் இறைவனை
வேண்டிக் கொள்கிறேன். என்வாழ்வு கெட்டது போல் யாருக்கும் கெடக்கூடாதென நினைத்து
கேட்டவருக்கெல்லாம் என்னால் முடிந்ததை உதவினேன் என்ன ஆனது... போனவன் போனான்டி என்ற கதையானது திருப்பிக் கொடுத்தது
யாரென திரும்பிப்பார்க்கிறேன் திருப்புல்லாணி தொடங்கி திருவண்ணாமலை வரை அது
திருப்பதி ஏழுமலையானுக்கு கோவிந்தா, கோவிந்தா திருப்பிக் கொடுக்கவில்லை திருந்தாத
ஜென்மங்கள். உதவி செய்பவனை கோமாளி ஆக்கி விடுவதால்தான் யாரும் உதவமுன் வருவதில்லை,
எனக்கு மீண்டும் 1991 ஞாபகம்
வந்தது அவர் கோமாளி அல்ல ! அறிவாளி.
1991-ல் நான் 10000/ ரூபாய் கேட்டது, ஒரு திருமணத்தை நடத்த அல்ல !
ஒரு திருமணத்தை நிறுத்த...
Yes that Marriage for KILLERGEE
(குறிப்பு - பணம் எதற்காக கேட்டேன் என்பது இன்றுவரை அவருக்கு தெரியாது)
ரொம்பவே மோசமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை உங்கள் மனதை ரணமாக ஆக்கி இருப்பதும் புரிகிறது. விரைவில் எல்லாம் சரியாகி மன அமைதி கிட்டப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது பிரார்த்தனைகளுக்கு எமது தலைவணக்கம் இருப்பினும் தற்போது எனது பிரச்சனைகளும், கவலைகளும் உயர்ந்து கொண்டே வரும்போது ஐயம் ஏற்படுகிறது மீண்டும் நன்றி
நீக்குநம்பிக்கையுடன் இருங்கள். எதற்கும் ஓர் முடிவு உண்டு.
நீக்குநன்று மீள் வருகைக்கு நன்றி
நீக்குகடைசி முடிவு சுவராஷ்யம். அதுசரி.. திருமணத்தை ஏன் தடுத்த நிறுத்த நினைத்தீர்கள்?
பதிலளிநீக்குவருக நண்பரே விருப்பமற்ற விவாகம் இருப்பினும் மனையாளை வெறுத்ததில்லை.
நீக்குஆற்றில் போட்டாலும் அளந்து போடு.. போன்ற பழமொழிகள் இதற்குச் சொல்வார்கள். நீங்கள் சொல்வது போல எது நடக்கவேண்டும் என்று இருக்கிறதோ, அது நடந்தே தீரும் என்னும்போது என்ன செய்ய முடியும்?
பதிலளிநீக்குஆம் நண்பரே நம்மால் நினைப்பதை எல்லாம் நடத்தி விடமுடியாது இதை எல்லோரும் உணரும் தருணம் நிச்சயம் வரும்.
நீக்குதிருமணத்தை நிறுத்தப் பணம் தேவைப்பட்டதா? எதோ ஒரு மனச்சுமையில் இருந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. எனினும், உங்களுக்கு உதவாதவரையும் குறை சொல்ல விரும்பாத உங்கள் பண்பு பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா நியூஜெர்சி
வருக நண்பரே எனது இயல்பு குணம் யதார்த்தமாக வார்த்தைகளில் வெளிவருகிறது இதுவே உண்மை வருகைக்கு நன்றி
நீக்குதங்களின் திருமணத்தைத் தாங்களே நிறுத்த முற்பட்டீரா
பதிலளிநீக்குவியப்பாக இருக்கிறது நண்பரே
ஆம் நண்பரே கட்டிக்கொடுத்து ஒரு வாரமே ஆன தங்கை சந்தோஷமாக வாழவேண்டுமெனில் நான் திருமணம் செய்ய வேண்டும் இதை மறைமுகமாக நிறுத்த அன்று எனக்கு பணபலமும், அறிவு முதிர்ச்சியும் போதவில்லை அதேநேரம் திருமணம் முடிந்த பிறகு ஆயிரமாயிரம் யோசனைகள் எனக்கு வந்தது இதுதான் விதி.
நீக்குஇன்று எனக்கு தங்கை துணை, தங்கைக்கு நான் துணை எங்கள் இருவரையும் ‘’சம்பந்திகள்’’ ஆவதற்காகத்தான் இறைவன் படைத்து இருக்கின்றானோ... என்று பலமுறை நினைத்து பார்த்து இருக்கின்றேன்.
இன்று தங்கைக்காக எவனும் வாழ்வதில்லை இதுவும் நல்லதே.... பந்தபாசத்தால் பிணைந்தவன் நிம்மதியாக வாழ்ந்து நான் பார்த்த்தில்லை அதேநேரம் இன்று எவனுக்கும் சகோதரிகள் இல்லை என்பது வேறு விடயம்.
விதி என்பது நமது அலைபேசியில் இருக்கும் mp3 player அல்ல நாம் விரும்பும் பாடலைக் கேட்பதற்கு அது ஒரு FM radio போல அதில் ஒளிபரப்பாகும் பாடலை விரும்பக் கற்றுக்கொண்டால் விதியும் இனிமையாக நகர்த்தும் நம்மை.
பதிலளிநீக்குவாங்க மாப்ளே...
நீக்குவேதனையிலும் ரசிக்க கூடிய உவமை அருமை.
சில சமயங்களில் இப்படித்தான். என்ன நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும்.
பதிலளிநீக்குவாங்கிக் கொண்டு திருப்பித் தராதவர்கள் - நிறையவே....
வாங்க ஜி தங்களது கருத்து உண்மையே...
நீக்குஎன்னய்யா சஸ்பென்சா உள்ளது.
பதிலளிநீக்குஇதில் சஸ்பென்ஸ் ஒன்றுமில்லை முனைவரே பழைய ஞாபகங்கள் அவ்வப்பொழுது நிழலாடி வருகின்றது.
நீக்குஒண்ணுமே புரியலை இந்த பதிவிலே! எது விதி? கேட்டது விதியா? கிடைக்காமல் போனது விதியா? கொடுத்தது விதியா? கொடுத்தது திரும்பாதது விதியா? பதிவு எழுத வைத்தது விதியா? இதை நாங்கள் படிப்பது விதியா?
பதிலளிநீக்குஎன் செயலாவது ஒன்றுமில்லை. எல்லாம் அவன் செயல் என்று சொல்கிறீர்களா?
ஐயா குழப்பானந்தா கொஞ்சமா குழப்புங்க.
--
Jayakumar
உதவிகள் இன்று குறைந்து விட்டதற்கு நன்றி மறக்கும் மனிதர்களே காரணம் என்பதையே நான் வலியுறுத்துகிறேன் ஐயா.
நீக்குநடப்பது நடந்தே தீரும் அதை நிச்சயமாக மாற்ற முடியாது.
அவர் பத்தாயிரம் கொடுத்து இருந்தால் இந்த பதிவை உங்களால் எழுதி இருக்க முடியாதே
பதிலளிநீக்குவருக நண்பரே இதை மட்டுமல்ல நான் எந்த பதிவுகளும் எழுதியிருக்கமாட்டேனோ... என்றும் நினைக்கலாம்
நீக்குகாரணம் இழப்புகளும், கவலைகளுமே என்னை எழுதும் திசையில் திருப்பி விட்டது நன்றி தமிழரே.
இதுவும் விதி.. அதுவும் விதி..
பதிலளிநீக்குவிதியை மாற்றுவதற்கு இல்லை ஒரு விதி..
அன்பின்ஜி இதை நான் முழுமையாக நம்புகிறேன்
நீக்குகாரணம் மேலே நண்பர் திரு. கரந்தையார் அவர்களுக்கு கொடுத்த மறுமொழியை காணுக...
....கில்லர்ஜி ஒவ்வொரு நிகழ்விற்கும் ஏதோ ஒரு காரணம் இருப்பது போல்தான் தெரிகிறது....சில சமயம் நாம் அதற்கு cause and effect போட்டுப் பார்த்து அறிய முடிகிறது....இல்லை.அப்படி நம்மை சமாதானம் செய்து கொள்கிறோம்..அறிய முடிந்தால் திருத்திக் கொள்ள முடியும்...கொள்ள முயற்சி செய்யலாம்..ஆனால் பல சமயங்களில் காரணம் தெரிவதில்லை....அதை விதி என்று சொல்லிக் கடந்து விடுகிறோம்....விதியை மதியால் வெல்லலாம் என்று சொன்னாலும்.. பல சமயங்களில் அந்த மதி நமக்கு இல்லாமல் ஆகிவிடுகிறதே அது???? விதி???!!!!இல்லையா..ஜி
நீக்குவருக இதில் சமாதானம் ஆனாலும், ஆகாவிட்டாலும் முடிவு விதி என்பதில்தான் வந்து நிற்கிறது.
நீக்கு"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
பதிலளிநீக்குநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை"
நம்மால் தடுத்திருக்கமுடியாதவைகள் எல்லாம் விதியின்பாற் பட்டவை.
"விதி சிரித்தது" படம் நல்லா இருக்கு. ஆனால் கொடுவாள் மீசைதான் ரொம்பப் பயமுறுத்துகிறது.
எனக்கு மிகவும் விருப்பமான, நான் எனது வாழ்நாளில் அதிகம் கேட்ட பாடலும் இதுவே
நீக்குஆம் நண்பரே படத்தை நானே உருவாக்கினேன் நான் இப்படித்தானே இருப்பேன் வருகைக்கு நன்றி
பந்தம் என்பது சிலந்திவலை, பாசம் என்பது பெருங்கவலை என்று கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது. நீங்களும் உங்கள் தங்கையும்
பதிலளிநீக்குசம்பந்தி ஆகி இருகுடும்பமும் மகிழ்ச்சியாக பேரன், பேத்திகளை கண்டு வாழுங்கள். சென்றவைகளை எண்ணிக் கொண்டு இருக்காதீர்கள். இனி விழிப்புடன் இருங்கள் ஆறுதல் படுத்துக்கள் மனதை.
வருக சகோ தங்களது வார்த்தைதான் நடக்கப்போகின்றது வருகைக்கு நன்றி
நீக்குரொம்பவே காயம் பட்டிருக்கிறீர்கள். ஆறு மனமே ஆறு.
பதிலளிநீக்குவாழ்வு முழுவதுமே காயம்தான் தங்களது வார்த்தைகளே மருந்து.
நீக்குஆழ்ந்த கதை ஒன்று எழுதியுளீர்கள் சகோதரா.
பதிலளிநீக்குஇது தான் வாழ்வு.
tamil manam - 5
வருக சகோ கதை அல்ல சொந்த நிகழ்வு.
நீக்குஒரு சின்ன கதை கேளுங்கள் அதன் பின் விதிப்படி முடிவெடுங்கள் இரு நண்பர்கள் ஒருவனுக்கு விதிமேல் நம்பிக்கை இன்னொருத்தனுக்கு மதிமேல் நம்பிக்கை.இருவரும் சாலையில் சென்று கொண்டிருக்க ஒருவன் ஒரு விபத்தில் அடிபடுவதைக் காண்கிறார்கள் விதியை நம்புபவன் பேசாமல் இருந்தான் மதியை நம்புபவன் விபத்துக்குள்ளானவனை மருத்துவமனையில் சேர்த்து பிழைக்க வைக்கிறான் பின் தான் அப்படிச் செய்ததால்தான் விபத்துக்குள்ளானவன் பிழைத்தான் என்று வாதிடுகிறான் விதியை நம்புபவன் இவனுக்கு விபத்து நடக்க வேண்டும் எனது விதி. இவனை நீ மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்பதும் விதி இது பற்றி நீ பேசுவதும் விதி நான் பதில் சொல்வதும் விதி என்றானாம் .....!
பதிலளிநீக்குவாங்க ஐயா கதையை தொடங்கும் பொழுதே ''விதி''ப்படி முடிவெடுங்கள் என்று விதியை எழுதி விட்டீர்களே... பிறகு நான் என்ன சொல்வது ?
நீக்கு‘எல்லாம் நன்மைக்கே.‘ என எண்ணி அந்த சம்பவத்தை மறந்துவிடுங்கள்.
பதிலளிநீக்குஎல்லாம் நன்மைக்கே என்பது பல இடங்களில் மனிதர்களுக்கு பொருந்தி வரத்தான் செய்கிறது நண்பரே
நீக்குநல்ல அனுபவப் பகிர்வு
பதிலளிநீக்குதிருபுலானி..திருப்பதி
கொடுக்கும் பொழுதே மறக்கும் மனம் இருந்தால் வருத்தம் இருக்காது
அல்லது இருக்கும் பொழுது கொடுக்கா மனம் இருந்தாலும் நலமே
ஆனால் கொடுத்துவிட்டு புலம்புவது நியாயமாரே
வருக தோழரே எனது தந்தை அடிக்கடி சொல்லிய வார்த்தை
நீக்கு//கொடுத்து பகையாளி ஆகாதே அதற்கு கொடுக்காமல் பகையாளி ஆகலாம்// என்பது போல இதுவும் சரிதான் நன்றி தோழர்
அனுபவங்களுக்கு என்றுமே முடிவில்லை. 80 வயது ஆனாலும் அவை நிழல்போல தொடர்ந்து கொண்டு தானிருக்கும். பாதிப்புகள் ஏற்படுத்திய மோசமான அனுபவங்களை மறக்க அல்லது உள்ளத்தினடியில் போட்டு அமிழ்த்த முயற்சி செய்யுங்கள். அப்போது தான் நிகழ்காலத்தை சமாளிக்க முடியும்!!
பதிலளிநீக்குவருக சகோ அழகிய அர்த்தம் பொதிந்த கருத்துரை நன்றி
நீக்குவிதியா..சதியா...மர்மமாய் இருக்கிறது...
பதிலளிநீக்குவிதியோ.. சதியோ.. நடக்க வேண்டியது நடந்து விடுகிறது நண்பரே
நீக்குஎல்லாம் நன்மைக்கே!
பதிலளிநீக்குவாங்க ஐயா நன்றி
நீக்குஅனுபவங்களே வாழ்க்கை சகோ.
பதிலளிநீக்குசகோவின் கருத்துரைக்கு நன்றி
நீக்குவிதியை நம்பாததாலோ என்னவோ இப்படியொரு அனுபவம் எனக்கு வரவில்லை :)
பதிலளிநீக்குவராததுவரை நல்லதே ஜி வருகைக்கு நன்றி
நீக்குதாரமும் குருவும்
பதிலளிநீக்குதலை விதிப் பயன்
என்பார்களே - அது
உண்மை தான்!
நான் சிவப்பியை நாட
கருப்பி தானே - எனக்கு
மனைவி ஆனாள் - அது
விதி என்பேன்!
நல்லாசான் அமைவதும்
விதி என்பேன்!
அதற்காக
வலிய வந்த சீதேவியை
உதைத்து விரட்டலாமோ?
எல்லோர் வாழ்விலும்
இவற்றைக் காணலாமே!
வருக நண்பரே தங்களது கவித்துவமான கருத்துரைக்கு நன்றி
நீக்குஅனைத்துக்கும் காரணம் உணவு. நடப்பதும் நடந்ததும் நன்மைக்கே என எடுத்து கொண்டு செல்ல வேண்டியது தான். திருமணம் யாருக்கு நடந்தது? எதற்காக நிறுத்த நினைத்தீர்கள்?
பதிலளிநீக்குவருக விளக்கம் மேலே திரு.கரந்தையார் அவர்களுக்கு கொடுத்த மறுமொழியில் காணவும் நன்றி
நீக்கு