தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 08, 2018

ஆச்சாரி



இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவை படிக்க கீழே சொடுக்குக...

சூடான் நாட்டைச் சேர்ந்த அவாத் என்ற மனநோயாளி முரடன் அவனை எப்பொழுதுமே அவன் கேட்காமலேயே சுலைமாணி கொடுத்து சரி செய்து இருப்பேன் எனது செலவு இல்லையே எல்லாம் அரசாங்க பணம் அப்பொழுதான் நாம் காலம் தள்ள முடியும். அரபு மொழியில் பால் கலக்காத வரட்டீயைத்தான் சுலைமாணி என்பார்கள்.

புதன், செப்டம்பர் 05, 2018

மனிதமூளை



னிதனின் மூளை மென்மையானது என்று படித்து இருக்கிறேன், கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் எனது அனுபவத்தில் தவறென்றே கருத தோன்றுகிறது காரணம் நான் இருபது ஆண்டுகளாக அரேபியர்களுடனும், அரேபியப் பெண்களிடமும் மட்டுமல்ல, அரபுமொழி பேசும் அனைத்து நாட்டவர்களிடமும் பழகி வேலை செய்து இருக்கிறேன் ஆயினும் நான் இதுவரை மனநல மருத்துவமனைக்கோ, மனநல மருத்துவரையோ காணப் போனதில்லை. உலகத்திலேயே மிகக் கொடுமையானது என்ன தெரியுமா ? முட்டாள்களோடு இணைந்து வேலை செய்வதுதான். But one thing Indians will make more money and send to India.

ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

காலமது கூடியது



நினைவுகள் பின்னோக்கியதே
கனவுகள் நனவாகியதால்
கனவுகள் நனவானது
மனது மகிழ்வானது

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2018

எமது இனிய விழா




ணக்கம் இனிய நட்பூக்களே... கடந்த 23.08.2018 வியாழக்கிழமை அன்று எனது மகள் ரூபலாவுக்கும், எனது அன்புத்தங்கையின் மகன் விவேக்கிற்கும் மேலக்கொடுமலூர் குமரய்யா கோவிலில் மாங்கல்ய திருப்பூட்டும், மற்ற திருமண வைபவங்கள் பரமக்குடி ஐந்துமுனை லேனா மஹாலில் இறையருளாலும், தங்களது வாழ்த்துக்களாலும் சிறப்புடன் இனிதே நடைபெற்றது.

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2018

மகளுக்கு திருமணம்...



லைப்பூ உறவுகளுக்கு எனது மகள் ரூபலாவுக்கும், எனது அன்புத் தங்கையின் மகன் விவேக்கிற்கும் கொடுமலூர் குமரய்யா கோவிலில் திருமணம் மற்ற வைபவங்கள பரமக்குடி லேனா திருமண மஹாலில் சிறப்புற நடக்க இருக்கிறது. தங்களது மனப்பூர்வமான ஆசிகளை வேண்டி....