தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 14, 2021

முகம் மலர்ந்து...

வயது முதிர்ந்த தருணத்திலும்
வயதுக்கு வந்த பாவையுடன்
வாலிபால் விளையாட்டுடன்
வாழ்ந்து கழிக்க ஆசைப்படும்
எனக்கு நன்மைகள் பல செய்து
பலரும் பலன் பெறுவதைக் கண்டு
அகமும், முகமும் மகிழ்ச்சியோடு
நெகிழ்ச்சியும் கொள்வதை உணர்கிறேன்.

இப்பதிவு தோன்றியதின் காரணத்தை அறிய என்னை சொடுக்கி அந்த எட்டு வரிகளையுமே படித்து வந்த பிறகு கருத்துரை தரலாமே... – கில்லர்ஜி

சிவாதாமஸ்அலி-
பத்து வருசத்துல நூற்றுக்கும் மேல் யானைகளை கொன்றவனை கடவுளாக பார்க்கிறான் தமிழன், வீரப்பனும் இதைத்தானே செஞ்சாரு....

ChivasRegal சிவசம்போ-
வாழ்க்கை வாழத்தானே வந்தாரை வாழ வைக்கும் தமிழ் அகம்.

இனிய நட்பூக்களுக்கு உங்கள் கில்லர்ஜியின் பொங்கல் நல்வாழ்த்துகள் உரித்தாகுக...

எனது மின்நூலை அமேசனில் வாங்க கீழே சொடுக்கி வாங்கலாம்.

38 கருத்துகள்:

 1. வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  அன்றைய பதிவு ஓகே...  இன்றைய பதிவு தலையில் குட்டும் பதிவுதானே?

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. பல காலமாக பலர், பலரை ஏமாற்றும் வேலை, நல்ல தொழில் ஜி...

  பதிலளிநீக்கு
 4. இண்ட்ராஸ்பெக்‌ஷன் நல்லது

  பதிலளிநீக்கு
 5. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 6. அத்தனைக்கும் ஆசைப்படு என்றவர் ஆசைப் படாவிட்டால் நீங்கள் ஆசைப் படுவீர்களா? 
  பொங்கல் வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முன்பே பரிசு அட்வான்ஸ் ஆக கிடைத்து விட்டதல்லவா.

   Jayakumar

  பதிலளிநீக்கு
 7. மனம் நிறைந்த, இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்.

  பொங்கல் படம் மிக அழகு

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உங்களுக்கும் வாழ்த்துகள்

   நீக்கு
  2. சில பதிவுகளாக உங்களை என் வலைப்பக்கத்தில் காண முடியவில்லை. வேலை மும்முரமோ? மெதுவாக வாருங்கள்.

   நீக்கு
 10. சிறிய தவறுகளுக்கு உங்கள் மனம் கூசியது. பக்தியின் பெயரால் மிகப் பெரிய தவறுகளைச் செய்த/செய்கிற இந்த ஆள் மிகப் பெரிய மனிதர்களுக்கெல்லாம் ஆசான். இது போல் தினம் நூறு பதிவுகள் எழுதினாலும் நம் மரமண்டை மனிதர்களைத் திருத்த முடியாது.

  தத்துவம் என்னும் பெயரில் புரியாத எதையெதையோ எழுதிப் பக்தர்களைப் பித்தர்கள் ஆக்கும் இந்த நபருக்கு 'சத்குரு' பட்டம் வேறு. கலிகாலம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
  2. ஆம் நண்பரே எனது பார்வையில் பக்திமான்களே அதிகம் தவறு செய்கிறார்கள் இதை மக்கள் உணரும் காலம் வரட்டும்.

   தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்

   நீக்கு
 11. அனைத்துக்கும் வாழ்த்துக்கள் கில்லர்ஜி.. பொங்கல் பொயிங்கியாச்சு இனியாவது பொயிங்குவதை நிறுத்துவாரோ கில்லர்ஜி:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா ஹா.. ஹா... பொங்குதல் இறுதிவரை கூடவரும்...

   நீக்கு
 12. பொங்கல் வாழ்த்துக்கள் கில்லர்ஜீ .
  அந்த படத்தில் இருப்பது சமத்துவ கட்சிக்காரரின் மகள்தானே !!! ஒரு விஷயம் ஆச்சர்யப்படுத்துது என்னக்கு .அது என்னன்னா இந்த பொண்ணு கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு உணவுப்பொட்டலம் விநியோகிச்சா படத்திலும் வீரதீரமா நடிச்சிருக்கார் .எத்தனை அறிவிருந்து சிலநேரம் ஏமாறுகிறார்கள் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சல் ஆம் நல்ல குடும்பத்து பெண்தான்

   சிலருக்கு சில நேரங்களில் மனம் சொல்வதை புத்தி மீறுவதில்லை.

   நீக்கு
 13. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. நீங்கள் உணர்வது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
 15. வீரப்பர் துப்பாக்கி ஏந்தினார். சக்கி பாவையை ஏந்தினார்.. எதுக்கு மயங்குவார்கள்...???

  பதிலளிநீக்கு
 16. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். 

  பதிலளிநீக்கு
 17. தமிழர் திருநாள் வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு