தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 09, 2023

மீண்டும் எமராத்தில் கில்லர்ஜி

ணக்கம் நட்பூக்களே...
மீண்டும் நான் எமராத் (United Arab Emirates) அபுதாபி வந்து இருக்கிறேன். நீண்ட கால ஆலோசனைகளுக்குப் பிறகு தனிமையை தேடி வந்து இருக்கிறேன். தொடர்ந்து தங்களுக்கு என்னாலான பதிவுகள் வந்து கொண்டே இருக்கும் அதில் இறுதி வரையில் உறுதி கொண்டவன்.
 
மற்ற விடயங்களை பிறகு தங்களுடன் பகிர்ந்து கொள்வேன். வேறு யாரிடம் சொல்லப் போகிறேன் ? எனது இறுதி காலம் வரையில் என்னுடன் துணை இருப்பது எனது எண்ணங்களும், அவைகளின் எழுத்துகளும், அவ்வழியே வரும் தங்களது கருத்துகளும், ஆலோசனைகளும், விமர்சனங்களுமே எம்மை தாங்கிப் பிடித்து இருகின்றது.
 
கடந்த ஏழு வருடகால இந்திய வாழ்க்கையில் இறையின் மீது அதி-நம்பிக்கை வந்து இருக்கிறது. காரணம் நல்லவன் வேதனைப்பட்டே வீழ்வதும், கெட்டவன் சந்தோஷப்பட்டே வாழ்வதும் நேரலையில் கண்டு கொண்டே வாழ்ந்தேன். இங்குதான் இறைவனது சூட்சுமம் எனக்கும்கூட விளங்க ஆரம்பித்தது. காரணமின்றி காரியமில்லை என்பது முன்னோர் வாக்கு. இது அனைவரும் அறிந்ததே...
 
இதன் அர்த்தம் மேலோட்டமாக தெரிந்தாலும் இதை உணரும் பொழுதுதான் அதன் வீச்சும் ஆழமும் புரிகிறது. அனுபவமே ஆசான் என்பது சத்தியமான வார்த்தை. தொட்டால்தான் தெரியுமா ? சுடுவது நெருப்பென்று. பட்டால்தான் புரிகிறது வலிகளின் வலிமை. இது வாழ்வியல் வழியில் நான் எளிமையாக கற்றுக் கொண்ட அனுபவப்பாடம்.
 
தொடர்ந்து பேசுவோம் வலையுலகம் வழியே...
எம்மை வாழ வைக்கும் தமிழுக்கு வந்தனம்.
விமானத்திலிருந்து எழுதிய பதிவு... இறங்கியவுடன் வெளியிடுகிறேன்.
 
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி 09.11.2023 Time – 11:45 pm (Abu Dhabi – Airport)
 
With me
திரு.சிவாதாமஸ்அலி, திரு.சாம்பசிவம் மற்றும் திரு.Chivas Regal சிவசம்போ.

Share this post with your FRIENDS…

17 கருத்துகள்:

  1. வியப்பாக இருக்கிறது.  என்ன திடீர் முடிவு?  நல்லதே நடக்க வாழ்த்துகள்.  உங்கள் அலைபேசி எண் மாறுமோ....

    பதிலளிநீக்கு
  2. ஊண், உறைவிட செலவுகளுக்கு நிதி? வேலை ஏதும் தேடிக்கொண்டீர்களா?

    உறவினர்களையும் சொந்த வீட்டையும் பிரிந்தால் சுமை குறையும் என்று நினைக்கலாம். ஆனால் மனச்சுமை எங்கேயும் எப்போதும் நம்மை விட்டு அகலாது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. அபுதாபி வாழ்க்கை மன நிம்மதியை தந்தால் நல்லதுதான்.
    என்ன சொல்வது! யோசித்து முடிவு எடுத்து விட்டீர்கள்.
    காலம் மாறும், வேதனைகள் தீரும்.
    அங்கு உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.
    வலை உலக நண்பர்களுடன் என்றும் எப்போதும் தொடர்பில் இருங்கள்.
    புதிய வேலைக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  4. வாய்ப்பு கிடைத்தால் நானும் வந்து விடுவேன்...

    இங்குள்ள ஒழுங்கீனங்களச் சகித்துக் கொள்ள இயலவில்லை..

    பதிலளிநீக்கு
  5. நல்லவன் வேதனைப்பட்டே வீழ்வதும், கெட்டவன் சந்தோஷப்பட்டுவாழ்வதும்..

    உண்மை..
    உண்மை..

    பதிலளிநீக்கு
  6. எங்கிருந்தாலும் இன்புற்று வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. சூழல்கள் விரைவில் மாறும் என நம்பிக்கை கொள்வோம்.... ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அபுதாபி... நல்லதே நடக்கட்டும்.. பிரச்சனைகளை விலக்கி வைக்க முயல்வோம் ஜி.

    பதிலளிநீக்கு
  8. என்னுடன் துணை இருப்பவை எனது எண்ணங்களும்
    எழுத்துகளும் அவ்வழியே வரும் தங்களது கருத்துகளும், ஆலோசனைகளும், விமர்சனங்களுமே..

    என்னுடைய நிலையும் இது தான்..

    பதிலளிநீக்கு
  9. ஏழு வருடங்களுக்கு பின்பு மீண்டும் அபுதாபி சென்றுள்ள தங்களுக்கு அங்கு இனி வரும் நாட்கள் தங்களின் வாழ்வில் மேலும் பல ஏற்றங்களைத் தரட்டும்.
    இனி வரும் காலங்களில் உங்களின் வாழ்வு எல்லா வளமும் பெற எல்லாம் வல்ல இறை சக்தியை பிராத்திக்கிறேன்...
    தொலைபேசியின் வாயிலாக உறவாடியது சில நாட்கள்தான் என்றாலும் தங்களின் நினைவானது நெஞ்சின் அடிஆழம் வரை சென்று பசுமரத்தாணிபோல பதிந்து நிற்பது ஆச்சரியம் கலந்த உண்மை... மூச்சு உள்ளவரை தங்களின் நினைவும் இருக்கும்...
    நண்பருக்கு அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
    களங்கமில்லாத தங்களின் அன்பில் நனைந்த நன்றி மறவா நண்பர்...
    உங்கள் "நாஞ்சில் சிவா"...

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் நினைத்தது நடக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்

    எல்லாம் நல்ல படியாக நடக்கும்

    பதிலளிநீக்கு
  12. இறைவன் ஒவ்வொரு பிற்புக்கும் காரணத்தையும் அர்த்தத்தையும் வைத்திருப்பான். உங்கள் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக ஆரம்பிக்கட்டும். உங்களுக்காக, அதாவது உங்கள் மனத்திருப்திக்காக என்று வாழுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. கில்லர்ஜி இது உங்கள் வாழ்க்கை. நீங்கள் ஆலோசித்து எடுத்த முடிவு. எனவே இந்த முடிவை மற்றவர்கள் விமர்சிக்க முடியாது கூடவும் கூடாது. உங்களுக்கு உங்கள் முடிவு நிம்மதியைத் தரும் என்றால் நல்லதே. உங்களுக்காக வாழுங்க கில்லர்ஜி. உங்கள் மகிழ்ச்சிக்காக. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாம் மற்றவர்களுக்குச் செய்வதிலும் அர்த்தம் இருக்கும். மனதின் நிம்மதியும் மகிழ்ச்சியும் மனதிற்குள்தான் இருக்கே அல்லாமல் புற உலகில் இல்லை. அது எங்கு சென்றாலும் உழன்று கொண்டு இருக்கும் அதில் மகிழ்ச்சி இல்லை என்றால். எனவே மற்றதை எல்லாம் மறந்து துறந்து உங்களுக்காக வாழுங்கள் கில்லர்ஜி.

    உங்கள் முடிவு உங்களுக்கு நன்மை அளித்திடட்டும். மனமார்ந்த வாழ்த்துகள் கில்லர்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. தாங்கள் நினைப்பது, எதிர்பார்ப்பது நடக்கும் நண்பரே.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  15. காரணமின்றி காரியம் இல்லை. உங்கள் முடிவால் உங்களுக்கு எல்லா விதத்திலும் நன்மை பயக்க எல்லாம் வல்ல இறைவன் அருள பிரார்த்தனைகள், கில்லர்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. நன்கு யோசித்துத் தான் இந்த முடிவை எடுத்திருப்பீங்க. வேலை கிடைச்சிருக்கு இல்லையா? பிழைப்புக்கு வழி வேணுமே! உங்கள் குடும்பத்தினரின் மனோநிலை இப்போ எப்படி இருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன். இந்த ஏழாண்டுகளில் பிள்ளை/பெண் திருமணங்கள், பேரக்குழந்தைகள் பிறப்பு மற்றும் குலதெய்வம் கோயில் கும்பாபிஷேஹம் எனப் பெரிய காரியங்களாக எடுத்து நடத்தி இருக்கிறீர்கள். ஓய்வெடுக்கும் வயதில் நீங்க மறுபடி வேலைக்குச் சென்றிருப்பது கொஞ்சம் மனதை உறுத்துகிறது. கவனமாக இருங்கள். தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு