தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 04, 2023

பழைய பண்டாரம் போதும்

 
ணக்கம் நட்பூக்களே... டிஜிடல் இந்தியா, கிரீன் சிட்டி, கிளீன் சிட்டி, மற்றும் புதிய இந்தியா என்று பொருத்தமில்லாத வார்த்தைகளை நமது தலைவர்கள் அறிமுகப்படுத்துகின்றார்கள். நமக்கு அந்த பழைய பண்டார இந்தியாவை கொடுத்தால் போதும் அதில்தான் இரண்டு ரூபாய் இருந்தால் ரசம் வைத்து சாப்பிட்டு முடித்து விடலாம். இந்த இலவு வார்த்தைகளை கேட்டு நெஞ்சு வலிக்குது வேண்டாம் சாமிகளா...
 
உங்களால் முடியாவிட்டால் நம்ம சிவசம்போ போன்றவர்களிடம் கொடுத்து விட்டு ஒதுங்குங்கள். எங்களுக்கு  கிலோ அரிசி மூன்று ரூபாய்க்கு கிடைச்சதே... அந்த பழைய இந்தியாவே போதும். மேலே உள்ள புகைப்படங்களை பார்த்தீர்களா ? இந்த இடம் தமிழகத்தின் ஓர் மாநகராட்சிகளில் ஒன்று இந்த இடத்தின் பெயரை இறுதியில் சொல்கிறேன். இப்பொழுது சொன்னால் சிரிப்பு வந்தாலும் வரும்.

 
ஒரு நாட்டை அரசு மட்டும் நினைத்தால் தூய்மையாக வைத்துக் கொள்ள முடியாது மக்களும் நினைக்க வேண்டும். அது நமது செல்லிலே கிடையாதே.. வேண்டுமானால் செல்போனில் தேடலாம். சராசரியாக நாம் நமது இடத்துக்குள் வீடு கட்டி அதனுடைய கழிவுநீரை சரியாக போவது போல செய்கிறோமா ? இல்லையே... கொண்டு வந்து வாசலில் நிறுத்தி எங்கிட்டோ போகட்டும் என்று தள்ளி விடுகிறோம். அரசு சாலையை சரி செய்து விட்டு அது கடந்து போகிறது இரண்டுக்கும் இடையே உள்ள நடைபாதையை சரி செய்வது யார் ?
 
சாலை போடுபவன் பழைய சாலையை சுரண்டி விட்டுதான் அதன் மேல் போடவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஒப்பந்தம் எடுப்பவர்கள் யார் ? ஆளுங்கட்சி பிரமுகர் அவரை கேள்வி கேட்க முடியுமா ? சுரண்டினால் பணம் செலவு ஆகும் நேரமும் அதிகமாகும் இதனால் சாலையின் மேலேயே சாலை போட்டு உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள் கேட்டால் நாடு உயர்கிறது என்று சொன்னாலும் சொல்வார்கள்.
 

சுரண்டினால் பொடி எல்லாம் உனது வீட்டுக்குள்தான் வரும், பிறகு உனக்கு ஆஸ்துமா வரும், இரண்டு லட்சம் செலவு ஆகும் உன்னிடம் பணம் இருக்கிறதா ? என்று கேட்பார்கள். நாம் எவ்வளவு செலவு செய்து ஆடம்பரமாக வீடு கட்டினாலும் அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் மழைத்தண்ணீர் வீட்டுக்குள் வந்தே தீரும். சரி கழிவுநீர் போவதற்கு அரசு சில இடங்களில் பத்து அடி ஆழத்திலும், எட்டு அடிக்கும் மேல் அகலத்திலும் ஓடை போலவே கட்டி வைத்து இருக்கின்றார்கள்
 
மழை வந்தால் அதில் நீர் போவது போல... ஆனால் நாம் அதை என்ன செய்கிறோம் ? குப்பைகளை கொட்டுகிறோம். மலை போல சில இடங்களில் குவிந்து நிற்கிறது. திடீரென்று மழை வந்து சாக்கடைகள் அடைத்து விட்டால். உடனே மாநகராட்சி ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்து ஓடையில் குவிந்து இருக்கும் குப்பைகளை தூர்வாரி எடுத்துக் கொண்டு போவதில்லை. என்ன செய்கிறது தெரியுமா ? அந்த இடத்திலேயே கொட்டி வைத்து விட்டு செல்கிறது. இதுதான் காலங்காலமாக நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. மக்கள் இப்படி மடத்தனமாக செய்து விட்டு மத்திய, மாநில அரசு சரியில்லை என்று சொல்வது முறையா ?
 

இனிமேல் எங்கள் மோடியை யாராவது பல்லு மேலே நாக்கு போட்டு பேசுனீங்க...... வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டு என்ன செய்ய ? நாடு சுத்தமாக வேண்டாமா ? அதற்கு முதலில் மக்களின் மனது சுத்தமாகணும். அதற்கு ஏரியல் சர்ப் பவுடர் கரைத்துக் குடிக்கணும். ஆங் சொல்ல மறந்து விட்டேனே இந்த புகைப்படங்கள் எடுத்த இடத்தின் பெயர் என்ன தெரியுமா ? சோலை அழகுபுரம் ஆம் சத்தியமாக...
 
கில்லர்ஜி தேவகோட்டை
 

காணொளி

Share this post with your FRIENDS…

48 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    வீட்டையும் நம் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை என்பதை மக்கள் உணராத வரை மாற்றம் வரப்போவதில்லை. ஊரின் பெயரும் குப்பையும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது..... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் சுத்தம் நமது மக்களுக்கு சுத்தமாக வராது.

      நீக்கு
  2. 'முப்பாட்டன் ராஜராஜன் காலத்தில் இருந்த கடல் எங்கே?'  கேட்டாரய்யா செம கேள்வி...   கடலையே காணாமல் அடிதது விட்டர்களே... லூசு லூசு என்று வசைபாடி,  'என்னால முடியலை ஐயா' என்று மற்ற இருவரும் வெளியேறுவது செம...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி
      இந்த அறிவாளியின் கேள்வி எனக்கும் தேவகோட்டையில் கடல் இருந்திருக்குமோ... என்ற ஐயத்தை கிளப்புகிறது.

      காரணம் இராமேஸ்வரத்திலிருந்து நம்மூரு வழியாகத்தானே வாய்க்கால் போயிருக்கணும்.

      நீக்கு
    2. தஞ்சாவூரும், மதுரையும் எங்க ஊர்.  அங்கே கடல் இல்லை என்று சொல்வதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!  அங்கெல்லாம் கடல் வாங்கி கொடுத்தால் தேவகோட்டைக்கும் கொஞ்சம் தருகிறேன்!

      நீக்கு
    3. //தேவகோட்டைக்கும் கொஞ்சம் தருகிறேன்//

      ஏதோ கைமாத்து பணம் தருவது போல சொல்கிறீர்களே ?

      மோடியுடன் பேசுவோம் ஜி

      நீக்கு
  3. குப்பை போடுவது, குப்பை சேர்ப்பது நம் பிறப்புரிமை.  நம் வீட்டுக்குப்பை பக்கத்த்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் தள்ளுவோம்.  பக்கத்து வீட்டுக்காரன் நைஸாக  நம் பக்கம் திருப்பி விடுவான்..  வெள்ளம் சமயத்தில் இதுபற்றி நான் இட்ட முகநூல் ஸ்டேடஸ்தான் தினமலரில் வெளியானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இது மக்கள் வெளிநாடு சென்றால் சரியாக இருக்கிறார்கள் ஜி

      நீக்கு
    2. ஆமாம் கில்லர்ஜி...அதேதான். சுஜாதா கூட எழுதியிருந்தார் இது பற்றி. அதுவும் பல வருஷங்களுக்கு முன்னமேயே...விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் தாண்டினதுமே நம்ம மக்கள் வேலைய காமிக்கத் தொடங்கிடுவாங்க...4 1/2 மணிநேரம் முன்ன வரை பய பக்தியோட அபராதத்துக்குப் பயந்து குப்பையை தொட்டில போட்டவங்க...(சிங்கப்பூர் - அப்ப 500 $ அபராதம்)

      கீதா

      நீக்கு
    3. வருக எனக்கு அபுதாபியில் தோன்றிய பழக்கம் இன்னும் குப்பையை சரியான இடத்தில் போடுகிறேன்.

      ஆனாலும் பெரும்பாலான இடங்களில் குப்பைத்தொட்டி கிடையாது அப்படியே இருந்தாலும் குட்டி மலையாக நிற்கிறது.

      நீக்கு
  4. கேரளாவின் டிஜிட்டல் மற்றும் மருத்துவக்கழிவுக் குப்பைகளை தமிழகத்தில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.  வெளிநாடுகளின் குப்பைகளை கடலில் ஏற்றி இந்தியாவில் கொட்டுகிறார்கள்.  அதற்கு நம் இந்தியர்களே காசு வாங்கி கொண்டு உடந்தையாக இருக்கிறார்கள்.  குப்பை மேலாண்மை ஒரு உலகளாவிய பிரச்னை.  அதில் பிளாஸ்டிக்கும் மின்சாதனப் பொருட்களும் மருத்துவக்கழிவுகளும் குப்பை அரக்கர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இது வெகுகாலமாக நிகழும் அட்டூழியம் ஜி

      நாட்டுப்பற்று இல்லாத நாதாரிகளால் இந்நிலை.

      நீக்கு
    2. ஹையோ ஸ்ரீராம்....அது ஒரு வேதனை...

      கீதா

      நீக்கு
  5. தெருவை பொது இடங்களை நாறடிக்கும் மக்கள் திருந்தாதவரை அரசு என்ன செய்தாலும் பிரயோசனமில்லை. நீர் நிலைகளில் பழைய துணிகளைப் போடுவது, ஐயப்பன் மாலைகளை வீசி எறிவது, துப்புவது என்று நாம் செய்யாத அக்கிரம்மில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      என்ன பொசுக்கென்று "நாம்" என என்னையும் சேர்த்து விட்டீர்கள் ?

      நீக்கு
    2. வாரணாசியில் உள்ள தெருக்கள் மிக மிகக் குறுகியவை (5-6 அடிகள் இருந்தாலே அதிகம்). அதில் மாடுகள், பைக்குகள் போன்றவையும் செல்லும். அதுல ஒரு வீட்டில் இருந்துகொண்டு தூறல் அடிக்கும் சமயத்தில் சந்தில் துப்புகிறான் ஒருவன். அடுத்த வீட்டுத் திண்ணை வரை அது செல்கிறது. Nasty பழக்கங்கள்

      நீக்கு
    3. அப்படி யாரேனும் செய்யும்போது பொடதியில் ரெண்டு போடாமல் விட்டிருக்கோம் இல்லையா (நமக்கெதுக்கு வம்புன்னு). அப்போ நாமும் அதுக்குத் துணை போயிருக்கோம்னுதான் அர்த்தம். கழுத்தைப் பிடித்து நாலு கேள்வி கேட்டு விரட்டியிருந்தால், இப்படியெல்லாம் அநியாயம் நடக்குமா?

      நீக்கு
    4. தமிழரே நீங்கள் பல திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள் ஒரு பெண்ணை வில்லன்களின் அடியாட்கள் பத்து நபர்கள் மானங்கபடுத்துவார்கள்

      இவர்களை. சுற்றி இருநூறு பேருக்கும் மேல் தலையை குணிந்து நின்று பார்க்கணும்.

      இப்படித்தான் இந்த சமூகத்தை கோழைகளாக சித்தரிக்கின்றனர்.

      இந்த கலாச்சார கொலையாளிகளை முதலில் தூக்கிலிட வேண்டும்.

      நீக்கு
  6. சமூக அவலத்தை படங்களுடன் சொல்லி இருக்கிறீர்கள்.
    "சோலை அழகு புரம்" ஊர் பேர் மிக அழகு. ஆனால் ஊரின் பேரை கெடுப்பது போல
    குப்பை மலைபோல் குமிந்து இருக்கிறது.
    நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்.
    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  7. கில்லர்ஜி தினமும் நான் புலம்புவது...இங்க நடக்கறப்ப....இங்கு வந்து பாருங்க ....பெங்களூரு இருக்க நிலை...இங்க மட்டுமில்ல இந்தியா முழுசுமே இப்படித்தான்..

    நம்ம மக்கள் திருந்தாத வரை எதுவும் ஒரு சுக்கும் பிரயோசனமில்ல....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் திருத்துவதற்கு இன்னும் இரண்டு தலைமுறைகள் மறையணும் .

      காரணம் இன்றைய பழமைவாதிகள் உனக்கு நமது முன்னோர்கள் கற்றுத் தரவில்லை.

      ஆகவே நாம்தான் அடுத்த தலைமுறைக்கு பழகி கொடுக்க வேண்டும்.

      நீக்கு
  8. மக்கள் ஒரு புறம். மற்றொருபுறம் மேம்பாலம் கட்டுகோம், மழை நீர்க்கால்வாய் வெட்டுகோம், சாக்கடை சுத்தம் செய்கோம்னிட்டு அத்தனையும் குவிஞ்சு கிடக்கு. மேம்பாலம் அடில இருக்கற கல்லு குப்பை, மண்ணு குப்பை....அத்தனை தூசியும் நம்ம உடம்புக்குள்ளதான்....

    முதல்ல சொல்லிருக்கீங்க பாருங்க க்ரீன் சிட்டி....க்ளீன் சிட்டி....அந்த வரிகளின் நையாண்டியை ரசித்தேன்.

    மாநகராட்சிக்காரங்க அது ஒரு வேதனை....என்னவோ போங்க...மொத்தத்துல எதுலயும் சுத்தமில்லை. ரோட்டுலயும் இல்லை, தெருவிலும் இல்ல....சொத்து, பணத்துலயும் இல்ல...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் மக்களுக்கு நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்ய தெரியவில்லை.

      நமது வளர்ச்சியின் தொடக்கம் இங்குதான் தேங்கி நிற்கிறது.

      நீக்கு
  9. காணொளி - உருப்பட்டாப்லதான்!!

    சரி இந்த மூணுபேரும் யாருங்க? அதுலயும் அந்த நீலச்சட்டைக்காரர் கத்துறாரே அவர் யாருங்க?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் இருவர் அரசியல் விமர்சகர்கள்.

      அந்த நீலகிரி, நீலச்சட்டை நீலமேகம் நா.த.க.காரர்.

      நீக்கு
  10. எங்கும் இப்படித்தான்... வேதனை...

    நம்ம வெங்கோலன் இதில் கில்லாடி - இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக இந்தியாவை விற்பனை செய்து விடுவார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      வாங்குவது அம்பானியும், அதானியும் கூட்டணியாக இருக்கும்.

      நீக்கு
    2. உலகின் சிறந்த பிரதமராகப் பல நாடுகளும் தேர்ந்தெடுத்திருப்பது மோதி அவர்களைத் தான். பிரிட்டிஷ் பிரதமர் 10 ஆம் இடத்திலும் அம்பேரிக்க அதிபர் எட்டாம் இடத்திலும் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் தெரிந்தது நமக்குத் தெரியாமல் வெறுப்பும், ஆத்திரமும் நம் கண்களை மறைக்கிறது. அதோடு அம்பானியும்/அதானியும் மட்டும் கார்ப்பரேட் இல்லை. டாட்டா, பிர்லா, கோத்ரெஜ், பஜாஜ், என்று இந்தியத் தொழிலதிபர்கள் பலரும், யூனிலீவர், போன்ற சர்வதேசக் கம்பெனிகளும் கூடக் கார்ப்பொரேட் தான். நாம் பல் தேய்ப்பது நம்ம ஊர் கோபால் பல்பொடியில் இல்லை.துணி துவைப்பது நம்ம ஊர் அரசன் சோப்பில் இல்லை. போடும் ஜீன்ஸ், ஷர்ட் எல்லாமே வெளிநாட்டுத் தயாரிப்பு. எல்லோருமேவா ராம்ராஜ் காட்டன் கட்டுகிறார்கள்? இது வரையிலும் இந்தப் பத்தாண்டுகளில்இந்தியாவின் எந்தப்பகுதி விற்கப்பட்டிருக்கிறது என்பதைச் சரியான ஆதாரங்களுடன் சொன்னால் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  11. படிக்கையில் வேதனையாக தான் இருக்கிறது நண்பரே. அப்புறம் ஊர் பெயர் பொருத்தமாக தான் இருக்கும் போல..................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஆம் ஊனமானவனுக்கு 'நடராஜா'னு பெயர் வைத்தது போல...

      நீக்கு
  12. காணொளி சூப்பர். அவர் கேள்வியும் நியாயம்தானே... தஞ்சாவூரை ஆண்ட ராஜராஜ சோழன் மிகப் பெரும் கப்பல் படை வைத்திருந்தான் என்றால், அப்போ தஞ்சாவூரில் கடல் இருந்திருக்கணும் இல்லையா? என்ன சொல்றீங்க. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சந்தடி சாக்கில் உங்களது இருக்கும் ஒரு கடல் பார்சேல்ல்ல்...
      என்று கேட்பீர்களோ ?

      நீக்கு
  13. ஹிஹிஹி! ராஜராஜ சோழன் திரும்பி வந்து கடலைக் கொண்டு வந்து தந்தால் தான் உண்டு. பார்க்கவும்/கேட்கவும் சிரிப்பு வந்தாலும் உள்ளூர இன்றைய இளைஞர்களின் பொது அறிவைக் கண்டு வயிறு எரிகிறது. இதில் எல்லோரும் பாஸ் என்று வேறே சொல்லிடுவாங்க! :( மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிடுமோனு பயப்படறாங்க போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் பொது அறிவை நினைந்து வேதனைப்படத்தான் முடிகிறது.

      நீக்கு
  14. வீட்டையும் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வது .. அப்படியொரு காலம் வரப்போவதில்லை..

    வீணாக தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நமது தூக்கம்தான் இழப்பாகிறது.

      நீக்கு
  15. அந்தக் கிறுக்கனிடம் சொல்லுங்க..

    தஞ்சா ஊர்ல பெரிய ஆனப் படையும் தான் இருந்திச்சு.. ஆன அம்புட்டையும் புடிச்சி அவிச்சுத் துன்னுப்புட்டானுவோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மைதான் இப்படியும் சொல்வார்கள்.

      நீக்கு
  16. க்ரீன் சிட்டி..
    க்ளீன் சிட்டி..

    க்ரீனும் கிளீன்..
    சிட்டியும் கிளீன்!..

    புளிய மரத்தை எல்லாம் வெட்டிட்டு
    அரளிச் செடிய வெக்கிறானுவோ!..

    அரைச்சு தின்னுங்கடா..ன்னு!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அரளிச்செடியை எவனும் தொடமாட்டான் .

      புளியம்பழத்தை புடுங்கி வித்து பணக்காரனாக விடுவானே... விடலாமா ?

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    அருமையான சிந்தனை பதிவு மக்கள்தாம் மனதளவில் திருந்த வேண்டும். ஆனால், எல்லோருமே சுயநலவாதிகள். யார் எப்படி போனால் என்ன.. நம் வீடு சுத்தமாக இருக்க முயற்சி செய்தால் போதும் என நினைக்கும் மக்களால்தான் வீடும், நாடும் சுத்தமின்றி போகிறது. பதிவையும், கருத்துரைகளையும் ஆழமாக படித்தேன். மன வேதனைதான் அதிகமாகிறது. அதனால்தான் இயற்கையும் கோபமுற்று, அவ்வப்போது தன் சீற்றத்தால் பதில் அளித்து விட்டுச் செல்கிறது. போலும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் மக்கள் நினைத்தால்தான் மாற்றம் வரும்.

      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  18. "சோலை அழகுபுரம்" பெயர் அழகாக உள்ளது. ஆனால் அது எந்த மாவட்டத்தில் உள்ளது என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்களே? சொன்னீர்கள் என்றால் "சோலை அழுக்குபுரம்" என்று பெயர் மாற்ற பரிந்துரை செய்வதற்கு எங்களுக்கு வசதியாக இருக்குமே?!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      எல்லாம் தமிழ் வளர்த்த மதுரை உள்ளேயேதான்.

      நீக்கு