தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஏப்ரல் 19, 2017

புது மருமகள்


ஏம்மா இப்படி அழுவுறே மாமாவும், அத்தையும் என்னை நல்லவிதமா பார்த்துக்கிருவாங்க...
நான் உன்னை நினைச்சு அழுவளடி ய்யேன் அண்ணன் மகனை நினைச்சு அழுவுறேன்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

ஏண்டி செங்கமலம் நீ வாக்கப்பட்டு போன இடத்திலே உன் மாமியார் நல்லா வச்சுக்கிறாங்களா ?
ஏய் கிழவி அவுங்க என்ன என்னை வச்சுக்கிறது நான் ஒழுங்கா வச்சுக்கிறனானு கேளு...
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *

மருமகளே நீ எனக்கு முதல் குழந்தை பேரனைத்தான் பெத்துத் தரணும்.
அப்ப நீங்க மட்டும் ஏன் பொம்பளைப் புள்ளையை பெத்தீங்க ?
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *

ஏண்டி, பார்வதி நீ வாக்கப்பட்ட மாமியார் குடும்பத்தை ரெண்டாப் பிரிச்சுட்டியாம்.
நான் அந்தக் குடும்பத்துக்கு போனதே அதுக்குத்தானே...
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *

நீ எந்த நேரம் இந்த வீட்டுக்குள்ளே விளக்கு ஏத்துனயோ  எம்புருஷன் கண்ணை மூடிட்டாரு...
ஏற்கனவே உங்க புருஷன் குருடன்தானே... அவரு எப்ப... கண்ணைத் திறந்தாரு ?
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

ய்யேன் மவனை மயக்கி தனிக்குடித்தம் கொண்டு போயிட்டியடி நீ நல்லாவே இருக்க மாட்டே...
நீ மட்டும் ய்யேன் மாமனாரை மயக்கி தனிக்குடித்தனம் கொண்டு போயி நல்லா இருக்கலையா ?
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *

உன்னாலதான் எம் மகன் குடிகாரனாகி டாஸ்மாக்கே கதினு கெடக்குறான்டி...
ய்யேன் டாஸ்மாக் கடையைத் திறந்த கவர்மெண்ட்டை போயி கேளேன் பார்ப்போம்.
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *

ஏத்தா, குஞ்சரம் புதுசா வீட்டுக்கு வந்த ஒம் மருமவ எப்ப பாத்தாலும் புருஷங்கூட மினுக்கி கிட்டுல போறா....
ய்யேன் நீ மட்டும் ஓம் புருஷங்கூட எப்படிப்போனே ?
உள்ளேதான் இருக்கியா ? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *

ய்யேன் மயேன் துபாயிலேருந்து சம்பாரிச்சுக் குடுக்குறான்ல அந்தப் பகுசியிலதான்டி நீ இப்படியெல்லாம் பேசுறே...
ய்யேன் ஓம் புருஷனையும் துபாய்க்கு அனுப்பி வெச்சுட்டு பகுசியிலே பேசேன்... யாரு... புடிச்சுக்கிட்டு இருக்கா ?  
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *

ஓவ் வயித்துலே ஒரு புழு, பூச்சி உண்டானா... பேரன் பேத்தியை பாத்துட்டு கண்ணை மூடிருவேன்...
நீ போறதுனா போயித்தொலைய வேண்டியதானே எனக்கு எதுக்கு வயித்துலே புழு, பூச்சி வெக்கணும்... ? ஹூம் நல்ல குடும்பத்துல வாக்கப் பட்டருக்கேன்...
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *

-Chivas Regal  சிவசம்போ

இருந்தாலும் மாமியாரு, மருமகள் வயித்துல புழு, பூச்சி வெக்கணும் சொல்றது நல்லாயில்லை.

36 கருத்துகள்:

  1. எங்கேருந்து பிடிப்பீங்களோ! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க எதுக்கு புடிக்கிறோம் உள்ளதைதானே சொல்றேன்.

      நீக்கு
  2. கவர்'மண்டா'இருக்கே ,எப்படிக் கேட்கிறது :)

    பதிலளிநீக்கு
  3. இருபதாம் நூற்றாண்டு மருமகள்
    இப்படித்தானே இருப்பாள்
    பதில்கள் எல்லாம் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹ்ஹ்ஹ்ஹ்...செம!!ஜி அதுவும் உள்ளதான் இருக்கிய அஹ்ஹஹஹஹஹஹ்ஹ்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா பேசும்போது உள்ளே புது மருமகள் இருக்காளான்னு கேட்கணும்ல...

      நீக்கு
  5. பதில்கள் கேள்விகளாய்... அருமை ஜி...

    பதிலளிநீக்கு
  6. குடும்பம் வெளங்கட்டும்..ன்னு குத்து விளக்கோட போனா -
    பரட்டை பத்த வெச்ச வைக்கோல் போர் மாதிரி ஆயிடிச்சே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இப்பவெல்லாம் குத்து விளக்கை வச்சுத்தான் மாமியாரை குத்துறாங்க...

      நீக்கு
  7. எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. நல்லாத்தான் யோசிக்கிறீங்க. (அல்லது அக்கம் பக்கத்தில் நடப்பதை ஒட்டுக் கேட்டிருக்கீங்க).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பக்கத்து வீட்டில் ஒட்டுக்கேட்டேனா ?

      ஹா.. ஹா.. ஹா.. பிறகு மனைவியை அடிக்க முடியாதவன் என்னை ஒரு வழி செய்திருப்பான்.

      நீக்கு
  8. ‘ஏட்டிக்கு போட்டி’ என்று தலைப்பை வைத்திருக்கலாம். இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஏற்கனவே "ஏர்வாடி ஏட்டிக்குப்போட்டி ஏகாம்பரம்" என்று பதிவிட்டேன் ஆகவே இப்படி...

      இதைக்கூட "ஏற்காடு ஏட்டிக்குபோட்டி ஏகம்மை" என்று வைத்திருக்கலாமோ....?

      நீக்கு
  9. ஹா ஹா ஹா சூப்பர் மருமகள்... எல்லா மருமக்களும் இப்படி கிளம்பினா:) இனிமேல் மாமியார் கொடுமையே இருக்காது:).

    பதிலளிநீக்கு
  10. 8 ஆவது வோட் என்னோடதாக்கும் சொல்லிட்டேன்:).

    பதிலளிநீக்கு
  11. என்னங்க இன்னைக்கு வெளுத்து வாங்கிட்டீங்க? செம மூடுல இருந்தீங்க போல! இருந்தாலும், ஒரு சில நல்ல மருமகளுங்க இருக்கத்தானே செய்வாங்க. அவங்க வருத்தப்படமாட்டான்களா?

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீங்கள் சொல்வது குறைந்தபடசம்தானே...

      நீக்கு
  12. நகைச்சுவை அனைத்தும் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  13. பிழைக்கத் தெரிந்த மருமகள்.....

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொன்றும் நிதர்சனமான கருத்துக்கள் .

    பதிலளிநீக்கு

  15. மருமகள் ஆனால்
    இப்படி ஆவாளா
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு