தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மே 27, 2016

திடீரென...


திடீரென அவள் வீட்டுக்கு பெண் பார்க்க போனேன் தங்கைக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தாள், என்னைக் கண்டதும் உட்காரச் சொல்லி ஃபேன் போட்டு விட்டு காஃபி போட சென்று விட்டாள், இடைவெளியில் எனது பென்னை எடுத்து ஹைக்கூ கவிதை எழுதினேன்...

வீதியில் நடந்து போகும் பொழுது அவளும் பார்த்தாள், திடீரென அவள் கண்களில் மின்னல் போல ஒரு ஒளியைக் காணவும், மன எண்ணங்கள் விண்ணை நோக்கிப் பறந்தன...

வீட்டிலிருந்த மாமாவுக்கு திடீரென நெஞ்சுவலி பாமா எனக்கத்தினார் அடுப்படியிலிருந்து அத்தை ஓடிவர, சட்டென ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனால் கோமாவுக்கு போய் விட்டார் அட ராமா...

அப்பாஸ் நடந்து போகும்போது வழியில் கடையில் ஜூஸ் குடித்தான், திடீரென வந்து நின்ற ஈஸ்வரனை கண்டதும் மனதுக்குள் நினைத்தான் நம்மளை பீஸ் பண்ணுறதுக்குன்னே வர்றாங்கே...

இப்போதுதான் பார்த்தேன், திடீரென காணோம் நந்தாவை, தப்பித்து விட்டானே... எவ்வளவு பந்தாவாக போறான் வீட்டிற்கு போய் அவன் மனைவி சாந்தாவிடம் கேட்டேன் இந்த மாத சந்தா...

மழையில் நனையாமலிருக்க, மரத்தோரமாய் நின்றிருந்தேன் திடீரென மரம் சாய நான் சட்டென விலகி மயிரிழையில் உ.யிர் பிழைத்தேன் பிறகு வழியில் போன ஆட்டோவை அழைத்து வீட்டுக்கு வந்தேன்...

இரவு மிமிக்ரி ப்ரோக்ராம் முடிந்து வந்து இறங்கிய பக்கிரி வழியில் ஜக்கிரிப் பெட்டியில் காசு போட்டு கொண்டு இருந்தான் திடீரென வந்த போலீஸ் ஏன்டா போக்கிரிப் பயலே என பிடித்துக் கொண்டு போனார்...

பேசிக்கொண்டே கண்ணாடியை பார்த்து தலை சீவிக்கொண்டு இருந்தேன், பின்னாடி நின்ற நண்பன் கென்னடி விளையாட்டாக திடீரென என்னை தள்ளி விட்டான், முன்னாடி மூக்கு உடைந்து மூன்று நாள் ரெஸ்ட்...

வயல் ஓரமாய் நடந்து போனாள் கயல்விழி, நான் அவளையே பார்த்துக் கொண்டே... போனபோது திடீரென குறுக்கே பாய்ந்த முயல் ஒன்றால் பயந்து என்மீது சாய்ந்தாள் அந்த சாயல் சுகமானது...

எனக்கு திடீரென தோன்றியது வாழும் காலத்திற்குள் எதையாவது விதைத்து செல்லலாமே... உடனே நான் எழுதி வைத்திருந்த அதை எடுத்தேன் அதுதான் இந்தக் கதை...

Chivas Regal சிவசம்போ-
ஓஹோ... இப்படியும் கதை ஓட்டலாமோ... ?   

36 கருத்துகள்:

 1. உங்களிடம் t r தோற்றார் ,போங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அப்படியா கீது ? வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. பதிவு அருமை சகோ. இங்கு நேற்று அபிநவ்க்கு தம்பி பிறந்திருக்கிறான். பிரநவ் என்ற பெயரும் வைத்து விட்டோம். இந்த செய்தியை தங்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போது தங்கள் பதிவுகளை காண வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா சந்தோஷமான செய்தி அபிநவ்வுக்கு வாழ்த்துகள் எல்லா நலனும் பெறட்டும் விரைவில் இந்திய மண்ணை மிதிக்கட்டும்.

   நீக்கு
 3. அன்புள்ள ஜி,

  கவிதை... ‘கவி’ விதைத்தீர்கள்... கதையுடனே... நெஞ்சை தைத்தது...!

  த.ம. 3

  பதிலளிநீக்கு
 4. திரு பகவான்ஜி அவர்களின் கருத்து தான் என் கருத்தும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 5. மிக அருமை. சிந்தனையின் ஆழம் வியக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. திடீரென இருந்தாலும் அருமையே, அதுவும் உங்கள் பாணியில். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. நன்றாக இருக்கிறது, ஆனால் மாமா, கோமா என்பதை மட்டும் மாற்றினால் நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பாமா, ராமாவோடு இனைக்கும்போது கோமாவும் வந்து விட்டது வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. எதை எழுதினாலும் படிப்பதற்கும் பாராட்டுவதற்கும் ஆட்கள் இருக்கிறார்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா எதையாவது எழுதுகிறேன் என்பதைவிட எதையும் எழுதுகிறேன் என்பதால் இருக்கலாம் ஐயா.

   நீக்கு
 9. அருமை ... ஆமா ஜாக்கிரினா இன்னா சார் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஜக்கிரிப்பெட்டி என்று கேள்விப்பட்டதில்லையா ? இதுவொரு சூதாட்டம் இப்பொழுது முற்றிலும் ஒழித்து விட்டார்கள்.

   நீக்கு
 10. வார்த்தை..சும்மா பின்னி பெடல் எடுக்குதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே எனக்கு சைக்கிள் ஓட்டிப்பழக்கம் உண்டு

   நீக்கு
 11. நான் எனது முகநூலில் தங்களின் திடீரென பதிவை பார்த்தவுடன் வந்தேன்.திடீரென திடீர் திடீருனு பதிவு போட்டு திடீரென அசத்துரீங்க நன்றி ஐயா.அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ திடீரென்றுதான் தாங்களும் பதிவுக்கு வருகின்றீர்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. கவிதை அருமையாக வார்த்தை ஜாலம் கொண்டு எழுதும் உங்கள் திறமை ரசித்தேன் ஜீ!

  பதிலளிநீக்கு
 13. இடையிடையே இந்த வண்ணக்கலர் சேர்ப்பதை தவிர்த்தால் இன்னும் கவிதை மட்டும் அல்ல உங்கள் பகிர்வும் அழகு கைபேசியில் பார்க்கும் போது பதிவு நெஞ்சில் தங்குதில்லை! இது பிழை என்றால் மன்னிக்கவும் ஜீ தனிமரம் பட்டன்று சொல்லிவிடுவேன்)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இந்த வண்ணம் கொடுப்பதே இப்பதிவில் இருக்கும் வார்த்தை ஜாலத்தை எடுத்துக் காட்டுவதற்கே அதை செய்யவில்லையெனில் இவை வெளியில் தெரிய சாத்தியமில்லை ஆகவே இப்படிச்செய்தேன் உதாரணம் மயிரிழையில் இதில் (ரிழை) என்பதை நான் எடுத்துக் காட்டினேன் மற்ற பதிவுகளில் இப்படி வருவதில்லை
   செல்லில் காணும் பதிவுகளில் வண்ண எழுத்தை மாற்றிக் காண்பிக்கும் இந்த அனுபவம் எனக்கும் உண்டு
   மேலும் தங்கள் மனதில் பட்டதை என்றும் வெளிப்படுத்தலாம் இதற்கு மன்னிப்பு தேவையில்லை காரணம் ப்ரெஞ்ச் மொழியில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

   நீக்கு
 14. நல்லாருக்கு ஜி வார்த்தை விளையாட்டு! இப்படி ஒரு நிகழ்ச்சி விஜய்ல வந்தாலும் வியப்பதற்கில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா விஜய் டி.வி. யில் வருமளவுக்கா ? நமது பதிவு இருக்கூகூகூகூகூகூகூகூ....

   நீக்கு
 15. மத்ததெல்லாம் இருக்கட்டும்...

  முந்தா நாள் - சாந்தாவிடமிருந்து
  இந்தா என்று சந்தா கிடைத்ததா?...

  பதிலளிநீக்கு