தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூன் 12, 2018

லேஷ் இந்தே மாஃபி சீல் ஹாத்ப் ?


புதாபியில் ஒரு மால் அதன் அண்டர்க்ரௌண்டின் கீழ்நிலை நான்காவது தளத்தின் கார் பார்க்கிங்கிலிருந்து நான் காரை எடுத்து வெளியேறிக்கொண்டு இருக்கின்றேன் பொதுவாக கார் பார்க்கிங் மேல்புறத்தில் கருப்பு நிற பெயிண்ட்தான் அடித்து இருக்கும் இதன் காரணமாக எவ்வளவுதான் விளக்குகள் போட்டாலும் சற்று இருட்டாகவே காணப்படும் அதுவும் கீழே நான்காவது நிலை எப்படியிருக்கும் ? மெதுவாக உருட்டிக்கொண்டுதான் வரமுடியும் காரணம் காரிலிருந்து ஆட்கள் குறுக்கும் நெடுக்குமாக வந்து போய்க்கொண்டுதான் இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே... எனது பின்புறத்தில் வந்த கார் ஹாரனை அடித்துக் கொண்டு லைட் அடித்துக் கொண்டும் வர.. (பொதுவாக இந்த நாட்டில் ஹாரன் அடிக்ககூடாது)  எனக்கு குழப்பம் நமது காரில் ஏதும் குழப்பம் இருக்கிறதா ?

கண்ணாடி வழியே பார்த்தேன் அவன் வேகமாக போ சத்தமாக கத்துவது தெரிந்தது இருப்பினும் வந்து கொண்டுதான் இருக்கிறேன் ஒரு இடத்தில் என்ட்ரன்ஸில் ஒரு குழந்தை திடீரென குறுக்கே வர சட்டென பிரேக் போட்டேன் சட்டப்படி முதலில் அவர்களுக்குதான் முதலிடம் பிறகே நமக்கு காரணம் அந்த இடத்தின் சூழல் பின்னால் வந்தவன் வேண்டும் என்றே எனது காரை அவனது காரால் மூன்றுமுறை புஷ் செய்து தள்ள... நான் ஹேண்ட் பிரேக் போட்டு விட்டு காரை விட்டு இறங்கினேன் இதை அனைவரும் பிரமித்துப்போய் பார்த்தார்கள் காரணம் சினிமாவில் காண்பதுபோல் இந்த நாட்டில் இப்படியெல்லாம் செய்யவே முடியாது செய்யவும் கூடாது அவனும் இறங்கினான் அரேபியர் உடையணிந்து இருந்தான் தலையில் வட்டு இல்லை நான் சைகையால் ஏன் ? எனக்கேட்க அவன் ஆங்கிலத்தில் கோ ட்டூ குயிக்லி எனக்கத்தினான் வெயிட் ஐ வில் கால் த போலீஸ் என்று கூறிக்கொண்டே காரைக் குனிந்து பார்த்தேன் ஒன்றும் அடிபட்டதாக தெரியவில்லை காரோ கருப்பு நிறம் இவன் டேக் த கார் என்று கத்தினான் பின்புறத்திலிருந்து கார்கள் வரிசையாக வந்து ஹாரன் அடிக்க ஒரு பாக்கிஸ்தானி வந்து அவன் ஏதோ லூசுத்தனமா செய்துட்டான் காரில் பிரச்சனை இல்லை எடுத்துக் கொண்டு போ என்று ஹிந்தியில் சமாதானம் கூற.... மற்றவர்களும் அப்படியே சொல்ல நான் காரை எடுத்தேன் ஒரு வளைவில் வரும்போது ஒதுங்கினேன் அவன் சட்டென அந்த இடத்திலும் ஒவர் டேக் எடுத்து போய் விட்டான் நான் அவனது கார் நம்பரை கவனித்தேன் BMW 11/ 5468 Abu Dhabi ரெஜிஸ்ட்ரேஷன்.

பிறகு வெளியே ரோட்டுக்கு வந்து பார்க்கிங்கில் நிறுத்திப் பார்த்தால் ? பின்புறம் நெளிந்து உள்ளே போய் இருந்தது அடச்சே இருட்டுக்குள் தெரியவில்லையே... உடன் 999 அடித்தேன் விபரத்தை சொன்னேன் உனது கார் அடிபட்ட இடத்திற்குப் போ அங்கு இப்பொழுது போலீஸ் வரும் என்றார்கள் மீண்டும் மாலுக்கு வந்து அதே இடத்தில் பார்க்கிங் கிடைக்காததால் ஓரமாக நிறுத்தும்போது போலீஸ் காரும் சரியாக அதே இடத்துக்கு வர இருவரும் சலாம் சொல்லி கை கொடுத்துக் கொண்டவுடன் அரபு மொழியில் விவரித்தேன் இது ஆக்ஸிடெண்ட் ஆனாலும் எதிர்ப்பார்ட்டி இல்லாததால் இது வேறுவகையான கொலை முயற்சி கேஸ் நான் மெஜேஸ் அனுப்பி விட்டேன் நீ உடன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அங்குள்ள உயர் அதிகாரியைப்பார் என ஒரு பேப்பர் கொடுத்தார் நான் வாங்கிக் கொண்டு அந்த உயர் அதிகாரி ரூமுக்குப்போய் அவரிடம் விவரித்தேன் இருவரும் அரபு மொழியிதான் பேசினோம் நான் சொன்ன நம்பரை கணினியில் அடித்துப் பார்த்து எனது பக்கம் கணினியை திருப்பிக் காண்பித்தார் பாரு இவனா ? ஆமா நான் எனது காரை இடித்த நபரின் போட்டோ ஜாதகத்துடன் வந்தது எஜிப்த்தியன் அதிகாரி சொன்னார் ஹும் முத்தஃபா.

(நண்பர்களே முத்தஃபா என்றால் நம்மூரில் சொல்வோமே பள்ளியில் தொழுகை வைக்கும் ஆலீமூஷா மேலே அவரது புகைப்படத்தைப் பாருங்கள்)

உடன் தொலைபேசியிலிருந்து அவனது செல்பேசிக்கு கால் செய்தார் ஸ்பீக்கரில் போய்க்கொண்டு இருந்தது சுமார் ஐந்து முறை இருக்கும் எடுக்கவில்லை அவரது முகத்தில் கோபத்தைக் கண்டேன் மேலே கடிகாரத்தைப் பார்த்தார் தொழுகை நேரமும் இல்லையே.... ம்... பெல் அடித்து ஆஃபீஸ் பாய் வர இரண்டு விரலைக் காண்பித்தார் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடச் சொல்றாரா ? இவரும் அ.தி.மு.க.காரரோ ? நமக்கு நீதி கிடைக்குமா ? சிறிது நேரத்தில் இருவருக்கும் டீ வந்தது எடுத்துக்கொள் எடுத்துக் குடித்தேன். டீக்குதான் விரலை காண்பித்து இருக்கிறார்.
நட்புகளே நினைத்துப் பாருங்கள் நம்மூரில் இதெல்லாம் சாத்தியமா ?


மீண்டும் கால் செய்தார் இரண்டுமுறை எடுக்கவில்லை சரி நீ போ நான் கால் செய்ததும் வா வீட்டுக்கு வந்தேன் அருகில்தான் எனது வில்லா உடன் கால் வந்தது அவன் இப்பொழுது வருவான் உடனே நீயும் வா மறுநிமிடம் பறந்து போனேன் உள்ளே போனதும் உட்கார் என்றார் சில விடயங்களைக் கேட்க சொன்னேன் சிறிது நேரத்தில் என் காருடன் மோதியவர்ன் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் என்று உயர் அதிகாரிக்கு முதலில் சலாம் சொல்லி விட்டு பிறகு என்னைப் பார்க்க இருவரும் GUNகளால் நேருக்கு நேர் நிகழ்ச்சி தொடங்கியது உயர் அதிகாரி எஜிப்தியனை நோக்கி அறையே அதிரக் கத்தினார்.

‘’லேஷ் இந்தே மாஃபி சீல் ஹாத்ப் ?’’
‘’நீ ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை ?’’

எனக்கு நேற்று சாப்பிட்ட எலிக்கறி அடி வயிற்றைக் கலக்கியது.

தொடரும்...

61 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  ஸ்வரஸ்யமாக சென்றது.பாதியில் நிறுத்தி விட்டீர்களே? அப்பறம் என்ன ஆச்சு? காரை இடித்தவன் என்ன சொன்னான். அறிய ஆவலாய் உள்ளேன். (எவ்வளவு படபடப்புடன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.கதை கேட்பது போல் சுவாரஸ்யமாம்...ஒருவர் கஸ்டப்பட்டால், அதை எப்படி இவர்களால்.... என்று தாங்கள் முணுமணுப்பது புரிகிறது ) ( நம்மமூரில் இதெல்லாம் சாத்தியந்தான்.மற்றவர் கஸ்டம் எதிராளிக்கு இனிப்பு சாப்பிடுவது போல) ஹா ஹா ஹா ஹா ஆனால் நீங்கள் சாப்பிட்டது என வயிற்றை பிரட்டியது..எ....லி....யா?

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அதிரடியாய் அதிராவை பின்னுக்கு தள்ளி விட்டீர்கள். வாழ்த்துகள்

   போலீஸ் அதிகாரி கத்தியதும் எனக்கு ஏற்பட்ட நிலையை விளக்கினேன்.

   தொடர்பவமைக்கு நன்றி

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிராவைப் பின்னே தள்ளியதில் கில்லர்ஜி க்குத்தான் அதிகம் ஹப்பியாக இருகே.. விட மாட்டேன்:).. இதுக்கொரு தீர்வு காணும்வரை பபபச்சைத்தண்ணிகூடக் குடிக்க மாட்டேன்ன்ன்ன்ன்ன்:))

   நீக்கு
  3. ஜேம்ஸ் ஊரணியின் உள்ளே குதிக்கும் போதுமா ?

   நீக்கு
 2. இந்த விஷயத்தில், சட்டத்தைப் போற்றுவதில் எமிரேட்ஸ், பஹ்ரைன், ஓமன் போன்ற தேசங்களை விஞ்ச முடியாது. சட்டத்தின்முன் அனைவரும் சம்ம். அதே சமயம், அரபி மொழியில் பேசியதால் அவர்களுக்கு நெருக்கமாக நீங்கள் விளக்கமுடிந்தது, அது பெரிய அனுகூலம் என்பதை மறுப்பதற்கில்லை.

  உங்கள் அனுபவங்களை அடிக்கடி எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான்.
   நிறைய அனுபவங்கள் உள்ளது கண்டிப்பாக எழுதுவேன்.

   நீக்கு
 3. ஹா ஹா ஹா ஹன்:) களால் என்ன பேசினனீங்க அறிய ஆவல்ல்ல்:))

  பதிலளிநீக்கு
 4. வெளிநாடு கார் பார்க்கெல்லாம் இப்படித்தான் கில்லர்ஜி .மெதுவாத்தான் போகணும் .ஹோர்னடிக்க கூடாது .இங்கே ஆஆ ரோடுகளில் பலருக்கு பொறுமையேயில்லை தோட்டத்துக்கெல்லாம் கையை ஹார்ன் மேலே அடிபாப்பாங்க .நானும் இப்படித்தான் எல்லாத்துக்கும் ப்ரூப்புக்கு போட்டோ எடுத்து வச்ச்ப்பேன் எல்லாம் ஒரு சேப்டிக்குதான் :)
  நம் நாட்டில் பல விஷயங்கள் சாத்தியமில்லை :(
  என்னது எலி யா ??? ஆவ்வ் அது பூஸாரின் மீல்ஸாச்சே

  ..தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ இந்த படங்கள் எப்போது எப்படி எடுக்கப்பட்டது என்பதை அடுத்த பதிவில் அறிய வாருங்கள்.

   நீக்கு
 5. வாகனத்தின் பதிவு எண்ணை நினைவு கூர்வது பெரிய விடயம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சிறிய அகவை முதலே என்னிடம் இந்தப்பழக்கம் உள்ளது.

   நீக்கு
 6. விறுவிறுப்பாக இருக்கிறது. நெல்லைத்தமிழன் சொல்வதிலிருந்து மேலும் விஷயமும் புரிகிறது. அவர் பார்க்கவே முரடாக இருக்கிறார். ஆனால் நியாயமான கில்லர்ஜியின் மீசைக்கு முன்னால் நிற்கமுடியுமா?!! தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி...
   முரட்டு உருவமும், படா மீசையும்
   இங்கு, சட்டத்தின் முன்னால் தவிடு பொடியாகி விடும்.

   நீக்கு
 7. சுவாரஸ்யம். சரியான இடத்தில் தொடரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே... நானும் எப்போது எழுதி பழகுவது ?

   நீக்கு
 8. எகிப்தியன் மீதிருந்த கோபத்துக்கு எலியார் பலியா!...

  பதிலளிநீக்கு
 9. அந்த நேரத்திலும்
  இரட்டை விரலைப் பார்த்ததும்
  தங்களது சிந்தனை சென்ற விதம்...

  ஆகா... அதுதான் நகைச்சுவை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி இவர் பெட்டி பெரியசாமி ஆளோ... என்ற ஐயம்தான்.

   நீக்கு
 10. எகிப்தியன் ஆனதால் ஓரளவுக்கு நிம்மதி...

  இங்கே உள்ள குலக் கொழுந்துகள் என்றால் -

  நீ எதுக்கு காரை ஓட்டினாய்?..
  என்று கேட்டிருப்பான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி இதிலும் சௌதியர்கள் என்றால் ?

   நீக்கு
  2. சவுதியர் என்றால்
   சும்மா இருப்பதே சுகம்!...

   நீக்கு
  3. அப்படியே... உல்டாவாகி விடுமே...

   நீக்கு
  4. துரை சார்.. 93ல் துபாய் போயிருந்தபோது நான் என் கஸ்டமர் கடையில் சாஃப்ட்வேர் செக் பண்ணிக்கிட்டு இருந்தேன். Shop owner என்னைத் தெரிந்தவர். கடைக்குள் நுழைந்த சௌதி அரபி என்னைப் பார்த்து அஸ்லாமு அலைக்கும் என்றான். நான் என்னத்தைக் கண்டேன். Yes please என்றேன். கன்னா பின்னாவென திட்ட ஆரம்பித்துவிட்டான். அப்புறம் கடைக்கார்ர் வந்து அவனுடம் பேசி சமாதானப்படுத்தினார். அன்றிலிருந்து அஸ்லாமு அலைக்குமோ அலைக்கும் சலாமோ சொல்லத் தவறுவதில்லை

   நீக்கு
  5. ஹா.. ஹா.. இப்படி பலரின் அனுபவம் இருக்கிறது நண்பரே...

   டெலிபோனை எடுத்து சலாம் சொல்லாமல் குட்மார்னிங் சொன்னதற்காக வேவையை விட்டு தூக்கப்பட்ட "டெலிபோன் ஆப்ரேட்டர்" நண்பரும் உண்டு.

   நீக்கு
  6. அன்பின் நெ.த,. மற்றும் ஜி,

   இந்த அஸ்ஸலாமு அலைக்கும் சொல்வதில் பல ரகங்கள் இங்கே இருக்கின்றன...

   அதையெல்லாம் விவரிக்கலாம் எனில் வீண் பிரச்னைகள்...
   எதற்கு வம்பு!?..

   நீக்கு
  7. வாங்க ஜி வேண்டாம் எதற்கு வீண் பிரச்சனை அர்த்தம் புரியாதவர்கள் பலரும் உண்டு.

   நீக்கு
 11. என்ன நண்பரே, சுவாசரியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீரகள்?
  படிக்கப் படிக்க வியப்பாகத்தான் இருக்கிறது. இந்தநாடுகள் எல்லாம் முன்னேறியிருப்பதன் காரணமே, அனைவரையும் சமமாகப் போற்றும் பண்புதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...
   சட்டத்தின் முன்பு அனைவரையும் சமமாக மதிக்கப்படும் நாடு உயர்வடைவது நிச்சயமே...

   நீக்கு
 12. இன்னொன்று கில்லர்ஜி... அரபிகள் பெரும்பாலும் பொய் சொல்ல மாட்டார்கள். நாம பிரச்சனையின்போது பொய் சொல்லவும் பொய்ச்சத்தியம் இடவும் தயங்கவே மாட்டோம்.

  நாம வாய்ல கடவுள், சாமி என்று சொல்வோம். மனத்தளவுல அவங்க நம்மைவிட தெய்நவ ம்பிக்கை கொண்டவர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சரியாக சொன்னீர்கள்.

   நமக்கு சத்தியம் சக்கரைப் பொங்கலாயிற்றே...

   நியாய தர்மத்தின் தொடக்கமே மதத்திலிருந்தும், அதன் நம்பிக்கையின் அடித்தளத்திலிருந்துமே ஆரம்பிக்கின்றது.

   இதனைக்குறித்து நான் நிச்சயம் எழுதுவேன். ஆனால் பி.ஜே.பி.காரர்களுக்கு பிடிக்காது.

   நீக்கு
 13. என்ன பேசினீர்கள்...சகோ

  பதிலளிநீக்கு
 14. மகனின் வண்டியை இடித்து விட்டுப் போன அபு தாபி ஷேக்கை எங்களால்
  ஒன்றும் செய்ய முடியவில்லை..
  நீங்கள் தைரியசாலிதான். என்ன நடந்தது என்று தெரிய ஆவலாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா நீங்கள் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.

   போலீஸ் வரும்வரை காத்து நிற்கும் ஷேக்குகளும் இருக்கின்றார்கள்.

   திரு. நெல்லைத்தமிழன் அவர்களின் அனுபவமும்கூட...

   நீக்கு
 15. இருக்கும் நாட்டில் பேசப்படும் மொழி நன்றாக பேசத்தெரிந்தால், பிரச்சனை உடனே சட்டப்படி தீர்க்கலாம். ஞாபகமாக நம்பரை நோட் செய்திட்டீங்க. நேருக்கு நேர் நிகழ்ச்சி காண ஆவல்...
  இரட்டை இலை..நல்ல நகைச்சுவை. ரசித்தேன். உங்க அனுபவங்களை கண்டிப்பா எழுதுங்க அண்ணா ஜீ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   நேருக்கு நேர் நிகழ்ச்சியை காண மீண்டும் வருக...

   நீக்கு
 16. நம் நாட்டில் இதுபோல்..

  ம்ம்கும் வாய்ப்பே இல்ல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நமக்குத்தான் எதற்குமே வாய்ப்பு இல்லையே

   நீக்கு
 17. அடுத்து...? ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  // இரட்டை இலைக்கு ஓட்டுப் போடச் சொல்றாரா ? இவரும் அ.தி.மு.க.காரரோ ? நமக்கு நீதி கிடைக்குமா ? //

  ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி பெங்களூருவில் நியாயம் கிடைத்ததா ?
   தூத்துக்குடியில் நியாயம் கிடைத்ததா ?
   அப்ப சந்தேகம் வரத்தானே செய்யும்.

   நீக்கு
 18. அடுத்து படிக்க ஆவல்.
  சட்டம் தன் கடமையை சரியாக செய்யும் அந்த நாட்டில் என்று நம்புகிறேன்.
  எலிக்கறி பஞ்சத்தில் சாப்பிட்டார்கள் நம் நாட்டில் என்று படித்து இருக்கிறேன். வசதியான நாட்டிலும் வசதியாக உள்ளவரும் எலிக்க்றி சாப்பிட்டாறா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ சட்டம் இங்கு அனைவருக்கும் பொதுவே...

   முதல்நாள் விருந்துக்கு போயிருந்தேன்.

   நீக்கு
 19. எலிக்கறி என்பது பார்த்தால் தெரியுமா மொழி தெரிந்து இருந்தால் நலமே

  பதிலளிநீக்கு
 20. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன். நல்ல சஸ்பென்ஸில் விட்டிருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 21. தொடக்கம் முதல் முடிவுவரை கொஞ்சமும் தொய்வில்லாமல் சம்பவங்களை விவரிக்கும் திறமை இயல்பாகவே உங்களுக்கு அமைந்திருக்கிறது. கதைத்துறையில் கால்பதித்திருந்தால் ஒரு நல்ல கதாசிரியராகப் பெயரெடுத்திருக்க முடியும்.

  பிற மொழி கற்பதிலும் கெட்டிக்காரராக இருக்கிறீர்கள்.

  இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு 'முன்மாதிரி'.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விபரமறிந்த நாள்முதல் எழுதிக் கொ'ன்று'தான் வருகிறேன்.

   வாய்ப்புகள்தான் வரவில்லை, குரு ஏழாம் வீட்டிலிருந்து வெளிவர மறுக்கிறான்.

   வர்ற ஆனி போயி ஆடி வந்தால் 'டாப்கியரில்' வருவேன் என்று கம்பளத்தாள் நேற்றுதான் குறி சொல்லி விட்டுப் போனாள்.

   இப்பொழுது நீங்களும் இதையே சொல்கிறீர்கள். காலம் கூடி வருது போல....

   (அதிரா இதை படிக்காமல் இருக்கட்டும் ஆகவே அடைப்புக்குறி)

   நீக்கு
 22. ஆஹா.... சரியான இடத்தில் தொடரும் போட்டு இருக்கீங்க! தொடர்ந்து வந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 23. உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்கூட கலக்கிவிட்டது.

  பதிலளிநீக்கு
 24. இப்படியான நேரத்திலும் கார் எண்னை கவனித்து இருக்கீங்களே....இரண்டு விரலைக்காட்டினால் அது இரட்டை இலை என மனதில் அனைவருக்கும் பதிவாகி விட்டது....ஹிஹி... நல்ல அதிகாரி நம்நாட்டில் என்றால்...டீ வாங்கி கொடுத்தது நாமாக இருப்போம். அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ அங்கு அலுவலகத்தில் காஃபி, டீ, காவா, துர்க்கீஷ் போன்றவை எப்பொழுதுமே இருக்கும்.

   நாம் டீ மட்டுமா வாங்கி கொடுக்க வேண்டியது வரும் ?

   நீக்கு
 25. பதில்கள்
  1. ஆம் நண்பரே வீட்டில் தேவையில்லாமல் ஓடுகிறதே... பணம் மிச்சம்தானே...

   நீக்கு
 26. உங்கள் அனுபவம் ஸ்வாரஸ்யமாக இருக்கிறதே கில்லர்ஜி. அங்கெல்லாம் சட்டம் எவ்வளவு வலுவாக இருக்கிறது. நேர்மையாகவும் இருக்கிறார்கள். சஸ்பென்ஸைத் தொடர்கிறோம்.

  துளசிதரன்

  நம்ம ஊரைத் தவிர அரபு நாடுகளிலும் சரி, மேலை நாடுகள் கீழை நாடுகளிலும் சரி சட்டதிட்டங்கள் உறுப்படியாகவே உள்ளது. இப்படி எழுதும் போது நம்ம ஊரை நினைத்து வேதனையும் வந்திருக்குமே...அங்கேயே....தொடர்கிறோம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் எனது நெடுங்கால ஆசை அரபு நாட்டு சட்டங்கள் இந்தியாவுக்குள் அமல்படுத்த வேண்டும்.

   நீக்கு