அந்த பூசேரி
கிராமத்தின் ஐயனார் கோயிலின் வளாகத்தில் மரத்தடியில் கிடா ஒன்று கயிற்றில்
கட்டப்பட்டு இருந்தது, கீழே இலை தழைகளும் கிடந்தது நேற்றிரவே போட்டு இருந்தது.
கொஞ்சமும் குறையவில்லை அதாவது கிடா உண்ணவில்லை என்பது தெரிந்தது. அந்த மரத்தடிக்கு
அன்றைய விழா நாயகன் செஞ்சடை நாதீஸ்வரன் அருகில் வந்தான். அவன் அகவை ஐந்தை தொட்டு
இருந்தான். இனிதான் முடி இறக்கி, குளித்து புத்தாடை அணிந்து காதை துளைக்க
வேண்டும். இதற்காகவே வந்து இருந்தார். சுற்று வட்டார பதினெட்டுபட்டி
கிராமங்களுக்கும் சொந்தக்காரர் முத்து மரையான் ஆச்சாரி.
கிடா சோகமே
உருவாக இருப்பதை கவனித்த செஞ்சடை அருகில் சென்று வாஞ்சையோடு தடவிக் கொடுத்து
கேட்டான்.
கிடாவே நாங்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றோம், இதோ எனது காது துளைக்கப்படும் என்று தெரிந்தும்கூட நானும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் நீ ஏன் உண்ணாமல் இருக்கிறாய் ?
உனக்கென்ன...
காதுல சின்ன ஓட்டை அதையும் நீ கத்துவது தெரியாமல் இருக்க, வாயில வாழைப்பழத்தை
தினிச்சு வப்பாங்கே... எனக்கு அப்படியா ? அதோ பூசேரி
பூசாரி பூவலிங்கத்தை பார்த்தாலே அடி வயித்தை கலக்குது... ஆளும் கிடா மீசையும்
ஹூம். மைண்ட் வாய்ஸில் நினைத்த கிடா வேண்டாம் பாவம் சின்னப் பையன் நமக்கு தினம்
உணவு கொடுத்தவன், அவன் வருந்தக்கூடாது. சந்தோஷமாக இருக்கட்டும்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’’ நம்ம திண்டுக்கல் தனபாலன் ஜி-யின் தாத்தா சொல்லி இருக்காரு... நம் விதி இப்படியாச்சு. ‘’என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே’’ சிந்து பைரவியில் சித்ரா பாடியது நினைவை மீட்டிட ஒன்றும் பேசாமல் செஞ்சடையை நுகர்ந்து பார்த்தது.
அவ்வழியே வந்த
செஞ்சடையின் தாய்மாமன் மொந்திக்காலன்...
என்ன மாப்ளே கிடாக்கிட்டே என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க ?
இல்லை மாமா கிடா பாவம் எதுவுமே சாப்புடலை.
அதனால என்ன மாப்ளே... இன்னும் கொஞ்ச நேரத்துல நாம கிடாய சாப்புட்ருவோம், நீங்க போயி கோயில்ல உட்காருங்க, மாமா இதோ வெளியில போயிட்டு வந்துறேன்.
கிடா நினைத்தது மூதேவி
நீ எங்கே போவேனு எனக்கு தெரியாதா ? சிக்கல் டாஸ்மாக்
கடைக்கு போவே... கோயிலுக்கு வந்தும் திருந்த மாட்டீங்கடா, நீங்களாடா எங்க வலியை
உணர்ந்து திருந்தப் போறீங்க ?
செஞ்சடை வேப்பங்
கொலையை எடுத்து கிடாவுக்கு ஊட்ட... அது முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தது. கடைக்கு
போய் விட்டு திரும்பி வந்த தாய்மாமன் மொந்திக்காலன்.
என்ன மாப்ளே இங்கேயே நிற்கிறீங்க ?
மாமா பாவம் கிடா இதை வெட்ட வேண்டாம்னு அப்பாக்கிட்ட சொல்லுங்க.
மாப்ளே அப்படி எல்லாம் பேசக்கூடாது தெய்வக்குத்தம் ஆயிடும், ஐயனாருக்கு வெட்டணும் இல்லைனா... அவரு கோவிச்சுக்கிருவாரு...
ஹூம்
விளங்காப்பயல்களா.. இந்தக் குழந்தைக்கு இருக்கிற அறிவுகூட இந்த எருமைகளுக்கு
இல்லை. ஐயனாரு என்னைக்குடா பசிக்கு கிடா கேட்டாரு ? அவரு பேரைச்
சொல்லி வெட்டிப்புட்டு நீங்க என்ன மசுத்துக்கு திங்கிறீங்க ? படைச்சு
வச்சுட்டு போய்த் தொலைய வேண்டியதுதானே... மூதேவி கோயிலுக்கு வரும்போதுகூட டாஸ்மாக்
போயிட்டு வருது எனக்கே நாத்தம் குடலை பிறட்டுது. இவங்கே நேர்த்திக்கடன்னு
சொல்லிப்புட்டு நம்மளைப் போட்டு வெட்டுறாங்கே... காலம் பூராம் கோயில்லயே வேலை
செய்யிற ஐயர்கள் எங்களை வெட்டுறது இல்லையே... இப்படியா ? அவங்களும் காது
குத்ததானே செய்யிறாங்க... ஐயர்கள்ட்ட, ஐயனாரு கிடா கேட்க மாட்டாரா ? அந்த வகையில்
நம்ம பொம்மனாட்டிகள் தப்பிச்சு போயிருச்சுங்க... ஐயனாரு ஆடு கேட்க மாட்டாராம்,
கிடாதான் கேட்டாராம் சரி அவளுகளாவது தப்பிச்சு போயி விதவையாக வாழட்டும்னு பார்த்தால்
நம்ம, திப்பு சுல்த்தான் பாய் வகையறாக்கள் சும்மா இருக்குறாங்களா ? கசாப்பு கடையை
போட்டு நம்ம பொம்மனாட்டிகளை விளாவிப்புடுறாங்க... ஹூம் காலவினையடி கருமாரி. கிடா
நீண்ட......... பெருமூச்சு ஒன்றை பதிவு செய்தது.
சரி வாங்க மாப்ளே
போவோம்.
மொந்திக்காலன், மருமகன் செஞ்சடையின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு போனான். மச்சானை அதாவது செஞ்சடையின் அப்பா சாவக்கட்டி சாம்பமுத்தனைத் தேடி.... அந்தக்கிடா பூசேரி பூசாரி பூவலிங்கத்தின் கையிலிருந்த நீண்ட அருவாளையே... பார்த்துக் கொண்டு நின்றது.
கில்லர்ஜி தேவகோட்டை
Chivas Regal சிவசம்போ-
நமக்கு பத்திரிக்கை வந்திருந்தால் போகலாம்...?
சிவாதாமஸ்அலி-
ஆடு மனுசனை, எருமை-னு சொல்லுதே... ம்...ம்... பாவம் அதையும் மனுஷன் வாழ விட்டால்தானே...
கிடாவே நாங்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றோம், இதோ எனது காது துளைக்கப்படும் என்று தெரிந்தும்கூட நானும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் நீ ஏன் உண்ணாமல் இருக்கிறாய் ?
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’’ நம்ம திண்டுக்கல் தனபாலன் ஜி-யின் தாத்தா சொல்லி இருக்காரு... நம் விதி இப்படியாச்சு. ‘’என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே’’ சிந்து பைரவியில் சித்ரா பாடியது நினைவை மீட்டிட ஒன்றும் பேசாமல் செஞ்சடையை நுகர்ந்து பார்த்தது.
என்ன மாப்ளே கிடாக்கிட்டே என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க ?
இல்லை மாமா கிடா பாவம் எதுவுமே சாப்புடலை.
அதனால என்ன மாப்ளே... இன்னும் கொஞ்ச நேரத்துல நாம கிடாய சாப்புட்ருவோம், நீங்க போயி கோயில்ல உட்காருங்க, மாமா இதோ வெளியில போயிட்டு வந்துறேன்.
என்ன மாப்ளே இங்கேயே நிற்கிறீங்க ?
மாமா பாவம் கிடா இதை வெட்ட வேண்டாம்னு அப்பாக்கிட்ட சொல்லுங்க.
மாப்ளே அப்படி எல்லாம் பேசக்கூடாது தெய்வக்குத்தம் ஆயிடும், ஐயனாருக்கு வெட்டணும் இல்லைனா... அவரு கோவிச்சுக்கிருவாரு...
மொந்திக்காலன், மருமகன் செஞ்சடையின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு போனான். மச்சானை அதாவது செஞ்சடையின் அப்பா சாவக்கட்டி சாம்பமுத்தனைத் தேடி.... அந்தக்கிடா பூசேரி பூசாரி பூவலிங்கத்தின் கையிலிருந்த நீண்ட அருவாளையே... பார்த்துக் கொண்டு நின்றது.
Chivas Regal சிவசம்போ-
நமக்கு பத்திரிக்கை வந்திருந்தால் போகலாம்...?
ஆடு மனுசனை, எருமை-னு சொல்லுதே... ம்...ம்... பாவம் அதையும் மனுஷன் வாழ விட்டால்தானே...
மனத்தைக் கலங்கடிக்கிறது பதிவு. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பார்கள். தின்றால் போய்விடுமா?
பதிலளிநீக்குவாங்க ஜி ஒவ்வொரு மனதுக்கும் ஒரு நீதி.
நீக்குநேற்று அலுவலகம் செல்லும் வழியில் ஒரு வண்டியில் எக்கச்சக்கமாய் ஆடுகள் அடைபட்டு பயணித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாக இருந்தது. ஓரத்தில் நின்ற ஆடுகளாவது மூச்சு விட்டு வெளியுலகம் பார்க்க முடியும். நடுவில் மாட்டிக் கொண்டிருக்கும் ஏராளமான ஆடுகள் திக்கு திசை தெரியாமல் தனது விதியை நோக்கி பயணிப்பது அறியாமல் நின்று கொண்டிருக்கும்.
பதிலளிநீக்குஆம் நானும் பலமுறை இக்காட்சிகளை கண்டு வருந்தியது உண்டு.
நீக்குநம் திண்டுக்கல் தனபாலனாரின் தாத்தா சொல்லி இருக்காரு! ரசித்தேன் ஜி. சின்னப் பையனின் கருணையும் மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குஇரசித்தமைக்கு நன்றி ஜி
நீக்குஇன்றைய பதிவை மிகவும் ரசித்தேன்.. யாரையும் விட்டு வைக்கலை..
பதிலளிநீக்குதிண்டுக்கல்லாரின் தாத்தா முதற்கொண்டு திப்புவின் வகையறாக்கள் வரைக்கும் இழுத்து வந்தாயிற்று..
ஆமாம். பொட்டை ஆட்டையும் அவிங்க விட்டு வைக்கிறதில்லை..
வாங்க ஜி பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநானும் இங்கே தான் இருக்கேன்..
நீக்குஎனக்கும் பத்திரிக்க வரலை.
எனக்கும்தான் ஜி
நீக்குபத்திரிக்கை பிளக்சு அடிச்ச காசுக்கு இன்னொரு கிடா வாங்கியிருக்கலா மே.. ன்னு யோசனையாம்!..
பதிலளிநீக்குஆம் வெட்டி பதாகைகளும், வீண் விரையமும்.
நீக்குதாத்தா இதை மட்டுமா சொன்னார்....?
பதிலளிநீக்குஉன்னோட உடம்பைப் பெருக்கப் பிறிதோர் உயிரின் உடலைத் தின்கிறாயே, உனக்கு எங்ஙனம் அருள் உணர்வு பிறக்கும்...?
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் ?
இந்தக் குறளில் தான் ஒருமுறை பயன்படுத்திய இரண்டு எழுத்துகளில் ஓர் எழுத்து வருகிறது... (ங)
நன்றி...
வாங்க ஜி குறளோடு வந்தமைக்கு நன்றிகள் பல!
நீக்குகில்லர்ஜி மனம் வேதனையாகிவிட்டது. இடையில் ஆடு பேசும் வரிகள் நச்! அந்தக் குட்டிப்பையனுக்கு இருக்கும் கருணை...இதம்.
பதிலளிநீக்குஎத்தனை மூட நம்பிக்கைகள்....சாமி எதுவும் கேட்பதில்லை. எல்லாம் மனுஷங்க செய்யறதுதான்..சாமி பேரைச் சொல்லி வெட்டுவது எல்லாம்.
கீதா
ஆம் சட்டங்கள் எல்லாமே மனிதன் வகுத்ததுதான்.
நீக்குசைவம் படமும் நினைவுக்கு வந்தது. அதில் அந்தச் சிறுமி ...
பதிலளிநீக்குகீதா
அப்படியா நன்றி
நீக்குகோழிகளைக் கூண்டில் அடைத்து வைத்திருப்பாங்க கடைக்கு முன்....அது போல ஆடுகளை....அதைப் பார்த்தால் என் மனம் ரொம்ப வேதனையாகிவிடும்..அதன் பின் ரொம்ப நேரம் என்னால் எதுவும் செய்ய முடியாது. அதனாலேயெ அந்தப் பக்கம் பார்ப்பதையோ...போவதையோ தவிர்த்துவிடுவதுண்டு
பதிலளிநீக்குகீதா
ஆம் ஸ்ரீராம்ஜி அவர்களும் சொல்லி இருக்கிறார்.
நீக்குமனசே வேதனைப் படுகிறது, பாவம் அந்த ஆட்டுக்கிடா! என்னவோ போங்க. இதை வெட்டினால் தான் ஐயனார் கோவிக்கமாட்டார் போலவே! :( நாங்க ஆட்டுக்குட்டி, கன்னுக்குட்டி, பசு, கோழி என மாரியம்மன் கோயிலுக்கு என நேர்ந்து கொண்டு வாங்கிக் கொடுப்போம். அவங்க பராமரிப்பிலே அவை இருக்கும். அவற்றின் பாலைக் கோயிலுக்குப் பயன்படுத்திப்பாங்க. கோழிமுட்டை விற்பனைப் பணம் கோயிலுக்குச் செலவு செய்வாங்க. வெட்டுவதில்லை. எங்க பையருக்கு நேர்ந்து கொண்டு கூட ஆட்டுக்குட்டி வாங்கிக் கொடுத்திருக்கோம்.
பதிலளிநீக்குவருக சகோ
நீக்குதங்களது அனுபவத்தையும், கருத்தையும் விரிவாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
கதம்... கதம்.... எல்லாமே முடிஞ்சிடுச்சா?!!...
பதிலளிநீக்குகீழே வாழை இலையில இருக்கிற வகையறாக்களைப் பார்த்தா... அங்கு மரத்தில் கட்டி இருக்கிற கிடா இங்கு இலைக்கு வந்து விட்டது போல இருக்குதே!....
ம்... ம்ம்... என்ன திறமையிருந்து என்னத்துக்கு.... காட்டுல பிறந்திருந்தா கூட ஓடி தப்பிச்சிருக்கும்... இங்க நாட்டுல பிறந்ததால அற்ப ஆயுசுலேயே "அய்யோ"...ன்னு போகுது....
அடுத்த பிறவியிலேயாவது "அமேசான்" காட்டில் பிறக்கட்டும் என பிராத்திப்போம்...
இப்போதைக்கு அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம்....
வருக நண்பரே
நீக்குஆட்டுக்கு நல்லவிதி கிடையாது போலும்...
அமேசான் காட்டில் பிறந்தாலும் ரெக்கவரி சேனல்களில் வரும்தான்....
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை ஆனால், இதை இன்று மன வருத்தத்துடன் சொல்லி கொள்கிறேன். அந்த ஆட்டின் நிலைமையும், அது பேசுவது போல் அமைந்த வரிகளை நினைத்தும் மனம் மிக வருந்தியது. அந்தச் சிறு குழந்தைக்கு தோன்றும் எண்ணம் கூடவா அநதப் பெரியவர்களுக்கு தோன்ற வில்லை. இறைவன் இத்தகைய பலியை கேட்கிறானா ? எனக்கு சைவம் படந்தான் நினைவுக்கு வந்தது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குதங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
"சைவம்" என்று ஓர் திரைப்படம் இருப்பதை தாங்கள் இருவரும் சொல்லித்தான் அறிகிறேன்.
பதிவு மிக அருமை.
பதிலளிநீக்குசெஞ்சடையின் இளகிய உள்ளம் மனதை தொட்டது.
இளைய சமுதாயத்திற்கு இந்த உணர்வு வந்து விட்டால் உயிர்கள் பிழைக்கும்.
சைவம் படத்தில் அய்யனாருக்கு சேவல் வேண்டி விடுவதை பெண் குழந்தை காப்பாற்றி விடும். பாடல்கள், படம் உங்களுக்கு பிடிக்கும் பாருங்கள்.
வருக சகோ பதிவை ரசித்து படித்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குபடம் பார்க்கிறேன்.
எனக்கு தெரிந்த அருமையான ஒருவர் மருத்துவர் அவர்கள் தீராத நோய்கெல்லாம்(நீரிழுவு , ஆஸ்த்மா போன்றவை) நிரந்தர தீர்வு அளிப்பவர். அவரிடம் நாம் சிகிச்சை மேற்கொள்ளும் போது சைவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை விதிப்பார் மருந்து நன்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்காக. உங்கள் பதிவு படித்தால் அவரே நினைவுக்கு வருகிறார். இன்று அவர் நம்மிடையே இல்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
பதிலளிநீக்குஅவர் ஆங்கில மருத்துவர் அல்ல. சித்த மருத்துவர்.
நீக்குவருக நண்பரே
நீக்குதங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
மனதை தொட்டது பகிர்வு.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஊனுணவு தவிர்க்கப்பட வேண்டியதுதான். கோழியிடம் முட்டையை எப்படி வரவழைக்கறாங்கன்னு நாமக்கல்ல பார்த்தால், நிறைய பால் கிடைக்க என்னவெல்லாம் தகிடுதத்தம் செய்து மாட்டின் மடியை அளவுக்கு அதிகமா பெருக்க வைக்கறாங்க, மக்களின் பிரியாணி ஆசைக்காக, குறைந்த விலையில் கொடுக்க நாய் கெட்டுப்போன மாமிசம்லாம் கலப்படம் பண்ணுவதை நினைத்தால்... அப்புறம் என்னத்தைச் சாப்பிடுவாங்க? புல்லையா?
பதிலளிநீக்குவருக தமிழரே
நீக்குஇனி உணவகத்தில் அசைவம் சாப்பிடுவது யோசிக்க வேண்டிய விஷயம்.
அருமை பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு