தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 18, 2016

பட்டுக்கோட்டை, பட்டமரம் பட்டாம்பி


ரங்கொத்தி பறவை போல என் மனம் கொத்தினாயே
ரத்தில் கட்டி வைத்து எனை அடி வாங்க விட்டவளே

ரசமாடி என்னை சறுக்கி விழ வைத்த வைதேகியே
ட்டையின்றி சாட்டையால் அடி வாங்க வைத்தவளே

ர் ஊராய் சுற்றி க்ரெடிட் கார்டை தேய்க்க வைத்தாயே
மைக்குத்து வாங்க வைத்து ஊமையாகிப் போனவளே

ரை மணித் துளியில் பலமுறை ஐநூறைக் கரைத்தாயே
றை வாங்கி கொடுத்து விட்டு அப்பாவியாய் நின்றவளே

செல்லும் இடமெல்லாம் செல்லுக்கு ரீ-சார்ஜ் ஏற்றினாயே
செருப்படி வாங்கும் போதும் சென்று விடாமல் ரசித்தவளே

சாயங்காலம் ஆனதும் சாமந்தி தோட்டத்துக்கு அழைப்பாயே
சாணியால் அடிக்கும் போதும் சாய்ந்து கொண்டு பார்த்தவளே

விடிந்தவுடன் இன்றும் உனக்கு விருந்து என்று சொல்வாயே
விளக்கமாற்றால் அடிக்கும் போது விலகி நின்று ரசித்தவளே

காரிருள் சூழ்ந்தாலும் சிரிக்கும் கதைகள் ஆயிரம் பேசினாயே
காறித்துப்பும் பொழுது எனை யாரோவென கண்டு களித்தவளே

ளீர் பளீரென சிரித்து என மனதை கதி கலங்க வைப்பாயே
டீர் படீரென பலரும் பலமுறை பந்தாடப் பார்த்தவளே

ண்ணில் கண்ட இடமெல்லாம் மல்லிகைப்பூ வாங்கி கேட்பாயே
ரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை ஏற்றியதையும் கண்டவளே

உனது கனவுகளுடன் வருங்கால கணவனுடன் நலமுடன் நீ வாழ ! உன் குலம் வாழ ! நான் போறேன் நாட்டை விட்டு.

இப்படிக்கு
பட்டு அழுந்தி பட்ட மரமாகிய பட்டுக்கோட்டை பட்டாம்பி

42 கருத்துகள்:

 1. ரசித்தேன்.
  பாவம் பட்டாபி. ;)

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. ஹாஹாஹா வருக முனைவரே
   அரபுநாட்டில் 20 வருட இளமைக்காலத்தை கழித்தவனுக்கு இப்படி வாழ்க்கை சாத்தியமில்லையே... எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும்.

   நீக்கு
 3. ஆரம்பத்திலேயே சுதாரித்திருக்க வேண்டும்!..

  ஓஹோ!... அதற்குள்ளும் ஒரு சுதா இருக்கின்றாளே!..

  கண்ட இடத்திலும் மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்தால் -
  கல்யாண மாலை கிடைக்கின்றதோ இல்லையோ -

  கரும்புள்ளி செம்புள்ளி - கழுதை சவாரி நிச்சயம்!.. - என்ற நீதி அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சரியாக கணித்தீர்கள் இது பட்டாம்பி போன்றவர்களுக்கு பட்ட பிறகே விளங்குகின்றது...

   நீக்கு
 4. நானாயிருந்தால் கொலை செய்து விட்டு உலகத்தை விட்டே போயிருப்பேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பட்டாம்பிக்கு தெரிஞ்சது இவ்வளவுதான் போல....
   குறிப்பு – சில விடயங்கள் தலைப்புக்கேற்றவாறு எழுதி முடிக்க வேண்டியுள்ளதே ஜி

   நீக்கு
 5. பட்டாம்பி பட்டம்பியாய் பாவம்...அது சரி அது தேவக்கோட்டை என்பது தவறுதலாய் பட்டுக்கோட்டைனு வந்துருச்சோ...ஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயய்யோ எல்லோரும் இப்படியே முடிவு பண்ணிடுவீங்க, போலயே...

   நீக்கு
 6. நல்ல அனுபவ வரிகள் பதிவாயிற்றோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா ஐயா நீங்களுமா ? இப்படி கேட்கிறீங்க....?

   நீக்கு
 7. பதில்கள்
  1. பாவம்னு சொல்லிட்டு சிரிக்கலாமா ஜி ?

   நீக்கு
 8. பட்டாம்பியின் புலம்பல் கூட சிரிக்க வைக்கிறதே!

  பதிலளிநீக்கு
 9. அனுபவப் பகிர்வோ! ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்பனையை அனுபவம் என்று சொல்லி விட்டீர்களே... நண்பரே...

   நீக்கு
 10. பட்டாம்பி பாவம் தான்! :) நல்ல அனுபவம் தான் பட்டாம்பிக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனி ஒழுக்கமாக வாழ்வான் வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 11. பட்டாம்பியை இப்படி புலம்ப வைத்தவள் சீக்கிரமே கிழவியாகக் கடவது.....!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா அதெப்படி நண்பரே எல்லாவற்றுக்கும் வயது வரவேண்டுமே...

   நீக்கு
 12. என்ன ஒரு சொகம்....மன்னிக்கவும் சோகம் தான் சுகமாகிவிட்டது..தலைப்புகளும்,எழுத்தும்...கைவரப்பெற்றுவிட்டது...விடாமல் எழுதும் முயற்சி...என்னைப்போன்றோர்க்கு ஊக்கமருந்து....நன்றியும்..வாழ்த்துகளும் ஜி

  பதிலளிநீக்கு
 13. வாங்க கவிஞரே... இன்னாது உங்களைப் போன்றோர்க்கு ஊக்கமருந்தா ? இதுக்கு எனக்கு தூக்கமருந்து அனுப்பியிருக்கலாம் இது உங்களுக்கு ஓவராக இல்லை....?

  பதிலளிநீக்கு
 14. சோகத்தைக் கடத்தி விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 15. பட்டாம்பி பட்ட கேட்டை
  பட்டென்று உள்ளத்தில் ஏற
  அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு
 16. பதில்கள்
  1. பட்டாம்பிக்கு நேரம் சரியில்லை நண்பரே

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே எனது அனுபவம் இல்லை நண்பரே...

   நீக்கு
 18. அன்புள்ள ஜி,

  ‘சதி...’ லீலாவதி... வலையில் மாட்டிக்கிட்டாரு...!

  த.ம. 9

  பதிலளிநீக்கு
 19. அருமை நண்பரே
  அனுபவமா....???

  பதிலளிநீக்கு
 20. அருமை ஐயா.இரசித்தேன் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. கற்பனையை கவிதையாக்கிவிட்டீர்கள்.பதிவை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு