தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 25, 2021

மால் யுத்தம்


     னிதனை. மனிதன் இரும்புக் கூண்டுகளில்.அடைத்துக் கொண்டு ஆயுதங்களால், இரும்புக் கம்பிகளால். இரும்புச் சேர்களால், தாக்கி இரத்தக் காயமாக்கி வீழ்த்துகின்றார்களே... மேலும் கால்மணி நேரமாக ஒருவன் மற்றொருவனுடன் மோதி ஒருவனை வீழ்த்தும்போது அந்த  ஒரு மனிதனை திடீரென்று ஐந்து நபர்கள் ஓடிவந்து தாக்கி வீழ்த்துவதை வெற்றி என்று நடுவர் முடிவு செய்கின்றாரே.... இது முறையா ?

மேலும் ஒருவனை சங்கிலியால் கட்டிப்போட்டு அவனது தலைமுடியை மழிப்பது, சிலிண்டரை திறந்து அவனது முகத்தில் அடிப்பது, சுத்தியலை கொண்டு அடிப்பது, கண்ணில் நச்சுப்புகை ஸ்ஃபிரே அடிப்பது, இவைகள் வீரச்செயல்களா ? இது எந்த வகையான சண்டை முறைகள் எல்லாம் பணத்திற்காகத்தானே சரி உயிர் போய் விட்டால் இந்த பணத்தால் பயனுண்டா ? இவ்வளவு பலசாலியாக இருப்பவர்களுக்கு மூளையை இறைவன் கொடுக்கவில்லையே... 

இதையும் பிரமாண்டமான மால் நிறைய மனிதர்கள் தங்களது குழந்தைகளோடு பார்த்து கை தட்டி ரசித்து ஆரவாரம் செய்கின்றார்களே.... அப்படியானால் இரக்க உணர்வின் அர்த்தமென்ன ? நாளை தங்களது குழந்தைகளுக்கு இரத்தக்காயம் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்களா ?


சங்க காலத்தில் தேவகோட்டை தமிழர்கள் மணல் குவியலில் மல்யுத்தம் செய்து தங்களது வீரத்தை நிரூபித்தார்கள். இதில் யாருக்குமே காயம் ஏற்பட வாய்ப்பேயில்லை. பலசாலி என்பதை சுறுக்கமாக காட்டிக் கொண்டார்கள். ஆனால் இங்கு இப்படி அலங்கோலமாக நடத்துவது முறையற்றது இவைகளை பார்த்து, ரசித்த மனது மக்கள் கூடுமிடங்களில் குண்டு வைப்பது, தீ வைப்பது போன்ற அராஜக செயல்களை செய்வதற்கு மனம் கூசுவதில்லை.


இதுக்கு பேரு ரஸ்லிங்னு சொல்லுறாய்ங்கே... இந்த லட்சணத்துல அவங்கே காயம்பட்டால் மருத்துவமனை கொண்டு செல்ல மருத்துவ விரைவூர்தியும், மருத்துவர்களும், செவிலியர்களும் குழுவோட இருக்காங்கே சண்டை முடிந்தும்கூட காயம்பட்டவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுவதற்கு விரைவூர்தியில் ஏற்றிய பிறகும் அவனை மீண்டும் அடித்து வண்டியை புரட்டிப் போட்டு விடும் பலசாலி முட்டாள்கள் நிறைய உண்டு இவர்களை யாருமே கட்டுப்படுத்த இயலவில்லை. பிறகு என்ன விதிமுறைகள் போடுகிறார்கள். முறை தவறி நடந்தவனுக்கு பரிசு இல்லை என்று இருந்தால் இவர்கள் முறையோடு நடந்து கொள்வார்கள். என்னமோ போங்க இந்த ரத்த வினையாட்டு எனக்கு இன்னும் விளங்கவே இல்லை.

காணொளி

40 கருத்துகள்:

 1. நான் இந்த சனியன் பிடித்த விளையாட்டைப் பார்ப்பதே இல்லை.  அருவெறுப்பான நிகழ்ச்சி.  அந்தக் காணொளியில் சிறுவர்கள் நன்றாகவே மூளைச்சலவை செய்யப்பட்டு கெட்டுப்போயிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி ரஸ்லிங்கில் நாடி, நரம்புகளில் ஊறிப்போனவர்களுக்குதான் இந்த உணர்வு வரும்.

   நீக்கு
 2. இப்படி எல்லாமா விளையாட்டுக்கள் இருக்கின்றன? தெரியவே தெரியாது. நல்லவேளையாக இவற்றை எல்லாம் பார்த்து மனதைக் கெடுத்துக் கொள்வதில்லை. இதைத் தடை செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைவிட கேவலம் டிக்டாக் பல குடும்ப பெண்களை தெருவுக்கு கொண்டு வந்து விட்டது.

   நீக்கு
  2. கேள்வி புரியவில்லை ?

   நீக்கு
 3. தடை செய்ய வேண்டிய விளையாட்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே இதில் வல்லரசு நாடாம் அதுவே முன்னணி.

   நீக்கு
 4. இது ப்ரீ ப்ளான் விளையாட்டு பார்க்கும் போது உண்மையாக அடித்து கொள்வது போலத்தான் இருக்கும் இது சினிமாவில் நடக்கும் சண்டை போலத்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே இது ப்ளான் ப்ளே என்றுதான் சொல்கிறார்கள் ஆனால் அடிப்பது 90% உண்மையாக இருக்கிறதே... ரத்தமும் வருகிறது, ஆம்புலன்ஸை புரட்டி விடுகிறார்கள்.

   நீக்கு
 5. இவர்கள் தாம் இங்கு மிருகவதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டு தடை வாங்கியவர்கள்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா ஆம்
   "படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயில்"
   என்பது போல்தான்.

   நீக்கு
 6. பார்க்கவே பிடிக்காத ஒரு விளையாட்டு. என்ன விளையாட்டோ?

  பதிலளிநீக்கு
 7. உண்மையான ரெஸ்லிங்ல நிறைய சண்டைகள் முன்னமே ஒத்திகை பார்க்கப்பட்டவை போல இருக்கும். ஆனாலும் அடி படும். நேர்மை கொஞ்சம்கூட இருக்காது. இந்த விளையாட்டு, குத்துச்சண்டை எல்லாமே மனித மனத்தின் வக்கிரங்கள், மனிதனின் மிருக குணத்தை அதிகமாக்குவதற்காகச் செய்வது. இதைப் பார்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும் மனித வர்க்கத்திலேயே சேர்க்க முடியாது (பழைய காலத்தில் சிங்கத்தைத் திறந்துவிட்டு, மனிதனை போராடச் சொல்லி ரசித்த கூட்டத்தின் தொடர்ச்சிதான் இது)

  இந்த PETA etc போன்றவர்களெல்லாம் நம்ம நாட்டு கலாச்சாரத்தைத் தகர்க்க வந்தவர்கள். நாளை மாட்டு வண்டியைத் தடை செய்யச் சொல்வாங்க, கே.எஃப்.சில உட்கார்ந்து நான் வெஜ் சாப்பிட்டுக்கிட்டே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கருத்துரையின் தொணி நண்பர் நெல்லைத்தமிழராக இருக்குமோ என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. ஆமாம் கில்லர்ஜி.... வேற ப்ரௌசர்லேர்ந்து பதில் போட்டா, 'உன்னை எனக்குத் தெரியாதுடா' என்று சொல்லுது....

   நீக்கு
  3. ஆஹா எனது கணிப்பு சரியே...

   அல்வா கொடுக்கிற பார்ட்டிக்கே இந்த கேள்வியா ?

   நீக்கு
 8. ராமாயண தொடரில் ஹனுமானாக வேடமிட்டவர் கூட இம்மாதிரி விளையாட்டில் வீரர் என்று கேள்வி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 9. இந்த விளையாட்டில் வரும் கேரக்டர்ஸின் ஸ்டிக்கர்கள் முன்பு நம்ம ஊரில் கடைகளில் விற்றதா  கேள்வி .எனக்கும் சந்தேகமுண்டு நிஜம்மா அடிக்கறாங்களா அது ரத்தம்தானான்னு .பெண்களும் இப்படிப்பட்ட wrestling விளையாட்டத்தில் பங்கு பெறுவதை ஒரு முறை சானல் மாற்றும்போது  பார்த்தேன் .நம் நாட்டிலும் இதெல்லாம் காட்டணுமா ? எதை செய்தாலும் அது தப்பு இல்லைன்னு ஒரு முட்டாள்தனமான கருத்துக்கு அடிமையாகுது சமூகம் .ஏற்கனவே மனிதத்தன்மையை  முற்றிலுமாக இழந்துகொண்டுவரும் காலகட்டத்தில் இதையெல்லாம் சிறார் சிறுமியர் பார்த்தா மனநல பாதிப்பு ஏற்பட்டு   விரைவில் அன்பு இரக்கம் பாசம் போன்ற குணங்களை டிக்ஷ்னரில கூட தேட முடியாது .இதெல்லாம்  தகவல் ஒளிபரப்பு செயலகம்  பதவியிலிருப்போர் கருத்தில் கொள்ளணும்  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ சமூகசிந்தனையோடு கூடிய தங்களின் உயர்ந்த எண்ணங்களுக்கு நன்றி.

   நீக்கு
 10. இந்த விளையாட்டையெல்லாம் நான் பார்ப்பதே இல்லை. இந்த உங்களின் பதிவின் மூலம்தான் இதனால் விளையும் கேடுகளை முழுமையாக அறிந்தேன்.

  உண்மையோ இல்லையோ தடை செய்யப்படவேண்டிய விளையாட்டு.

  நம்மவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தடை செய்யப்பட வேண்டிய விளையாட்டு//

   ஆம் நண்பரே இதுவே எமது எண்ணமும்...

   நீக்கு
 11. இந்த விளையாட்டு எனக்கு பிடிக்காது , மனபலம் இல்லை இதைப் பார்க்க.
  பள்ளி விட்டு வரும் குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு வெளியில் வருவதைப்பார்த்தாலே பயந்து போய் விடுவேன். அவர்களை சண்டை போடாதீர்கள் என்பேன்.


  பதிலளிநீக்கு
 12. இதுபோன்ற போட்டிகள் காண்பவர்களிடைய ஒரு மூர்க்கத் தனத்தைத் தோற்றுவிக்கும்
  தடை செய்யப்பட வேண்டியவை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 13. ரொம்ப பிரபலமான விளையாட்டு இது.
  என் பள்ளி நன்பன் இதை பார்த்து சிலாகித்து அதன் உக்திகளை என் மீது செய்து காட்டி புரிய வைப்பான்.
  எனக்கு அதை பார்க்கும் ஆர்வம் இன்னும் வரவில்லை.
  அவனும் துரதிஶ்டவசமாக அகால மறனம் எய்திவிட்டான்.
  நம் ஊரில் மேரி கோம் அம்மையார் இதனால் பிரபலம் ஆனவர் என ஞாபகம்.
  இந்த போட்டியை தடைசெய்வது ஒரு பக்கம் இருந்தாலும் ஆன்லைன் விளையாட்டுகள் என்ற பெயரிலும் மாணவர்களுக்கு வண்முறையும் கொலையுமே ரசிக்கும்படி பரிமாரப்படுகிறது நன்பர்களே.

  பதிலளிநீக்கு
 14. டங்கல் மற்றும் மாதவன் ரித்திகாசிங் நடித்த ஒரு தமிழ்ப் படம் இந்த விளையாட்டை சித்தரித்து நம்மை ரசிக்கவைத்தவை என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 15. இவற்றை தடை செய்யவேண்டியது அவசியம். தெரிந்தும் தவறு செய்வது வேதனையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  ஒரு காலத்தில் இந்த விளையாட்டை இளைஞர்கள் ரசித்து பார்த்ததை நானும் அறிவேன். இது ஒரு பொய்மையான ஆக்டிங் உண்மையல்ல.. என்ற வதந்தி கூட வந்தது. அதுவும் எந்த விதத்தில் உண்மை எனத் தெரியவில்லை. இதில் பெண்களும் விளையாடினார்கள். இருந்தாலும் இந்த மாதிரி மூர்க்கத்தனமாக அடித்துக் கொள்ளும் விளையாட்டை மக்கள் ரசித்து பார்ப்பதை புறக்கணிக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இது உண்மையோ, பொய்யோ இதை தடை செய்வதே நல்லது. அல்லது இந்த சேனலை இந்தியாவுக்குள் தடை செய்தாலும் நன்றே...

   நீக்கு
 17. இந்த வன்முறை ஊறி போன மனிதர்களை நினைத்தால் மனம் கணக்கிறது நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இது எதிர்கால சந்ததிகளுக்கு இழப்பு.

   நீக்கு
 18. நல்ல வேளை நான் இதையெல்லாம் பார்க்கவேயில்லை...

  பதிலளிநீக்கு