தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 28, 2024

தொங்குமுத்தி

தொங்குமுத்தி அண்ணே வணக்கம்பார்த்து ரொம்ப நாளாச்சு நல்லா இருக்கீங்களாண்ணே ?
வாடாத்தம்பி கருங்காளி நல்லா இருக்கேன்டா... வீட்ல கொழுந்தியாள் எப்படி இருக்கு ? என்ன இந்தப்பக்கம் வந்துருக்கே... ஏதும் விஷேசமா ?
 
சில சந்தேகங்கள் வந்துச்சுண்ணே... அதான் கேட்கலாம்னு வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
 
நம்ம குடும்பத்துல தலைவரா அப்பா இருக்காரு அவரு செயல் சரியில்லைனா என்ன செய்யிறதுணே ?
அவரை வீட்டை விட்டு ஒதுக்கி வச்சிட வேண்டியதுதான்
 
அப்படீனாக்கா நாட்டோட பிரதமர் சரியில்லைனா அவரையும் ஒதுக்கி வைக்க முடியுமாண்ணே ?
? ? ?
 
ஏண்ணே நம்ம பிரதமருக்கு கல்யாணம் ஆயிருச்சுனு, மனைவி இருக்காங்கன்னு சொல்றாங்களே உண்மையாண்ணே ?
ஆமாடாத்தம்பி அவரு வேட்புமனுத் தாக்கல்ல திருமணம் ஆனதாகத்தானே பதிவு செஞ்சி இருக்காரு...
 
அப்படீனாக்கா திருமணம் ஆனது உண்மைதானே ?
அட ஆமாடாத்தம்பி அடிச்சு சொல்றேன் எங்க தலைவருக்கு திருமணம் நடந்துருச்சு.
 
அப்படினாக்கா நீங்க திருமணத்துக்கு போனீங்களாண்ணே ?
? ? ?
 
நம்ம பிரதமரு அடிக்கடி வெளிநாட்டுக்கு போறாரே எதுக்குண்ணே ?
மற்ற நாடுகளைப் போல நம்ம நாட்டையும் முன்றேற்றத்தான்டா..
 
அப்படீனாக்கா... எத்தனை நாட்டுக்கு போயிருக்காரு இத்தனை வருசமா போக்குவரத்துதுறையையாவது மாற்றம் செய்யலியே ஏண்ணே ?
கண்டிப்பா கூடிய சீக்கிரம் செய்வாருடா...
 
அப்படீனாக்கா கொல்லங்குடி காளி மேல சத்தியம் செஞ்சுதாங்கண்ணே...
? ? ?
 
அடுத்த முறையும் நம்ம மோடி பிரதமரா வந்துருவாராண்ணே ?
நிச்சயம் வருவாருடா... நாங்கதான் மறுபடியும் ஆட்சியை பிடிப்போம்.
 
அப்படீனாக்கா... இந்தியா இனிமேலும் முன்னேற சாத்தியமே இல்லையாண்ணே ?
? ? ?
 
நம்ம பிரதமரு நம்ம வங்கி கணக்குல பதினைந்து லட்சம் போடுறேன்னு சொன்னாரே எப்பணே போடுவாரு ?
கூடிய சீக்கிரம் போடுவாருடா... அவசரப்படாதே...
 
உறுதியா வந்துருமாண்ணே ?
நிச்சயம் வரும்டாத்தம்பி
 
அப்படீனாக்கா... நீங்க பதினைந்து லட்சம் கொடுங்கண்ணே அவரு போட்டதும் உங்களுக்கு மாத்தி விடுறேன்.
? ? ?
 
என்னண்ணே... பதிலே சொல்லாம நிக்கிறீங்க ?
நானே டீ குடிக்க வழியில்லாம இருக்கேன் பதினைஞ்சு லட்சம் வேணுமாம்ல வெண்ணைக்கு, ஓட்றா... இனிமேல் இந்த தெருவுல பார்த்தேன் கட்டி வச்சு அடிப்பேன்.
? ? ?
 
கில்லர்ஜி புதாபி
 
சிவாதாமஸ்அலி-
கருங்காளித்தம்பி நயம்புளியாத்தான் இருப்பான் போலயே...
 
ChivasRegal சிவசம்போ-
நம்ம பங்காளி சரியாத்தானே கேட்டான்.

20 கருத்துகள்:

  1. கவுண்டமணி, செந்தில் பேசுவது போல கற்பனை செய்து படித்தேன்.
    அருமையான நகைச்சுவை பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களுக்கே உரிய வழக்கமான நகைச்சுவையுடன் கூடிய பதிவு. பதினைந்து லட்சம் சிரிக்க வைத்தது. ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களுக்கும் 15 லட்சம் வரும்.....
      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. நகைச்சுவை நல்லாருக்கு கில்லர்ஜி.

    ஆனா.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      என்ன ஆனால் ???

      நீக்கு
  4. உங்களுக்கு வர 15 லட்சத்தை இங்க மாத்தி விட்டுருங்க கில்லர்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ​ரசித்தேன். சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. கவலை வேண்டாம் தம்பி,,,  இந்தமுறை சோனியாதான் பிரதமர்.  நீ எதிர்பார்க்கும் எல்லா சுபிட்சமும் கிடைக்கும் தம்பி...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      ஓ.... அப்படியா ? இனி இத்தாலிக்கு ஃப்ரீ விசா கிடைக்கும்.

      நீக்கு
  7. பேசாம நாமெல்லாம் சேர்ந்து ஒரு கட்சி தொடங்கி விடலாம்.. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தொடங்கலாமே... நமக்கு உரிமை இல்லையா... என்ன ?

      நீக்கு
  8. சில பொய்களும் சில உண்மைகளும் வெளிப்படையாகக் கூறக்கூடாதவை. உண்மைகள் கசக்கும். சும்மா இருப்பதே சுகம்.

    பதிலளிநீக்கு
  9. அடடா.... அடடா... இது போன்ற பதிவு தொடரட்டும் தோழர்

    பதிலளிநீக்கு
  10. கேள்வி பதில்கள் அசத்தல்.

    பதிலளிநீக்கு