தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
புதன், நவம்பர் 01, 2017
ஞாயிறு, அக்டோபர் 29, 2017
வெள்ளி, அக்டோபர் 27, 2017
நண்பேன்டா...
டேய்... கதவைத்திறடா...
இந்த நேரத்திலே யாருடா ?
நான்தான்டா...
மணிக்குமார்ராயா... என்னடா ?
மச்சான்
கவுத்திப்புட்டாடா...
என்னடா... ஆச்சு சொல்லுடா.. ?.
அவ எனக்கு டாட்டா
காமிச்சுட்டாடா...
யாருடா... ?
அவதான்டா..
எவடா... ?
என்னைக்
கவுத்திப்புட்டாடா...
சொல்லித் தொலையேண்டா... ?
அவளுக்கு கல்யாணமாம்மாடா...
எவளுக்குடா... ?
இதோ மொபைல்ல
இருக்கிறவதான்டா..
மாப்பிள்ளை யாருடா... ?
அவன்தான்டா...
எவன்டா... ?
அந்த மாடசாமிதான்டா...
யாரு...
மேலத்தெருக்காரனாடா...?
ஆமாடா...
சரி காலையில பார்க்கலாம்
போடா...
இல்லடா...
வேறென்ன செய்ய... விடுடா...?
அவ வீட்டுக்கு போனேன்டா...
என்ன... நடந்துச்சுடா...?
பாட்டா செருப்பெல்லாம்
கேட்டாளேடா...
அதனால என்னடா...
வாங்கி கொடுத்தேனடா...
அதுக்கு இப்ப என்னடா...?
பாட்டா செருப்பால
அடிச்சிட்டாளேடா...
சரி சரி விடுடா...
விட மாட்டேன்டா...
அதான் அடிக்க விடுட்டியேடா..?
நான் டால்டா கம்பெனி
ஓனர்டா...
நீ டாட்டா இல்லையேடா...?
அவளை கொல்லப் போறோம்டா...
நான் வரலைடா...
ஏண்டா...?
நேத்து ராத்திரி வந்தியேடா...?
அதுக்கு என்னடா...?
பேசிப்பேசி விடிஞ்சு
போச்சேடா...
அப்படீனா... புறப்படுடா...
எனக்கு வேலையிருக்குடா...
நீ நண்பனாடா...?
இன்னைலருந்து இல்லடா...
நான் உன் நண்பேன்டா...?
இப்ப வம்பு ஏண்டா...?
அப்ப நான் போறேன்டா...
எங்கேடா...?
டாஸ்மாக்குடா...
சரி தொலைஞ்சு போடா...
மணிக்குமார்ராய் போகவும், சனியன்
தொலைஞ்சான்டா என கதவைப் பூட்டி விட்டு தூங்கப் போன மணிஷ்கர், மணியைப் பார்த்தான்
மணி 06:00am இருக்கும் ஆனால் உகாண்டா கடிகாரம் காட்டியது இப்படி...
செவ்வாய், அக்டோபர் 24, 2017
வலையபட்டி, வலைப்பதிவர் வளையாபதி
வணக்கம் ஐயா மக்கள் பிரச்சனைகளை தாங்கி வரும்
எங்கள் ஓங்கி பத்திரிக்கைக்கு பேட்டியளிக்க வந்திருக்கும் எதற்குமே வளைந்து
கொடுக்காத வலையபட்டி, வலைப்பதிவர் வளையாபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம் பேட்டியை துவங்கலாமா ?
ஓங்கி பத்திரிக்கை இன்னும் உயரம்
தொட்டு ஓங்கி ஒலிக்க எமது வாழ்த்துகளோடு நன்றிகளும் துவங்கலாம்.
ஞாயிறு, அக்டோபர் 22, 2017
அர்த்தமென்ன ?
நம் நாட்டில்
பெரும்பாலானவர்கள் இறைவணக்கம் செய்கின்றார்கள் அப்படி என்றால் இறைவனை
நம்புவதாகத்தானே அர்த்தம் கோயிலுக்குப் போகின்றார்கள் அங்கு சாதி அடிப்படையில்
தனக்குத்தான் முதல் மரியாதை தரவேண்டுமென பிரச்சனையை கிளப்பி அடி, உதை, வெட்டு,
குத்து என்று போய் பல உயிர்கள் கொலையில் வந்தும் முடிகிறதா ? இல்லை மீண்டும் அதையே காரணமாக
வைத்து தொடர்கிறது.... பல ஊர்க்கோயில்களில் தேரோட்டம் நிறுத்தப்பட்டு இறைவனையே பல
வருடங்களாக சிறை வைத்தும் பூட்டி இருக்கின்றார்கள் உண்மைதானே.... இதை
சமூகத்தை சாக்கடையாக்கிய திரைப்படங்களிலும் கூட நாம் கண்டு இருக்கின்றோம்.