தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 27, 2017

நண்பேன்டா...


டேய்... கதவைத்திறடா...
இந்த நேரத்திலே யாருடா ?
நான்தான்டா...
மணிக்குமார்ராயா... என்னடா ?
மச்சான் கவுத்திப்புட்டாடா...
என்னடா... ஆச்சு சொல்லுடா.. ?.
அவ எனக்கு டாட்டா காமிச்சுட்டாடா...
யாருடா... ?
அவதான்டா..
எவடா... ?
என்னைக் கவுத்திப்புட்டாடா...
சொல்லித் தொலையேண்டா... ?
அவளுக்கு கல்யாணமாம்மாடா...
எவளுக்குடா... ?
இதோ மொபைல்ல இருக்கிறவதான்டா..
மாப்பிள்ளை யாருடா... ?
அவன்தான்டா...
எவன்டா... ?
அந்த மாடசாமிதான்டா...
யாரு... மேலத்தெருக்காரனாடா...?
ஆமாடா...
சரி காலையில பார்க்கலாம் போடா...
இல்லடா...
வேறென்ன செய்ய... விடுடா...?
அவ வீட்டுக்கு போனேன்டா...
என்ன... நடந்துச்சுடா...?
பாட்டா செருப்பெல்லாம் கேட்டாளேடா...
அதனால என்னடா...
வாங்கி கொடுத்தேனடா...
அதுக்கு இப்ப என்னடா...?
பாட்டா செருப்பால அடிச்சிட்டாளேடா...
சரி சரி விடுடா...
விட மாட்டேன்டா...
அதான் அடிக்க விடுட்டியேடா..?
நான் டால்டா கம்பெனி ஓனர்டா...
நீ டாட்டா இல்லையேடா...?
அவளை கொல்லப் போறோம்டா...
நான் வரலைடா...
ஏண்டா...?
நேத்து ராத்திரி வந்தியேடா...?
அதுக்கு என்னடா...?
பேசிப்பேசி விடிஞ்சு போச்சேடா...
அப்படீனா... புறப்படுடா...
எனக்கு வேலையிருக்குடா...
நீ நண்பனாடா...?
இன்னைலருந்து இல்லடா...
நான் உன் நண்பேன்டா...?
இப்ப வம்பு ஏண்டா...?
அப்ப நான் போறேன்டா...
எங்கேடா...?
டாஸ்மாக்குடா...
சரி தொலைஞ்சு போடா...


மணிக்குமார்ராய் போகவும், சனியன் தொலைஞ்சான்டா என கதவைப் பூட்டி விட்டு தூங்கப் போன மணிஷ்கர், மணியைப் பார்த்தான் மணி 06:00am இருக்கும் ஆனால் உகாண்டா கடிகாரம் காட்டியது இப்படி...

54 கருத்துகள்:

 1. சோகத்தை மறைக்க சென்றவர் டாஸ்மார்க்கில் சொல்லிப்புலம்பியது இதுதானோ?))) சூப்பர் சிரிப்பு ஜீ!

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ஹா சூப்பர்... இதில சிவப்போ நீலமோ கில்லர்ஜி?
  அந்த உகண்டா மணிக்கூட்டை எங்க புடிச்சீங்க?:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணிக்கூடு என்றால் clock :)

   நீக்கு
  2. இதில் நடந்த சம்பவத்தை விவரித்த வைலட் கலர்தான் கில்லர்ஜி.

   விளக்கம் கீழே கீ.சா. அவர்களின் மறுமொழியில்...

   நீக்கு
 3. ஹாஹா :) ஒருவேளை அந்த ரெண்டுபேர்கிட்டதான் அந்த சுவர் கடிகாரத்தின் மிச்ச பாதி இருக்கோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருமுறை போதையில் மணிக்குமார்ராய் தோசைக்கல்லை எடுத்து மணீஷ்கர் மீதுவீச குறி தவறி மணிக்கூட்டில் அடித்து விட்டதாக பழைய தகவல் குறிப்பு சொல்கிறது.

   நீக்கு
 4. அந்த உகாண்டா கடிகார விஷயம் புரியலை! போகட்டும். காதல் தோல்வின்னா உடனே டாஸ்மாக் என்பது எழுதப்படாத விதி போல! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா...

   சந்தோஷத்துக்கும் டாஸ்மாக்தான். துக்கம், வருத்தத்துக்கும் டாஸ்மாக்தான்! உன்னால் முடியும் தம்பி ஜனகராஜ் போல!!!

   நீக்கு
  2. தி.கீ.சா.அ......
   சம்பவம் உகாண்டா நாட்டில் நடந்ததை தமிழில் நான் மொழி பெயர்த்து எழுதிய கதை என்று நீங்களாக தீர்மானித்து கொள்ளலாமே...

   மேலே இருப்பவர்கள் தமிழர்கள் அல்லவே...

   நீக்கு
 5. அடடா

  உடைஞ்சு போன

  உகாண்டா கடிகாரம்....

  பதிலளிநீக்கு
 6. எல்லாம் சரி! உகண்டாவில் டாஸ்மாக் கடை உண்டோ? பதிவை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உலகில் எங்குதான் இல்லை அரபு நாடுகளில்கூட சாதாரணமாகி விட்டது.

   அந்நாட்டில் போதை வஸ்துகள்கூட பெட்டிக்கடைகளில் கிடைக்கிறது...

   நீக்கு
 7. ஒடைஞ்சு போன உகண்டா கடிகாரம் தான் எங்கிட்டயும் ஒன்னு இருக்கே!...

  நல்லவேளை.. தப்பிச்சது!..

  ஆனாலும் அந்த மரப்பட்டரை தலையன் எதுக்கு வந்தான்..ந்னு தெரியலை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி உங்களிடமிருப்பது மறுபாதியா ?
   மரப்பட்டரைத் தலையன் ஹா.. ஹா.. ஸூப்பர்

   நீக்கு
  2. மறுபாதியத் தான் அவளோட புருசன் தூக்கிக்கிட்டுப் போய்ட்டானே!..

   எங்கிட்ட இருக்கிறது -

   அது தாண்ணே இது!?..

   டேய்.. மறுபடியுமா!?..

   நீக்கு
  3. ஹா.. ஹா.. ஹா.. எவ புருசன் ஜி ?
   குடும்பத்துக்குள்ளே புளியோதரை பொட்டணம் போட்டு விட்றாதீங்க...

   நீக்கு
 8. நண்பனை அழைத்துக் கொண்டல்லவா சென்றிருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவன்தான் போகவில்லையே..
   நேற்று அடித்த சரக்கின் போதை இறங்கவில்லை போலும்.

   நீக்கு
 9. டைலாக்ல பின்ரீங்க பார்த்தா கடைசியில் கடிகாரம் தட்டிகிட்டு போயிடுச்சி சூப்பரை ..... பதிவில் 2பேர் மிஸ்ஸிங் (சியும் சியும் )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களின் வருகைக்கு நன்றி.
   கடைசி நேரத்தில் அவர்களை கழட்டி விட்டேன்.

   அதிரா அவர்களின் அங்கிள் அடுத்த பதிவில் வருவார்.

   நீக்கு
 10. உகண்டா கடிகாரமும் ஒரு சைசா இருப்பதை...கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்...........

  பதிலளிநீக்கு
 11. குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு - என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 12. தலைப்பு பார்த்து நான் வேற பதிவை எதிர்பார்த்து வந்தேன். புஸ்சுன்னு போச்சு

  பதிலளிநீக்கு
 13. கடிகாரம் சூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்பு பார்த்துதான் வருவீங்களா...? வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. தலைப்பு பார்க்காம எப்படி வருவாகளாம்.

   நீக்கு
 14. காதல் தோல்வி என்று தெரிகிறது டாஸ்மாக்கும் தெரிகிறதுசொல்ல வருவதுதான் புரியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இரண்டு குடிகார மட்டைகள் பேசிக்"கொல்வது"தான் விடயம் ஐயா.

   நீக்கு
 15. என்னுடை பதிவெதும் போட்டதும் தமிழ்மணத்துல அறிமுகமாகுறதில்ல. பதிவு ஹிட் அடிச்சாலும் காட்டுறதில்ல. மறுமொழில மட்டும்தான் காட்டுது. இதுக்கு என்ன காரணம்?! நான் எதும் தப்பு செய்யலியே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ நான் ஏழாவது ஓட்டு போட்டேன் பிறகும் உங்கள் பதிவு தமிழ்மணம் பகுதிக்குள் வரவில்லை.

   உங்களுக்கு மைனஸ் ஓட்டு அதிகம் விழும் நேரத்தில் இதுவும் வேறு ?

   வலைச்சித்தரை தொடர்பு கொள்ளவும்.

   நீக்கு
 16. உண்மையில் நேரம் சரியில்லை போலத்தான் இருக்கு ஜி :)

  பதிலளிநீக்கு
 17. குடிப்பவர்களுக்கு காரணம் வேணுமே!
  கடிகாரம் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ நான் பழகியவரை எந்தக்குடிகாரனும் தனது செயலை தவறென்று ஒத்துக் கொண்டதே இல்லை.

   நீக்கு
 18. தங்கள் உரையாடல் பதிவிலான சிறந்த பதிவினை வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. ரசித்தோம்.....டாஸ்மாக் விடாதோ?!!! அது சரி குடிச்சா ஒன்னுமே புரியாதுனு சொல்லுறதுக்குக் காரணம் என்னனா தத்துவ பித்துக்களா மாறிடுறதுனாலயோ...ஹாஹாஹாஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம் கவிஞர் ஆவதற்காகவே கண்ணதாசன் குடிகாரர் ஆகியிருப்பாரோ... ?

   நீக்கு
 20. ரசித்தேன் அண்ணா...
  எல்லாருக்கும் நேரம் சரியில்லை போல... :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நன்றி
   இனி நல்லநேரம்தான்.

   நீக்கு