ஓ... மனிதர்களே...
உணவைக் குப்பையில் போடுபவர்களை கண்டு
ஏசாதீர்கள் அவர்கள் குப்பையில் போடுவது,
குப்பையில் உணவைத் தேடும் மனிதர்களுக்காக...
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
ஓ
மனிதர்களே...
கொள்ளைக்காரன் என்று தெரிந்திருந்தும் மீண்டும்
அவருக்கு வாக்களிப்பவர்களை திட்டாதீர்கள். அவரது
அரச மரியாதையை இழந்து விடக்கூடாது என்பதற்காக...
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
ஓ...
மனிதர்களே...
நடிகைகளான நாங்கள் பல திருமணங்கள் செய்ததற்காக
திட்டாதீர்கள். நீங்கள் உங்கள் வீட்டு கற்புக்கரசிகளின்
அருமை, பெருமையை உணர்ந்து கொள்வதற்காக...
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
ஓ...
மனிதர்களே...
உங்கள் வீட்டு மொட்டை மாடியில் கரைவதற்காக
எங்களை திட்டாதீர்கள், நாங்கள் கரைவது விருந்தாளி
வரும்முன் வீட்டை பூட்டி விட்டு வெளியேறுவதற்காக...
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
ஓ...
மனிதர்களே...
விலைவாசிகளை உயர்த்தி விட்டதற்காக அரசாளும்
எங்களை வெறுக்காதீர்கள். பெரும் பணத்தை செலவு
செய்து உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக...
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
ஓ
மனிதர்களே...
திரைப்படங்கள் மூலம் நமது கலாச்சாரம், பண்பாட்டை
அழிப்பதாக எங்களை குற்றம் சொல்லாதீர்கள். அடுத்த
நாட்டினர் செய்வதற்குள் நாம் முந்தி கொள்வதற்காக...
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
ஓ
மனிதர்களே...
அரசியல்வாதிகளின் வழக்குகளை நாங்கள் நீட்டிப்பதற்காக
எங்களை திட்டாதீர்கள், இதற்கு காரணம் வழக்கறிஞர்கள்,
நீதிபதிகளின் வாழ்க்கை செழிப்புடன் வாழ்வதற்காக...
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
ஓ
மனிதர்களே...
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பொதியை சுமப்பது போல
நூல்களை கொடுப்பதற்காக எங்களை திட்டாதீர்கள் நாளை
நீங்கள் கூலி தூக்கும்படி வந்தால் காப்பாற்றிக் கொள்வதற்காக...
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
ஓ
மனிதர்களே...
அரசியல்வாதிகளான நாங்கள் கோடிக்கணக்கில் பணத்தை
பதுக்கி வைப்பதற்காக எங்களை ஏசாதீர்கள் திடீரென்று
உணவுப்பஞ்சம் வந்தால் உங்களுக்கு உதவுவதற்காக...
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
ஓ
மனிதர்களே...
உங்களை வாழ்க கோஷமிட்டு பழக்குவதற்காக எங்களை
ஏசாதீர்கள் தேர்தல் நேரத்திலாவது நீங்கள் கோஷமிட்டு
உங்கள் குடும்பத்துக்கு ஐநூறு ரூபாய் சம்பாரிப்பதற்காக...
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
கில்லர்ஜி அபுதாபி

வித்தியாசமான சிந்தனை. ரசித்தேன்.
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஎதிர்மறையில் சதிராடி நேர்மறையை சொல்லி இருக்கிறீர்கள்! நிதர்சனங்கள். வித்தியாசமான சிந்தனை, பிரசன்டேஷன்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. நல்ல சிந்தனையுடன் பதிவை எழுதியுள்ளீர்கள். மனிதர்களை ஏசி, மனிதர்கள் அனுபவிக்கும் வலிகளை மனிதர்களுக்கே உணர்த்தியிருக்கிறீர்கள். இதை உணரும் மனிதர்கள் இனியாவது திருந்தினால் நல்லது.
முதல் படம் கண்களையும், மனதையும் கசிய வைத்தது. நல்ல கற்பனையுடனான சிந்தனைகள் உங்களுக்கு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குகில்லர்ஜி சூப்பர்! நல்லா அழகா சொன்ன விதம் ரசித்தேன்!
பதிலளிநீக்குஒன்று மட்டும் - //நடிகைகளான நாங்கள்....// ஏன் நடிகைகள் மட்டும்? இதில் நீங்கள் சொல்ல வருவது நல்ல விஷயம் தான். இதை ஆண்களை வைத்தும் சொல்லலாம்…..அவங்க மட்டும் ஒழுங்கா என்ன? அப்படியான ஆண்களைப் பார்த்து ஹப்பா நாம எவ்வளவோ கொடுத்து வைச்சிருக்கோம் என்று பெண்கள் நினைக்கலாமே!!!!!!!!!!! ஆண் பெண் சமம் என ஆகும்! ஹாஹாஹாஹா!
கீதா
வருக ஆம் இருபாலரையும் (கூடத்தாடன், கூத்தாடி) இணைத்து இருக்க வேண்டும்.
நீக்குமுதலாவது மனதைக் கலக்கியது. பட்மும்தான்
பதிலளிநீக்குகீதா
அந்தப்படமே கவிதைக்கு வித்து.
நீக்குஇதில் அரசியல்வாதிகள் பதுக்குவது அவர்களுக்குத்தானே! மக்களுக்கு பஞ்சகாலத்தில் என்று அதற்கு ஜஸ்டிஃபிக்கேஷன் நல்ல நையாண்டி.
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக தங்களது கருத்தை தந்தமைக்கு நன்றி
நீக்குமுதல் படம் மனதை கனக்க வைத்தது , அது உங்கள் கவிதைக்கு வித்தாக அமைந்து நிறைய சிந்திக்க வைத்து இருக்கிறது.
பதிலளிநீக்குசொல்லிய விதம் அருமை. முன்பு தரையில் குப்பை கிடக்கும், குப்பையில் தேடி ஏதாவது எடுத்து கடையில் கொடுத்து காசு வாங்கி உணவு உண்பார்கள் . இப்போது அதற்கும் வழி இல்லாமல் இருக்கிறது, இப்படி ஒரு குழந்தை மேல் இன்னொரு குழந்தை ஏறி நின்று எவ்வளவுதான் தேட முடியும்? படம் மனதை வருந்த வைக்கிறது.
மீந்து போன உணவை யாருக்கும் கொடுக்க முடியாத இடங்களில் குப்பை கூடையில் கொட்டும் போது மனம் வருந்தும், மண்ணில் உள்ள ஜீவராசிகள் சாப்பிடும் என்று மனதை சமாதானபடுத்திக் கொள்வேன்.
காய்கறி, மற்றும் உணவு கழிவுகளை மெஷினில் கூழாக்கி, தோட்டம், வயலில் போடுகிறார்கள் சில இடங்களில்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குமுதலாவது பார்த்தபோதே மனம் கலங்கிவிட்டது.
பதிலளிநீக்குஏனையவை நல்ல கேள்விகள் மறைமுக பதில்கள்.
தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி சகோ
நீக்கு