தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 07, 2024

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா ?

 

எதிர்காலம்
ரயிலில் இருக்கை எண்ணைப்
பார்த்து அமர்ந்தேன் செல்லில்
ஒளிமயமான எதிர் காலம்
பாடல் ஒலித்ததால் போகும்
காரியம் ஜெயம் என்ற உணர்வு.
 
கப்-சிப்
விமானத்தில் பக்கத்து இருக்கையில்
இருந்த அழகியை பார்த்து அசந்தேன்
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
என்று பாட நினைத்தேன் கையில்
நூல் தலைப்பில் ரிவால்வர் ரீட்டா.
 
சிரிப்பு
பேருந்தில் ஏறினேன் நடத்துனர்
எங்கே போகணும் என்றபோது
போகுமிடம் வெகு தூரமில்லை
என்ற பாடல் ஒலித்ததால்
இருவரும் சிரித்து விட்டோம்.
 
திருமணம்
திருமண வீட்டில் தடபுடலாக
எல்லோரும் வேலை செய்தனர்
வாராயோ தோழி வாராயோ
என்ற பாடலோடு மணமகளை
அழைத்து வந்தனர் தோழியர்கள்.
 
ஆண்டுவிழா
கல்லூரியில் இறுதியாண்டு விழா
மாணவர்கள் கவலையாக இருக்க
பசுமை நிறைந்த நினைவுகளே
என்ற பாடலை பாடகர் பாலா
பாடியபோது மனம் கனத்தது.
 

மழை
காலை வீட்டிலிருந்து கிளம்பினேன்
வானம் ஓசையோடு பயமுறுத்தி
மழை வருது குடை கொண்டு வா
என்று பாடியது போலிருந்ததால்
உள்ளே போய் குடை எடுத்தேன்.
 
சிறுக்கி
குழாயடியில் பெண்கள் குடுமி
பிடித்து சிறுக்கி மவளே என்றபோது
சிறுக்கி சிறுக்கி மக சீனாத்தானா
என்று பாட்டு கல்யாண வீட்டு
குழாயில் சத்தமாக ஒலித்தது.
 
கடவுள்
சாலையில் நடந்து சென்ற இருவர்
கடவுள் இல்லை என்று பேசினார்கள்
கல்லை மட்டும் கண்டால் கடவுள்
என்று மற்றவர் பாடிக் காட்டியதை
கேட்டு சிரித்து கடந்து விட்டேன்.
 
வாழ்க்கை
அந்த வீட்டில் ஒப்பாரிச் சத்தம்
உறவினர்கள் வரிசையாக வந்தனர்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா...
ஒலி பெருக்கியில் வரப்போகும்
பணத்துக்காக அலற விட்டான்
 
மரணம்
காலையில் தேதியை கிழித்தேன்
அது சற்றே சிரிப்பது போலிருந்தது
ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து
என்று கேட்டேன். உன் மரணநாளை
நெருங்குகிறாயே... அதனால் என்றது.
 
கில்லர்ஜி புதாபி
 
Chivas Regal சிவசம்போ-
இந்த ஆளு ஏழரையை இழுத்து விடுவாரோ...

16 கருத்துகள்:

  1. கவிதை நன்றாக இருக்கிறது.
    நினைவுக்கு வந்த பாடல்களும் நன்றாக இருக்கிறது.
    மழை வரட்டும் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் குடையை விட குடத்தை தான் தூக்குவார்கள் இப்போது. மழை தண்ணீர் பிடிக்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. முதல் படம் சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பாட்டுக்களுக்கு ஏற்ற விதத்தில் குட்டிக் கவிதைகள் அனைத்தும் அருமை. அவற்றின் தலைப்புக்களும் வெகு பொருத்தம்.

    முதல் கவிதை பாசிடிவ் கவிதை. அந்தப்பாடலும் ஒரு ரயில் பயணத்துடனான காட்சியில்தான் வரும். அத்தனை கவிதைகளையும் ரசித்தேன்.

    இப்படி பாட ஆரம்பித்தால், இனி குழந்தைகள் சாக்லெட் கேட்ப்பார்களா? முதல் படம் ரசித்து சிரிக்க வைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  4. எங்குமே திரையிசைப் பாடல்கள் நினைவா? ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. படம் நகைச்சுவைத் துணுக்கு சிரித்துவிட்டேன்.

    திரை இசைப்பாடல் வரியைக் கோர்த்து உங்க கற்பனை செம. ஓரிரண்டைத் தவிர மற்றவை எல்லாமே செம. ரசித்தேன் கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  6. எல்லாமே தெரிந்த பாடல்கள்தான். அவற்றை சிச்சூவேஷனுக்கு ஏற்றபடி நீங்கள் தொகுத்திருப்பது சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. சூழ்நிலைக்கேற்றபடி எடுத்துக் கொண்ட வரிகள்...  ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க ஜி தங்களது ரசிப்புக்கு மிக்க நன்றி

      நீக்கு
  8. சினிமா பாடல்களும் அவற்றின் சூழலும் ரசிக்க வைத்தன.

    இறுதிப்பாடல் காலம் கடப்பது சற்று சோகம்.

    பதிலளிநீக்கு