தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூன் 05, 2018

காக்காசு குதிரை முக்காகாசு Full’ஐ குடிச்சுருச்சு


வணக்கம் நட்பூக்களே... கீழே புகைப்படத்தில் இருக்கும் பொருள் என்னவென்று தெரியாமலா இருக்கும் தெரியும்தானே ? சமீபத்தில் கோவை எனது வீட்டிற்கு பக்கத்தில் வீடு கட்டுவதால் எமது பிளம்பிங் வேலைகளை கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டியநிலை நானே செய்ய முடியும் நான் எந்த வேலைகளையும் செய்து விடுவேன் டூல்ஸ் இல்லாத காரணத்தால் பிளம்பரை அமர்த்தி இருந்தேன் அவர் மிகுந்த தெள்ளுமணி. சைடுச்சுவற்றில் பைப் வைத்து க்ளிப் அடிக்க நானும் உதவினேன். ஆணியை கிழக்கில் வைத்து, சுத்தியலை மேற்கிலிருந்து சாத்தினான். ஆணியும், க்ளிப்பும் புடுங்கி கொண்டு அடுத்த வீட்டு தோட்டமான வடக்கு திசையில் பாய்ந்தது ஒன்றா இரண்டா ? பத்துக்கும் மேல் பிறகு நானே வாங்கி சாத்தினேன். வேலை முடிந்து அவனும் வியர்வை உலரும் முன் கூலியை வாங்கி கொண்டு போய் விட்டான். எல்லாம் முடிந்த பிறகு வடக்கு திசை தோட்டத்தில் சிதறிக் கிடந்த ஆணிகளும். க்ளிப்புகளும் எமது கண்ணை உறுத்தியது. எல்லாம் உழைத்த பணத்தில் வாங்கியது இப்படி விடலாமா ? பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி உள்ளே நுழைந்து எடுக்கலாம் என்றால் இதைப்போய் எடுக்கிறானே... என்று இழிவாக நினைப்பாரோ ? என்ற வரட்டு கௌரவம் எட்டி, எட்டி பார்த்தது. வேண்டாம் சொல்லாமல் எடுப்போம் நமக்குதான் மூளை இருக்கிறதே...

திடீரென்று சந்தேகம் இருக்கிறதா ? மீண்டும் யோசித்து இருப்பதை உறுதி செய்து விட்டு, வீட்டிலிருந்து நீளமான நைலான் கயிற்றின் முனையில் காந்த வளையத்தை கட்டிக்கொண்டு மாடிப்படியின் பகுதியில் நின்று கொண்டு மீனவன் வலை வீசுவது போல வீசினேன் அது பக்கென்று பிடிக்க சந்தோஷமாக அடுத்தவர்களுக்கு தெரியாமல் ஒவ்வொன்றாக ஆணியையும், க்ளிப்புகளையும் எடுத்தேன். கடைசியாக ஒரேயொரு ஆணி சற்று தூரத்தில் கல்தூணின் அருகில் கிடக்க... அதையும் எடுப்போம் என்று சற்று வேகமாக வீசினேன். ‘’டங்’’ என்ற சத்தம் மறுநொடி காந்தவளையம் இரண்டு துண்டாக உடைந்து தெற்கிலும், வடகிழக்கிலும் பறந்தது கயிறு மட்டும் மேலே வந்தது ச்சே கடைசி ஆணியை விட்டுத் தொலைந்திருக்கலாம்

கடைசியில் காக்காசு குதிரை முக்காகாசு ஃபுல்’’ஐ குடிச்சுருச்சே உழைத்த பணம் இப்படி போச்சே சட்டென சந்தேகம் இது உழைத்த பணமா ? மனம் பின்னோக்கி ஓடியது இந்த Magnet Ring ஐ எப்போது எங்கு வாங்கினோம் ? அபுதாபியில் நான் அரசு அலுவலகத்தில் வேலை செய்து விசா ரத்து செய்து முடித்து வரும்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டேகால் லட்சம் கோப்புகளும், கோப்புகளை அடக்கிய முப்பத்தி எட்டு மிஷின்கள், எனது மேசை, நாற்காலி, கணினி, தொலைபேசி, வாக்கிடாக்கி, ஸ்டாப்ளர், அழி ரப்பர், பின் ரிமோவர், பஞ்சிங் மிசின், பேனாக்கள், பென்சில்கள், மற்ற இத்யாதி, இத்யாதிகளோடு அனைத்தையும் திருப்பி ஒப்படைக்குபோது இவ்வளவு காலம் வேலை செய்த அலுவலகத்தின் ஞாபகார்த்தமாக ஸ்டாப்ளர் பின்களை பொறுக்குவதற்காக கொடுத்திருந்த Magnet Ring ஐ இப்படியே அனாதையாக விட்டுப் போனால் துருப்பிடித்து வீணாகி விடுமே என்ற கவலையால் அதை இந்தியாவுக்கு கொண்டு செல்வோம் என்ற உயர்ந்த சிந்தனையின் காரணமாக கொண்டு வந்தது தவறோ ? அதனால்தான் உடைந்து போனதோ ? சரி உழைத்த செல்வம் கை விட்டுப் போகாது என்றார்களே காந்த வளையம் போனது சரி அரசு பணம். ஆனால் எனது சொந்த பணத்தில் வாங்கிய அந்த கடைசி ஒரு ஆணி போய் விட்டதே காரணமென்ன ? ஏதாவது சாமியாரைக் கண்டு அருள் வாக்கு கேட்க வேண்டுமென்று இருக்கிறேன்.


Chivas Regal சிவசம்போ-
ஆந்தைமடை, ஆருடர் ஆண்டியப்பனை கேட்டால் எல்லாம் சொல்வாரே...

80 கருத்துகள்:

 1. வாவ்வ்வ்வ்வ்வ் இண்டைக்கும் மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஉ பூஸோ கொக்கோ:)) வேறு ஆராவது 1ஸ்ட்டா வந்திடத்தான் முடியுமோ?:))
  இல்ல என் செக்:) ஆல தான் முடியுமோ?:)) ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயதில் பெரியவங்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்பதே எனது வழக்கம் :)

   நீக்கு
  2. வயதானவங்களா ???

   நீக்கு
  3. "எங்கும் முதல், எதிலும் முதல்" புகழ் சகோதரி அதிராவுக்கு மனமுவந்த நல்வாழ்த்துக்கள்...

   பெரியவர்களை மதித்துப் போற்றும் சகோதரி ஏஞ்சல் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்...

   தவறாக நினைக்க வேண்டாம். சும்மா ஒரு
   வம்புதான். கற்ற வித்தையை ஆசான்களிடம் முதலில் காண்பிப்பதுதானே முறை...

   நீக்கு
  4. "வம்பு செய்வது எப்படி ?" என்று கற்றுக்கொடுக்கும் ஆசானா அதிரா ?

   நீக்கு
  5. கலாய்த்தல் என்பதைத்தான் வம்பு என்று தூய தமிழில் (அது தூய தமிழா என்பது வேறு விஷயம்) எழுதி விட்டேன். நீங்கள் வேறு கொளுத்திப் போட்டு விட்டீர்களா? போச்சு.. போச்சு.. ஆணி போச்சு காந்தம் போச்சு. அடுத்தாக என் தலையும்... ஹா ஹா ஹா ஹா..

   நீக்கு
  6. அதிராம்பட்டணம், அதிரடி அதிரா எங்கிருந்தாலும் உடன் மேடைக்கு வரவும்.

   இப்படிக்கு
   விழா சம்மட்டி

   நீக்கு
  7. ////பெரியவர்களை மதித்துப் போற்றும் சகோதரி ஏஞ்சல் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்////
   ஹையோ ஹையோ சிவனே எனத் தன் பாட்டில இருந்த கமலா சிஸ்டரையும் இப்போ எதிர்க்கட்சியில சேரப் பண்ணிட்டினமே:)...

   அதிராவை நல்லாத்தானே வாழ்த்திட்டு வந்தா இடையில ரக் ஐ மாத்திட்டாவே:)... எய்தவர் இருக்க:) அம்பை நோக மாட்டேன்ன்ன் இதோஓ போகிறேன் என் செக்:) இடம்... அவவைப் படமெடுத்து இங்கின போட்டால்தான் நேக்கு நிம்மதீஈஈஈஈ:)...

   நீக்கு
  8. @கில்லர்ஜி ..ஆமாம் கை ஜோசிய ஸ்பெஷலிஸ்ட் சொன்னார் அதிரா மியாவ் என்னை விட 6 மாதம் பெரியவங்க

   நீக்கு
  9. https://3.bp.blogspot.com/-n_PioerY-cw/WTR3ONBIERI/AAAAAAAANn4/SYxAjnxWYPg4PBoWCia0KwT7lzfjXIAGgCLcB/s1600/IMG_5962.JPG

   நன்றீஸ் கமலா சகோதரி .இந்தாங்க இந்த பூச்சாடி உங்களுக்கே :)

   நீக்கு
  10. ஹையோ என் வீட்டுப் பூச்சாடி எல்லாம் களாவு போகுதேஏஏஏஎ:)) கில்லர்ஜி நீங்கதான் கூண்டில் ஏறி நிண்டு ஜாட்சி சொல்லப் போறீங்க:).. கொமெண்ட் பப்ளிஸ் பண்ணும்போது செக் பண்ணுங்கோ சொந்த சாடியா இல்ல களவெடுத்ததோ என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  11. நான் பூச்சாடியை பார்த்ததேயில்லை.

   நீக்கு
 2. சே..சே.. பக்கத்து வீட்டுக்குள் விழுந்த ஆணியை நீங்க தூண்டில் போட்டு எடுக்கும்போது ஆராவது பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?:)).. ஆணி பெரிசா ஆரவது பார்த்து மானம் போவது பெரிசாஆஆஆஆஆஆ??:) ஹையோ ஹையோ.. உலக்கை போற இடம் கணக்குப் பார்க்க மாட்டினமாம்ம்.. ஊசி போற இடம் கணக்குப் பார்ப்பினமாம் எனும் கதையாவெல்லோ இருக்கு இக்கதை:))..

  கடசியில அபுதாபிக் காந்தமும் பக்கத்து வளவில தஞ்சமாகிட்டுதே?:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன் காந்தத்தை படைக்கும்போதே பக்கத்து வீட்டுக்காரனுக்கு என்று எழுதி விட்டானோ...

   நீக்கு
 3. ஆரூடர் ஆண்டியப்பனைப் பார்க்க முன்னர், எதுக்கும் ஒருக்கால்.. உங்கட ஜாம்ஸ்ஸ்:)) ஊரணியில.. காதுவரை மூழ்கி எழுந்தருளுதல் நல்லம் என முருங்கியூர் முத்தாச்சிக் கிளாவி ஜொள்ளுறா:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கழுத்துவரை மூழ்குபவர்களை பார்த்து இருக்கிறேன். இதென்ன காதுவரை ?

   நீக்கு
 4. ஹாஹா :) பாதி வாசிசிச்சிட்டே வர வரைக்கும் நீங்க வீசின வளையம் யார் தலையிலோ பட்டு வசமா மாட்டிகிட்டேங்கன்னுதான் நினைச்சேன் :)
  என்ன சொன்னாலும் நேர்மையாய் உழைத்த பணத்தில் வாங்கிய ஆணி நிச்சயம் உங்க கைக்கு கிடைச்சே தீரும் .அதனால் நெக்ஸ்ட்டைம் இதை விட ஸ்ட்ராங்கான காந்த வளையத்தை வாங்கி ஆணியை எப்படியாச்சும் வலை வீசி எடுத்திடுங்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹையோ ஹையோ என் செக்:) ட அறிவு பார்த்து மீ வியக்கேன்ன்ன்ன்:)).. கில்லர்ஜியைக் கம்பி எண்ண வைக்காமல் விடமாட்டா போலிருக்கே:).. ஹா ஹா ஹா:)

   நீக்கு
  2. "காந்த வளையத்தை வாங்கி"யா?.. கில்லர்ஜிதான் அது, "ஆத்தினது" என்று சொல்லிட்டாரே. இனி எங்க புதுசு வாங்கப்போறார். அதையே எடுத்து ஒட்டிக்குவாரோ? ஹாஹாஹா

   நீக்கு
  3. "வியர்வை காயுமுன் கூலி"- ரசித்த வார்த்தைகள். இது இஸ்லாமிய நெறி.

   நீக்கு
  4. To, ஏஞ்சல்.
   நான் மறுபடியும் அபுதாபிக்கு வேலைக்கு போகணுமோ...?

   நீக்கு
  5. To, அதிரா.
   நான் எடுத்த ஆணியைத்தானே எண்ணணும் கம்பியை எதற்கு எண்ணணும்...?

   நீக்கு
  6. To,நெ.த.
   அதை எடுத்தால்தானே ஒட்டமுடியும் ?

   நீக்கு
  7. To,நெ.த.
   "இஸ்லாமிய நெறி" ஆம் நண்பரே எனக்கு விரமறிந்த நாள்முதல் இந்த வரிகளை நேசித்து...

   நான் தொழிலாளியான தருணங்களில் கூலியை எதிர் பார்ப்பேன், முதலாளியான தருணங்களில் வியர்வை உலருமுன் கூலியை கொடுத்து விடுவேன்.

   நீக்கு
  8. ஹையோ கில்லர்ஜிக்கு இன்னும் விபரம் பத்தல்ல:)) கம்பியை எண்ணி முடிச்சூஊஊஊஊ வெளியே வந்தால்தான் ஆணிகளை எண்ண முடியுமாக்கும்:)) ஹா ஹா ஹா:))

   நீக்கு
  9. எனக்கு அம்புட்டு விபரமிருந்தால் அம்புட்டு ஆணியையும் எடுத்து இருப்பேனே...

   நீக்கு
 5. வணக்கம் ஜி !

  காலமே மாறும் போதும்
  ...கடமையில் திரியா துங்கள்
  கோலமே குணத்தின் உச்சம்
  ...குலத்தொடு பிறந்த எச்சம்
  மூலமே அவன்தான் என்ற
  ...முடிவினை அறிந்தோ இந்த
  ஞாலமே சிறக்கும் வண்ணம்
  ...நன்னெறி காட்டு கின்றீர் !

  வர வர தங்கள் பதிவுகளில் ஞானியின் சாயல் தெரிகின்றது ஜி
  வாழ்க நலம் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீராளன் கவிதை அருமை. பால் திருந்து விடுவதைப் போல, கடமையில் திரிந்துவிடாது என்பது அர்த்தம். பாராட்டுகள் சீராளன்

   நீக்கு
  2. பாவலரின் கவிதையை இரசித்தேன் நன்றி.

   நீக்கு
  3. ////வர வர தங்கள் பதிவுகளில் ஞானியின் சாயல் தெரிகின்றது ஜி ///

   ஹையோ ஹையோ கவிஞருக்கு என்னமோ ஆச்சு:)... 4 ஆணிதானே என விடாமல்.. பக்கத்து வளவில் காந்தம் கட்டி விட்டுக் களவாடியரைப்போய் ஞானியாமே:)... உண்மையான அதிரா ஞானிகளையெல்லாம் யாரும் கண்டுகொள்றதே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:)... எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)

   நீக்கு
  4. ஹலோ எனது ஆணியைத்தானே எடுத்தேன் இதை களவு என்று சொல்லலாமா ?

   நீக்கு
 6. கில்லர்ஜி அந்த வளையம் கயிறு செட்டப் செய்முறை கொஞ்சம் சொல்லிதரீங்களா .ஒண்ணுமில்லை தேம்ஸ் கரை ஓரம் ஒரு வீட்டில் இருந்து நெக்லஸ் ஒண்ணை எடுக்கணும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கு காந்தம் சரியாக வராது. கயறும், அரிகரண்டியும் வேணுமே...

   நீக்கு
  2. ஹாஹாஹா காந்தம் கொண்டு களவாட இரும்பு நெக்லஸ் இல்லையே சகோ

   நீக்கு
  3. கில்லர்ஜி குறுக்கே நிண்டு மறைக்காமல் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ:))

   https://vignette2.wikia.nocookie.net/uncyclopedia/images/a/ad/Cat_Tax-cat_with_gun_looking_out_window-761932.jpg/revision/latest?cb=20080520235227

   நீக்கு
  4. seeraalan :) நான் ஐடியா போட்டது நெக்லஸ் இருக்கற இரும்பு பெட்டிக்கு :)

   நீக்கு
 7. காந்த வளையம் ஒடைஞ்சு
  ரெண்டு துண்டு ஆனதால லாபம் தானே....

  வெளக்கெண்ணெயக் குடிச்சாலும் வெவரமாக் குடிக்கோணும்..ந்னு சொல்லுவாங்க... சரிதானே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி
   வெளக்கெண்ணை குடிச்சது போல்தான் இருக்கிறது.

   நீக்கு
 8. சுவாரஸ்யமான சிந்தனை. "யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை..." .பாடல் வரி நினைவுக்கு வருகிறது!

  பதிலளிநீக்கு
 9. சில வருடங்களுக்கு முன்னால் என் அருகாமை வீட்டுக் காரருக்கு இந்த வகையில் உதவி இருக்கிறேன். அவர் வீட்டுக் கதவு ஆட்டோலாக் டைப். அனைவரும் அலுவலகம் சென்றுவிட, வயதான அவர் தாயார் எதற்கோ வெளியே வர, காற்றில் மூடிக்கொண்ட கதவு பூட்டிக்கொண்டது. சாவி உள்ளே... என் உதவியை நாட, சற்று யோசனைக்குப்பின் நீண்ட கம்பின் நுனியில் காந்தம் கட்டி, நல்லவேளையாக ஜன்னலுக்கு நேராக இருந்த அலமாரியில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சாவியை ஜன்னல் வழியே மீட்டுக் கொடுத்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த அனுபவம் விபரீதமான ஐடியாக்களுக்கு இட்டுச் செல்லாமல் இருந்தால் சரிதான். ஹாஹாஹா

   நீக்கு
  2. ஸ்ரீராம்ஜியின் அனுபவம் உதவிக்கு நன்று, நண்பர் நெ.த. அவர்கள் சொன்னதுபோல் வேறு மாதிரியானவர்கள் இதை படிக்காமல் இருக்கணும்.

   நீக்கு
  3. நான் படிச்சிட்டனே ஹா ஹா ஹா... இதில ஒரு அறிஞ்ச கதை.

   ஊரில அம்மாவுக்குக் காது கேட்காதாம். ஒரு வீட்டில் அம்மாவும் மகளும் தனியே இருந்திருக்கிறார்கள்.

   நைட் அம்மா பாத்ரூம் போக வெளியே வந்திருக்கிறா, மகளும் எழுந்து பின்னாலே வெளியே வந்திருக்கிறா.. மகள் வந்தது தாய்க்குத் தெரியாதாம், தாய் உள்ளே போய் லொக் பண்ணிட்டுப் படுத்திட்டா..

   மகள் வந்து ஜன்னலில் நின்று கூப்பிட்டிருக்கிறா, அம்மாவுக்குத்தான் காது கேட்காதெல்லோ... அதனால கதவைத் திறக்கவில்லை.

   மகள் நடுச்சாமம் என்பதால், செய்வதறியாது ஒரு நீட்டுத்தடி எடுத்து ஜன்னலால உள்ளே விட்டு அம்மாவுக்கு இடித்திருக்கிறா...

   உடனே அம்மா “கள்ளன் கள்ளன்” என பெரிய கூக்குரலாம்.. ஊரெல்லாம் ஒன்று கூடிட்டுதாம்.. ஹா ஹா ஹா பாவம் அந்த மகளுக்கு எப்படி இருந்திருக்கும்.. இப்போ அந்த அம்மா இல்லை என நினைக்கிறேன்.

   இப்படி எவ்வளவு பிரசனைகள் நாட்டில் இருக்கும் போது.. கில்லர்ஜிக்கு 4 ஆணி விழுந்தது பெரிய பிரச்சனையாப் போச்சு.. ஹா ஹா ஹாஅ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  4. எனக்கு எனது பிரச்சனையே முக்கியம்.

   நீக்கு
 10. கண்டிப்பா அந்த வளையம் யார் மேலேயாவது பட்டுருச்சோனு தோன்றியது ஆனா புட்டுக்கிச்சு போல...ஹா ஹா ஹா ஹா...

  கத்தி போச்சு வாலு வந்துச்சு டும் டும் டும் நு பார்த்தா வாலும் போச்சு...இதுக்கு ஒயிங்கா பக்கத்துவீட்டு ஆள் கிட்ட சொல்லிட்டு உள்ளே போய் எடுத்திருக்கலாம்..இதுல என்ன கௌரவக் குறைச்சல். நீங்க வாங்கினது அவரு வாங்கிப் போட்டது இல்லையே...கில்லர்ஜி பெரிய பெரிய சாமான்கள் உதவுவதை விட இந்த மாதிரி சின்ன சின்ன நட்டா போல்டாதான் ஆபத்பாந்தவன்...நான் கைல கிடைக்கற நட்டு போல்டு எல்லாம் சேர்த்து வைச்சுருவேன்..நாங்க வாங்கி வீட்டுல சிதறுவதையும் அப்புறம் நமக்குத் தெரிஞ்சவங்க வீட்டுல குப்பைல போடுவாங்க பாருங்க அப்ப சொல்லுவேன் நீங்க இதை வைச்சுக்கோங்க உதவும் பின்னாடி நு ஆனா ஹையே இதெல்லாம் யாரு வைச்சுக்குவாங்க அப்புறம் வாங்கிக்கலாம் அப்படிம்பாங்க...நான் அப்ப சரி குப்பைல போடுறத நான் எடுத்துக்கவானு அவங்க பெர்மிஷனோடு எடுத்து அவங்களுக்குத் தெரியாம எங்கேயாச்சும் பைசாவும் வைச்சுட்டு வந்துருவேன்...கொடுத்தா வாங்கிக்க மாட்டாங்க இல்லையா...அதான்....ரப்பர் பேன்ட், குண்டூசி எல்லாம்...(எங்கப்பா பழக்கம் இது...ஹா ஹா ஹா)

  நீங்க உழைத்து வாங்கியது கிடைச்சுரும்...ஸோ அந்த ஒரு ஆணியும் விட்டுறாதீங்க..ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை சிறு பொருட்கள்தான் சில நேரங்களில் மிகப்பெரிய வேலைகளை முடிக்கும். நான் எல்லாவற்றையும் பாதுகாப்பேன்.

   உங்களது பழக்கம் நன்று.

   நீக்கு
  2. ஆமா ஆமா உழைச்சு வாங்கிய தலைமுடிகளை எல்லாம் தேடித்தேடிப் பொறுக்கி ஒன்று சேர்க்கோணும் கில்லர்ஜி:)) ஹையோ எனக்கென்னமோ ஆகுது இண்டைக்கு மீ ஓடிடுறேன்ன்:))

   நீக்கு
  3. ஆமா இதுவும் சொந்தம்தானே...

   நீக்கு
 11. உடம்பு பூரா எண்ணெயைத் தடவிக் கொண்டு புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும் என்பார்கள். இதை நானும் அனுபவங்களால் உணர்ந்திருக்கேன். :))))

  பதிலளிநீக்கு
 12. ஆகா
  ஒரு ஆணியும் போய், காந்தமும் போய்விட்டதா,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே... உழைத்ததும், வளைத்ததும்.

   நீக்கு
 13. நைலான் கயித்துல ஒரு ஆணியைக் கட்டுங்க. அதை லாவகமா உடைஞ்சி கிடக்கும் காந்தத் தண்டுகள் மேல வீசுங்க. ரெண்டு துண்டும் ஒட்டிக்கும். அதை, மெல்ல...மிக மெல்ல ஆணி மேல உரசுங்க. அதுவும் ஒட்டுக்கும். ஓசைப்படாம கயித்தை இழுத்துடுங்க. இப்போ, உடைஞ்ச காந்த வளையங்கள், ஒத்தை ஆணி எல்லாமே உங்க கையில்!

  சாமியாருக்குத் தரப்போற தட்சணையை எனக்கு அனுப்பிடுங்க கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே இதுவும் நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது.

   இது சரியானால் உங்களது தட்சிணை வரும் நன்றி நண்பரே.

   நீக்கு
  2. அறிவுப்பசி ஜியின் ஐடியாத்தான் பெஸ்ட்:)

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  சுவாரஷ்யமான அனுபவம்தான். ஆனால் அந்த நிலையில், (புதிதாக வாங்கிய பொருள் வேறு) நம் உழைப்பில் வாங்கியதாச்சே. .. என்றுதான் தோன்றும்.
  பேசாமல், பக்கத்து வீட்டில் அனுமதி பெற்றே எல்லா ஆணியையும் எடுத்து வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தங்களுக்கும், அந்த இரும்பு காந்த உபகரணமும் போன பிறகு தோன்றியிருக்கலாம். ஹா ஹா
  சுண்டைக்காய் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம், என்பது போல் ஆணியும் போச்சு. அத்தோடு காந்தமும் போச்சு..
  அது சரியான இடத்திற்குதான் போயிருக்கிறது. இரும்பையும் காந்ததையும் பிரிக்க முடியாதல்லவா?
  ஆனால் உழைத்த பணம் நம்மை விட்டு என்றும் போகாது. விரைவில் காந்தமோடு இரும்பு ஆண்களும் தங்களை வந்தடையும். (பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகவே) நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ இந்த யோசனை காந்தம் உடைந்த பிறகே எனக்கு தோன்றியது.

   வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 15. போனால் போகட்டும் போடா என்று விட்டு விடுங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 16. உங்களின் முயற்சி அருமை ஜி...!

  பதிலளிநீக்கு
 17. "ஆணிக்கும்" அடி சறுக்கியிருச்சோ?

  பதிலளிநீக்கு
 18. என்ன சொல்ல....ம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை படித்து விட்டு போறவரே

   உங்கள் கருந்தை சொல்லி விட்டு போங்க...

   நீக்கு
 19. நல்ல படிப்பினை. வித்தியாசமான பழமொழிப் பிரயோகம்.

  பதிலளிநீக்கு
 20. ஒருவேளை அது கடைக்காரர் கொசுறாக கொடுத்த ஆணியோ என்னவோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ நண்பரே.

   நீக்கு
 21. நானும் என் வீட்டு வேலைகளை நானே கவனிப்பேன் அதுஅந்தக்காலம் இப்போதுமுடிவதில்லை ஆனால் சுற்றியுள்ளவர்கள் உதவுகிறார்கள் ஆனாலென்ன அதற்கான விலையில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 22. நீங்கள் ஏதோ சீரியசாக சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்தால்.. ஆனாலும் சுவை. இரும்பானந்தா என்று எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு சாமியார் இதைப்போன்ற இரும்பு சாமான்கள் கண்டு பிடிக்கவென்றே ஸ்பெஷல். வருகிறீர்களா? டோக்கன் போட்டு விடுகிறேன். ரூ.இருநூறுதான் காணிக்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஒரு ஆணிக்கு நான் மறுபடியும் 200 ரூபாய் செலவு செய்யணுமா ?

   நீக்கு
 23. அந்த ஆணியில் உங்க வியர்வை இருக்குமே.அதான் உங்க உழைப்பு. அதை எப்படியாவது எடுங்க அண்ணாஜீ. இங்கு நாங்களே அனேகமான வேலைகளை செய்யவேண்டும். கூலி கொடுத்து கட்டுப்படியாகாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எப்படியாவது மீட்டு விடவேண்டும் வருகைக்கு நன்றி

   நீக்கு