தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 28, 2016

கோவிலூர், கோடரி கோவிந்தன்


தோ பஸ்ல... போறானே கோடரி கோவிந்தன் கோபக்காரன் அவன் நல்லா ஹைக்கூ கவிதை எழுதுவான், ஆனா, வன்முறையாகத்தான் எழுதுவான்.
எப்படி ?

சுத்தியலை எடுத்து நெத்தியில் அடித்து பாத்தியை கட்டி பாத்தியா ? இந்த மாதிரி.
அடடே... கவிதை பிரமாதம்.

இவனோட கவிதைக்கு பாக்கிஸ்தான் விருதுகூட கிடைச்சுருக்கு.
எந்த கவிதைக்கு ?

துப்பாக்கியை எடுத்து பாக்கியராஜை சுட்ட துர்பாக்கியம் எமக்கேன் ?
இது நமக்குத்தானே பெருமை.

மெதுவாப்பேசு அவன் காதுல விழுந்தால் ? உனக்கும் விழும் வெட்டு.
ஏன் ? இப்படிச்சொல்றீங்க ?

உன்னைப் போலத்தான் ஒருத்தன் பெருமையா பேசுனான் இவனுக்கு தெரிஞ்சு பேசினவன் வீட்டுக்குப் போய் பெருமைப்பட பேசிய நாக்கே உமக்கு இதோ ஏகே. அப்படினு சொல்லிக்கிட்டே அவன் வாயிலேயே போட்டான் 47 குண்டு.
ஆத்தாடி பயமாவுல இருக்கு.

இப்படித்தான் இவன்கிட்ட ஒருத்தன் கடன் வாங்கியிருக்கான், இவன் கவிதை எழுதி தூது விட்டான்.
எப்படி ?

பாக்கி வாங்கிய பாக்கியநாதா பாக்கியை நீ தா தா அப்படினு...
அவன் கொடுத்தானா ?

பதிலை அவனும் ஒரு கவிதை போல எழுதி விட்டுக்கான்.
எப்படி ?

இந்த ஏரியாவுக்கே நான் தாதா நீயெல்லாம் எனக்கு சாதான்னு.
அய்யய்யோ அப்புறம் ?

இவனுக்கு கோபம் வந்து ஹாக்கி மட்டையாலே அடிச்சு பாக்கி கொடுக்க வக்கில்லாத பக்கி உனக்கு எதுக்கு இந்த பாக்கிய லட்சுமி அப்படினு அவன் பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு வந்துட்டான்.
என்னய்யா ? இது மானக்கேடா இருக்கு.

ஆமா, இந்த லட்சணத்துல தேவயானிக்கு கவிதை எழுதிக் கொடுத்துருக்கான்.
எப்படி ?

தேவகோட்டை தேவதையே, தேவயானி எனக்கு தேவையே நீ அப்படினு...
ம், அப்புறம் ?

தேவாங்கு நீ எனக்கு தேவையில்லை நீ அப்படினு அவ சொல்லிட்டா.
பிறகு என்னாச்சு ?

எனக்கு தேவைப்படாத நீ தேவையில்லை உலகுக்குனு உலக்கையாலே அடிச்சுக் கொன்னுட்டான்.
அப்படீனா போலீஸ் இவனை கைது பண்ணலையா ?

இவனை கைது பண்ண வாரண்டோட வாரேன்டானு அலைஞ்சிருக்கார் இன்ஸ்பெக்டர் இன்பமூர்த்தி.
சரி.

வாரண்டோட வாரேன்டானு சொன்னவரு வீட்டுக்குப் போயி வராண்டாவுல ரவுண்டு கட்டி அடிச்சுருக்கான் இந்தக் கோவிந்தன்.
அப்புறம் ?

நான் போறேன்டா, போடி நாயக்கனூருனு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டாரு இன்ஸ்பெக்டரு.
இதெல்லாம் பத்திரிக்கைகாரனுக்கு தெரியலையா ?

நம்ம ‘’தினக்குடுக்கை’’ பத்திரிக்கையில் பத்தி, பத்தியா எழுதுனான் பக்கிரிசாமி.
சரி.

கோபமாக கோடரியோடு போனவன் எழுதுன, கையி எனக்கே சொந்தம்னு கையை வெட்டி கையோட கொண்டு வந்துட்டான்.
என்ன இது காலக்கொடுமையாவுல இருக்கு சரி, கையிலே ஒரு கையேடு வச்சு இருக்கானே.. அதென்ன ?

அந்தக் கையேடுலதான் யாரு... கை எடுத்தேன், கால் எடுத்தேன், தலையெடுத்தேன் இப்படிக் குறிப்புகள் எல்லாம் இருக்கும்.
அந்தக் குறிப்பு இருந்தால் நாளைக்கு போலீஸ் புடிச்சுக்கிருமே..

அட நீ வேற அவன் அதை அவுங்கள்ட்ட கொடுத்துதான் விக்கி பீடியாவுல அப்டேட் பண்ணச்சொல்றான், அப்புறம் அவன்ட்ட போயி இந்தக் கையேடு எதுக்குனு ? கேட்டுடாதே உன் கையை எடுத்துடுவான்.
இதையெல்லாம் தடுக்க ஒரு வில்லங்கத்தார் வராமலா... போயிடுவாங்க ?

சரி அவன் திரும்பி வர்றான் அவன் காதுல விழுந்துடுச்சோ என்னமோ, கையிலே கோடரி வச்சுருக்கான் நீ மேற்காலே போ, நான் கிழக்காலே போறேன் அவன் வந்தால், முதல்ல உன்னைத்தான் போடுவான்.

(இருவரும் ஆளுக்கொரு திசையை நோக்கி நகர்ந்தார்கள்)
 
இதற்கு மேல் என்னாச்சுனு அந்த பகவான்(ஜி) மேலே சத்தியம் எனக்கு தெரியாதுங்கோ - கில்லர்ஜி

32 கருத்துகள்:

 1. ரசித்தேன் நண்பரே. ஏன் தமிழ்மணம் இன்னும் சப்மிட் ஆகவில்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ரசித்தமைக்கு நன்றி தமிழ் மணம், மனம் வைத்தால் வரும்..... ஆளா வராது.....

   நீக்கு
  2. இப்பப் பாத்துட்டுப் போட்டுட்டோம்ல தம வாக்கு!!! :))

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 2. எல்லாம் பேசிவிட்டு கடைசியில் உன்னைத்தான் போடுவான் என்று பயமுறுத்திவிட்டீர்களே? உங்களைப் போடமாட்டானா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல் பேசுவதுதானே மனிதனின் இயல்பு குணம்

   நீக்கு
 3. ஆகா
  தங்களால் மட்டும்தான் முடியும் நண்பரே
  இதுபோல் எழுத
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 4. ஹஹஹ அங்க வெட்டுவான் இங்க வெட்டுவான்னு சொல்லிட்டு நீங்க எஸ்கேப்பா..கிழக்கால போன உங்களைத்தான் அவன் ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கான்...எல்லாம் இந்த வில்லங்கத்தார் போட்டுக் கொடுத்ததுனாலத்தான்...அப்படினு பகவான்ஜி மேல சத்தியமா ஃபாலோ பண்ணுவது வரை தெரியும்....சத்தியமா போட்டுக் கொடுத்தது மட்டும் தெரியாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா போட்டுக்கொடுத்தது நீங்கதானா ? நாங்களும் கோடரிப்பார்ட்டிதான்.

   நீக்கு
 5. கில்லர்ஜியின் கில்லர் பதிவு . ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 6. சத்தியம் என் மேல் பண்ணியிருப்பதால்...அப்புறம் நடந்ததை நானே சொல்லி விடுகிறேன் !
  அவங்க ரெண்டு பேரும் ,போடி போற பஸ்ஸிலே மூணாவது லேடிஸ் சீட்டிலே உட்கார்ந்து போறாங்களே ,நீங்க பார்க்கலையா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா உங்களுக்கும் மட்டும் எல்லாம் தெரிந்து விடுகின்றதே பகவான் என்பதாலோ.....

   நீக்கு
 7. அக்கப்போர் ஆறுமுகம் அங்கே தான் வந்து கொண்டிருக்கின்றானாம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஆறுமுகம் அபுதாபிக்கா வர்றான் ?

   நீக்கு
 8. சுத்தியலை எடுத்து நெத்தியிலே போடுவது போன்ற ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் உங்களுக்கு முனைவர் பட்டம் த்ரலாம்

  பதிலளிநீக்கு
 9. நல்லா உத்து பார்க்கையிலேதான் தெரியுது இடக்கையில் இருப்பது குறிப்பேடுன்னு....நீங்க கோடாரிய காட்டி சொன்னது புரியுது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே இப்பத்தான் உற்று பார்த்தீங்களா ?

   நீக்கு
 10. எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க! நல்ல கர்பனை வளம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணு வைக்காதீங்க மூளை வளராமல் போயிடும்.

   நீக்கு
 11. அப்பப்பா எப்படியப்பா இப்படி எழுதறீங்க!..சூப்பர்
  சார்!.....ரசித்தேன்...
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 12. சூப்பர் ஜி சூப்பர்.நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு

 13. கவிதை எழுதுபவர்கள் கனிவானவர்களாக இருப்பார்கள் என்பது உண்மை இல்லை போலும். பதிவை பயத்தோடு இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா நான் கனிவானவன் இல்லையா ? நண்பரே..

   நீக்கு
 14. நண்பரே நன்றாக சிரித்தேன் நண்பரே....
  உன்னையத்தான் போடுவான்னு பீதிய
  கெளப்பிட்டீங்களே ஜி...!!!!

  பதிலளிநீக்கு