தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 12, 2023

தீயனூர், தீச்சட்டி தீனதயாளன்

ங்க உங்க மாப்பிள்ளையை தீபாவளிக்கு அழைக்கலையா ?
போன தீபாவளிக்கு வந்தவரு இன்னும் ஊருக்கு போகலையே...
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
 
உங்க மாப்பிள்ளை ஹெல்மெட்டோட நிற்கிறாரே ஏன் ?
அவரு ராக்கெட் வெடி விடப்போறாராம்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
 
ஏண்டி உன் மாப்பிள்ளை வாயை மூடியபடியே நிற்கிறாரே ஏன் ?
அம்மா புதுசா அல்வா செய்துச்சு சாப்பிட்டவரு வாயைத் திறக்கவே இல்லை
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
 
உங்க மாப்பிள்ளை தீனதயாளன் கோபமா இருக்காரே ஏன் ?
தலைத்தீபாவளிக்கு மாமனார் தலையிலதான் வெடியை வைப்பேனு சொல்றாரு...
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
 
மாப்பிள்ளையை ஆஸ்ப்பெட்டலுக்கு கூட்டிட்டு போறீங்களே ஏன் ?
குழந்தைகளுக்கு வாங்குன பாம்பு மாத்திரை வெடியை வாயில போட்டு விழுங்கிட்டாராம்.
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
 
மாப்பிள்ளை வடை சாப்பிட சொன்னதுக்கு கோவிச்சுக்கிட்டாரா ஏன் ?
செத்த எலியோட வாடை அடிச்சுச்சாம்.
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
 
உங்க வீட்டுக்கு யானை வந்துருக்கே எதுக்கு ?
மாப்பிள்ளைக்கு வாங்கிய யானை வெடியை யானை மேலே இருந்துதான் வெடிப்பாராம்.
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
 
உங்க மாப்பிள்ளை தீபாவளிக்கு புல்டோசரோட வந்து நிற்கிறாரே ஏன் ?
எங்க அம்மா புது மாடல்ல மைசூர் பாகு செய்து இருக்காங்க, அதை உடைச்சு சாப்பிடத்தான்.
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
 
உங்க தீயனூர், மாப்பிள்ளை தீபாவளிக்கு வரமாட்டேனு சொல்லிட்டாராமே ?
தலைத்தீபாவளிக்கு அவரு அம்மா, அப்பாவுக்கும் ட்ரெஸ் எடுத்து அழைக்கணுமாம்.
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
 
மாப்பிள்ளை வரும்போதே தீச்சட்டியோட வந்து இருக்காரே ஏன் ?
அவரு பொட்டு வெடியை தீச்சட்டியில போட்டுதான் வெடிப்பாராம்.
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
 

வலையுலக நட்பூக்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்..
 
கில்லர்ஜி அபுதாபி
 
காணொளி

Share this post with your FRIENDS…

39 கருத்துகள்:

 1. கில்லர்ஜிக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் தமிழரே...

   நீக்கு
 2. வெடிவெடிக்கும்கோது பசங்களின் குதூகலம் காணொளியில் கேட்டேன். தமிழ்கடையில் இனிப்பு வாங்கினீர்களா இல்லை நண்பர்கள் வீட்டில் விருந்தா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெடி இதம்பாடல் கோயிலில் நான் போட்டது, தீபாவளி அபுதாபி நண்பர் வீட்டில்...

   நீக்கு
 3. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.  நகைச்சுவைகளை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் ஜி

   நீக்கு
 4. பழைய இடத்திலேயே தங்கலா?  வேலை கூட பழைய இடமேவா?  புதிய இடமா?  அங்கிருக்கும் நண்பர்கள் என்ன சொன்னார்கள்?  மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் பிறகு சொல்வேன் இன்னும் அலைபேசி எண் (பர்சனலாக) வாங்கவில்லை ஜி.

   நீக்கு
 5. நீங்கள் மறுபடி அரபு நாடு சென்றிருபப்தற்கு உங்கள் உறவுகளும் நட்புகளும் என்ன சொன்னார்கள்?

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

  வாழ்க வையகம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் ஜி

   நீக்கு
 7. நலமா நலமா..
  நல்லிதயச் சுடரே..

  நலமா நலமா!..

  பதிலளிநீக்கு
 8. பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் ஜி

   நீக்கு
 9. ஓ கில்லர்ஜி ஊருக்குப் போகும் முன் வெடி வைத்து பேத்திகளை மகிழ்வித்துவிட்டுப் போனீங்களா! அவர்களின் மகிழ்ச்சியான சத்தம் கேட்கிறது.. புரிகிறது இந்தக் காணொளி எடுத்து உங்களிடம் வைத்துக் கொண்டு அவ்வப்போது பார்த்து உங்கள் மனதை வருடிக் கொள்ளலாம். என்றாலும் எனக்கு இந்தக் கருத்தை அடிக்கும் போது மனதில் வருத்தமும் கண்ணில் நீரும் வந்தது உண்மை. எத்தனையோ நகைச்சுவை பதிவுகள் நீங்கள் எழுதியிருக்கீங்க அப்போதெல்லாம் தோன்றாத ஒன்று இப்போது தோன்றுகிறது இப்பதிவு துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு அர்த்தம் தருவது போல்.

  உங்களுக்கு மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்! நலமா? உங்களுக்கு அந்த ஊர் எண் கிடைக்கும் வரை நெட் சிரமங்கள் உண்டு என்பது தெரியும். அங்கு சென்றது உங்களுக்கு மன ஆறுதல் தருகிறது என்றால் மகிழ்ச்சியே.
  எனக்கு சில காரணங்கள் தெரிகிறது, உங்கள் பயணத்தின் பின்னால் இருப்பது.

  உங்கள் மகிழ்ச்சிக்குப் பிரார்த்திக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

   தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
  நன்றாக இருக்கிறது பதிவு. நகைச்சுவை பதிவு அடிக்கடி போடுங்கள்.

  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

   பதிவை ரசித்து காணொளி கண்டு தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 11. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
  மீண்டும் அமீரகம் திரும்ப வந்ததற்கு நல் வரவேற்பு! இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  நலமா? எப்படியுள்ளீர்கள்? தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தங்களுக்கு இனி அனைத்தும் நல்லவையாக நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 13. அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்தில் கூட மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் துணிமணிகள் எடுத்துக் கொடுத்து தீபாவளிக்கு அழைப்பவர்கள் உண்டு. மற்றபடி உங்கள் சிரிப்புச் சரம் நன்றாய் உள்ளது. திரும்பவும் அரபு நாட்டுக்குப் போயிருப்பதாகச் சொல்கிறீர்கள். என்ன காரணம்? வேலை கிடைச்சிருக்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எல்லாம் நலமாகும்.

   பதிவை ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
 14. இந்த வருஷ தீபாவளிக்குள்ளாக உங்கள் பேரக்குழந்தைகள் உங்களை "ஐயா" எனக் கூப்பிடுவாங்க எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். இப்போ அவங்களுக்கு எல்லாம் நீங்க அரபுக்கு வந்து விட்டது தெரியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெபர்த்திகளுடன் தொடர்பில் இருக்கிறேன் அதுவே மகிழ்ச்சி.

   நீக்கு
  2. உங்கள் வலைப்பக்கத்தில் பல நாட்களாகவே பின்னூட்டங்கள் பாதி தான் வருகின்றன கில்லர்ஜி. வேறே யாரும் இது பற்றிச் சொல்லாததால் எனக்கு மட்டும் தான் இப்படி வருதுனு நினைக்கிறேன். :(

   நீக்கு
 15. நண்பருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பரே...

   நீக்கு
 16. ரசித்தேன்
  இனிய தீபாவளி வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
 17. ஹா ஹா! நல்ல நகைச்சுவை!

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துக்கள் நண்பரே. தீ தீ தீ தயாளனுக்கும்தான்..

  பதிலளிநீக்கு
 19. அமீரகத்தில் வாழ்க்கை .வாழ்த்துகள்.

  நகைசுவை தீபாவளி. இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு