நட்பூக்களே...
மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? மூன்று
மதங்கள் என்றும், மூன்று வழிபாடுகள் என்றும் நமது முன்னோர் வகுத்து வைத்த பாதையில்
வந்த நமக்கு இப்பொழுது புதிதாக இதோ... இது எந்தக் கணக்கில் வருகிறது ? சாய்பாபா என்பவர் ஓர் நல்ல இதயம் படைத்த மாமனிதர் இதில்
எள்ளளவும் ஐயமில்லை. அதற்காக இப்படி செய்வது முறையா ?
இதன்
தொடர்ச்சி என்ன ஆகும் மற்றொருவரையும் இதில் இணைக்கும் செயலை மதவாதிகள்
முயல்வார்கள் மேலும் தொடரும்... பிறகு இவ்வரிசையில் நித்தியானந்தாகூட இணையலாம்.
இது எனது யூகம் மட்டுமே...காரணம் இன்று வரையில் நித்தியை வணங்கும் மடையர்களும்
உண்டுதானே...
இது
மக்களின் வாழ்வு முறைகளில் குழப்பத்தை உருவாக்கும் முயற்சியே அன்றி வேறென்ன ? இதை மக்கள் உணரவேண்டும். இதன் பின்னணியில் அரசியல்வாதிகளே
இருப்பார்கள். அதாவது மக்களின் மூளையை குழப்பத்திலேயே வைத்துக் கொள்ளவேண்டும்
அப்பொழுதுதான் அவர்கள் கொள்ளையடித்து ஸ்விஸ் மக்களுக்கு பணத்தை சேர்த்து வைத்து
சாகலாம் என்பது நமக்கு கிடைத்த சாபக்கேடு.
இருக்கும்
தெய்வங்களே போதுமானவை அவைகளை கும்பிட்டு தொழுவதற்கே நமக்கு நேரமில்லாமல்
ஓடிக்கொண்டே இருக்கிறோம் இலக்கு தெரியாமல் அல்லது புரியாமல் ஒன்றே குலம் ஒருவனே
தேவன் என்று நாம்தான் சொல்லி வைத்தோம். ஆனால் அதை கடைப்பிடிக்கத் தெரியாது இதுவும்
சாபக்கேடுதான்.
இறைவனுக்கு
நாம் செலுத்த வேண்டியது மனிதனாக படைக்கப்பட்ட நாம் மனிதனாக வாழ்ந்து இறைவனடி
சேர்வதுதான். நாம் இறையிடம் வைக்க வேண்டிய கோரிக்கை நல்லதொரு மரணம், மீண்டும்
பிறவாமை. எமது பிரார்த்தனைகள் இதுவே இறுதிவரையில்...
கில்லர்ஜி அபுதாபி
நீங்கள் சொல்வது உண்மைதான். எனக்கும் தோன்றும்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குவெயிட்டிங் ஹால் என்றால் என்ன? எதற்கு வெயிட்டிங்? பிரேயர் ஹாலா? அதற்கா, ஏஸிக்கா கட்டணம்?
பதிலளிநீக்குரயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருப்பவர்களுக்காக...
நீக்குகில்லர்ஜி அது கோயில் விளம்பரம் இல்லையா? ரயில் நிலையத்தில் என்றால் எல்லா ரயில் நிலையங்களிலும் நாம் பயணம் செய்யும் வகுப்புக்கு ஏற்ப காத்திருக்கும் அறை உண்டு. அதில் கூடுதல் நேரம் என்றால் கட்டணம் உண்டுதான். இது தவிர இப்போது தனியார்களும் இப்படி செய்கிறாங்களா?
நீக்குகீதா
இது ரயில் நிலையத்தின் உள்புறத்திலுள்ள தனியார் நிறுவனம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நீங்கள் பதிவில் கூறுவதும் உண்மைதான். பொதுவாக தெய்வங்களிடம் நம்பிக்கை வைப்பதும், அதன்படி நடப்பதும், நடவாததும் நம் ஊழ்வினை பயன்கள்தாமே..! எதுவும் நல்லதாகவே நடக்க வேண்டுமென மொத்தமாக இறைவனிடம் பிரார்த்திப்பது மட்டுமே நம் கடமை. அதன்படி நடந்தால் நம் வாழ்க்கைப் பாதையில் நாம் நடக்கும் வழியும் சுலபமாகவே தெரியும். எல்லாம் இறைவன் செயல். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குகில்லர்ஜி உங்கள் கருத்து சரியே. எதிர்காலத்தில் இணையும் என்று சொல்லப்பட்டது உட்பட. இதை ஒத்த என் தனிப்பட்ட கருத்துகளை இங்கு நான் சொல்லவில்லை.
பதிலளிநீக்குஆனால் ஒவ்வொருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயம் இது. பல பல வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மத குருக்களுக்கும் கோயில்கள், தனி சன்னதிகள் என்றுஇருக்கின்றன. ஏன் கண்ணகிக்கே கூடக் கோயில் இருக்கிறதே!
இவை மக்களின் நம்பிக்கை சார்ந்த அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சிலர் என்பதுதான். நிறைய கருத்துகள் எனக்கு உண்டு இங்கு பொதுவெளி என்பதால் நான் அதிகம் சொல்லாமல் செல்கிறேன். என்னைப் பொருத்தவரை இது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை என்பதால் அதைப் பற்றிச் சொல்ல வேண்டாமே சொல்லக் கூடாது என்று.
கீதா
வருக தங்களது விரிவான அலசல் சிறப்பாக இருக்கிறது.
நீக்குநான் சொல்ல வருவது இது மேலும் தொடர்ந்து வருமே என்ற குற்றச்சாட்டு மட்டுமே....
மக்களின் நம்பிக்கையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான உதாரணம்தான் நீங்கள் போட்டிருக்கும் படம். யாருக்கு புத்தி வேணும்? உங்களுக்கே தெரியும்!!!
பதிலளிநீக்குகீதா
ஆம் இதில் ஏமாறுவது யார் ?
நீக்குஎன்பது புலன் பட்டால் தெளிவு பிறக்கும்.
எந்த ஊர் ரயில் நிலையத்தில் இப்படி வைத்து இருக்கிறார்கள்?
பதிலளிநீக்குவைத்தவருக்கு அவர் மேல் நம்பிக்கை இருக்கலாம் அதனால் வைத்து இருக்கிறார் போலும். இப்போது பாபாவை வழிபடுபவர்கள் அதிகபேர் இருப்பதால் அவர்களை கவர விளம்பர பலகையில் போட்டு இருப்பார்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம். வாழும் போது நம்பிக்கை அளிப்பவர்களை, வாழவழி காட்டுபவர்களை தெய்வமாக மதிக்கிறான், அதில் அவனுக்கு மன நிறைவு கிடைக்கிறது.
நம்மை படைத்தவன் வழி நடத்துகிறார், நாம் வழி நடக்கிறோம்.
அவன்ருளாலே அவன் தாள் வணங்கி மகிழ்வோம்.
வருக சகோ இது மதுரை இரயில் நிலையத்தின் உள்புறம்.
நீக்குதங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
இப்படி எல்லாம் சொல்லி நம் ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்த முடியும். ஒரு பிரயோஜனமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
நீக்குஅந்த நிறுவனத்தை நடத்துபவர் சாய்பாபா பக்தராக இருக்கலாம். இதெல்லாம் தனிப்பட்ட விருப்பங்கள் என்றுதான் நான் நினைத்துக் கடந்து செல்வேன். இது சரி, இது தவறு என்று கடவுள் விஷயத்தில் அறுதியிட்டுச் சொல்லமுடியாதுன்னு நினைக்கிறேன். அப்படிச் சொல்ல முனைந்தால், இந்துக்களிடமே கூட, என் சாமி உசந்தது உன் சாமி அப்படியில்லை என்று சண்டைகள் முளைத்து, இருக்கும் பிரச்சனைகளை அதிகமாக்கிவிடும்.
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!
நீக்குஇப்படி எல்லாம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டால் சரி.
பதிலளிநீக்குமக்கள் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை.
நீக்கு