தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 17, 2018

ஒஸாமாவும், நானும்

எமிரேட்ஸ் இண்டர்நேஷனல் ஹோட்டல் துபாய்

ஒஸாமாவும், நானும் பதிவுக்கு வருபவர்கள் இதன் முந்தைய பதிவான ஸினப்பும், சித்தப்பும் படிக்க என்னை சொடுக்குக முன்பு படித்தவர்கள் உடன் தொடர்க...


ரோட்டானா ஹோட்டல் அபுதாபி

உனக்கு நாடு இருக்கின்றது வீடும் இருக்கின்றது எனது நிலையைப் பார்த்தாயா ?
உண்மைதான் இந்த விடயத்தைக் குறித்து நானும், இவனும் பலமுறை அதிகம் விவாதித்து இருக்கின்றோம் அந்த தருணங்களில் எல்லாம் நான் எனது இந்தியாவை பெருமையுடன் நினைப்பேன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது இரண்டாயிரம் திர்ஹாம்ஸ் எடுத்துக் கொடுத்தேன் முழித்தான்.
என்ன விசயம் யாருக்கு பணம் ?
உனது பணம்தான் வாங்கிகொள்
அவனுக்கு நம்பிக்கையில்லை
நீ நேற்று கொடுத்தாலும் ஏதோ முட்டாள்கள் தினத்துக்காக விளையாடுறே என்று நினைப்பேன் இன்றைக்கு கொடுக்கிறே.... உண்மைதானா ?
ஆம் உனது பணம்தான் நான் தற்போது பணப்பிரச்சனைகளில் இருக்கிறேன் நாட்டுக்கு போகப் போகிறேன் ஆகவேதான் காரைக்கூட விற்று விட்டேன் இதில் எனக்கு சாதகமானது நீ மறந்து விட்டதுதான் இப்பொழுதும் எனக்கு பணப்பிரச்சனை இருக்கின்றது ஆனால் நீ நாளை ரஷ்யா போவதால் இனி நான் உன்னை காணாமல் போகலாம் ஆகவே இப்பொழுதும் கடன் வாங்கித்தான் உனக்கு கொடுக்கின்றேன் ஒருக்கால் நீ ரஷ்யா போகவில்லை என்றால் இன்றும்கூட தந்து இருக்க மாட்டேன் ஆனால் கண்டிப்பாக தந்து விடுவேன்.
அல்லா மீது ஆணையாக எனது பணம்தானா ?
ஆம்
பிறகே பெற்றுக் கொண்டான் அவன் சொன்ன ஒரு விடயம் எனக்கு பெருமையாக இருந்தாலும் பொதுநலனாக நினைக்கின்ற பொழுது வேதனையாக இருந்தது அவனது வாழ்க்கையில் இவனை மோசடி செய்த இந்தியர்களும் உண்டு.

நான் சந்தித்த, பழகிய இந்தியர்களில் உன்னை பெருமைக் குறியவனாக நினைக்கின்றேன் நான் மறந்து விட்டேன் நீ நினைத்திருந்தால் ? ரஷ்யா போகும் என்னை சந்திக்காமல் இத்துடன் போயிருக்கலாம் ஆனால் ஞாபகமாக கொண்டு வந்து தந்துட்டியே...
கடந்த சில வருடங்களாக நான் உழைத்த பணமே என்னிடம் தங்க மறுக்கின்றது அதனுடைய காரணத்தை நான் தேடி அலைகின்றேன் இந்நிலையில் உனது பணம் எனக்கு எதற்கு ? நான் அன்றாடங் காய்ச்சியாக வாழும்போதே நேர்மையாக வாழ்ந்தவன் இப்பொழுது நல்லாத்தானே இருக்கேன் நேர்மை தவறினால் ? மேல் வீட்டுக்காரன் எனக்கு இன்னும்தானே கஷ்டத்தை கொடுப்பான்.
நானாக இருந்தால் தந்திருக்க மாட்டேன்
இது எனக்கு தெரிந்த விசயம்தானே... உன்னைப்பற்றி எனக்கு எல்லாம் தெரியுமே அறுபதாயிரம் திர்ஹாம்ஸ் தவறுதலாக உனது வங்கி கணக்கில் மாறி விழுந்ததை இரண்டே நாளில் எடுத்து விட்டு அவர்கள் கேட்டவுடன் ஒரு மாதமாக அவர்களை சுற்றுல விட்டு மனசாட்சி உறுத்தியதும் பணத்தைக் கொடுத்தவன்தானே நீ இதனால் உனக்கு ஊதாரிச் செலவு இருபதாயிரம் திர்ஹாம்ஸ் செய்ததுதான் மிச்சம் அது உனக்கு கடனாகியது.
அவன் சிரித்தான்
எத்தனை வருடமாகி விட்டது இன்னும் நினைவில் வைத்து இருக்கின்றாயே ? நான் மறந்து விட்டேன் சரி உனக்கு நான் ஏதாவது செய்யணும்னு நினைக்கின்றேன் உன்னிடம் தற்போது கார் இல்லை இன்றைக்கே காரை உனது பெயருக்கு ரெஜிஸ்டர் செய்வோம் உன்னிடம் பணம் இல்லை எனக்கு தெரியும் காருக்கு பதினெட்டாயிரம் திர்ஹாம்ஸ் போடுவோம் எனக்கு மாதம் எனது வங்கி கணக்குல ஆயிரம் திர்ஹாம்ஸ் போடு.
நான் யோசித்தேன் இவன் திடீர்னு இப்படியொரு ஆஃபர் போடுறானே...

நான் குடும்ப சூழ்நிலை சரியில்லாமல் இருக்கேன் சட்டென இந்தியா போய் விடுவேன் அதனால்தானே காரை விற்றேன் ஆகவே வேண்டாம்
எதற்கும் காரை ஓட்டிப்பார்
மனதில் நப்பாசை எட்டிப்பார்த்தது உடன் காரை எடுத்தேன் பேசிக்கொண்டே போனோம் அவனிடம் கேட்டேன்
எனது பெயருக்கு மாற்றுவோம்னு சொல்றியே... நீ போனவுடன் மறுநாள் நான் காரை விற்று விட்டு இந்தியாவுக்கு போனால் என்ன செய்வே ?
உன்மீது எனக்கு நம்பிக்கை இருக்கு
எது இப்பொழுது நீ மறந்த பணத்தை நான் கொடுத்ததாலா ?
இல்லை முன்பே எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் இன்றைய செயலால் 100/100% உன்னை நம்புகிறேன் காரணம் பனிரெண்டு வருடத்துக்கு முன்பு நீ சொற்ப சம்பளம் வாங்கும் பொழுது உன்னால் நினைத்துப் பார்க்க முடியாத பணம் பத்தாயிரம் திர்ஹாம்ஸ் ஒரு பேப்பரை உன்னிடம் கேட்ட அரபிக்காரனிடம் மறுத்து விட்டவன் அதனாலும் கூடத்தான்
அன்று நான் கொடுத்திருந்தால் ? ஒருவேளை நான் இன்று ஜெயிலுக்குள்ளே இருந்திருக்கலாம்தானே....
இருக்கலாம் இல்லாமலும் இருந்திருக்கலாம்
நல்லது எனக்கு கார் வேண்டாம் எதற்கும் அப்பாவிடம் (சித்தப்பு) சொல்லி விட்டுப்போ தேவைப்பட்டால் வாங்கி கொள்கிறேன்
நான் உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன்.
அப்படின்னா.. நீ ரஷ்யா போய் பிஸினஸில் செட்டில் ஆகி இயல்பு வாழ்க்கைக்கு வந்த பிறகு எனக்கு ஒரு விசிட் விசா எடுத்து அனுப்பு உன்னால் நான் ரஷ்யாவை பார்த்ததாக இருக்கட்டும்
கண்டிப்பாக அல்லா மேல் ஆணையாக உனக்கு செய்வேன் என்று சொன்னவனை கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்லி விடை பெற்றேன்.


நானும், எக்ஸ் மகன் ஒஸாமாவும் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் அபுதாபி.

அரபு நாட்டின் அபுதாபியில் பிறந்த, நான் பழகிய பாலஸ்தீனியனாகிய, ரஷ்யாவில் வாழப் போயிருக்கும் ஆப்ரிக்க நாட்டு எனது நண்பன் தொழிலில் வெற்றியடைந்து விரைவில் மனைவியையும், குழந்தைகளையும் ரஷ்யாவுக்கு அழைத்து மீண்டும் சந்தோசமாக குடும்பத்துடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் மீண்டும் அவனை ஒருநாள் நிச்சயம் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன் முடிந்தால் எனது நண்பனை தாங்களும் வாழ்த்துங்கள் நட்பூக்களே.

அன்புடன் தேவகோட்டை கில்லர்ஜி

காணொளியில் ஒஸாமாவும், நானும்

50 கருத்துகள்:

 1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ என்னாது ஒபாமா அங்கிளாஆஆஆஆ:).. சே சே ஒசாமாவா ஹையோ:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒபாமாவோடு எமக்கு இதுவரை பயக்க, வயக்கம் கிடையாது.

   நீக்கு
 2. ஆவ்வ்வ்வ் நீங்க அந்தக் குட்டி ஒஸாமாவையோ போட்டிருக்கிறீங்க.. இப்பூடித் தலைப்பைப் போட்டு என்னை வம்பில மாட்டி விடுறீங்களே:) நான் பின்லேடனை நினைச்சுட்டேன்ன்..

  நேர்மை என்றும் நம்மைக் கைவிடாது.. உங்கள் நேர்மை இனி அந்த எக்ஸ் ஐயும் ஒரு நல்ல நேர்மையாளனாக மாற்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நான் வீட்டுக்கு, பின்னாலிருக்கும் லேடருக்கு பக்கத்திலேயே போகமாட்டேன்.

   தங்களது கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 3. வீடியோவில குழந்தையை அடிக்கிறீங்க:).. அஞ்சூஊஊஊஊஊஉ உடனே ஸ்கொட்லாண்ட் யாட் பொலீஸுக்குப் போன் பண்ணுங்கோ:)).. தோஓஓஓஓ புறப்படுறேன்ன் விட மாட்டேன்ன்ன்ன்.. நேக்கு நீதி வேணும்:).. இபவே அந்தக் குட்டியைக் காப்பாத்துறேன்ன்ன்ன்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த காணொளியை எடுப்பது நண்பன் எக்ஸ்.

   நானே பல நேரங்களில் நினைத்து இருக்கிறேன் உண்மையில் அடிப்பது போல் நினைப்பார்களே என்று...

   நீக்கு
 4. வணக்கம் ஜி !

  உறவும் பிரிவும் உயிருள்ளவரை தொடரும்
  வெளிநாட்டு வாழ்வில் அன்றாடம் கடக்கும் பலமுகங்களை தங்கள் பதிவின்மூலம் நினைத்துப்பார்க்கிறேன் ...

  தங்கள் நேர்மையின் சிறப்பை உணர்த்தும் உரையாடல் ஜி
  தொடர வாழ்த்துகள் வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே நலம்தானே ?
   தங்கள் வரவு கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 5. அன்பின் ஜி..
  தங்களது பதிவு கண்டு மனம் நெகிழ்கின்றது..

  வாழ்க வளமுடன்....

  பதிலளிநீக்கு
 6. உங்கள் நேர்மை என்னைக் கவர்ந்தது. உங்கள் நண்பர் ரஷ்யாவில் பிசினஸில் வெற்றிபெற எங்கள் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி ஸ்ரீராம்ஜி

   நீக்கு
 7. நட்புகள் வாழ்க. உங்கள் நட்பை அவர் போற்றுவர் என்பதில் ஐயமில்லை. கடைசி பாராவில் கமா போட மறந்து விட்டீர்களோ... நீங்கள் அரபு நாட்டின் அபுதாபியிலா பிறந்தீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் கவனித்தேன் மாற்றுவதற்குள், சொல்லி விட்டீர்கள்.

   மாற்றி விட்டேன் நன்றி ஜி.

   நீக்கு
 8. காணொளியில் பாவம், அந்தப் பையனை ஏன் ஜி இந்த அடி அடிக்கிறீர்கள்?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை ஜி விளையாட்டுதான் உண்மையில் அடிப்பது போல் இருக்கிறதோ...?

   நீக்கு
 9. தங்கள் நண்பர் வெற்றி பெற வாழ்த்துகள். தங்கள் நல்ல மனதிற்கும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நன்றி.
   முந்தைய பதிவை படித்தீர்களா ?

   நீக்கு
 10. மீண்டும் சந்திப்பீர்கள். நல்ல நட்பு என்றும் தொடரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது.

   நீக்கு
 11. விசிட் விசா விரைவில்... மகிழ்ச்சியுடன் ரஷ்யாவிற்கு சென்று வருவீர்கள் ஜி... நண்பருக்கு அன்பான வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உங்கள் வாக்கு பலித்தால் அங்கிருந்து வரும்போது உங்களுக்கு அன்பளிப்புக்கு ஒரு "பூட்டு" வாங்கி வருவேன்.

   நீக்கு
 12. முதலில் காணொளி மனதை கவர்ந்தது.
  மகிழ்ச்சியாக குழந்தையுடன் நீங்கள் அடித்து விளையாடுவது
  நன்றாக இருக்கிறது.

  உங்கள் நண்பர் தொழிலில் வெற்றி அடைந்து மனைவி, குழந்தைகளுடன் மகிழ்வாய் இருக்க ஆண்டவன் அருள்புரிவார்.
  நீங்களும் ரஷ்யா சென்று நண்பரை பார்த்து மகிழ்வீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது அழகிய கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 13. நீங்கள் நேர்மையானவர் என்று நன்றாகத் தெரியுமே ஜி. (சென்ற பதிவும் வாசித்துவிட்டேன் ஜி - துளசி) அதனால் அப்பதிவிலேயே தெரிந்துவிட்டது, ஆனால் உங்கள் நண்பர் என்ன சொல்லியிருப்பார் என்று தான் நினைத்தோம். அவர் பணத்தை ஏமாற்ற நினைத்தவர் நீங்கள் வாங்கிய பணத்தை மறந்தது வியப்புதான் இல்லையா...

  நட்பூ நல்ல நட்பூ. உங்களுக்குச் சீக்கிரம் ரஷ்யா சுற்றுலா செல்ல அவர் விசா அனுப்பட்டும். அது சரி அவரிடம் தொடர்பு இருக்கிறதா?

  (கீதா: உங்கள் அருகில் உங்கள் இடப்பக்கம் அமர்ந்திருப்பவர் கில்லர்ஜியின் கேர்ள் ஃப்ரென்ட் போல இருக்கே ஹா ஹா ஹா ஹா யாருக்கும் தெரியக்கூடாது என்று ஷேக் வேஷம் போட்டு அமர்ந்திருக்காரோ...ஹா ஹா ஹா ஹா ஜி சும்மா உங்களைக் கலாய்த்தல்தான் நோ அஃபன்ஸ்!ப்ளீஸ்..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கிய பணத்தை நான் மறக்கவில்லை, கொடுத்த பணத்தை அவன்தான் மறந்து விட்டான்.

   ரஷ்யா சென்று வந்தால் காராச்சேவ் வாங்கி வருகிறேன்.
   அரபிப்பெண்கள் அரபிகள் பக்கத்திலேயே அமர்ந்து இருக்க மாட்டார்களே,,,,

   நீக்கு
 14. நேர்மையைப் போல ஒரு நண்பனும், உண்மையைப் போல ஒரு துணைவனும் கிடையாது. உங்கள் நேர்மைக்கு எனது பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 15. நீங்களும் அரபிக்கிட்ட இருந்து ஒரு தலைக்கவசத்தை வாங்கி மாட்டி இருக்கலாமோ! மேட்சிங்கா இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ சௌதி அரேபியன் தலையில் இடும் வட்டு எமராத்தியன் அணியக்கூடாது இதில் இந்தியன் நானெங்கே...?

   நீக்கு
 16. அதன்பின் உங்கள் நண்பருடன் தொடர்பு இருக்கிறதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வப்போது அழைப்புகள் இருக்கிறது ஐயா இருப்பினும் சிரமப்படுகின்றான்.

   நீக்கு
 17. நல்ல மனம் கொண்ட உங்களையும் உங்களுடன் பழகியதால் நல்லவராக வாழும் அந்த நண்பரையும் மனதார வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

   நீக்கு
 18. பெயரில்லா5/17/2018 6:58 பிற்பகல்

  நல்ல நினைவு வாழ்க.
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ?
   தங்களது தளம் திறக்க இயலவில்லையே ஏன் ?

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   தங்கள் பெருந்தன்மையும் நண்பர் மேல் வைத்திருந்த பாசமும் கண்டு வியக்கிறேன்.

   தங்கள் நேர்மையை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

   தங்கள் நண்பர் நல்ல நிலைமைக்கு வந்து தங்கள் எண்ணப்படி தாங்கள் விரைவில் ரஷ்யா சென்று அவரை சந்தித்து மகிழ நானும் பிரார்த்திக்கிறேன்.

   காணொளியும் கண்டேன். அந்த நண்பரின் குழந்தையுடன் தாங்கள் உரிமையாக விளையாடி மகிழ்ந்திருப்பது உங்கள் உண்மையான நட்புக்கு சாட்சி.

   என் உறவுகள் வருகையால் உடன் வருகை தந்து கருத்துக்கள் தெரிவிக்க இயலாமல் தாமதமாயிற்று. வருந்துகிறேன்...

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. வருக சகோ தங்களது கருத்துரைக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 19. தலைப்பை படிக்கும்போதே நிணைத்தேன். இது அந்த ஓஸமா..இல்லேன்னு... அந்த ஓஸமாதான் குண்டு மழையில். நணைந்து விட்டாரே...எப்படி.. என் கண்பிடுடிப்பு..நண்பரே......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நீங்களும் விஞ்ஞானிதான். வருகைக்கு நன்றி.

   நீக்கு
 20. உறவும் வரும்
  பிரிவும் வரும்
  அது தான் வாழ்க்கை!

  பதிலளிநீக்கு
 21. உங்கள் நண்பர், வாழ்க்கையில் நல்ல நிலைக்குப் போகப் பிரார்த்தனைகள்>விரைவில் அவரை ரஷ்யாவில் சந்தித்துவிட்டு விரிவாக எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக உங்கள் வாக்கு பலிக்கட்டும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி

   நீக்கு
 22. நம்பிக்கை தரும் பதிவு. அவருடன் உங்கள் நட்பு தொடரட்டும். ரஷ்யாவில் அவருடைய பிசினெஸ் வெற்றிபெறும். வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு