தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 16, 2023

வயலோரக் கிளிகள்

கிராமத்துக் கிளிகள் கிருஷ்ணமூர்த்தி, தேன்மொழி இரண்டு பேரும் வயல் வெளியில் தன்னை மறந்து பாடுகின்றனர். வாழ்த்துவோம் நாமும்...
 
பொட்டு வச்சவளே கண்ணழகி
பொட்டணம் தாரேன் வாயேன்டி
மங்களக்குடி டூரிங்கு டாக்கீசுக்கு
மனிதன் படம் பார்க்க போவோமடி
 
கள்ள மச்சானே கருத்த மீசக்காரா
கருவாயன் உன்னை தெரியாதா
பொட்டபுள்ள நானும் வரமாட்டேன்
வெட்டியாக நீயும் வர வேண்டாம்
 
தேர்போகி திருவிழா வரும்போது
தேர் இழுத்தோமே மறந்துட்டியா
தேன்மொழியே தேவதையே
தேவகோட்டை வாயேன்டி
 
உன்னை நம்பி வந்ததாலே
உலக்கை அடி கொடுத்தாளே
வீட்டுலதான் எங்க ஆத்தா
வீணாக வீடு தேடி வராதே
 
மயிலே நீதான் மாங்குயிலே
மறுக்காதடி வீணா ஏங்குயிலே
செங்குயிலே செம்பருத்தி பூவே
செதுக்கி வச்ச செந்தாமரையே
 
வரமாட்டேன் நானும் மச்சானே
சிக்காதே உன்னிடம் இந்த மீனு
நடக்காதே என்னை தேடி வீணே
கிடைக்காது இன்னைக்கு நானு
 
தேடி வந்த மச்சான் என்னை
தேளு போல கொட்டாதே
தேனப்பன் மாமா பெத்தவளே
தேன் குடமே தேன்மொழியே
 
கிறுக்கு புடிக்க வச்சானே
கிருஷ்ணமூர்த்தி மச்சானே
கிள்ளாதே நீயும் என்னை
கில்லாடிதான் ஏங்கண்ணே
 
தன்னானே தானானே தனனானே
தன்னானே தானானே தனனானே
தன்னானே தானானே தனனானே
தன்னானே தானானே தனனானே
 
கில்லர்ஜி அபுதாபி
 
Chivas Regal சிவசம்போ-
என்னய்யா படம் இது ? எமன் எருமை மாட்டுல வந்தது மாதிரி...

Share this post with your FRIENDS…

20 கருத்துகள்:

  1. (அவர்களுக்கு) நடுவில் ஏன் அவ்வளவு பெரிய இடைவெளி!

    பதிலளிநீக்கு
  2. காதல்கிளிகளை வாழ்த்துவோம். வாழ்க வளமுடன்
    கிராமிய காதல் பாட்டு நன்றாக இருக்கிறது.
    மீசை படம் மாட்டின் கொம்பு போல இருக்கு என்று நினைத்தேன்.
    கீழே சிவசம்போவும் அப்படித்தான் சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. தேன் தேனப்பன் மாமா பெத்தவளே, தேன் குடமே, தேன் மொழியே....ஓ....வாசித்தேன் வியந்தேன், ரசித்தேன். rasithen

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. கில்லர்ஜி சூப்பர். நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மீசையைப் பார்த்துட்டுக் காதல் கிளிகள் பயந்து போகாமல் இருக்கணுமே1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆமாம் எனக்கும் இதே கவலைதான் ‌

      நீக்கு
  6. கிராமத்துக் கிளி நன்றாகத்தான் இருக்கிறது .கரூவாயனுக்கு மயங்கிடுமோ?

    பதிலளிநீக்கு