தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மே 13, 2016

குளித்தலை & குழித்துறை


வெள்ளையன் ஊரணி மணி காஃபி பார் முத்துராசு அண்ணன் பென்ஞ்சில் உட்கார்ந்து காஃபி குடித்துக் கொண்டே பேப்பர் படித்துக் கொண்டு இருக்கும் பொழுது...

குணசீலா... தலையில கட்டு போட்ருக்கியே... என்னடா ?
படித்துறையில வழுக்கி விழுந்துட்டேன்.

நம்மூருல ஏதுடா... படித்துறை ?
குழித்துறைக்கு விருந்தாளி போயிருந்தேன்

நீதான் குளிக்கவே மாட்டியே பிறகு எப்படி ?
தலைத்தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போனேன்.

ஆமா... தீபாவளி வந்துச்சோ, அதானே அடுத்து பொங்கலுக்குத்தான் குளிப்பே..
குளிக்கப் போனாலே... நமக்கு ராசி இல்லைண்ணே...

நமக்குன்னு சொல்லாதடா படிக்க வர்ற பதிவர்கள் என்னையும் உன்னோட சேர்த்துறப் போறாங்க... சரி, மாமியார் வீட்ல கவனிப்பு எப்படி ?
தலைக்கறி எடுத்துருந்தாங்க.....

நல்லா குழைச்சு பாத்திகட்டி அடிச்சுருப்பியே...
என்னத்தண்ணே... குளித்தலை பெரிய மாமியார் வீடு மாதிரி வராதுணே... அவங்கே கோழி, ஆடு, மீனுன்னு வகை வகையா சமைச்சுப் போடுவாங்கண்ணே...

அட மூதேவி அது முறையா முதல் கல்யாணம் செய்தப்போ மருமகனுக்கு கிடைக்கிற மரியாதைடா...
இந்த வீட்டுக்கு மட்டும் நான் மருமகன் இல்லையா ?

ஏண்டா டாஸ்மாக்குல போதையப் போட்டு வந்து திருவிழாவுக்கு விருந்தாளி வந்த பொண்டாட்டியோட சின்னம்மா மகள் தனியா கிடந்த நேரத்துல அவமேல விழுந்து அவளைக் கெடுத்ததோட இல்லாம உங்களுக்கு மரியாதை பத்தலையோ பெரிய நொண்ணை மாதிரி பேசுறே... ?
என்னண்ணே.. நீயும் இப்படி பேசுறே.. அதான் வாழ்க்கை கொடுத்துட்டோம்ல..

அடடே பெரிய வள்ளலு ரெண்டு பொண்டாட்டிகளையும் சித்தாளு வேலைக்கு அனுப்பி அவளுக சம்பாத்தியத்துல கஞ்சி குடிச்சுக்கிட்டு இருக்கிறவரு வாழ்க்கை கொடுத்துட்டாரு...
நாங்க ஆட்சிக்கு வந்தவன்னே பாருண்ணே... நான் எப்படி சம்பாரிக்கப் போறேன்னு...?

எவன் ஆட்சிக்கு வந்தால்.. உனக்கு என்னடா கிடைக்கப் போகுது குவாட்டரும், கோழிப் பிரியாணியும் கொடுத்து உன்னை யூஸ் பண்ணிக்கிருவாங்கே... குடும்பத்துக்கு லாபமா ?
அண்ணே... எம் மூத்த பொண்டாட்டியை கவுன்சிலரா நிறுத்துவேன்ணே...

முதல்ல உன் மகளுக்கு ஒரு கவுன் வாங்கி கொடுக்கிற வழியைப்பாருடா... உன்னைச் சொல்லி குற்றமில்லை தவறுன்னு தெரிஞ்சே இந்த தமிழ்நாட்டு ஜனங்க மீண்டும், மீண்டும் அவுங்களுக்கே வாக்களிக்கிறவரை உங்களைப் போல கூதரைகள் நிறையப்பேரு குடியை கெடுத்துருவீங்கடா... எப்படியோ நாசமாப் போச்சு தமிழ்நாடு.

சொல்லி விட்டு துண்டை உதறி தோளில் போட்டு விட்டு கிளம்பினார் முத்துராசு அண்ணன்.


காணொளி

36 கருத்துகள்:

 1. இரண்டு பெண்டாட்டியையும் சித்தாளு வேலைக்கனுப்பி கஞ்சி குடிச்சிண்டு..//
  பக்கென்று சிரிப்பு வந்திட்டுது அண்ணே!.....
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 2. தமிழ் நாட்டு மருமகளை, இப்படி நீங்க குறை சொல்லலாமா:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் நாட்டு பெண்கள் திருமணத்துக்கு முன்பு எப்படியும் வாழலாம் என்று சொன்னவளை மருமகளாக இன்னுமா நினைக்கின்றீர்கள் ?

   நீக்கு
 3. பதில்கள்
  1. முனைவரே ஒண்ணுக்கும் உதவாக்கரையை தரை டிக்கெட் என்று சொல்வோம் இல்லையா ? இது தரைக்கும் கீழே அதுதான் கூதரை

   நீக்கு
 4. பதிவின் முடிவில் சொன்னதே உண்மை. இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 5. வேதனையுடன் ரசித்தேன். :( ஏனெனில் இப்போது இப்படித் தான் நடக்கிறது. இனியும் இப்படி நடக்குமோனு ஒரு கவலை, பயம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ உண்மையிலும் இப்படி நடக்கத்தானே செய்கின்றது.

   நீக்கு
 6. ஆஹா அருமை ஐயா.யாரு ஆட்சிக்கு வந்தாலுமே மதுவிலக்கு என்பது கிடையாது.மதுவிலக்கு என்று சொல்லற கூட்டத்திலே கண்டிப்பாக ஒரு சிலர் மதுவை அருந்திவிட்டு அறிக்கையை படிக்கையில் எப்படி மதுவிலக்கு சாத்தியம்..???

  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ சரியாக சொன்னீர்கள் மதுவிலக்கு வரும் என்று சொல்லும் ஆளுங்கட்சி இன்றே தொடங்கலாமே அந்த வேலைகளை....

   நீக்கு
 7. ஒரு அரசியல் பதிவாவது பாசிடிவாக எழுத மாட்டீர்களா என்னும் கவலை எனக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா
   //யதார்த்தம் என்பது உண்மை
   மிகைப்படுத்துதல் என்பது பொய்//

   எனது எழுத்துகள் யதார்த்தமானவை நானே நினைத்தாலும் எனது கைகள் பொய்களை எழுதாது நடைமுறை உண்மைகளையே எழுதும்...
   விரைவில் நல்லவர் ஆட்சி மலரட்டும் கண்டிப்பாக தங்களது ஆசையை நிறைவேற்ற ஒரு பதிவு எழுதுவேன்.

   நீக்கு
 8. முத்துராசு அண்ணன் நச்சன்னு கொடுத்தும் புத்தி வந்ததான்னு தெரியலையே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா முத்துராசு அண்ணனைப்போல பலரும் சொல்லி (கை) விட்டார்கள்.

   நீக்கு
 9. சிரிக்கவும் சிந்திக்கவும் அருமையான பதிவு நட்பரே

  பதிலளிநீக்கு
 10. நகைச்சுவை பதிவை ரசித்தேன் சகோ.

  பதிலளிநீக்கு
 11. அன்புள்ள ஜி,

  மாது... மது...! குமரிக்கோட்டம்... தள்ளாத வயதுக்கிழவி எதையும் தள்ளாலாமல் தள்ளாட்டம்...! இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்...!

  மதுவிலக்கு... மாது(ம்)விலக்கு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 12. நகைச்சுவை என்றாலும் வருத்தம் தரும் விஷயம். எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மைதான் இனியெனும் மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும்.

   நீக்கு
 13. நல்லா இருந்த நாட்டை நாசமாக்கிட்டு -
  கூதரைங்க எல்லாம் கூவுதுங்க -
  நாங்க வந்து நிமித்தி வெச்சுடுவோம்..ன்னு!..

  அதுங்களுக்குத் தான் வெட்கம் இல்லேன்னாலும் -
  நமக்கு நாக்கைப் பிடுங்கிக்கலாம் போல இருக்கு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி இதை மக்கள் அனைவரும் இன்னும் உணரவில்லையே.... பிறகு வழி....

   நீக்கு
 14. இப்படித்தான் நம்மை ஆளுபவர்கள். மிக மிக மோசமான அரசியல் நம்மூரில் சொல்லிப் பயன் இல்லை..எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை மக்களுக்கு மறதி நோய் நன்றாகவே தொற்றிப் பற்றிக் கொண்டுவிட்டது

  பதிலளிநீக்கு