தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 30, 2023

அலங்காரமா ? அலங்கோலமா ?

வர்கள் என்ன உடையணிகின்றார்கள் ? இவளைச்சுற்றி இவளது உடையை தூக்கி கொண்டு ஆறு நபர்கள் மேடைக்கு அழைத்து வருகின்றார்கள். தெருவை பெறுக்கி வருவது போன்ற இந்த உடையின் விலை எவ்வளவு தெரியுமா ? பல லட்சங்கள். இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இந்த கொங்காச்சிறுக்கி மறைக்க வேண்டியதை மறைக்க வில்லையே... பிறகு இது எதற்கு ? யார் வாங்குவார்கள் ? சந்தனம் எவர் வீட்டில் மிஞ்சினால் வாங்குவார்களோ அவர்களுக்கே வெளிச்சம்.
 
சமூகத்தில் இந்த வகையான இழிவானவர்களுக்கே முதல் மரியாதை கிடைக்கிறது இதை உடுத்திக் காண்பித்து விட்டு இவள் போய் விடுவாள் அதற்கு அந்த விளம்பரத்துக்கு இவளுக்கு லட்சங்கள் சம்பளம். 1952-ல் பராசக்தி வெளியானவுடன் திரு சிவாஜி கணேசன் அவர்களின் தாயார் திரைப்படங்களில் நடித்தால் கூத்தாடிப்பயல் என்று யாரும் பெண் தரமாட்டார்கள் என்று அவசரமாக ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள் அவர்தான் திருமதி கமலா அம்மாள்.
 
அன்று ஆண்பாலுக்கே இந்நிலை இன்று பெண்பாலுக்கு ? தமனாவையும், அனுஷ்காவையும் வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய சென்னையிலும், நெல்லையிலும் இருவர் போட்டி போடுகின்றார்கள். அவர்களின் பெயர்கள் சட்டென நினைவுக்கு வர மறுக்கிறது. அதிராவுக்கு தெரியுமென்று நினைக்கிறேன்.
 
ஒருமுறை மதுரையில் துப்பட்டா எடுப்பதற்கு ஜவுளிக்கடைக்கு போனேன் சிறிய கடைதான் சிறிய பிரிமனை மாதிரி எடுத்துக் கொடுத்தார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை பிறகு அவர் பிரித்து கொடுக்கும் போதுதான் தெரிந்தது அதுதான் துப்பட்டா என்று கொசு வலை போன்றே இருந்தது.
 
என்ன இது இவ்வளவு மெல்லிசா இருக்குது ?
ஆமா ஸார் இது ஒன் ஸைட் சால்.
அப்ப மறு சைடு எதைப் போடுறது ?
 
நான், சற்றும் யோசிக்கவில்லை சுற்றி நின்றவர்கள் அனைவரும் பெண்கள்தான் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். ஒரு புழுவைப் பார்ப்பது போலவே... உண்மையில் இந்த நிலைக்கு ஆளாக்கிய இவர்களை நான்தான் பார்த்தல் வேண்டும். இந்த கொசு வலையை துப்பட்டா என்று போட்டுத் திரியும் இளைய சமூகத்தினரை நான் கட்டுப்படுத்துதல் இயலாது...
 
என்ன சார் சொல்றீங்க ?
நீங்க என்ன சொல்றீங்க ? இந்தக் கொசு வலை எனக்கு வேண்டாம் வேற நல்ல துப்பட்டா தாங்க இது எனக்கு பிடிக்கவில்லை.
நீங்க கேட்கிறது மாதிரி எங்கேயுமே இப்ப வர்றது இல்லை சார்.
சரி நன்றி நான் போறேன், இதை எடுத்து வைங்க...
 
கடைக்காரன் சொன்னது என்ன ? எங்குமே வருவது இல்லை காரணமென்ன ? பெண்கள் இவைகளை வாங்குவதால்தான் எங்கும் இந்த கொசு வலைகள். தவறான வழிகளில் நாமும், நமது சமூகத்தையும் செல்ல விட்டு பிறகு காலம் மாறி விட்டது என்று நொண்டிச்சாக்கு சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வாழ்கிறோம் இதுதான் உண்மை.
 
நாம் திரைப்படத்தில் கூத்தாடிகள் என்ன செய்கின்றார்களோ ? அதைச் செய்து வாழ்வதில்தான் ஆனந்தம் கொள்கிறோம். திருமண பதாகைகளில் மாப்பிள்ளையும், பெண்ணும் இணைந்தே காட்சி தருகின்றனர். திருமணத்துக்கு போனால் மணப்பெண் மேடைக்கு வரும்போதே குத்துப்பாட்டோடு ஆட்டம் போட்டு வருகிறார். இதை யாரும் தடுக்க நினைப்பதில்லை ஆரவாரித்து மகிழ்கின்றோம். கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன்பு. இக்காட்சியை ஆண்டிப்பட்டி முதல் அம்பேரிக்கா வரை புலனத்தில் அனுப்பி விடுகிறோம்.
 

திடீரென்று ஏதோவொரு காரணத்தால் திருமணம் நின்று விடுகிறது என்றால் அனுப்பிய காட்சிகளை வாபஸ் வாங்க முடியுமா ? இதற்கெல்லாம் காரணமென்ன ? திரைப்பட மோகம்தானே... இந்தியக் கலாச்சாரத்தை பிற தேசத்தான் மதிக்கின்றான். நாம்தான் மறந்து விட்டு அயல் நாட்டானை வேடிக்கை காண்கின்றோம். பாரதி சொன்ன புதுமைப்பெண்கள் வீதியெங்கும் பெறுகி விட்டனர். விதி யாரை விட்டது. நான் ஏற்கனவே சொன்னது போல் ஓர் வேதத்தில் சொல்லப்பட்ட வாசகம்தான் நினைவுக்கு வருகின்றது.
 
குதிரைக்கும், பெண்களுக்கும் மதிப்பு இழந்து விட்டால்
பிறகு உலகம் அழியும் வரை திரும்பக் கிடைக்காது.
 
சொன்னது யாராக இருந்தால் என்ன ? சொன்னது உண்மையாகி விட்டது
மதம் பார்க்க வேண்டாம் மனிதம் பார்ப்போம்.
 
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

82 கருத்துகள்:

 1. வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்துகொள்ள --- ஹா ஹா ஹா... யானையைக் கட்டி மேய்ப்பது யார்? ஶ்ரீதேவி, அவரின் மகள்கள் ஆடம்பரப் பிரியர்களாம். அதனாலேயே நிறைய கடனாம். ஒரு பார்ட்டிக்கு சர்வ சாதாரணமாக 80 ஆயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை ஒரு உடைக்கு ஶ்ரீதேவியின் மகள் செலவழிப்பாராம். அவங்களோட மேக்கப் செலவே மாத்த்திற்கு சில பல லட்சங்கள். ஃப்ராயாக் கொடுத்தாலும் பினாயில் வேண்டாம் என்ற நிலைமைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஃப்ரீயாக் கொடுத்தாலும் பினாயில் வேண்டாம்//

   வருக தமிழரே இதை முதலில் அதிரா நம்பட்டும் பிறகு நான் நம்புகிறேன்.

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐ ஒப்ஜக்சன் யுவர் ஆனர்... அடுத்தவரைக் குறை சொல்வதில் என்னா ஒரு ஆனந்தம்.... நம்மிடம் குறை இல்லையோ? கில்லர்ஜி, நெ தமிழன் எல்லாம் வேட்டியெல்லோ கட்டிக்கொண்டிருக்க வேணும் அப்படி எனில்...

   கார், பைக் எதுவும் வாங்கக்குடாது, அதை எல்லாம் கால மாற்றத்தோடு சேர்ந்து பண்ணிப்போட்டு, அடுத்தவரை மட்டும் குறை சொல்லிக்கொண்டு அதிலும் குறிப்பாகப் பெண்களை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

   நான் சொல்வது ஒரு விசயம் பிடிக்கவில்லையா, அப்போ அதைத் திரும்பிப் பார்க்காதீங்க, எதுக்கு அதைப்பற்றிச் சிந்தித்து எழுதி, இது வந்து சொல்வார்களே, கடவுளை நம்புவோரை விட, நார்த்தீகம் பேசுவோர்தான் எப்பவுமே கடவுளைப்பற்றி நினைப்பார்களாம்.. அப்படி எல்லோ இருக்குது இதுவும்.....

   ஆவ்வ்வ் இதென்ன இது ஆரையும் காணம், கீதாவாவது யெல்ப்புக்கு வருவா எனப் பார்த்தேன் கீதாவையும் காணமே...:)) மீ எஸ்கேப்ப்ப்ப்:).

   நீக்கு
  3. நெல்லைத்தமிழனுக்கு ஸ்ரீதேவியில் ஏதோ கோபம் போல:), விரலுக்கேத்த வீக்கம்தானே எல்லாம். ஏன் நாம் நம் பிள்ளைகளுக்கு நம் தகுதியை மீறினாலும் பாடுபட்டு சிலதைச் செய்கிறோம் தானே? அதை மட்டும் சரி என்கிறோம், அதை அடுத்தவர் பண்ணினால் டப்பா:).. ஹையோ எனக்கு பிபி ஏறுதே...

   கில்லர்ஜியின் இந்தப் பதிவை மீ வன்மையாகக் கண்டிக்கிறேன் ஜொள்ளிட்டேன்.. சே சே இதை விட மீ காசியிலயே இருந்திருக்கலாம் போல விசுவநாதா இது என்ன யோதனை:)

   நீக்கு
  4. வாங்க அதிரா
   சந்திரனில் விக்ரம் லேண்டிங் செய்து விட்டு வர்றீங்களா ?: இவ்வளவு ஸூடா இருக்கீங்க...

   விஞ்ஞான வளர்ச்சியில் நல்லதும் கெட்டதும் உண்டு.

   நம்மில் பலரும் கெட்டதையே அதிகம் நாடுகிறோம்.

   இதுதான் நமது சந்ததிகளுக்கு கடத்திச் செல்வதா ?

   நீக்கு
  5. //காசியிலயே இருந்திருக்கலாம்//

   காசியிலேயே இருந்தால் காசில்லாமல் போகும் பிறகு விஸ்வநாதன்தான் தரணும்.

   நீக்கு
  6. கில்லர்ஜி, நாம்தான் தப்பாக எண்ணுகிறோம், வருங்காலம் கெட்டிடுமோ என நினைச்சு நம் பிபியை த்தான் ஏத்துகிறோம், ஆனா நம்மைக் காட்டிலும் நம் வாரிசுகள் மிகத் தெளிவாக, களங்கமில்லாமல்தான் இருக்கினம் என்பது என் ஆணித்தரமான கருத்து, அவர்கள் சின்ன வயசிலிருந்தே இவற்றைப் பார்த்து வளர்வதால் அவர்களுக்கு இதெல்லாம் இப்படி ஆடை அணிவதெல்லாம் ஒரு விசயமே இல்லை...:).

   நீக்கு
  7. ஹா ஹா ஹா காசி விசுவநாதர் காசு தாராரோ இல்லையோ, நாம் நசிபட்டே செத்திடுவோம் அங்கு... அப்பப்பா என் வாழ்க்கையில் அப்படி அங்கு நசிபட்டதைப்போல எங்கும் நசிபடேல்லை நான் ஹா ஹா ஹா..

   நீக்கு
  8. வாங்க அதிரா இவர்கள் பிஞ்சிலேயே பழுத்து விடுகிறார்கள்

   அதிரா காசிக்கு வயதானவர்கள்தானே போவார்கள் ?

   நீக்கு
  9. https://www.shutterstock.com/shutterstock/photos/1945793290/display_1500/stock-photo-red-cat-running-down-the-street-1945793290.jpg

   நீக்கு

  10. /////அதிரா காசிக்கு வயதானவர்கள்தானே போவார்கள் ?////

   Haaaaaaaaaaaaaahaaaaaaaa aaaaahaaaaaaaahooohaaa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

   நீக்கு
  11. நான் ஜொன்னனே எனக்கு எடிரி வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்:).. இண்டைக்கு விடமாட்டேன்.. தேம்ஸ்ல தள்ளியே தீருவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)..

   https://media.istockphoto.com/id/1208665474/photo/running-cats.jpg?s=612x612&w=0&k=20&c=qKuSDH_jcXuYQnGIwmxzfmRNVniXMjtytI2G85WXAuA=

   நீக்கு
  12. யாரைத் தள்ளுவீங்க அதிரா ?

   நீக்கு
  13. வேறே யாரை  சந்திராயன் வயதானவர் என்ற  உண்மையை உரக்க சொன்ன உங்களைத்தான் :)

   நீக்கு
  14. நான் பொய் சொல்ல மாட்டேன் பிறகு எதற்கு தள்ளணும் ?

   நீக்கு
  15. ம்ஹூம்ம்ம் எத்தனை கோடி குடுத்தாலும் கில்லர்ஜியை மட்டும் இப்போ தள்ள மாட்டேனாக்கும்..:)...
   அந்த ரெண்டு போஸ்ட்டும் அவர் போட்டு முடிக்கோணுமெல்லோ:)))

   நீக்கு
  16. அதிரா அடுத்த போஸ்ட் போட்டு ஓரியூர் போயாச்சு நீங்க இன்னும் இங்கேயே பஞ்சர் பார்த்துக்கிட்டு நிற்கிறீங்க...

   நீக்கு
  17. ஆஆஆஆஅ இதுக்கு என் செக் தேன் காரணம் கர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னை டைவேர்ட் பண்றா, நில்லுங்கோ அவவி தேம்ஸ்ல தள்ளாமல் அங்கின வரமாட்டேன்ன்ன்ன்... இது அந்த காசி விசுவநாதர் வளவில நிற்கும் வேப்பமர இலைமீது ஜத்தியம்ம்ம்ம்ம்:)

   நீக்கு
  18. அதிராஅது வேப்பமரம் இல்லை புளியமரம் இனி அதுல மாங்காய் காய்க்குமா ?

   நீக்கு
 2. சமூகத்தில் பெண் பைத்தியங்கள் பெருகிவிட்டன. அதனால்தான் ரிசப்ஷனுக்கு ஆறு-எட்டு கிலோவில் இப்பல்லாம் மணமகள் உடை வாங்கிக்கொள்கிறாள். பிறகு எப்போதுமே அந்த உடையை அணிய முடியாது என்றபோதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஒருமுறைதான் உபயோகம் பிறகு அலமாரியில் வைத்து விடுகிறார்கள்.

   நீக்கு
  2. இதில் ஆண்களும் அடக்கம், பெண்களாவது வேறு திருமணத்துக்கு அவ்வுடையை அணியும் சந்தர்ப்பம் அமையும், ஆனா ஆண்களின் அந்த தலைப்பாகை, சூஸ் குர்பானி உடை எல்லாம் என்னா விலை தெரியுமோ? அது மணவறையுடன் நேரே அலுமாரிக்குப் போய்விடுகிறது...

   ஆண்களைப் பற்றிப் பேசலாமே எதுக்கு "அப்பாவிப்" பெண்களைப்பற்றியே எல்லோரும் பேசுறீங்கள்.. எதிர்க்க ஆரும் இல்லை என்ற தெகிறியம்போலும்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ இருக்கிறேன்ன்ன்..... ஆஆஆ தேம்ஸ்கரையில நிற்கிறேன் ரெடியாக தேம்ஸ்ல குதிக்க:))

   நீக்கு
  3. //தலைப்பாகை, சூஸ் குர்பானி உடை எல்லாம் என்னா விலை தெரியுமோ ? அது மணவறையுடன் நேரே அலுமாரிக்குப் போய் விடுகிறது//

   அதிரா இதெல்லாம் வீட்டின் அடுத்த திருமணத்துக்கு உதவுகிறது இதற்காகவே இப்பொழுது பலரும் வாடகைக்கு வாங்குகிறார்கள் .

   நீக்கு
  4. கில்லர்ஜி, வெளிநாட்டில் நம் மக்களுக்கு எல்லாமே ஓவராகிப்போச்சு.. அதனால வாடகைக்கு எடுத்தால் மதிப்பில்லையாம் என 2000 டொலர்களுக்கு தைத்தே எடுக்கின்றனர் மாப்பிள்ளைக்கு... பெருமை பேசத்தான் எல்லாம், ஆனா எனக்கிதில் உடன்பாடில்லை. வாடகைக்கு எடுத்துப் போட்டு மீதிப் பணத்தை ஊருக்கு அனுப்பினால், 4 குடும்பமாவது நல்லாயிருக்க உதவியாக இருக்கும்.

   ஆனாலும் ஒரு பழமொயி:) நினைவுக்கு வருதே....:)
   "பல்லிருக்கிறவர் பக்கோடா சாப்பிடுறார், நமக்கேன் எரியுது" ஹா ஹா ஹா.

   நீக்கு
  5. ஆம் இன்றைய மக்கள் பகுசிக்கு பஞ்சர் பார்க்கிறார்கள்.

   நீக்கு
 3. இரண்டாவது படம் புரியவில்லை. கோவில்களில் துப்பட்டா போட்டுத்தான் வரணும் என்றிருப்பதால்தான் துப்பட்டா வாங்குகிறார்கள். இல்லைனா அதற்கு என்ன உபயோகம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் படம்தான் மற்றொரு கோணத்தில் எடுத்தது.

   நீக்கு
  2. நெல்லைத்தமிழனுக்கு இப்போ என்னதான் பிரச்சனையாம் ஹா ஹா ஹா 2 வது படம் புரியவில்லையாமே.. கொஞ்சம் குளோசப்பில போட்டிருக்கலாமோ கில்லர்ஜி ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப அமைதியான பொண்ணூஊஉ:).

   நீக்கு
 4. உண்மை தான் நண்பரே. கூத்தாடிகளை கொண்டாடுவதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   நேற்று வலையொலியில் பார்த்தேன் ஒரு கூதரை சொல்லுது ரஜினிகாந்த் படத்தை ரூபாய் நோட்டில் போடணுமாம்

   நீக்கு
 5. உடை கலாச்சாரம் கெட்டு பல காலம் ஆகிவிட்டது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நமது முன்னோர்களே தொடக்க காரணம்

   நீக்கு
 6. கில்லர்ஜி, இப்ப நீங்க ஐஸ்வர்யாவை போட்டுச் சொல்லியிருக்கீங்க. ஆனால் நம் பழைய படங்களில் பரதநாட்டியம் என்றால் உடை அலங்காரம் அசிங்கமாகத்தானே இருக்கு அது போல ராணிகள் இளவரசிகள் எல்லாருமே அப்படியாஅகத்தானே உடை அணிந்து வராங்க. பழையபடம் என்பதால் அது பாரம்பரியமா? அப்போதைய படங்களிலும் அசிங்கமான உடைகள் ஏன் புடவை கூட அசிங்கமா கட்டியிருந்தாங்க.

  ஆண்களையும் சொல்லுங்க கில்லர்ஜி. உடை கட்டுப்பாடு என்றுசொன்னால் அவங்களுக்கும் உண்டு.

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இது இன்று, நேற்றல்ல நமது தாத்தாமார் எம்கேடியிடம் மயங்கி, அப்பாமார் சிவாஜியிடம் மயங்கி, நாம் கமலிடம் மயங்கி, பிள்ளைகள் விஜய்யிடம் மயங்கி, பெயரன்கள் சிம்புவிடம் மயங்கி, மயங்கி கிடக்கிறோம்

   தொடக்கத்தில் சமூக உணர்வுடன் எதிர்த்து இருந்தால் இந்நிலையில் வந்து இருக்காது

   நீக்கு
  2. கரெக்ட்....தான் கில்லர்ஜி....

   ஒரு காலத்தில் மக்களின் உடைகள் இப்படித்தான் இருந்தது. யார் வேண்டுமானாலும் யாரோடும் வாழலாம் பெற்றுக் கொள்ளலாம் என்ற சமூகம்தான் இருந்தது.
   அதன் பின் சமூகம், குடும்பம் கட்டுப்பாடுகள் என்று விதிமுறைகள் ஒவ்வொன்றாக உருவானப்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் உருமாறிக் கொண்டே வந்தது. சட்டதிட்டங்களும்.

   கீதா
   கீதா

   நீக்கு
  3. சமூக பொருப்பு என்பது மக்களிடம் இல்லை

   நீக்கு
  4. கீதா ரங்கன்/கில்லர்ஜி - ஆண்களுக்கு என்ன உடைக் கட்டுப்பாடு? அவனுஹதான் பெர்முடா டி.ஷர்ட் போட்டுக்கறாங்க (குறைந்த பட்சம்). அப்புறம் என்ன? இல்லைனா பேண்ட் ஷர்ட், வேஷ்டி சட்டை.

   நீக்கு
  5. வருக தமிழரே பெர்முடா இன்று வந்ததுதானே.. பழைய ஆட்கள் 16 வயதினிலே கமல் மாதிரிதானே இருந்தனர்.

   நீக்கு
  6. ஆவ்வ்வ்வ் கீதா என் வலது கையைக் கொஞ்சம் இறுக்கிப் பிடிச்சுக்கோங்க, நான் கொஞ்சம் பேசோணும் இங்கின:))...

   அதானே, சோர்ட்ஸ் சேர்ட் எல்லாம் எப்போ வந்தது?, இனி ஆரையாவது எங்காவது சோட்ஸ் உடன் பார்த்தால் அவ்ளோதேன்ன்ன்... ஜொள்ளிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா ஹையோ ராகு கேது மாற்றத்தால கில்லர்ஜியின் கையும் வாயும் ச்சும்மா இருக்காமல் போஸ்ட்டைப்போட, மீயும் மாட்டுப்படுறேனே:), பேசாமல் இருக்கலாம் எனத்தான் பொறுத்துப் பார்த்தேன் முடியல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்:))...

   இருப்பினும் கில்லர்ஜி, போஸ்ட் போடும்போது இனிமேல் கொஞ்சம் அதிராவையும் நினைக்கோணும் ஜொள்ளிட்டேன்:), அதாவது அதிரா பொயிங்குவா எப்பூடி ஜமாளிப்பதென ஹா ஹா ஹா

   நீக்கு
  7. அதிரா... இதெல்லாம் ஆபாசமில்லாத உடைதானே...

   ராகுல் கட்சியில் சேது சேரவே மாட்டான் இதை தெரிந்து கொள்ளுங்கள் .

   நீக்கு
  8. கில்லர்ஜி, இது ஆபாசமான உடை, இது ஆபாசமில்லாத உடை எனத் தீர்மானித்தது ஆரூஊ? எதை வச்சுத் தீர்மானிக்கிறீங்கள்??? கர்ர்ர்ர்ர்:)..

   4ம் வகுப்பில் எங்கட சிமியோன் ரீச்சர் சொல்லித்தந்தது இப்பவும் பசுமையாய் மனதில நிற்குது.
   ஒருநாள் ஒரு மரநிழலில் மண் தரையில் நம்மை இருக்க விட்டு, கதை படிச்சுக் காட்டினா ரீச்சர்.
   அப்போ முன்னால் இருந்த ஒரு பையனின் சோட்ஸ் இழுபட்டு, பின்னால இருந்து பார்க்கும்போது பின் பம் அப்படியே தெரிந்தது, அந்த இடைவெளியில் இன்னொரு பையன் மண் அள்ளி சோட்ஸ் உள்ளே போட்டுவிட்டான், இதைப் பார்த்ததும் சிமியோன் ரீச்சர் சொன்னா...
   "பிள்ளைகளா, நம் கை தெரிஞ்சாலோ கால் தெரிஞ்சாலோ அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லையே, அதைப்போலத்தான் உடம்பின் ஏனைய பகுதிகளும், பம் தெரிஞ்சால்கூட அதைக் கையைப் பார்ப்பதைப்போலத்தான் பார்க்கோணுமே தவிர, அது ஒன்றும் தப்பான பகுதி அல்ல" என...
   அப்போ நம் பார்வையில்தானே எல்லாம் அடங்குது, உடுப்பை இப்படிப் போடாதே அப்படிப் போடாதே எனச் சொல்வதை விட, பார்க்கும் பார்வையை மாற்றிட்டால் தப்புக் குறையும்.
   இப்போ நம் வாரிசுகள் சின்ன வயசிலிருந்தே, அனைத்தையும் பார்த்தே பழகுகின்றனர், இங்கு ஹை ஸ்கூல் உடுப்பு ஆண்பிள்ளைகளுக்கு ட்றவுசர் அண்ட் சேர்ட், பெண் பிள்ளைகளுக்கு ஸ்கேர்ட் அல்லது ட்றவுசர்.. அத்தோடு சேர்ட். ஸ்கேர்ட் என்ன சைஸ் தெரியுமோ? ஒரு சாண் தான் நீளம், அதைப்போட்டுக்கொண்டு குனியவும் முடியாது இருக்கவும் முடியாது, ஆனா இங்கு வந்து பார்த்தால்தான் தெரியும் அத்தனை பெண்பிள்ளைகளும் அந்த ஸ்கேட் மட்டுமே போடுவார்கள், நம்மவர்கள்தான் சண்டைப்பிடித்து உள்ளே ஸ்ரொக்கிங்ஸ் போட வைக்கின்றனர். அத்துடன் கழுத்தில் ரை கட்டோணும், பெண் பிள்ளைகளின் கழுத்தில் ரை இருக்கும், ஆனா சேட் பட்டின் நெஞ்சு தெரியும்வரை திறந்திருப்பார்கள். அப்போ இதை எல்லாம் 15 வயசிலிருந்தே பார்த்து வளரும் பிள்ளைகளின் மனதில் ஆபாசமில்லை,
   இங்கு பக்கத்து வீடுகளில் எல்லாம் கார்டினில் உள்ளாடைகளை பெரிதாக விரித்துத்தான் காயப் போடுவார்கள் எல்லாருக்கும் தெரியும், அதை யாரும் கண்டுகொள்வதில்லை...
   என்னைப்பொறுத்து எவ்வளவு தூரம் பொத்திப்பொத்தி மூடிக்கொண்டிருக்கிறோமோ அங்குதான் ஆபாசமான பார்வை, எண்ணம் ஆரம்பமாகுது.
   ஒரு செயலை செய்யாதே என்றால்தான், இன்னும் அதிகம் செய்யோணும் எனத் தோணுது.
   இப்போ இங்கு நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லியிருப்பது, உங்களுக்கு மதுபானம் அருந்திப்பார்க்க விருப்பமோ? சொல்லுங்கோ வாங்கித் தாறோம் ரேஸ்ட் பாருங்கோ, நண்பர்களோடு பேசும்போது எதுவும் தெரியாதென விளிக்கக்கூடாது, ஆனா வெளியில ரகசியமாக எதுக்கும் போயிடக்கூடாது, எதுவாயினும் நாங்கள் செய்ய ரெடி என.

   அதற்காக நான் சொல்வதுதான் சரி என்றில்லை, இருப்பினும் நம் எண்ணம், பார்வை அழகாக இருக்குமேயானால் அனைத்தும் அழகே என்பது என் எண்ணம்.

   ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் போகிறார் எனில், அதை திரும்பிப்பார்க்காமல் போயிட்டால் அத்தோடு முடிஞ்சிடும், ஆனால் இப்போ என்ன பண்ணுகிறார்கள், அதைப் பார்த்து ஒட்டி நின்று படமெடுத்து, உலகமெல்லாம் போட்டு அதன் மூலம் பணமும் சம்பாரித்து, இப்படிப் பரப்புவதே ஆண்கள்தானே.

   நீங்க மேலே போட்ட படத்தைக்கூட, ஆருமே எடுத்திராவிட்டால், நமக்கெல்லாம் இது தெரியவர வாய்ப்பே இல்லையே... அப்போ தப்பு எங்கு நடக்கிறது? இதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களால்தான்.

   நீக்கு
  9. வாங்க அதிரா ஆபாச உடைகளுக்கு அளவுகோல் இதை எப்படி விவரிப்பது ?

   ஆசிரியர்கள் எப்பொழுதுமே நல்ல விசயங்களையே கற்பிப்பார்கள்.

   சரி குழந்தையாக வாழும் பொழுது எல்லோருமே நல்ல பிள்ளையாக இருக்கிறோம். பிறகு எப்படி உலகெங்கும் இவ்வளவு அட்டூழியங்கள் நிகழ்கிறது ?

   இவைகளை நாம் எங்கு கற்றோம் ? இந்த சமூகத்தில்தானே ?

   இந்த சமூகம் அதலபாதாளத்தை நோக்கி செல்லவில்லை நாம்தான் கொண்டு செல்கிறோம்.

   தவறுகளை செய்யாவிட்டாலும் நிகழ்வதை தடுக்காதவரும் குற்றவாளியே...

   என்னால் இந்த சமூகத்தை சரி செய்ய முடியும் என்று அசட்டுத்தனமாக சொல்ல மாட்டேன்.

   ஒருக்கால் இந்திய திரைப்பட கசாநாயகனாக இருந்தால்கூட முடியலாம் ???

   அதிரா...
   நான் இன்னும் விரிவாக தேவகோட்டையிலிருந்து ஸ்கொட்லாந்த் இருக்கும் 38 கி.மீ. வரையில் விளக்கம் தரமுடியும்.

   ஆனால் தற்சமயம் கணினி இல்லாத இடத்தில் இருக்கிறேன் ஆகவே அலைபேசியில் இவ்வளவு எழுதுவது அதுவும் கருத்துரை பெட்டியில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை வடக்கே சூலம் வேறு அமைந்து விட்டது.

   நீக்கு
  10. ஆஆஆ கில்லர்ஜி ஊரில இல்லையோ:), அப்போ வாயில வருவதை எல்லாம் எழுதிப்போட்டு ஓடிப்போய்ப் புகைக்கூட்டுக்குக் கீழ ஒளிச்சிட வேண்டியதுதேன் ஹா ஹா ஹா.

   அதுக்குள் சின்னதா ஒரு ஆசைபோலும் கசாநாயகன் ஆவதற்கும் ஹா ஹா ஹா....

   சரி சரி நீங்க சொல்ல வருவதெல்லாம் புரியுது கில்லர்ஜி, ஆனா எப்பவும் வன் சைட் கோல் போல, பெண்களையும் உடையையும் திட்டுவதை, ஒருதடவையாவது மாற்றி யோசித்து, ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோருக்கும், ஏன் ஆண்களுக்கும்...

   சமுதாயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதுபோல, அறிவுரையாகவோ அல்லது இப்படி எல்லாம் செய்யாதீங்கோ என திட்டியோ[அப்போதானே சந்தடி சாக்கில் நானும் சேர்ந்து திட்டலாம்:)] ஒரு போஸ்ட் போட்டால் என்ன???... அப்பூடிப் போட்டால் உங்கட ஜேம்ஸ் ஊரணி வற்றி விடுமோ?:) இல்ல அந்த அம்மாள் ஆச்சிதான் கோவிச்சிடுவாவோ.. ??.. போடலாமே.. லாமே:)..

   அப்பாடா கணணி இல்லாமையால் மீ தப்பிச்சிட்டேன்ன்.. அந்தக் காசிநாதரின் மகிமையே மகிமைதேன்ன்ன்.. அப்போ மீ போட்டு வரட்டே:)..

   நீக்கு
  11. அதிரா நான் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் ஆண்-பெண் பேதம் பார்ப்பதில்லை.

   திரைப்படக் கூத்தாடன்களின் ரசிகர்களை கிழித்துத் கொண்டுதான் இருக்கிறேன்.

   நீங்கள் ஆடிக்குப் பிறகு அமாவாசைக்கு வருவதால் தங்களுக்கு நான் எழுதும் பதிவு தெரியவில்லை.

   இதற்கு நான் என்ன செய்வது ? சரி இனி நித்தியானந்தா போன்ற ஆன்மீக என்ற பெண்மோக ஆண் சாமியார்களை கிழிக்கிறேன்.

   நீக்கு
  12. ஆஆஆஆஆஆ நி.ஆனந்தா உயிரோடு இல்லையாமே கில்லர்ஜி...

   நீக்கு
  13. இருக்காரு நேற்று கூட பேசினேன்.

   நீக்கு
  14. ஆஆஆஆஆஆ ஆவியுலகத் தொடர்போடு இருக்கிறாரோ இவர்:)) நமக்கெதுக்கு ஊர் வம்பு மீ ரொம்ப நல்ல+ அமைதியான பொண்ணூஊ:)...

   நீக்கு
  15. உங்களோட தொல்லைபேசி இலக்கம் கொடுத்து இருக்கிறேன்.

   நீக்கு
 7. என் தனிப்பட்டக் கருத்து - இப்படியான உடைகளை நான் அணிவது கிடையாது என்றாலும், பாரம்பரியம் என்று இங்கு எல்லாரும் சொல்லும் உடைகளை நான் அணிவதில்லை. நான் பெரும்பாலும் பேன்ட் ஷர்ட், டீஷர்ட், பேன்ட் டாப்ஸ், சூடிதார் இவைதான். தலை முடியும் கிராப்தான். இவை என் சௌகரியத்துக்காக. புடவை கட்டுவதை விட இவை உடல் முழுவதும் மறைக்கின்றன என்பது என் தனிப்பட்ட கருத்து விருப்பம். நான் அணிவது போல பலரும் அணிகிறார்கள் நான் இப்படி அணிவதால் நான்ல் இல்லை மற்ற பெண்களோ மோசமானவளா என்ன?

  கில்லர்ஜி துப்பட்டா பல கடைகளில் நல்ல அழகாக நீளமாக அகலமாகக் கிடைக்கின்றனவே. நானே கூடத் தனியாக துப்பட்டா வாங்கியிருக்கிறேனே இதோ இப்போது கூட, இங்கு பல கடைகளில் விற்கிறார்கள். துப்பட்டாக்கு என்றே பல கடைகள் இருக்கின்றன.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துப்பட்டா போடுவதை பெரும்பாலும் இன்றைய இளைஞிகள் விரும்புவதில்லை.

   நாட்டில் பெருகிவரும் இளைஞர்களின் தவறான போக்கு தெரிந்து இருந்தும் நாம் பாதை மாறாமல் நடப்பது தவறான செயல்

   சேலையைவிட சுடிதார் பாதுகாப்பான உடையே பாக்கிஸ்தானின் பெண்கள் சரியாக உபயோகப்படுத்துகின்றனர்

   நீக்கு
  2. என்னா பேச்சுப் பேசுறீங்க... துப்பட்டா போட்டிட்டால் மட்டும் ரேப் எல்லாம் ஒளிஞ்சிடுமோ? அப்போ குழந்தைகளை சீரழிப்பதைப்பற்றி என்ன சொல்வது?..

   சுடிதார் நம் கலாச்சாரம் இல்லையே கில்லர்ஜி, ஆதிகாலத்தில் பிளவுஸ் இல்லாமல்தானே சேலை கட்டினார்கள்.. அதை மட்டும் ஏற்றுக் கொண்ட சமூகம், இப்போ கை இல்லாமல் கழுத்தில்லாமல் போட்டா மட்டும் ஏன் உதைக்குது இடிக்குது என்று புலம்புறீங்கள்? முந்தைய காலத்துத் தாத்தாக்கள் எதுவும் புலம்பவோ குறை சொல்லவோ இல்லையே...

   பெண்களைக் குறை சொல்வதை விட்டுப்போட்டு சட்டத்தை கூட்ட வேண்டும், சவூதி அரசாங்கம் போல, தப்பு நடந்தால் உடனே கையைக் காலை வெட்டிவிடோணும் அப்போதான் சமூகம் திருந்தும்,
   கையில ஒரு புண் வந்திருக்குதெனில் புண்ணுக்கு மருந்து போட்டால் பத்தாது, அது ஏன் வந்ததென, அதன் அடிவேரைக், காரணத்தைக் கண்டறிஞ்சு அதுக்கு மருந்து செய்யோணும்.

   நீக்கு
  3. துப்பட்டா போட்டால் மட்டும் கற்பழிப்பு குறையாது.

   அதற்கு நல்ல குழந்தைகள் பிறக்கணும், இதற்கு முதலில் நல்ல பெற்றோர் வேண்டும்.

   முதலில் இதற்கு அரபு நாட்டு சட்டங்கள் இங்கு வேண்டும்.

   //முந்தைய காலத்துத் தாத்தாக்கள் எதுவும் புலம்பவோ குறை சொல்லவோ இல்லையே...//

   அன்று மனிதநேயமுள்ளவர்கள் வாழ்ந்தார்கள், இன்று மிருகங்கள் பெருகி விட்டதே... காரணம் வளர்ப்பு முறை.

   நீக்கு
  4. மேலே எழுதியிருக்கிறேன், அதுபோல ஆண்களுக்காகவும் ஒரு போஸ்ட் போடலாமே கில்லர்ஜி.

   முக்கியமாக இந்தியாவில், ஆண் பிள்ளைகளே பெற்றோரைப் பார்ப்பதால், ஓவராக ஆண்பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்தும் சப்போர்ட் பண்ணியும் வளர்க்கின்றனர், இதனாலும் சரி பிழை நல்லது கெட்டது தெரியாமல் சிலர் வளருகின்றமையாலயும்தான் இப்படியான வன்முறைகள் பெருகுகின்றன.

   நீக்கு
  5. சரி விரைவில் எழுதுகிறேன் அதிரா

   நீக்கு
 8. என் ஆசிரியை சொல்லிக் கொடுத்த ஒரு பாடம் இன்னும் என் மனதில் - எந்த உடையாக இருந்தாலும் உன் உடை உன் மீது மரியாதையை வரவழைக்க வேண்டும் என்று. அது இப்போது வரை.

  நீங்கள் சொல்லியிருக்கும் பதிவின் உட்கருத்தை ஆதரிக்கிறேன். நம் மரியாதை நம் கையில் என்பது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உன் உடை உன் மீது மரியாதையை வரவழைக்க வேண்டும்//

   மிகச்சிறந்த வார்த்தை

   நீக்கு
 9. இதை எல்லாம் நாம் சொன்னால் சொல்றவங்க தான் பைத்தியக்காரங்க. சொல்லாமல் இருப்பதே நலம்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   ஆம் உண்மைதான் இப்படித்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது சமூக அக்கறை உள்ளவர்களுக்கு...

   நீக்கு
 10. உடையில் மாற்றம் காலம் தோறும் நடந்து கொண்டே இருக்கிறது.
  உடையில் கண்ணியம் மரியாதையை கொடுக்கும்.

  //மதம் பார்க்க வேண்டாம் மனிதம் பார்ப்போம்//
  ஆமாம், மதம் கடந்த மனித நேயம் வேண்டும்.

  -

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   பாக்கிஸ்தான் மக்கள் ஆணும், பெண்ணும் ஒரே போல்தான் உடையணிகின்றார்கள் பெண்ணிடம் துப்பட்டா கட்டாயமாக இருக்கிறது எவ்வளவு கண்ணியம் தெரியுமா ?

   எல்லா விடயங்களிலும் மதம் பார்ப்பதால் நல்ல கருத்துக்கள் மக்களுக்கு தெரியவில்லை.

   நீக்கு
 11. சென்னைக்காரர் ரசிப்பதோடு சரி.. திருமணம் செய்ய மாட்டார்!

  பதிலளிநீக்கு
 12. இப்படி உடைகள் அணிந்தால் அது அவரவர் விருப்பம் ஆயினும், பாராட்டுபவரும் கவனிக்கிறார், திட்டுகிறவரும் கவனிக்கிறார்.  மற்றவர்கள் பத்தோடு பதினொன்றாகிவிடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடையணிவது அவர்களது சுதந்திரம் ஆனால் அது சமூகத்திற்கு இடையூறு செய்யக்கூடாது ஜி.

   நீக்கு
  2. கில்லர்ஜி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்... சமூகத்தை விடுங்கள், இப்போ மேலே போட்டிருக்கும் படத்தால், அந்த உடையால் உங்களுக்கு என்ன இடையூறு வந்திருக்குது????

   நீக்கு
  3. எனக்கு இடையூறே கிடையாது. அடுத்த சந்ததிகளை நல்வழிபடுத்தும் கடமையாளர்களில் எனது பங்கு இதை இயன்றவரை தடுப்பதே...

   இதையெல்லாம் தொடக்கத்திலேயே எதிர்க்காத காரணத்தால் இந்த ஆபாசம் சாதாரணமாக போய் விட்டது.

   இது இன்னும் பத்து ஆண்டுகளில் இதைவிட கேவலமான நிலையை தொடும்.

   நீக்கு
  4. உங்களுக்கு இடையூறு இல்லை எனில், அடுத்தவருக்கு மட்டும் அது இடையூறு என ஏன் எண்ணுகிறீங்கள்? உங்களைப்போலத்தான் அடுத்தவரும் எனத்தானே எண்ணோணும்... பேசாமல் இருக்க வேண்டியதுதானே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

   சே..சே.. 4ம் திகதி ராகு கேது பெயர்ச்சியாம்:).. அது இப்பவே என்னை இடம்பெயர வச்சிடும்போல இருக்கே விஸ்வநாதா....:).

   நீக்கு
  5. அதிரா நான் திருடன் இல்லை என்னைப் போல்தான் எல்லோரும் திருடர்கள் இல்லை என்று நம்பினேன். ஆனால் சிறையில் கூட்டம் நிரம்பி வழிகிறது எப்படி ?

   நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை ஆனால் நான் நம்பிய உறவுகள் எல்லோரும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்களே ஏன் ?

   இவர்களை நம்பிய நான்தானே அறிவற்ற குற்றவாளி.

   நான் மீண்டும் சொல்கிறேன் அடுத்த தலைமுறைகளுக்கு நல்ல புத்திமதிகள் சொல்லிச் செல்வது நமது கடமை இதில் பெற்றோர் பார்க்கக்கூடாது கயமை.

   நீக்கு
 13. உடை என்பது அவரவர் உடல் அமைப்புக்கு ஏற்ப மரியாதையுடன் இருந்தால் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உடைகள் கௌரவமாக அணிந்தால் மரியாதை கிடைக்கும்.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. பதிவில் தங்கள் ஆதங்கம் புரிகிறது. நல்ல மதிப்பான உடை அவரவர்களின் சுதந்திரமான தேர்வுதான். ஆனாலும் இப்படியான உடையை எவராலும் அணிய முடியாதென்பதே என் கருத்தும்.மறுபடியும் ஆதி காலத்திற்கே மனிதர்கள் போகாமலிருந்தால் சரி..! ஆனால் அதுவும் ஓர்நாள் வந்து விடுமோ என்னவோ? பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தாங்கள் சொல்லும் நிலைக்கு காலம் வந்து விடும் போல...

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

   நீக்கு
 15. @ கீதா..

  // ஒரு காலத்தில் மக்களின் உடைகள் இப்படித்தான் இருந்தது. யார் வேண்டுமானாலும் யாரோடும் வாழலாம் பெற்றுக் கொள்ளலாம் என்ற சமூகம்தான் இருந்தது.. //

  சும்மா எதையாவது அடித்து விடக் கூடாது..

  இந்நாட்டில் நீங்கள் சொல்வது போல மன்னரும் மக்களும் வாழ்ந்த காலத்தை குறிப்புகளுடன் சொல்லியிருக்கலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன துரை அண்ணன் இப்பூடிச் சொல்லிட்டீங்க... தேவதாசிகள் எப்போ வாழ்ந்தார்கள்?, முற்காலத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் 2 மனைவிமார் அல்லது மறைமுகமாகமாவது ஒரு மனைவி இருந்திருக்கிறா, இதை மறுக்க முடியுமோ?

   கால ஓட்டத்தில் ஆண்களின் உடைகள் மாறியிருப்பதைப்போலவே பெண்களின் உடையும் மாறி வருகிறது.

   நீக்கு
 16. இடுப்பில் இருந்து
  கெண்டைக்கால் வரையிலும் இறுக்கமான உடுப்பு.. மேலே ஒரு தொள புளா..

  சேலை, பாவாடை தாவணியை மறந்த பலநூறு பெண்கள் - திருச்செந்தூர் கடற்கரையில்,

  இதையெல்லாம் நீ ஏன்டா பார்த்தாய்?..

  இதையும் பார்த்துக் கொள் என்பது காலத்தின் கட்டளை..

  பாவப்பட்ட ஆண்கள் வேட்டியை சுருட்டிக் கட்டிக் கொண்டும் அரை டவுசருடனும் குளித்து விட்டுக் கரையேறிக் கொண்டிருந்தனர்..

  உடை விசயத்தில்
  ஆப்கானிஸ்தான் சட்டங்கள் இங்கே வந்தால் நல்லது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   ஆப்கானிஸ்தான் உடையைவிட சூடான் நாட்டு பெண்களின் உடை மிகவும் கண்ணியமானது நமது நாட்டு சேலைதான் ஆனால் வித்தியாசமானது.

   நீக்கு
 17. @ கில்லர் ஜி

  /// தமனாவையும், அனுஷ்காவையும் வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய சென்னையிலும், நெல்லையிலும் இருவர் போட்டி போடுகின்றார்கள். ///

  அருமை..

  பதிலளிநீக்கு
 18. /// கூத்தாடிப்பயல் என்று யாரும் பெண் தர மாட்டார்கள் என்று அவசரமாக ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள் அவர்தான் திருமதி கமலா அம்மாள்.///

  அவருக்கு - முறைப் பெண் தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி உறவுதான் குறிப்பிட மறந்து விட்டேன்

   நீக்கு
 19. நண்பருக்கு வணக்கம்.

  உடை கலாச்சார மாற்றம் நிகழும்போது அது நமக்கும் நம் குடும்பத்திற்கும் இந்த சமூகத்தில் என்ன பெயரை உருவாக்கும் என்பதை சற்றே சிந்தித்து நமக்கான உடையை தேர்ந்தெடுத்து அணிவது சிறப்பு, இது ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.

  வசதிக்காக அணிந்தாலும் கவ்ரவமான ஆடையாக மற்றவர்கள் முகம் சுளிக்கும் வடிவமைப்பு கொண்ட ஆடைகளணிவது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என்றாலும் அது அவரவர் மன நிலையையும் பின்னணியையும் சார்ந்ததாகவே இருக்கின்றது.

  தாங்கள் காட்டியிருக்கும் உதாரண படங்கள் ஏதோ மாடலிங் போல தெரிகிறது, அதே சமயத்தில் இதுபோன்ற ஆடைகள் சாதாரண புழக்கத்திற்கு ஏதுவானது இல்லை என்பது அணிந்தவருக்கும் உருவாக்கியானவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்கு தெரியும்.

  இத்தகு ஆடைகளை அணிந்துகொண்டு சாலையில் நடக்க முடியுமா அல்லது வாகணத்தில்தான் சவுகரியமாக பயணிக்க முடியுமா? கூடவே குறைந்த பட்சம் இரண்டு பேராவது துணைக்கு - உதவிக்கு உடனிருக்க வேண்டுமே.

  மேலை நாடுகளில் (பெண்களுக்காண) திருமணத்திற்கென்று வாங்கப்படும் விலை உயர்ந்த ஆடைகள் அன்றைய ஒரு சில மணி நேரங்கள் தவிர்த்து வேறெந்த சந்தர்ப்பங்களுக்கும் சிறிதும் உதவாத நிலைதான் நீடிக்கின்றது.

  சிலர் தங்களது சமூக அந்தஸ்து அல்லது பொருளாதார அந்தஸ்த்தை பிரதிபலிக்கும் என்றெண்ணி இது போன்ற வடிவமைப்புகள்பால் ஈர்க்கப்படுகின்றனரோ?

  திருமண நாள் அன்று மணமகன்/ மணமகள் ஆடிபாடிக்கொண்டே மண மேடை வருவது புரட்சி என்றோ அல்லது புதுமை என்றோ கருதுவதால் இப்படி என்று நினைக்கின்றேன், இதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்.

  "துணி"ச்சலான அலசல்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது கருத்தை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு