தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூன் 01, 2021

சுள்ளுவாடி, சுள்ளான் சுனில்தத்


 சுள்ளுவாடி என்ற ஊரில் சுள்ளான் ஒருவன் இருந்தான் அவனது பெயர் சுனில்தத் இவனை பெயரைச் சொல்லி அழைக்கவே மக்கள் பயப்படுவார்கள் காரணம் இவன் வாயிலிருந்து வேறு மாதிரியான எடக்கு மடக்கான பதில்கள் கேள்விகள் போன்றே வரும். சரியான உச்சரிப்பில் கேட்டாலும் இவன் திறித்து விடுவான் எமகாதகன் இந்த வார்த்தையை படித்ததோடு மறந்து விடுங்கள் அவனிடம் கேட்டால் உங்களுக்குத்தான் பிரச்சனை.

காலை 06:00 மணி பேருந்து நிறுத்தம் வந்த மொக்கைராசு திண்டில் உட்கார்ந்து இருந்த சுள்ளானை பார்த்ததும் இவனிடம் கேட்போம் என்று...

ஏண்டா சுள்ளா பொதுவக்குடி வண்டி போயிருச்சா ?
பொதுவா குடிகாரங்கே கேட்கிற கேள்வி நீ எதற்கு கேட்கிறே ?

கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டியாடா ?
இதுக்குப்பேரு கேள்வி இல்லை தகவல்.

உன்னிடம் கேட்டதுக்கு என்னை பழைய செருப்பை கழட்டி அடிச்சுக்கிறணும்
என்னோடது புதுசு தரமுடியாதே.... யாரு செருப்பை வாங்கி அடிப்பே ?

உங்கிட்டே மனுசன் பேச முடியாது அதோ கொறடு முத்தன் வர்றான் அவன்ட கோர்த்து விடுறேன் டே... கொறடு முத்தா... சுள்ளான் ஏதோ கேட்கணும்மாடா....

என்னடா சுள்ளா என்ன விசயம் ?
மொட்டையா விசயம்ணு கேட்டால் எந்த விசயத்தை சொல்லச் சொல்றே... ?

இவன் சொன்னானே அந்த விசயம்தான் ?
அவன் நிறைய விசயம் சொன்னான் அதுல எதை சொல்லணும் ?

கடைசியா... சொன்னதை சொல்லு... ?
உன் பொண்டாட்டி காளியம்மாளும், கிழக்குத்தெரு கிடுக்கிப்புடி கிருஷ்ணனும் வடக்குப் பிஞ்சை தோப்புக்குள்ளே போனதை உங்கிட்டே சொல்லிடுவேன்னு உன் பொண்டாட்டி வீட்டுல தனியா இருக்கும்போது இவன் மிரட்டி பணிய வச்சானாமே அதையா சொல்லச் சொல்றே... ?

சட்டென்று மொக்கைராசு பக்கமாக திரும்பிய கொறடு முத்தன் தலைப்பாவில் கட்டியிருந்த கறுக்ருவாளை எடுத்ததுதான் தாமதம் குறுக்கே வாய்க்காலில் விழுந்து வயல்காட்டுக்குள் ஓடினான் மொக்கைராசு.
இதையெல்லாம் முக்கத்தில் குடிசையில் டீக்கடை போட்டு நடத்திக் கொண்டு இருந்த நடராஜன் அண்ணன் பார்த்து விட்டு கேட்டார்.

ஏண்டா... சுள்ளா காலையிலேயே ஆரம்பிச்சு வச்சுட்டியா ?
நடராஜண்ணே ஒரு டீ கடன் கொடுக்க மாட்றே அதோ அத்தாச்சி இட்லி மாவு தூக்கிட்டு வருது... சாயங்காலம் பூட்டுற டீக்கடையை ராத்திரி எட்டு மணிக்கு திறந்து மோந்தைக்காடு ஆரவல்லியோடு உள்ளே போறியே உன்னோட கதையை அவுத்து விடவா ?

டே நல்லா இருப்படா சாமி இதோ காசே வேண்டாம்டா குடிச்சுட்டு இடத்தை காலி பண்ணுடா இனிமேல்தான் வியாபாரம் தொடங்கணும்.
எனக்கு ஓசி டீ எல்லாம் வேண்டாம் நாங்க அந்தப் பரம்பரையில வரலே கடனுக்குத்தானா கொடு.

அப்படினா போன வருசத்து பாக்கியைத் தர வேண்டியதுதானே வெண்ணே ?
என்ன ரொம்ப பேசுறே... துபாய்லருந்து பணம் வரவேண்டியது இருக்கு ரெண்டு நாளைல உன் பாக்கியை வாங்கிக்க...

இப்படித்தானடா... எங்க ஐயா காலத்துலருந்து உங்க அப்பனும் சொன்னான். ?
சரி இப்ப பாக்கி வேண்டாம்னா விடு.
கடைக்குள் நுழைந்த நடராஜனின் மனைவி மங்காத்தாள் கேட்டான்.

என்னங்க சுள்ளான் ஏதோ வேண்டாம்னா விடுனு சொல்றான் ?
அது ஒண்ணும் இல்லை அத்தாச்சி நான் தரவேண்டிய பாக்கியை அண்ணன் வேண்டாம்னு சொல்றாரு... நீ சொல்லு அத்தாச்சி பாக்கி வேண்டாமா ?

ஏங்க சுள்ளான்தான் பாக்கியை தாரேனு சொல்றதை எதுக்கு வேண்டாம்னு சொல்றீங்க ?
அடி கூறு கெட்ட கூதரை உனக்கு விசயமே தெரியாது அடுப்பை பத்தவச்சு போண்டாவை போடுடி போக்கத்தவளே...

சுள்ளா எந்த விசயம்டா தெரியாதுனு சொல்றாரு... ?
அதான் அந்தாச்சி முந்தாநாள் டவுனுல டூரிங் டாக்கீசுல படம் பார்க்க வந்தேன்ல... எனக்கு முன்னாலே உட்கார்ந்து இருக்கும்போது சுண்டல் பொட்டணம் எனக்கு வாங்கி கொடுத்தீங்கள்ல... அதுக்கும் சேர்த்து பாக்கியோட தர்றேன்னு சொல்றேன் அண்ணன் வேண்டாம்ங்கிறாரு....

என்று சொல்லி விட்டு நடராஜன் பார்க்காத நொடியில் கண்ணைச் சிமிட்டியதும் மங்காத்தாளுக்கு சர்வமும் அடங்கியது. இவன் முந்தாநாள் டூரிங் டாக்கீஸ் வந்தானா ? இவனுக்கு நாம் எப்போ சுண்டல் பொட்டணம் வாங்கி கொடுத்தோம் ? கண்ணைச் சிமிட்டுறானே... ஒருவேளை நம்ம பக்கத்துல உட்கார்ந்து இருந்த தண்டோரா தண்டபாணியையும் பார்த்து இருப்பானோ ? அமைதியா இருந்துடுவோம் இல்லைனா... நம்ம புருஷன்டே தண்டபாணியோடு படத்துக்கு போனதை பத்த வச்சுட்டு போயிருவான். என்று நினைத்தவள் சட்டென அடுப்பை பற்ற வைத்து போண்டாவை ஊற்றினாள்.

பெஞ்சில் அட்டணக்கால் போட்டுக் கொண்டு தினத்தந்தியை படித்துக் கொண்டு இருந்த சுள்ளான், மங்காத்தாள் கொட்டானில் கொட்டிய போண்டா ஒன்றை சுடச்சுட எடுத்து கடித்துக் கொண்டு கம்மாக்கரை பக்கமாக நடந்து போனவனை, மனமொத்த தம்பதிகள் இருவரும் பயத்துடன் தனித்தனியாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள். டீக்கடையை நோக்கி மக்கள் வர ஆரம்பித்தார்கள் கிழக்கு திசையில் இவர்களை கண்டு சூரியன் சிலிர்ரித்து எழுந்தான்.


ChavasRegal சிவசம்போ-
என்னங்கடா ஊரு இது நாறப்பயல் ஊரா இருக்கும் போலயே.... ? மஞ்சனத்தி மரத்துக்கு மச்சினிச்சி மறு சீராம் பழமொழி செரிதான் போலிருக்கு...

சாம்பசிவம்-
எவனுமே பதில் சொல்ல மாட்றாங்களே... கேள்வியாத்தானே கேட்குறாங்கே ?

சிவாதாமஸ்அலி-
இவங்க மனமொத்த தம்பதிகளா.... நாம நிச்சயம் இந்த ஊருக்கு போகணும் அட்லீஸ்ட் போண்டா திங்கவாவதூ.

காணொளி

39 கருத்துகள்:

 1. இப்படி எடக்கு மடக்கான ஆளை சமாளிக்கறது ரொம்ப ரொம்ப சிரமம் தான் நண்பரே.
  ஒரு வேளை சுனில் தத்க்கு பதிலாக சுப்பாண்டி ன்னு வச்சிருக்கலாமோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

   சுனில்தத் அப்பா ஹிந்தி நடிகர் ரசிகராக இருப்பாரோ...

   நீக்கு
 2. நல்லகதை! எவ்வளவு யோசிச்சிருப்பீங்க இதுக்கு! காணொளி எத்தனை முயன்றும் திறக்கவே இல்லை. என்னனு பாருங்க.

  பதிலளிநீக்கு
 3. அப்பாடி! ஒரு வழியா வந்தது. நல்லாத்தான் டீ ஆத்தறார். இதுவும் ஒரு திறமை தானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ யோசிக்கிறதை கணக்கு போடமுடியுமா ?
   முயன்று காணொளி கண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 4. பருத்தி வீரன் பட நகைச்சுவை காட்சிகள் சில ஞாபகத்திற்கு வந்தன...

  சுள்ளான் வாரிசு போல - காணொளியில்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி பருத்தி வீரனா ? ஹா.. ஹா.. அப்படியா....?

   நீக்கு
 5. நல்ல எடக்கு மடக்கு பார்ட்டி...பேசாமல் இருந்துவிடுவதே நல்லது..இரசித்தேன்..

  பதிலளிநீக்கு
 6. ஆகா,
  எடக்கு மடக்கு ரசித்தேன் நண்பரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 7. அந்த ஊர்ல ஒரு பய யோக்கியனா இருக்க மாட்டான் போலவே....  எந்த ஊரு அது!!   காணொளி சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அதான் சுள்ளுவாடி.
   காணொளி கண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 8. சுள்ளுவாடி தேவகோட்டை பக்கத்து ஊரா கில்லர்ஜி!!!??? அங்க ஆண் பெண் யாருமே ஒழுங்கு கிடையாதாக்கும்? இல்ல உங்க ஊர்ப் பக்கத்தை பெருமையா பேசுவீங்கல்ல அதுக்குக் கேட்டேன் ஹாஹாஹாஹா...


  டீ ஆத்தறது நேரடியாவே பார்த்திருக்கேன் ஆச்சரியப்பட்டிருக்கேன்...வீட்டுல ட்ரை பண்ணி ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ சுள்ளுவாடிக்கும், தேவகோட்டைக்கும் பந்தமேயில்லை.

   டீ ஆத்துவதும் ஒரு கலைதான் படத்திலிருப்பது மலையாளிதான். இப்படி நபர்கள் கீழக்கரையில் அதிகம்.

   நீக்கு
 9. காணொளி மிக நன்று அன்பு தேவகோட்டைஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 10. சுள்ளுவாடி சுள்ளான் சுனில்தத் மனமொத்த தம்பதிகளை பயப்பட வைத்து விட்டாரே!

  காணொளி நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எல்லாம் அந்த ஊரின் பெருமை போல...

   நீக்கு
 11. ஹலோ உங்க பதிவை படித்துவிட்டு மனைவி கேட்ட கேள்விக்கு இப்படி எடக்கு மடக்காக பதில் சொன்னேன்....இப்ப பாருங்க உங்களால் நான் ஹாஸ்பிடல் பெட்டில் இருந்து பதில் கருத்து போடும் நிலை வந்திடுச்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே எல்லோரும் சுள்ளுவாடியாக முடியாது.

   ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது.

   நீக்கு
  2. ஹாஸ்பிடலுக்கு எதுக்கு மதுர போனாரு?

   நீக்கு
  3. அதானே... காலைல பூரி சாப்பிடும்போது எனக்கும் ஞாபகம் வந்தது.

   நீக்கு
 12. எதைச் செய்தாலும் சாட்சி வச்சுக்கிட்டோம்னா வம்புதான் போலிருக்கு.

  நல்லா எழுதியிருக்கீங்க. ரசித்தேன். திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சியா வரலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே வடிவேலுவை மனதில் நினைத்து நான் பல விடயங்களை மனதில் வைத்துள்ளேன்.

   காலம் கை கூடவில்லை.

   நீக்கு
 13. வழக்கம்போல ரகளையான பதிவு. உங்கள் பாணியில்...

  அசத்துங்க கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது பாராட்டுக்கு நன்றி.

   நீக்கு
 14. சுள்ளுவாடி சுள்ளான் மத்தவங்க வீக்நெஸ்கள வச்சு பட்டய கிளப்புரார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவனும் ஏதாவது விசயத்தில் யாரிடமாவது மாட்டுவான் நண்பரே...

   நீக்கு
 15. எல்லா கேரக்டர்களும் சூப்பரா ஜாலியா விளையாண்டிருக்காங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் இவங்கே நல்ல கேரக்டர்களா ?

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  பதிவு உங்கள் பாணியில் நகைச்சுவையாய் இருக்கிறது.சுள்ளுவாடி சுள்ளான் (இப்படி பெயர்களை பொருத்தமாய் பொருத்துவதே உங்களின் அலாதி பாணி) எல்லோரையும் மடக்கி பேசுவதில் பயங்கர திறமைசாலியாய் இருக்கிறானே.. ரசித்தேன். பாராட்டுக்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ?
   பதிவை இரசித்து படித்து, பாராட்டியமைக்கு நன்றி.

   நீக்கு
 17. கொஞ்சக்காலமாக கில்லர்ஜி ஒரு விதமாகவே போஸ்ட் போட்டிட்டு இருக்கிறார், இனி ஒரு தொடர் கதை எழுதுங்கோ கில்லர்ஜி, நீங்க கதை எழுதி நாளாகிட்டுது!!...

  குட்டியின் வீடியோ வட்சப்பில உலா வந்து பார்த்திருக்கிறேன் ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா தொடர்கதைதானே... எழுதிடுவோம் வருகைக்கு நன்றி.

   நீக்கு

  2. இப்படி அதிரா மாதிரி 'பலர்' தொடர் கதை எழுதுங்க புக் போடுங்க சேனல் ஆரம்பிங்க என்பாங்க ஆனால் நீங்க எல்லாம் செய்தாலும் அதை எட்டிப்பார்க்க நேரம் இல்லை என்பாங்க

   நீக்கு
  3. ஹா.. ஹா.. சரியாக சொன்னீர்கள் தமிழரே...

   நீக்கு
 18. ஹாஹாஹா. கொஞ்சம் விவகாரமான பதிவுதான்,என்றாலும் ரசிக்க முடிகிறது.

  பதிலளிநீக்கு