தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜனவரி 17, 2021

துபாய் மச்சான்


வணக்கம் நண்பர்களே...
கப்பலுக்கு போன மச்சான் கண் நிறைஞ்ச ஆசை மச்சான்
எப்பத்தான் வருவீங்களோ எதிர் பார்க்கிறேன்...

என்று துபாய்க்கு சென்று இருந்த கணவனை நினைத்து மனைவி பாடும் பாடல் போல அதே மெட்டில் பாடிப்பாருங்கள் – கில்லர்ஜி

மனைவி மதுரையிலிருந்து...

என்னழகு வெண்ணிலவே பொன்னழகு பூச்சரமே
பொட்டு வைத்த பொன்மயிலே பேரழகு பெட்டகமே
அப்பனுக்கு தப்பாமல் பிறந்த எனதருமை பூஞ்சரமே
அம்மனுக்கு வைத்திருந்த நேர்த்திக்கடன் தீர்க்கணுமே

வெண்ணிலா பசிக்கிறதோ என் பிஞ்சு வெண்பஞ்சே
என்னிலே நீ வந்து கண் திறந்தாய் கண்ணழகே
கவிமகன் கடைந்தெடுத்த குறுத்தே புவிமுத்தே
கண்ணுறங்கு கவிக்குயிலே கருத்தே என் சொத்தே

நித்தம் உன் அப்பா அலைபேசியில் தான் அழைத்தே
நித்திரை கலைக்கின்றார் உனையும் தான் குறுத்தே
துபாயை மறந்து விட்டு துள்ளியோடி வரச்சொல்லு
தூக்கம் துறந்த இரவுகளை இனியாவது தரச்சொல்லு


துணைவன் துபாயிலிருந்து...

போதுமடி பொன்மயிலே என் பொறுமைக் காதலியே
எல்லாம் இருந்தும்கூட இல்லையடி தான் கிளியே
பஞ்சத்தில் இருந்தாலும் நெஞ்சத்தில் நான் பிள்ளையே
மஞ்சத்தில் கிடந்தாலும் கொஞ்சத்தான் நீ இல்லையே

அகிலமெல்லாம் சுற்றி வந்தும் ஆசை தீர வழியில்லை
பணமில்லை வாழ்க்கை என்று உள் மனது சொல்லுதடி
குணமுள்ள என்னவளே குடும்பம் காக்கும் குணவதியே
குறைந்த வருமானமும் குறைவில்லா மகிழ்ச்சியடி

கொரோனா கொழுந்தியாவாள் கொடுமையடி தினமே
கொல்லுதடி உன் நினைவு என் மகனும்தான் கணமே
கொஞ்சம் பொறுமையடி கொத்த வாறேன் கோகிலமே
கொடைக்கானலிலே கொண்டாடுவோம் கோலாகலமே


இதேபோல் மற்றொரு பாடல் பதிவு படிக்க கீழே சொடுக்கலாம்.

ChavasRegal சிவசம்போ-
மனைவி குறையை புள்ளையிடம் பாடி துபாய் புருஷனுக்கு விளங்கிடுச்சே...

காணொளி

30 கருத்துகள்:

 1. காணொளி கேட்டுவிட்டு இதனைப் படித்தும் ராகம் மனதில் நிற்காததால் மறுபடி தனியாக ஒரு முறை பாடலைப் படித்து ரசித்து விட்டேன்.  சூப்பர் ஜி.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி பாடலை ஒப்பிட்டு பாடி ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
 2. பாடல் நல்லாருக்கு.

  வெறும் பாட்டால் தாகம் தீருமா? இழந்த காலம் இழந்ததுதானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே பலருக்கும் இழந்த பிறகுதான் ஞானோதயம் ஏற்படுகிறது.

   நீக்கு
 3. எங்கே ரூம் போட்டு யோசிச்சீங்க. 

  Jayakumar

  பதிலளிநீக்கு
 4. காணொளி பாடல் நல்லாயிருக்கு ஜி...

  முடிவில் கொ கொ கொ கொ - ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஹா.. ஹா. ரசித்தமைக்கும், இக்காணொளிக்கு உதவியமைக்கும் நன்றி ஜி

   நீக்கு
 5. போட்டுத் தாக்கிட்டீங்க!...
  அருமை.. அருமை..

  பதிலளிநீக்கு
 6. என்ன கஷ்டம் என்றாலும் சேர்ந்து இருப்பது தனி தானே! அந்த சுகம் வராது! இழந்த நாட்களை எப்படி ஈடு செய்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இன்று பலரின் வாழ்வு இப்படித்தான்.

   நீக்கு
 7. என் வேண்டுகோளுக்கு இணங்கி என்னோட வலைப்பக்கம் வந்து பதிவுகளுக்குக் கருத்துத் தெரிவித்தமைக்கு நன்றி. எங்கள் ப்ளாக் சைட் பாரில் என்னோட புதுப்பதிவுகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகிறது. இயன்றால் நீங்கள் அங்கிருந்தும் வரலாம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தெரியும் இருப்பினும் நான் அலைபேசியில் வருவதால் உள்ளே செல்வதில்லை காரணம் அலைபேசியும் பழுது கருத்துரை முடிப்பற்குள் அடிக்கடி அணைந்து விடுகிறது

   நீக்கு
 8. கவிதை நன்று. நிதர்சனம் சொல்லும் கவிதை. பலரது வாழ்க்கை இப்படித்தானே இன்று!

  பதிலளிநீக்கு
 9. சில குறைகளுக்கு இப்படி பாட்டெழுதினால் சுமை குறையலாம்

  பதிலளிநீக்கு
 10. சொல்லாட்சி,ஓசை நயம் என்று எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளன.

  எனக்குப் பாடவெல்லாம் வராது. பாடுவதுபோல் ஏற்ற இறக்கத்துடன் படித்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே படித்து மகிழ்ந்தமைக்கு நன்றி

   நீக்கு
 11. என்ன செய்வது பொருளாதாரம் முக்கியமே பிரிவும் தேவைதான்! பாடம் அருமை சகோ!

  பதிலளிநீக்கு
 12. தாமதமாகத்தான் வரமுடிந்தது. நேரத்தில் படிக்கவில்லையே என எண்ணினேன். அருமை.

  பதிலளிநீக்கு
 13. அடுத்து கப்பலுக்கு போகாத மச்சானை பத்தியும் பாடல் வருமா..? நண்பரே!!

  பதிலளிநீக்கு