தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 19, 2018

பாரதிராஜா ரஜினியை திட்டாதீர்


நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா ? இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று கூவுவதற்கு வெட்கமாக இல்லை ? எந்த தமிழனை இவன் அறிமுகப்படுத்தினான் ? எந்த தமிழச்சியை இவன் அறிமுகப்படுத்தினான் ? வெளிநாட்டு, வெளிமாநிலப் பெண்களை இளமைக் காலத்தில் வாழ்ந்து அனுபவித்து அறிமுகப்படுத்தி விட்டு இப்போது கூவுகின்றான்.

பதினாறு வயதினிலே திரைப்படத்தில் இவன் ரஜினிகாந்தை நடிக்க வைக்கும்போது தெரியவில்லையா ? அது போகட்டும் அவன் உச்சாணிக் கொம்பில் இருக்கும் பொழுது 1988-ல் கொடி பறக்குது என்று படம் எடுத்து பெயரிலேயே அவனுக்கு அரசியல் மோகத்தை வளர்த்து மேலும் புகழ் சேர்த்து விட்டானே அப்போது புத்தி எங்கு போனது ? நல்லா ஓடும் பந்தைய குதிரை என்று அறிந்து கொண்ட வியாபாரி இவன். குஷ்புவுக்கு கோவில் கட்டியதை தவறு என்று சொல்கிறான் அவளையும் வைத்து படம் எடுத்து அவளை புகழ்த்தி பாடல் எழுதினானே பச்சைத் தமிழன் என்று கூவிக்கொள்ளும் வைரமுத்து ///எந்தப் பெண்ணினும் இல்லாத ஒன்று/// இப்படி எல்லாம் உயர்த்தி பாட்டு எழுதி விட்டு இப்பொழுது நாக்கு கூசாமல் பேசுறாங்களே இவனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் உள்ளதா ?

ஆர். கே. செல்வமணி இவன் தமிழ் இனத்தைப்பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு ? ஆந்திராக்காரி ரோஜாவை கல்யாணம் செய்தவன் அது தவறென்று நான் சொல்லவில்லை இவனுகள் எல்லாம் பொது விடயத்துக்கு வந்து மொழி உணர்வைப்பற்றி பேசும்போது முதலில் தன்னை பரிசோதித்து கொள்ளணும். பிறகு பேசட்டும் மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா ? இப்படி செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டது ரஜினிகாந்த் அல்ல ! பாரதிராஜாதான் இவனுகளெல்லாம் சந்தர்ப்பவாதி.

நம்மிடம் சம்பளம் வாங்கி நடித்தவன் இன்று நமது தமிழ் நாட்டை ஆளும் நிலைக்கு வந்து விட்டானே என்ற பொறாமை அப்புறம் என்ன ம......த்துக்கு மற்ற மாநிலத்துக்காரன்களை வைத்து படம் எடுத்தீர்கள் ? போனதெல்லாம் போகட்டும் இனிமேலாவது தமிழர்களை வைத்து படம் எடுங்கடா எனது எள்ளுப் பேரன்கள் காலத்திலாவது தமிழகத்தை தமிழன் ஆளட்டும்.

சாம்பசிவம்-
இந்த ஆளு தமிழனை தாக்கி மற்றவனை ஆதரித்து எழுதுவது சந்தேகமாக இருகிகிறதே...

Chivas Regal சிவசம்போ-
அடுத்து சிவாஜியை ராவுவாரோ ?

40 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம்ம்...... என்னத்த சொல்ல? எல்லாம் இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இவெங்களை இப்படியே விடக்கூடாது சமூகத்துக்கு கேடு.

      நீக்கு
  2. இருந்தாலும்
    இவிங்களப் பத்தி யோசிக்காம - பேசாம இருக்கிறதே நம்ம உடம்புக்கு நல்லது...

    மரத்துல இருந்து விழுந்த சருகு காத்துல கரகர...ந்னு சத்தம் போட்டுக்கிட்டு அங்கேயும் இங்கேயும் உருளும்...

    அது மாதிரி தான் இதெல்லாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அப்படீனாக்கா... இவெங்களை "செத்த எலி" என்று சொல்லலாமா ?

      நீக்கு
  3. அரசியல் என்று வந்து விட்டாலே போலித்தனம் புகுந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி உண்மையானவர்கள் அரசியலில் இறங்கவே முடியாது போல...

      நீக்கு
  4. ஹாஹாஹா, இதெல்லாம் அரசியலிலே ஜகஜமுங்கோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவுண்டமணி சொன்னது தத்துவமொழியாகி விட்டதே...

      நீக்கு
  5. வாசித்தேன் கருத்து ஏதுமில்லை

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் எழுதியுள்ளது சரிதான். இதில் சீமானையும் சேர்க்கவிட்டுவிட்டீர்கள். இவர்கள் செய்வது எல்லாம், 'படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில்' தான்.

    'தமிழ்/தமிழினம்' என்று பேசுபவர்கள் எல்லோரும் பிற மாநிலங்களில் சொத்து, வாழ்க்கையை பிற தேசங்களில் வாழ்பவர்கள், மருமகள்களை பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவந்தவர்கள். அதனால், வெறும்ன மொழிவெறி, இனவெறியாகப் பேசுபவர்கள் போலி என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான பழமொழி சொன்னீர்கள் நண்பரே... இந்த போலி மொகரக்கட்டைகளை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

      சீமானை நான் யோக்கியர் யோகமூர்த்தி என்று நினைக்கவில்லை. அடுத்து உங்களுக்காக ரெண்டு கிழி கிழிச்சாப் போகுது.

      நீக்கு
    2. கில்லர்ஜி... இடுகையின் பொருளுக்கேற்ற அருமையான புகைப்பட செலெக்‌ஷன். படம் கிடைத்தபின்பு இடுகை எழுதினீர்களோ? (படம் எழுதத் தூண்டிற்றோ).

      உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள். உங்கள் இடுகையில் எல்லாம், முயற்சி எடுத்துப் போடும் படங்கள், காணொளிகள் கண்டு வியந்திருக்கிறேன்.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே.

      பெரும்பாலான எனது பதிவுகளின் பிரசவம் புகைப்படங்களை ஆழ்ந்து நோக்குவதில் பிறக்கிறது.

      சில பதிவுகளுக்கு படங்களை தேடுவேன். மனம் திருப்தி அடையவில்லை எனில் நானே உருவாக்குவேன்.

      பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. படத்தில ஒற்றுமை
    அரசியல்ல வேற்றுமை
    நடிப்பு

    பதிலளிநீக்கு
  8. அரசியல் வேறு தொழில் வேறு என்பார்கள்.தனிபட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யாதே என்பார்கள். இவர்கள் எல்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இப்படி இவர்களை எண்ண வைப்பது மக்கள்தானே...

      நீக்கு
  9. ஃபேஸ்புக் மாதிரி இங்கன இன்பாக்ஸ் இருந்தா ரஜினிய திட்டுவேன். அந்தாள்லாம் பக்கா சுயநலவாதி. எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அன்னாமலை படம் வரைதான் அவர் படமும்கூட பிடிக்கும். அதுக்கப்புறம் என் வீட்டுக்காரர்கூட சேர்ந்து பாட்ஷா பார்த்தேன். இப்பலாம் டிவில அந்தாளை பார்த்தாலே காண்டாகுது.

    ஜோடா ப்ளீச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அப்படீனாக்கா, அடுத்த பதிவுக்கு நீங்க அவசியம் வரணும்.

      நீக்கு
  10. பாரதிராஜா போன்ற.. - பச்சோந்தியை என்று இங்கு சொல்லமாட்டேன். அப்பாவிப் பிராணியை அவமதிப்பது சரியில்லை - ஒரு ப்ரக்ருதியைப்பற்றி பேசுவதோ எழுதுவதோ, மட்டுமல்ல - கவனிப்பது, சற்றே சிந்திப்பதெல்லாம்கூட நம் நேரத்தை விரயப்படுத்தியதாக அமைந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது உள்ளக்குமுறல் புரிகிறது. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இவர்களைப் பற்றி விலாவாரியாக நான் அறியேன். ஆனால் உங்கள் உள்ளக் குமறல்களும் , ஆதங்கங்களும் நன்றாகப் புரிகிறது. சிலரை திருத்த முடியாது. நாம் நம் வழியே போக வேண்டியதுதான்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  12. தமிழ், ஈழத்தமிழர்கள் எல்லாம் பாவம்ங்க.

    பெரியார், கன்னடிகாதான். நம்ம ஊரில் இன்னைக்கு தெலுகு வீட்டில் பேசும் எத்தனையோ பேர் (நாயுடு, ரெட்டியார்) தமிழ் பற்றூடன் இல்லையா என்ன?

    சீமான் கணக்குப் படி பெரியார் தமிழர் இல்லை, வைகோ தமிழர் இல்லை, விஜய்காந்த தமிழர் இல்லை. க சுப்பு தமிழர் இல்லை.

    முக்குலத்தோர், வன்னியர்கள், நாடார், தலித்ல சில ஜாதிகள் பிள்ள, முதலியார் இவர்கள் மட்டும்தான் தமிழர்கள்.

    இவனுக டாய்லெட் க்ளீன் பண்ணூகிற சக்கிலியர்கள் என்பவர்க்ள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள்தான். பார்ப்பனர்கள், முக்குலத்தோர், வன்னியர், நாடார், பிள்ள, முதலியார், சீமான், பாரதிராஜா எல்லாரும் தமிழர்கள் மலம் அல்லாமல், ஒரு தெலுங்க்காரனை பயன்படுத்தும் நாதாரிகள் இவனுக! என்ன மயிறூௐகு தமிழன் மலத்தை ஆந்திராக்காரன் அள்ளனும்??? எவனுக்காவது மூள இருக்கா? தமிழர் தாலினு சொல்லிக்கிட்டு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையான தமிழன் தன்னை தமிழன் என்றும், தமிழ் மொழி வாழ்க என்றும் சொல்லிக் கொண்டும் அரசியல் நடத்த மாட்டான்.

      தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  13. சங்கிகளின் அதே தத்துவத்தை புதிய மொந்தையில் தர முயற்சி செய்வது தான் தமிழ்த்தேசியம் அல்லது தமிழர் என்ற கோசமெல்லாம்.. ஆரியம் புகுத்திய சாதி படிநிலைகளை கடந்து நாமெல்லாரும் ஒரே தமிழர் என்று ஏற்றுக்கொள்ளாத இவர்களின் நிலைப்பாடு அதையே வெளிப்படுத்துகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  14. சவுக்கெடுத்து சுழற்றியுள்ளீர்கள். பாரதிராஜாவைத் தோலுரித்துக் காட்டிய தைரியத்திற்குப் பாராட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையைச் சொன்னேன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  15. ஆமா.. ஆமா ரஜனி அங்கிளைத் திட்டாதீங்கோ..:) பிக்கோஸ்ஸ் அவர் அஞ்சுவின் சித்தப்பா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, பாரதிராஜாவிடம் சொல்றீங்களோ...?

      நீக்கு
  16. நீங்கள் கோபப்படுவதில் அர்த்தம் இருக்கிறது கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  17. துளசிதரன்: எனக்கு ஒரு டயலாக் நினைவுக்கு வருகிறது. அது கவுண்டமணியின் ஃபேமஸ் டயலாக் என்று நினைவு. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது.

    கீதா: கில்லர்ஜி! ஒவ்வொருவரும் அவரவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பேசுவதும் வார்த்தைகளை மாற்றுவதும் தான்...சாணக்கியர் சொல்லுவது போல அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை...அவ்வப்போது மாறுவதுதான் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு