தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 04, 2021

அரிமளம், அரசியல்வாதி அரியநாயகம்


ணக்கம்ணே நல்லா இருக்கீங்களா ?  சில சந்தேகங்கள் இருக்கு உங்கள்ட கேட்கலாம்னு வந்தேன்ணே...
வாடா தம்பி வருசைமுத்து நல்லா இருக்கேண்டா... கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

ஏண்ணே மரணத்தை இறைவன்தானே தீர்மானிக்கிறாரு...
ஆமாடாத்தம்பி இதிலென்ன உனக்கு சந்தேகம் ? 

அப்படீனாக்கா தினம் பேருந்து, லாரி, இப்படி விபத்துல எத்தனை பொதுமக்கள் சாகுறாங்க ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் இப்படி விபத்துல அதிகம் சாகுறது இல்லையே எப்படிணே ? 
அடேய்த்தம்பி நம்மளைப் போல ஆளுங்க போக்குவரத்து நெருக்கடியில் தினம் அலையிறோம் வாகனங்களும் நான் உன்னை முந்தி, நீ என்னை முந்தினு பறக்கிறோம் எந்தப் பக்கத்திலிருந்து எவன் பாய்ந்து வருவான்னு தெரியாது அதனாலதான் பொதுமக்கள் அதிகம் சாகுறாங்க... ஆனால் அரசியல்வாதிகள் வரும்போது முன் கூட்டியே சாலைகளை திட்டமிட்டு காவல்துறையினர் வழிகளை ஒழுங்குபடுத்தி வாழ வழியில்லாத, வாக்கு போட பணம் வாங்கிட்டு கேள்வி கேட்க வக்கு இல்லாத நம்மளை நிப்பாட்டி வச்சுருவாங்க... அப்ப சாலைகள் எல்லாமே எந்த இடையூறும் இல்லாமல் சுத்தமாக இருக்கும், எதுவுமே குறுக்கே வாராது ஏன் ஒரு பன்றியைக்கூட குறுக்கே வரவிடாமல் காவல்துறையினர் சரி செய்து வைப்பார்கள். அதனாலதான் அவங்க போற வாகனங்கள் விபத்து நடக்குறதை 90 சதவீதம் தடுத்துறாங்க... ஆனால் நமக்கு அப்படி இல்லையே ஆகவேதான் நாம கூடுதலாக சாகுறோம்டா...

ஏண்ணே நாம எல்லாம் நம்ம குடும்பத்துல யாராவது இறந்து சமாதி வைத்திருந்து சுடுகாட்டுக்கு போயி வணங்கி வந்தால் குளிச்சுட்டுதானே வீட்டுக்குள்ளே போவோம் ? 
ஆமாடா சுடுகாடு என்பது தீட்டு உள்ள இடம் மேலும் அந்த இடத்தில் பல கெட்ட ஆவிகள் இருக்கும் அதிலிருந்து நாம சுத்தமாகணும் அதுக்குத்தான் வீட்டுக்குள்ளே போகும்போது குளிக்கிறது.

அப்படீனாக்கா சென்னை மெரினாவுல இருக்கிற சமாதிகளை வணங்குறவங்க வீட்டுக்கு போகும்போது குளிக்காமல் போறாங்களே இது எப்படிணே.... ? 
தம்பி மெரினாவுல புதைச்சவங்க எல்லாம் மனுசங்க இல்லடா... அவங்களெல்லாம் வாழும்போது இதயதெய்வம், காவிரித்தாய், காவல்தெய்வம், தீபஜோதி, அப்படி இப்படினு மக்களால தெய்வம் ஆக்கப்பட்டவங்க யாரும் நம்மளைப் போல மனுஷனாக மதிக்கிறது இல்லை.

ஏண்ணே அரசியல் தலைவர் இறந்து போயிட்டாரு அவரது இறந்தநாளை துக்கமாக அனுசரிச்சு விழா நடத்துறாங்க சரி ஆனால் அவருடைய பிறந்தநாளுக்கு இனிப்பு கொடுத்து விழா நடத்துறாங்களே இது முறையாண்ணே ? 
தம்பி நம்ம நாட்டுல எல்லாப்பயலுமே செத்துப் போனவங்களோட படத்தை காண்பித்துதான் ஓட்டு வாங்குறாங்க, காரணம் நம்ம மக்களுக்கு சிந்திக்கிற அறிவு கிடையாது. காரணம் சிறையில் இருக்கிறதே மக்கள் பணத்தை கொள்ளையடித்ததாலதான் ஆனால் இவங்கே என்ன சொல்றாங்கே... தியாகத்தலைவி என்று அதனாலதான் நம்ம மக்களுக்கு இனிப்பு கொடுத்தால் போதும் வாங்கி தின்று விட்டு வாழ்க கோஷம் போட்டே சாவாங்கே... காரணம் நாமெல்லாம் ஓசியில் கிடைச்சா ஒட்காவையும் வாங்கி குடிப்போம்.
ஏண்ணே பெரியார், அண்ணா புகைப்படத்தை எல்லாக் கட்சிக்காரங்களும் போடுறாங்க அவங்க உண்மையிலேயே எந்தக்கட்சிணே ? 
தம்பி இப்பத்தானேடா சொன்னேன் இவங்களுக்கு சொந்தக்காலு கிடையாது அடுத்தவங்களோட காலை முட்டுக் கொடுத்தே காலத்தை ஓட்டிடுவாங்க முதல்ல தேர்தல் அதிகாரிகள் இந்த புகைப்படத்து விசயத்துல ஒரு தீர்மானம் கொடுக்கணும் அவங்களும் என்ன செய்வாங்க மேலிடத்து ஆளுங்க பேசித்தானே இந்த பதவியை கொடுக்குறாங்க அவர்களும் மனிதர்கள்தானே...

ஏண்ணே புதுசா யாராவது கட்சி ஆரம்பித்தால் தலைவரை அண்ணே என்றும் அவரது மனைவியை அண்ணி என்றும் சொல்றாங்களே... அப்படீனாக்கா தலைவரோட கொழுந்தியாளை எப்படிணே சொல்லுவாங்க ? 
இது கொஞ்சம் சட்டச் சிக்கலான விசயம்தான் காரணம் நடிகை லதாவை வைத்து கட்சி ஆரம்பித்தவர்கள் அதில் தோற்றுப் போனார்கள். லதாகூட பேட்டியில் சொன்னார் தொண்டர்கள் எல்லோரும் என்னை அண்ணி என்று அழைப்பது ரொம்ப பெருமையாக இருக்கிறது என்று. அப்பொழுது எனக்கு தோன்றியது லதாவோட சகோதரர் மனைவியை தொண்டர்கள் அக்கா என்று அழைப்பார்களோ... அதேபோல ஜெயலலிதாவை அம்மா என்று சொன்ன தொண்டர்கள் எம்.ஜி.இராமச்சந்திரனை அப்பா என்று அழைக்கவில்லையே... இது மிகவும் குழப்பமான விசயம்தான் இது இன்னும் இரண்டு தலைமுறை மண்ணுக்குள்ளே போனால்தான் தீர்வு கிடைக்கும்.

சரிண்ணே நிறைய விசயம் தந்தீங்க ரொம்ப நன்றிணே...
இதை எல்லாம் கேட்டு என்ன செய்யப் போறே ? 

எல்லாம் பொது அறிவை வளர்க்கத்தாணே...
நல்லதுடா தம்பி எனக்கும் வண்டி வந்துருச்சு போயிட்டு வாறேன்.

ChavasRegal சிவசம்போ-
அரியநாயகம் அண்ணே நல்லாத்தானே பேசுறாரு இவருக்கா அரசியல் தெரியாதுனு சொல்றாங்க ?

காணொளி

25 கருத்துகள்:

 1. கொளுந்தியாவை சின்ன அண்ணி என்று அழைப்பார்களோ அல்லது சின்னம்மா என்று அழைப்பார்களோ???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே சின்ன அண்ணி நல்லாத்தான் இருக்கிறது.

   நீக்கு
 2. கேள்விலாம் நல்லாருக்கு....

  உங்க, "ஓசியில் கிடைச்சா ஓட்காவையும்தான்" எனபது மட்டும்தான் ஒட்டலை. ஃ்ரீயா கிடைச்சா பினாயிலையும் குடிப்பாங்க, ஓசில கிடைச்சா ஒட்டகத்து மூ...த்தையும் குடிப்பாங்க என்பதுதான் சரியோ..

  இறந்தவர் தினப்பத்திரிகை படிக்க சமாதியில் வைப்பதைச் சொல்லலையே... சமாதிக்குள்ளேர்ந்து கடிகாரச் சத்தம் கேட்பதாக நம்புவதையும் குறிப்பிடலையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   ஓட்கா விலை அதிகமோ...

   சமாதியில் பத்திரிக்கையா ? இந்தக்கூத்து எப்ப ?

   ஏன் ஸாம்சாங் டிவி வைக்கச் சொல்லலாமே...

   நீக்கு
  2. தினமும் முரசொலி பத்திரிகை, கருணாநிதியின் சமாதியில் வைக்கப்படுகிறது என்று செய்திகள்ல போட்டிருந்தாங்க, படமும் போட்டிருந்தாங்க. அங்க தொலைக்காட்சி வைத்தால் அதில் ஆதித்யாவா இல்லை சிரிப்புச் சேனலா என்ற குழப்பம் வரும் என்பதால் வைக்கலையோ?

   நீக்கு
  3. இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்வதை விமர்சித்த முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு இது முறையாக தெரிகிறதாமா ?

   நீக்கு
  4. தயிர்வடையை விட்டுட்டீங்களே நெ.த.?

   நீக்கு
 3. அம்மா அப்பா பற்றி கேள்வி கேட்டவர் சின்னம்மா, சின்னப்பா குறித்து கேட்கவில்லையே ஏன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வருசைமுத்து மறந்து விட்டார் போல....
   சின்னப்பா ஹா.. ஹா..

   நீக்கு
 4. 'வயிரமொத்து'வை இரு கரம் குவித்து வரவேற்கிறேன்.

  அவரின் 'மொத்துகள்' தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   வயிற்றை நிரப்பவே இந்த க்ரீன் தமிழன் அவனை புகழ்ந்து எழுதினான்.

   இவனைப் போன்றவர்களைத்தான் முதலில் தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்.

   நீக்கு
 5. இந்த முறை தாக்குதல் கம்மியா இருக்கே ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. இப்படியே உசுப்பேற்றி விட்டு உடம்பை ரணகளமாக்கி விட்டீங்களே ஜி

   நீக்கு
 6. நீங்கள் ஓர் அரசியல்வாதியாக மாறி சீர்திருத்தங்களைக் கொணரவேண்டும் என்பதே எங்கள் அவா. நீங்கள் உங்களையே திட்டிக்கொள்ள முடியாது அல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. முனைவர் அவர்கள் என்னை சிக்க வைப்பது போல தெரிகிறதே...

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு நன்றாக உள்ளது தம்பியின் கேள்விகளுக்கு அண்ணன் பதில்கள் நன்றாக உள்ளது. இங்கு படிக்க வரும் என்னைப்போன்ற சிறு குழந்தைகளுக்கு எல்லாமே கிண்டல் சுண்டலுடன் பரிமாறுகிறீர்கள். என்னதான் பொது அறிவு என அந்த தம்பி மாதிரி நினைத்தாலும், எனக்குத்தான் அரசியல் பாடம் இன்னமும் என் ம.மண்டைக்கு ஏற மாட்டேன் என்கிறது. ஆனால், சுண்டலை மட்டும் எப்போதும் போல் ரசித்து சாப்பிடுகிறேன். ஹா.. ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   பதிவை சுவைத்து ரசித்தமைக்கு நன்றி.

   இது அரசியல் பதிவு போலிருக்கிறதா ? பொதுஅறிவு வினா-விடை என்று நினைத்தேன்.

   நீக்கு
 8. பதிவு அழகு.. பதிவின் கருத்துகளும் அழகு...

  பதிலளிநீக்கு
 9. சுவாரஸ்யமான கேள்வி பதில்கள்...

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஜி,
  பதினைந்து ரூபா கரும்பை பட்டினத்தார் போல வீர நடையோடு வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் பணக்காரர்கள் இருக்கும் நாட்டுல அரசியல்வாதி எப்படி இருப்பான். தன்மானத்தை இழந்து எங்கு கிடைக்குமோ என மக்களை அலய வைக்கும் அரசியல்வாதிகள் மிக மிக திறமை வாய்ந்தவர்கள். இன்னும் மோசமகத்தான் இருக்கும் எதிர் காலம். வாழ்வோம் விலங்குகளை போல வாய் பேசாமல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே
   மிகவும் அருமையாக சொன்னீர்கள் வாசகம்தான் செருப்பை சாணியில் முக்கி அடித்தது போலிருக்கிறது

   தங்களது வருகைக்கு நன்றி தாங்கள் யாரென்று அறியாதது ஒரு குறையே...

   வருக... தொடர்க...

   நீக்கு