தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 07, 2016

கேளிக்கை வரி


 கூத்தாடிகளை கொண்டாடும், கூமுட்டை ரசிகர்களே
 உங்களின் ஆதர்ச நாயகர்கள் போராடுவது எதற்கு தெரியுமா ?
உங்களைப் பாதித்த பஸ் கட்டண உயர்வுகல்ல
உங்களை பாதித்த பால் கட்டண உயர்வுகல்ல
கட்டான மின்சாரத்தின் கட்டண உயர்வுகல்ல
மக்களை பாதிக்கும் மதுவுக்கோ, பாலியியல் வன்கொடுமைக்கோ அல்ல பின்னர் எதற்காம் ?
டிக்கெட் வாங்கும் நீங்கள் கேளிக்கை வரி கட்டணுமாம்
கோடி கோடியாய் வாங்கும் இவர்களுக்கு சேவைவரி கூடாதாம்
நல்லாருக்குடா உங்க நாயம்

மேற்கண்ட பொன்னுரை யாரோ எவரோ எழுதியது.
இனி என்னுரை இருப்பினும் இது நன்னுரையே
ஆம், நண்பா இதற்கு நானென்ன விளக்கவுரை கொடுக்க முடியும் யாரோ நான் காணா நண்பன் முன்மொழிந்ததை நான் வழி மொழிகிறேன், அவ்வளவுதான், மேற்கண்டசெயல் தவறென்று முன்மொழிந்த நண்பருக்கு தெரிகிறது, வழி மொழிந்த எனக்கும் தெரிகிறது ஆனால் உனக்கேன் விளங்கவில்லை நண்பா

விளங்கிகொள் அல்லது இந்த பூமியை விட்டு விலகிகொள்.
ஏனெனில் இருக்கும் மானமுள்ள தமிழனை கொல்லாதே
குறிப்பு-எழுதி வெகு நாட்களாக ட்ராஃப்டில் கிடந்தது 
 Too late Sorry

44 கருத்துகள்:

  1. How to Type Tamil in Photoshop | Photoshopல் இனி தமிழில் எழுதுங்கள்! - http://www.mytamilpeople.in/2016/05/how-to-type-tamil-in-photoshop-photoshop.html

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஜி !

    நன்னுரை என்றே மின்னும்
    .....நற்சொலில் நெகிழ வைத்தாய்
    பொன்னுரை என்றே நாளும்
    .....போற்றியே உன்னை வாழ்த்தும்
    இன்னுரை இதனின் தாக்கம்
    .....இருப்பவர் உள்ளம் போந்தால்
    மன்னரை மாற்றும் நாட்டின்
    .....மகிழ்வினைத் தந்து போகும் !

    ஆர்கலித் தெழும்பும் ஓசை
    .....அதனையும் மிஞ்சும் வண்ணம்
    தேர்தலில் கொடுக்கும் வாக்கில்
    .....சிறுதுளி கூடச் செய்யார்
    மார்தனில் தட்டித் தட்டி
    .....மக்களே என்று சொல்லி
    சொர்வினைக் கொடுத்து எங்கள்
    .....சுயநினை விழக்கச் செய்வார் !


    முன்னுமோர் ஆண்டில் சொன்ன
    .....மொழிபுகள் செய்யார் ஆயும்
    இன்னுமோர் ஆட்சி தந்தால்
    .....எழிலுற வைப்பேன் என்பார்
    துன்னுமோர் மக்கள் என்றே
    .....துரோகிகள் எண்ணம் மாற்ற
    மின்னுமோர் வாக்கை மட்டும்
    .....விற்றிட வேண்டாம் மக்காள் !

    எதிரியை மன்னித் தாலும்
    .....இவர்களை மன்னிக் காதீர்
    சதியதை என்றும் எண்ணிச்
    .....சாதியான் என்றும் சொல்லி
    புதியதோர் உலகம் என்றே
    .....பொய்யுரைப் பார்கள் நாளும்
    மதியதை மயக்கும் கூட்டம்
    .....மண்ணிலே வாழ்தல் வீணே !

    காலத்துக்கு ஏற்ற பதிவு ஜி அருமை தொடர வாழ்த்துகள்
    வாழ்க வளத்துடன் !
    தம முதல் வாக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவலரே கவிதையால் கருத்துரை தந்தீர் அருமை நன்றி

      நீக்கு
    2. சொர்வினைக் என்பதை சோர்வினை என்று வாசிக்கவும் ஜி தட்டச்சுப்பிழை மன்னிக்கவும்

      நீக்கு
  3. நான் சொல்ல நினைத்ததும் அதுவே... எனவே நானும் வழிகிறேன்... ச்சே... வழி மொழிகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. ஐயா கோவிச்சுக்காதீங்க. அவர்கள் உங்களையும் என்னையும் போன்று ஒரு தொழில் தான் செய்கிறார்கள். அதற்க்கு சம்பளம் வாங்குகிறார்கள். அந்த சம்பளத்திற்கு தொழில் வரி மற்றும் வருமான வரி கட்டுகிறார்கள். அவர்கள் ஒரு சேவையும் செய்யவில்லை. அவர்களுடைய சேவை எல்லாம் அவர்களுக்கே. அப்படி இருக்கும் போது அவர்களைச் சேவை வரி கட்டச் சொல்வது நியாயமா?

    ஆனாலும் இந்த பா ஜ பா அரசு வந்தவுடன் சொன்னதை எல்லாம் காற்றில் பறக்க விட்டுட்டு அந்த வரி இந்த வரி வரிக்கு மேல் வரி என்று வரிகளை உயர்த்துகிறார்களே தவிர தேர்தல் பிரசாரத்தில் சொன்ன எந்த வரி குறைப்பையும் செய்யவில்லை.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான விளக்கவுரைக்கு நன்றி
      அவர்களுக்கு சேவை வரிகள் வேண்டாம் என்பதற்கு போராடுபவர்கள் நாம் திரைப்படங்கள் பார்ப்பதால்தான் இவர்களுக்கு வாழ்வு நமக்கு கேளிக்கை வரியையும் நீக்கச் சொல்லலாமே இதற்காக மக்கள் போராட முடியாது போராடினால் அரசு சொல்லும் விருப்பமில்லை என்றால் சினிமா பார்க்காதே... என்று மேலும் நமக்கு இதற்கு நேரமில்லை.

      நீக்கு
  5. உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. முன்பே முகநூலில் வாசித்த வரிகளுடன் உங்கள் வரிகளும் இணைந்து நச்...

    பதிலளிநீக்கு
  7. அக்னி நட்சத்திரம் (!) ஆரம்பமாகி விட்டது அல்லவா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அபுதாபியிலும் இப்படித்தான்....

      நீக்கு
  8. ம்ம்ம்ம்ம் நடிகர்கள் சொல்வது, செய்வது எல்லாமே சுயநலம் தான்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ இதை ரசிகன் உணர்வதில்லையே... ?

      நீக்கு
  9. லேட்டா சொன்னாலும் நல்லாவே சொல்லறீங்க! புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!

    பதிலளிநீக்கு
  10. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லைஜேகே 22384 சொல்வதில் நியாயம் இருப்பதாகத் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  11. மத்தியில் புதிய அரசு வந்த பிறகு நினைத்ததற்கெல்லாம் வரி விதிக்கிறார்கள். உண்மையில் நடிகர்கள் வருமான வரி மற்றும் தொழில் வரி கட்டும்போது சேவை வரி கட்டத் தேவையில்லை என் நினைக்கிறேன்.இப்படியே விட்டால் எல்லோருக்குமே சேவை வரி கொண்டு வந்துவிடுவார்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் விரிவான விளக்கவுரைக்கு நன்றி

      நீக்கு
  12. நடிகரில் சிலரே இதை புறக்கணிப்பு செய்கிறார்களே,இதைப் பார்த்தாவது ரசிகர்கள் திருந்த வேண்டாமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஒருநாள் நடக்கும் என்று நம்புவோம்

      நீக்கு
  13. உண்மைதான், அவர்கள் என்றும் பொதுநலத்துக்காக போராடியதில்லை.
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவர்களின் சுயநலத்தில் நாம் ஒதுங்கி இருந்தால் போதுமானது

      நீக்கு
  14. முன்பை விட சினிமா மீதான அளவுகடந்த ஈர்ப்பு குறைந்து வருகிறது என்றுதான் கருதுகிறேன்.ஏற்கனவே தியேட்டரில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் சேவை வரியை கட்டவேண்டுமெனில் அதையும் சேர்த்து தன சம்பளத்தில் வாங்கி விடுவார்கள். அதனை நஷ்டத்தை ஈடுகட்ட சினிமா ரசிகர்கள் தலையிலதான் கைவைக்க வேண்டும். அதனால் சேவை வரி குறைக்கப் போராடுவதால் தவறில்லை.போராடினாலும் போராடாவிடாலும் அந்த வரி, பார்ப்பவர்களிடம்தான் வசூலிக்கப் படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான உள் விடயத்தை விளக்கியமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
    2. ஆமாம் மக்கள் எல்லோரும் பிள்ளையார் கோவில் ஆண்டிகள் தாம்.

      --
      Jayakumar

      நீக்கு
  15. மானமுள்ள தமிழன் வாழ்வதற்கு இங்கு இடமில்லை என்றல்லவா..சொல்கிறார்கள்...அவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் இதற்கு மேலும் சொல்வார்கள் நண்பரே

      நீக்கு
  16. நல்ல பகிர்வு. உங்கள் ஆதங்கம் நியாயமானது.

    பதிலளிநீக்கு
  17. ஜி இங்கு ஒன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது சினிமா எல்லாம் பெரும்பாலும் திருட்டு சிடி அதுக்குத்தான் பாண்டிச்சேரி இருக்கே...அங்கே மிகச் சுலபமாக கிடைத்துவிடும்...கிடைத்துப் பார்ப்பதால் திரைஅரங்கம் செல்வோர் குறைந்துவிட்டது என்றும் சொல்லலாம். அதுவும் டிக்கெட் விலை எல்லாம் கூடியிருப்பதால். தியெட்டர்களில் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாது எனவே சேவை வரி எல்லாம் அவர்கள் தலையில் விழுந்துவிடும் எனலாம். ..கிரிக்கெட் வெள்ளாண்டாங்க பாருங்க அதுக்கு இது பரவால்ல ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி

      நீக்கு