தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, செப்டம்பர் 10, 2023

வத்திக்குச்சி

ணக்கம் வத்திக்குச்சியண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடா வடக்கு வாயா நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கே ?
 
நல்லாயிருக்கேன் கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு கேட்கலாம்னு வந்தேன்ணே...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
 
கடல் நீர் முழுவதும் வற்றிப்போனால் என்னாகும்ணே ?
ரியல் எஸ்டேட் வியாபாரம் நல்லா இருக்கும்டா...
 
அப்படீனாக்கா... மீனெல்லாம் எங்கே போகும்ணே ?
கடல் நீர் எங்கே போச்சோ, அங்கேயே போயிடும்டா...
 
சூரியன் உதிக்காம இருந்தால் என்னாகும்ணே ?
எவனும் எந்திரிக்க மாட்டான் கும்பகர்ணன் மாதிரி தூங்குவாங்கடா...
 
அப்படீனாக்கா... திருடங்களுக்கு வசதியாக போயிடுமேணே... ?
போகட்டுமே... நாமதான் எந்திரிச்சு புகார் கொடுக்கப் போறதில்லையே...
 
மழை பெய்யாமல் இருந்தால் என்னாகும்ணே ?
குடை வியாபாரம் படுத்துரும்டா...
 
அப்படீனாக்கா... அவுங்களுக்கு தொழிலு ?
பாய் வியாபாரம் பார்ப்பாங்கடா
 

காடுகள் எல்லாம் திடீர்னு காணாமல் போனால் என்னாகும்ணே ?
மிருகங்கள் எல்லாம் முதல்ல உன்னைத்தேடி வந்து திங்கும்டா...
 
நான் துப்பாக்கி வச்சு சுட்டுருவேன்ணே... ?
நீதான் சூரியன் உதிக்காததால் தூங்கிட்டு இருப்பியே.. அப்ப மிருகம் ஈசியா உன்னை தின்னுட்டு போயிடும்டா....
 
எதுக்குணே இந்த கொலவெறி ?
ஏண்டா கேள்வியா கேட்கிறே... கேள்வி. ங்கொய்யாலே இவ்வளவு நேரம் பதில் சொன்னதுக்கு ஜவான் டீக்கடையில் ரெண்டு வடை, டீக்கு டோக்கன் போட்டுப்போ.. நான் பசிக்கும்போது வாங்கி சாப்பிட்டுக்கிறேன். ம்... அடுத்த ஆளு யாருப்பா ? மதியச் சாப்பாட்டுக்கு வழி செய்யணும்.
? ? ?
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
வத்திக்குச்சியை பத்தவச்சிட்டியடா... வடக்குவாயா...

Share this post with your FRIENDS…

34 கருத்துகள்:

 1. எப்படீல்லாம் சந்தேகம் வருது? கொஞ்சம் கொஞ்சமாக நாம் காட்டை அழித்து நாடாக்குவோம். மிருகங்கள் எண்ணிக்கை குறைந்து விலங்கியல் பூங்காவில் வைத்துப் பாதுகாப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   ஆம் இதுதான் முடிவில் நிகழும்...

   நீக்கு
 2. கவுண்டமணி, செந்தில் குரலில் கேள்விகள் , பதில்கள் காதில் ஒலித்தது.
  காடுகள் குறைந்து இப்போது விலங்குகள் நாட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.
  அவைகளுக்கு உள்ள இடத்தை விட்டு வைக்கலாம்.

  கடல் நீர் வற்றி போனால் என்ன நடக்கும் என்ற கேள்வியும் பதிலும் உண்மையை சொல்கிறது. நல்ல விளை நிலங்களை வீட்டு மனை ஆக்கியாச்சு, அடுத்து கடலையும் வீட்டு மனையா? ஆண்டவா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   இன்றைய நிலைப்பாடு இப்படித்தான் இருக்கிறது.

   மனிதன் பணத்தின் மீதுள்ள ஆசையால் மனிதநேயத்தை மறந்து செல்கிறான்.

   நீக்கு
 3. சூரியன் இல்லைனா உலகமே/பூமியே இல்லையே அதுவும் செவ்வாய் ப்ளூட்டோ போல இருக்கும் வேற கிரகங்கள்ல உயிர்கள் இருந்து இதுக்கு ராக்கெட் விண்கலம் அனுப்பி வேவு பார்த்துருப்பாங்க!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக விஞ்ஞான உண்மையை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 4. உண்மையிலேயே வடக்கு வாயன்களுக்கு இவ்வளவு தான் ஞானம் இருக்கு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி உண்மைதான்.
   தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. மழை பெய்யாம இருந்தா தண்ணி லாரி பிஸினஸ் அமோகமாகுமே கில்லர்ஜி!! ரேஷனாகிடும்.

  ஹாஹாஹா இப்படியும் டீ போண்டோக்கு வழி இருக்கா...நல்லாருக்கே!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஆம் தண்ணீர் வியாபாரம் தமிழ்நாட்டில் ஃபேமஸ்தானே...

   நீக்கு
 6. கடல் வற்றினால் உலகமே போயிடும். அது போல காடுகள் போச்சுனா எல்லாம் உள்ளார வந்துரும் நியாயம்தானே!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது உண்மைதான்...

   நீக்கு
 7. கில்லெர்ஜீ தலையில் முடி முளைச்சா என்னாகும் அண்ணே?
  பார்பர் ஷாப்புக்கு மாசம் 150 ரூபாய் கிடைக்கும்
  அப்படீன்னா முடியும் நஷ்டம் காசும் நஷ்டம் தானே அண்ணே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா
   150 ரூபாய் மாதம் செலவு ஆனாலும் 300 ரூபாய்க்கு சோக்லேட் கம்பெனிக்கு விற்று விடலாமே....

   நீக்கு
 8. எல்லாம் நடக்கக் கூடும் எதிர்காலத்தில்...  ரசி(ரி)த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ரசித்து சிரித்தமைக்கு நன்றி

   நீக்கு
 9. கற்பனை வளம் கடல் தாண்டி, கங்கை ஜமுனை எல்லாம் தாண்டி ஓடுது:).. நல்ல கற்பனைதான்...

  அந்த ரீ ஆத்துவதைப் பார்த்ததும் எனக்கும் இப்போ ரீ குடிக்கோணும்போல வருதே கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா பதிவை பாராட்டியமைக்கு நன்றி.
   நம்ம பெயரைச் சொல்லி ஒரு சுலைமாணி குடிச்சு கோங்கோ.. .

   நீக்கு
  2. ஏன் கில்லர்ஜி உங்கட பேரைக் கேட்டால் பிரீயாத் தருவினமோ?:)

   நீக்கு
  3. இல்லை ரூபாய்க்கு பதில் டோலர் கேட்பார்கள்.

   நீக்கு
 10. ஸ்ரீ சிவசம்போ அங்கிள் எதுக்கு வடக்குவாயா எனத் திட்டுறார்:), இனிமேல் கிழக்குவாயா எனத் திட்டச் சொல்லுங்கோ:) எல்லாம் ஒரு சேஞ் க்காகத்தான் ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி எல்லாம் பெயரை மாற்றி சொல்லாதீங்கோ... தெய்வகுத்தமாகி விடும்.

   நீக்கு
  2. நீங்க மட்டும் வத்திக்குச்சி எனத் திட்டுறீங்களே இது அடுக்குமோ?, இது ஞாயமோ?:)..

   நீக்கு
  3. ஹலோ வத்திக்குச்சி என்பது அவனது சொந்தப் பெயர்தான்.

   நீக்கு
  4. ஆஆஆ ஜொந்தப்பெயரும் ந்ல்லாத்தான் இருக்குது நடக்கட்டும் நடக்கட்டும்:)

   நீக்கு
  5. கொலைதெய்வத்து பெயர்தான் .

   நீக்கு
 11. கேள்வி பதில் மூலம் பல நடப்பு நிலவரங்களும் நகைச்சுவையாக வெளிப்படுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. இன்றைய நிலைப்பாடு இதுதான்..

  இனிமேல் இப்படித்தான் இதுக்கும் கீழாகத்தான்!..

  சிறப்பான பதிவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 13. நல்லா இருக்கே கேள்வியும், பதிலும். கடைசியில் சாப்பாட்டுக்கும் ஆளைத் தேடிச் சென்றது அருமை.

  பதிலளிநீக்கு