தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 05, 2016

9 தாராவுக்கு 18


வணக்கம் கவிஞரே... தங்களது பாடலில் மக்களுக்கு நல்ல கருத்துகளை சொல்லும் தாங்கள் நல்ல வரிகளில் மட்டும் ‘’பீப்’’ மட்’’டண்’’ போன்ற ஓசையைக் கொடுத்து கேட்க முடியாமல் செய்வது ஏன் ?
மக்களிடம் எப்பொழுதுமே எதிர்பார்ப்பை திணிப்பவனே நல்ல கலைஞன் ஆகவே நானும், இசை வேந்தனும், பாடகரும் இணைந்தே இவ்வகையான புதுமைகளை செய்கின்றோம்.

இதனால் எதிர்கால சந்ததிகளுக்கு பலன் உண்டா ?
நிச்சயம் உண்டு இதன் மூலம் கெட்ட வார்த்தைகள் ஒழிந்து இனி மக்கள் உச்சரிக்கும் அனைத்து சொற்களுமே நல்ல வார்த்தை என்று உயர்வு பெற்று விடவேண்டும் இதுவே எங்களது நோக்கம்.

இப்பொழுது வரும் இசையை கேட்பவர்களுக்கு செவி சேதமாகிறது என்று இங்கிலாந்திலிருந்து வரும் புள்ளி விபர கணக்கு ஒன்று சொல்கிறதே, இதனைப்பற்றி....
இதுதான் எங்கள் வெற்றியின் முதல்படி செவி கேட்பதாலேயே பிரச்சினைகளை கேட்டு சில மனிதர்களுக்கு கோபம் வருகிறது இதன் விளைவாய் சண்டைகள், சச்சரவுகள் வந்து வாழ்க்கையே சிலருக்கு பாதிக்கப்படுகிறது கோபத்தை கட்டுப்படுத்துவதே எங்கள் நோக்கம் ஆகவே இது எதிர் காலத்துக்கு தேவையே.

சமூக வளர்ச்சிக்காக தொண்டு செய்ய நினைக்கும் தங்களுக்கு இதனால் பலனேதும் உண்டா ?
பலனைப்பற்றிய கவலை எங்களுக்கு எப்பொழுதுமே கிடையாது வேண்டுமானால் ஒன்று சொல்லலாம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 9 தாராவுக்கு 18 திரைப்படத்தில் பாடல் எழுதிய எனக்கு ’’சொற் கொல்லன்’’ பட்டமும், இ(ம்)சை கொடுத்த சனிருத்தனுக்கு ’’செவிக்காலன்’’ பட்டமும், பாடகர் விம்புக்கு ’’சங்கொலி’’ பட்டமும் கிடைத்து இருக்கின்றதே இதைவிட பெருமை வேறென்ன ?

தற்போது  வெளியான புஷ் திரைப்படத்தில் நாயகி அழகான இதழ்களால் உச்சரிப்பை கொடுத்து விட்டு சப்தம் மட்டும் வராமல் தடுக்கப்பட்டு இருக்கின்றது அந்த வார்த்தை என்ன ? என்று தெரியாமல் கல்லூரி மாணவ-மாணவிகள் குழம்பி போய் இருக்கிறோம் ஆகவே உடனே அந்த வார்த்தையை முழுமையாக கொடுக்காதவரை கல்லூரிகளை புறக்கணிப்போம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் குறுகிய காலத்தில் கட்சியை ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டு முதல்வராக வரவிருக்கும் தங்களுக்கு இது பாதிப்பை தராதா ?
அதுவொன்றும் பெரிய காரியமில்லை நாளை முதல் புஷ் படத்தின் ஆடியோ கேஸட் இலவசமாக கொடுக்கப் போகிறோம் தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஓட்டும் எங்களுக்கே பிறகு உல்லாச உலகம் எனக்கே சொந்தம் தையர... தையர... தையரா...

புதிய படங்களில் ஏதாவது புதுமை வகுத்து இருக்கின்றீர்களா ?
ஆம் அடுத்த வாரம் வெளியாகும் கிஸ்ஸிங் ஸ்டார் கில்ஜி நடித்த ‘’வகுந்துடுவேன்டா’’ திரைப்படத்தில் 9 தாராவுக்கு 18 படப்பாடல்கள் மாதிரியே 7 பாடல்கள் வருகிறது இது ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல விருந்தாக அமையும்.

ஒலிநாடா வெளியீடு என்று கேள்விப்பட்டோமே... ?
ஆமாம் நானும், நண்பர் சனிருத்தும் இணைந்து 250 பாடல்கள் அடங்கிய் அல்பம் என்ற ஆல்பம் தயார் செய்துள்ளோம் இதன் வெளியீட்டு விழா செலவை அமெரிக்காவில் இயங்கும் டமில்ச் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சமீபத்தில் குடிமகன்கள் அமைப்பிலிருந்து தங்களது பாடல்களுக்கு எதிர்ப்பு கிளம்பியதே எங்களைப் போன்ற பேதை உள்ளங்களுக்கு தங்களது பாடல் வரிகளில் போதை இல்லை இதன் காரணமாக தேர்தலில் தங்களது கட்சியை புறக்கணிப்போம் என்று அறிக்கை விட்டு இருந்தார்களே இவர்களை சமாளிப்பது எப்படி ?
அதை மிகவும் சுலபமாக சமாளிப்போம் கள்’’ளட்டை என்ற கார்டு ஸிஸ்டம் தயாரித்து இருக்கின்றோம் மே 10-ம் தேதி முதல் குடிமகன்கள் அமைப்புகளுக்கு மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படும் அமைப்பின் வழியாக கார்டுகள் வழங்கப்படும் இந்த கார்டுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் உகாண்டா நாட்டிலிருந்து கணைக்டிங் பீப்புள்ஸ் இணையதளம் மூலம் செயல்பாடு உண்டு தேர்தலுக்கு முதல் நாள், தேர்தல் நாள், மறுநாள் 3 தினங்கள் இந்த கார்டை குடிமகன்கள் இலவசமாக உபயோகப்படுத்தி கொள்ளலாம் இதன் மூலம் குடிமகன்களின் வாக்கும் எங்களுக்கே சொந்தம்.

நல்லது தங்களது றிவும், ற்றலும், ந்த மக்களுக்கு, ர்ப்பை, ண்டு செய்து க்கமளித்து, ன்றும் மக்கள், ற்றம் பெறுவதில், யமில்லையென, லிக்கட்டும், ங்கியென வையாரும் குரல் கொடுக்க எமது வாழ்த்துகள்.
நன்றி வணக்கம்.

சிவாதாமஸ்அலி-
81 வயசு ஆனாலும் இவங்கே 18 தான் சொல்லுவாங்கே...

குறிப்பு - இந்தப்பதிவு சிலருக்கு கோபத்தை தரலாம் நகைச்சுவைக்காக நான் எழுதினாலும் இது எனது மனதில் தோன்றிய வேதனையை வெளிப்படுத்தவே இப்படி எழுதினேன் காரணம் நமது சமூக கோபங்களுக்கு மழைக்காலங்களில் பிறக்கும் ஈசலைப் போன்று ஆயுசு மிகவும் குறைவாகவே இருக்கின்றது இதோ தேர்தல் வந்து விட்டது மக்கள் இலவசத்துக்கு மயங்கி பேரிடரையும் மறப்பார்கள் நமது மக்களை அரசியல்வாதிகளும், திரையுலகத்தினரும் மிகச்சரியாக புரிந்து வைத்துள்ளனர் நாம்தான் இன்னும் புரியா மடந்தையாக வாழ்கிறோம் - கில்லர்ஜி.

 காணொளி 

44 கருத்துகள்:

 1. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டங்கள் புன்னகைக்க வைக்கின்றன!

  பதிலளிநீக்கு
 2. பீப்..மட்..டன் போன்ற இனிய ஓசையைக் கொடுத்து செவிகளுக்கு சுளுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் - தாங்கள்

  இனிமேல் சிக்..சிக்.. கன்..கன்.. போன்ற அரிய ஓசைகளையும் வழங்கி -

  வாழ்வினை வளப்படுத்துமாறு - வளப்படுத்திக் கொள்ளுமாறு - வாழ்விழந்தோர் சங்கத்தினர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நிச்சயமாக இனி இப்படித்தான் வரும் அதில் மாற்றமில்லை.

   நீக்கு
 3. மின்னஞ்சலில் தகவல் சொல்லியிருக்கின்றேன்.. கவனிக்கவும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன் நன்றி நண்பரே இரண்டு தினங்களாக துபாய் வாசம்...

   நீக்கு
 4. நல்ல கருத்து சகோ, பார்ப்போம் இங்கு என்ன தான் நடக்கப் பொகுது என்று,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ பார்ப்போம் என்னதான் நடக்குமென்று....

   நீக்கு
 5. நல்லது தங்களது அறிவும், ஆற்றலும், இந்த மக்களுக்கு, ஈர்ப்பை,உண்டு செய்து ஊக்கமளித்து, என்றும் மக்கள், ஏற்றம் பெறுவதில்,ஐயமில்லையென, ஒலிக்கட்டும், ஓங்கியென ஔவையாரும் குரல் கொடுக்க எமது வாழ்த்துகள்.

  அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 6. காணொளி அற்புதம். பதிவை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளியை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே

   நீக்கு
 7. ஹாஹாஹா, லேட்டாகச் சொன்னாலும் லேட்டஸ்டாச் சொல்லி இருக்கீங்க! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏதோ சொல்ல நினைத்ததை சொல்லி விட்டோம்ல....

   நீக்கு
 8. எது நகைச் சுவை எது சீரியஸ் என்றே புரிவதில்லை. நீங்கள் சொல்ல நினைப்பது நினைத்தபடி எத்தனை பேருக்குப் போய்ச் சேருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா எல்லோருக்கும் போய்ச்சேரும் என்பது நடக்கும் காரியம் இல்லையே..

   நீக்கு
 9. மடந்தை என்று பெண்களைத் தானே குறிப்பிடுவார்கள் காணொளி காண முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மடந்தை என்பது இருபாலரையும் குறிக்குமே ஐயா.
   தாங்கள் கண்டது மட்டுமே காணொளி அதில் வந்த எழுத்துகளே காணொளியின் பலன் ஐயா.

   நீக்கு
 10. நீங்கள் சொல்வது சரியே !
  சமூக கோபங்கள் மழைக்காலத்தில் தோன்றும் ஈசல் போன்றது தான்.
  ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் தானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ எனது கோபம் எப்பொழுது ஏமாற்றுபவர்களை விட, ஏமாறுபவர்களை மீதுதான்.

   நீக்கு
 11. 'பீப்'பினாலும் ஒரு நல்லது நடந்துள்ளதே ,இந்த தேர்தலில் டி ஆரின் கட்சி காணாமல் போய்விட்டதே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஜி அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டார்கள்,

   நீக்கு
 12. பதிவு காணொளி இரண்டும் அருமை சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ காணொளியை ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
 13. ஒரு ஃபுளோவில் கிஸ்ஸிங் ஸ்டார் கில்லர்ஜி என்று படித்துவிட்டேன்., ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மனதுக்கு வேதனையாக இருக்கின்றது ஒரு ஆஞ்சநேயர் பக்தரை இப்படியா நினைப்பது தவறு கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தமனா அவள் எப்பவுமே இப்படித்தான் நண்பரே...

   நீக்கு
 15. சரியான் பட்டம் அளித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே இவங்கெளுக்கு இப்படித்தானே கொடுக்க முடியும்.

   நீக்கு
 16. சாட்டையடி பதிவு! வாழ்த்துக்கள் ஜி!

  பதிலளிநீக்கு
 17. நல்ல பகிர்வு
  ரசித்தேன் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 18. அது எப்படி உங்களால் அனைத்து நடைகளிலும் எழுதமுடிகிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவருக்கு நான் எதை எழுதினாலும் அந்த விடயத்துக்குள் என்னை நாயகனாக நிறுத்தி விடுவேன் பிறகே எழுத தொடங்குவேன்.

   நீக்கு
 19. ஹஹஹ நல்லாத்தான் கீது....நீங்க சொல்ற மாதிரி எந்தப் போராட்டமும் நம்மூரில் புற்றீசல்தான்...நிலைத்து அது நிறைவேறும் வரை போராடப்படுவதில்லை...கிட்டத்தட்ட இதை ஒட்டிய பதிவுதான் எனது இப்போதைய பதிவும்....அடுத்த பகுதி வருவதில் வருகிறது...

  பதிலளிநீக்கு