தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 14, 2023

நீலகிரி, நீட்தேர்வு நீலாவதி


நீட் தேர்வு எழுத நீட்டாக உடை அணிந்து சென்ற மாணாக்கர்களை குறிப்பாக பெண்களை இப்படி தலைவிரி கோலமாக அலங்கோலப்படுத்தி உள்ளே அனுப்புகின்றார்கள். தேர்வு நேரலை காணொளியில்தான் நிகழ்கிறது மேலும் ஆசிரியர்கள் குழுவும் சுழன்று வருகிறது அதன் மத்தியில் தேர்வு எழுதுபவர்கள் தவறு செய்து விடமுடியுமா ? அரபு நாடுகளிலும் தேர்வு நிகழத்தான் செய்கிறது அங்கு பெண்களை முக்காடு போடக்கூடாது என்று சொல்ல முடியுமா ?

இவையெல்லாம் ஒன்றை நோக்கமாக வைத்து மதப்பிரச்சனையை வளர்ப்பதற்கு கொண்டு வரும் கேவலமான யூகங்கள் இதை மக்கள் முதலில் உணரவேண்டும். அரசியல்வாதிகளின் அடிவருடிகள் தலைவன் என்ன செய்தாலும் அதில் தவறு காணும் நோக்கில் வாழமாட்டான். காரணம் அவனால் இந்த சமூகத்தில் தனியாக சென்று உழைத்து வாழமுடியாது. ஆள் பலசாலியாக இருக்கின்றான் என்பது அரசியல்வாதிகளின் பயன்பாட்டுக்கு கலவரங்களை தூண்டுவதற்கு மட்டும்தான்.


ஆனால் சராசரி மக்களுக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறதே... ஆம் மருத்துவம் படிப்பதற்கு யாருமே முன்வரவில்லை எனில் இந்த அரசு என்ன செய்யும் ? இது நடவாத காரியம்தான். பக்கத்து நாடான இலங்கையின் இன்றைய நிலைப்பாட்டை கண்டும் காணாதது போல் நாம் வாழக்கூடாது. அதில் பாடம் கற்க வேண்டும். விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது இதனை தட்டிக் கேட்கும் வழிமுறைகளை மக்கள் மக்களுடன் கலந்து ஆலோசிப்பதில்லை. அதேநேரம் அரசியல்வாதிகள் ஏதாவது மதப்பிரச்சனையை கிளப்பி விட்டால் பற்றிக்கொண்டு அடித்துக் கொள்ல்வது.

முன்பொரு நிகழ்வு நெதர்லாந்து என்று நினைவு சரியாக ஞாபகம் இல்லை மன்னிக்கவும். எரிபொருளின் விலையை லிட்டருக்கு அந்த நாட்டின் பணத்தில் ஐம்பது காசுகள் உயர்த்தி இருக்கிறார்கள். மக்கள் யாரிடம் எப்படி கலந்து பேசினார்கள் ? என்பது எனக்கு இன்னும் புலப்படவில்லை ஒருவேளை இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் உதவியால் புலனம் வழியாககூட இருக்கலாம். மறுதினம் மக்கள் அனைவரும் நாடு முழுவதும் சாலையில் சென்றவர்கள் அப்படியே வாகனங்களை நிறுத்தி விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் அரசுக்கு மக்கள் சொல்வது என்ன ?

எனக்கு வாகனம் வேண்டாம் நீயே எடுத்துக்கொள். நீ எரிபொருளை எப்படி விற்கிறாய் என்று பார்க்கிறேன் ? சலனமில்லாத. கல்லெறியாத, வசைபாடாத, கோஷம் போடாத, தீ வைக்காத, வெடிகுண்டு வீசாத, சத்தமில்லாத யுத்தம். காவல்துறையால் என்ன செய்ய முடியும் ? அபராதம் விதிக்க முடியுமா ? எத்தனை நபருக்கு ? எனக்கு வாகனமே வேண்டாம் என்றபோது... இவைகளை தூக்கிக்கொண்டு போய் எங்கு வைப்பாய் ? ஏற்கனவே வாகன நிறுவனங்களில் புதியது நிறைந்து நிற்கிறதே... அவர்களின் எதிர்காலம் ?


அரசின் அவசரகால கூட்டம் அடுத்த நான்கு மணிநேரத்தில் அரசின் அறிவிப்பு இனி எப்பொழுதும் விலை உயராது. உத்திரவாதமான அறிக்கை. மீண்டும் மக்கள் வாகனங்களை எடுத்து சாலைகளை காலி செய்திட இருபத்து நான்கு மணிநேரத்திற்கும் மேலாக காலம் தேவைப்பட்டு இருக்கிறது. மக்களின் வாழ்வு நிகழ்வுக்கு வருகிறது. இந்த அரசை நல்ல அரசு என்றுதானே பாராட்ட வேண்டும் ? சரி அவர்களுக்கு இந்த புத்தியை கொடுத்தது மக்கள்தானே ? அவர்களும் புத்திசாலிகள்தானே... 

நாமும் இவர்களைப் போல் அறப்போர் புரிவது எப்போது ? காந்தி பிறந்த மண் என்று சொன்னால் மட்டும் போதுமா ? இதை நிரூபிக்க வேண்டியவர்கள் நாமல்லவா ? மாற்றம் தேவை அது நமக்கல்ல நமது சந்ததிகளின் எதிர்கால நல் வாழ்வுக்காக... இனியெனும் சிந்திக்க முயல்வோம்.

கில்லர்ஜி தேவகோட்டை

சிவாதாமஸ்அலி-
எவனுமே குடிக்கவில்லை என்றால் டாஸ்மாக் கடையை தானாகவே தமிழக அரசு மூடிடும் இது மக்களுக்கு குடிகார மக்களுக்கு தெளியாதா... இல்லை புரியாதா ?

Share this post with your FRIENDS…

24 கருத்துகள்:

  1. இன்னொரு யூரோப்பியன் தேசத்தில் அரசு, ஒவ்வொருவருக்கும் மாதம் இவ்வளவு பண உதவி செய்யவா என்று பெரிய தொகை ஒன்றைச் சொன்னபோது அனைவரும், இலவசமாக எதுவும் வேண்டாம் என்று சொன்னதை விட்டுவிட்டீர்களே.... மக்களுக்கு இலவசம் கொடுத்து வாக்கு வாங்கி ஆட்சிக்கு வந்ததும் பல்லாயிரம் கோடிகள் ஊழல் பண்ணுவதும் எப்போது நிற்குமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      ஆம் அது நமது இந்தியர்கள் யணத்தை வெட்டியாக கொட்டி வைத்து இருக்கும் ஸ்விட்சர்லாந்து நாடுதான்.

      முன்பு இதனை குறித்து பதிவு எழுதினேன் நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  2. வரும் தேர்தல்களில் இலவசம் வாங்க மாட்டேன். இலவசங்கள் வழங்கும் கட்சிக்கு எங்கள் வாக்கு கிடையாது என்று மக்கள் சொல்லும் நிலை வரவேண்டும். நெதர்லாந்து (?) மக்கள் போல அனைவரும் ஒன்றுபட வேண்டும். இலவசங்கள் வழங்குவதை எதிர்க்க வேண்டும்.. நடக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி நமக்கு அவ்வளவு தெளிவு இருந்தால் நல்லதுதான்...

      நீக்கு
  3. சும்மா கிடைத்தால் சுண்ணாம்பையும் தின்கின்ற மக்கள் இருக்கும் வரைக்கும் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நொந்து சாக வேண்டியதுதான்....

      நீக்கு
    2. //சும்மா கிடைத்தால் சுண்ணாம்பையும் தின்கின்ற மக்கள்//... ஆஹா.. நல்ல கற்பனை...

      நீக்கு
  4. சும்மா கிடைக்குதா கம்பளி!..

    ஆமா....

    அப்போ எனக்கு ஒன்னு.. எங்கப்பனுக்கு ஒன்னு..
    எடுத்து வைடா ஏகாம்பரம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி ஏகாம்பரத்திடம் எனது பெயரையும் சொல்லி வையுங்கள்.

      நீக்கு
  5. அறப்போர் வியக்க வைக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. காந்தி பிறந்த மண் தான்...

    ஆனால் ஒரே ஒரு கோட்சே மாமி, தமிழ் நாட்டில் வசித்துக் கொண்டு, செய்யும் பித்தலாட்டங்களுக்கு அளவே இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. யார் அந்த கோட்சே மாமி??...

      நீக்கு
  7. அந்தக் பெட்ரோல் போராட்டம் - நெதர்லாந்து என்று நினைக்கிறேன். நம்ம மக்கள் அப்பவும் கூட இலவசத்துக்கு நிப்பாங்க. இலவசம் ஒழியும் நாளில், ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் மக்கள் திருந்தாதவரை விடிவுகாலத்திற்கு சாத்தியமில்லை. டாஸ்மாக் என்ன விலை கூடினாலும் மக்கள் அப்பவும் வாங்கிக் குடிப்பாங்க அது ஒழியும் வரை விடிவுகாலம் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  8. நெதர்லாந்து அறப்போர் பகிர்வு அருமை. மக்களிடம் மன உறுதியும் ஒற்றுமையும் இருந்தது. இங்கு சொல்ல வேண்டாம். என்ன சொல்ல!
    நம்மை போனறவர்கள் புலம்பி கொள்ள மட்டுமே முடியும்.

    பதிலளிநீக்கு
  9. ஆஆஆ கில்லர்ஜி கொதிச்சுப் போயிருக்கிறீங்கள், தேவை இல்லாமல் உங்கட பிபி யை ஏத்துவதுதான் மிச்சமாகப்போகுது. முதலில் மக்களிடம் ஒற்றுமை இருந்தால்தான் எதையும் ஒழிக்க முடியும், இது தான் தப்பினால் போதும் எனும் மனநிலைதானே இன்றைய மக்களிடம் உள்ளது.

    இந்த பார்த்துப் பார்த்துப் பரீட்சை எழுதுவது அதிகமாக அங்குதான் அறிகிறேன், வெளிநாட்டில் உப்படி அறிந்ததில்லை, ஏன் இலங்கையில்கூட நான் அறிஞ்சதில்லை, பார்த்து எழுதுவதென்பது எனக்குத் தெரிஞ்சு இல்லை. அங்கு எப்படி ஆரம்பமாகியதெனத் தெரியவில்லையே, சட்டங்கள் அதிகமாக்கினால் அனைத்தும் குறையும் என நினைக்கிறேன்.

    பிடிபட்டாலும் பணம் கட்டித்தப்பி விடலாம் எனும் மனநிலை இருப்பதால்தான் இப்படி, கொலை, கற்பழிப்பு, சோதனையில் கொப்பியடித்தல் என்பன அதிகமாக இருக்குதுபோலும். சட்டம் அதிகமாக, நேர்மையாக கொண்டுவரப்பட்டால் எல்லாம் நேராகிடும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா
      இந்தியாவில் சட்டத்தினை கடுமையாக்க ஆம் சாத்தியம் குறைவு.

      காரணம் மக்களுக்கு அரசியல் தெளிவு கிடையாது.

      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  10. வழக்கம் போல் சமூக அக்கறையுடன் நண்பர் எழுதியுள்ள பதிவு. ஜப்பானில் (என்று நினைவு) ஒரு முறை பேருந்து ஓட்டுனர்களும்,நடத்துனர்களும் பயணசீட்டு யாருக்கும் தராமல் மக்களை இலவசமாய் பயணிக்கச் செய்தார்கள், தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க . அதுவே நினைவிற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  11. பொதுவாகவே நெதர்லாந்தில் பெட்ரோலில் பயன்பாடு குறைவு எனவும் மக்கள் அதிகம் இரு சக்கர சைக்கிள்களையே பயன்படுத்துவார்கள் எனவும் அடிக்கடி வேலை நிமித்தமாக அங்கே செல்லும் பையர் சொல்லுவார். ஆகவே மக்கள் எப்போதுமே விழிப்புணர்வுடன் இருப்பதால் இது சாத்தியம் ஆயிற்று. இங்கெல்லாம் சரிப்பட்டு வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது தகவல்களுக்கு நன்றி

      நமக்கும் ஏன் சாத்தியப்படாது ? எத்தனை விடயங்களை நாம் பிற நாட்டிலிருந்து பழகி கொண்டோம்.

      நீக்கு