தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூன் 10, 2018

ஒரு நாயின் கதறல்


1986 இல் வெளியான ஒரு தாயின் சபதம் படப்பாடலை அதே மெட்டில் பாடிப் பாருங்களேன் வீட்டில் பழைய மூடையை கிளறியபோது நிறைய கிடைத்தது எனக்கே சில விடயங்கள் ஆச்சர்யம் நமது சிந்தையா என்று.

போட்டேனே ஒரு போடுதான்
போனதே தலை தனியேதான்
நான் வெட்டுனேன் அது தப்புதான்
காரணம் எனக்கு மப்புதான்

பெத்தவளுக்கு அவன் புள்ளடா
மத்தவளுக்கு மனம் கல்லுடா
வெட்டுனது தப்புதானு நீ சொல்லுறே
வெட்டிவிடு பணத்தை நான் கேட்கிறேன்

நன்றி கெட்ட மகனுக்காக
நாணயம் கேட்கும் பெத்தவளே
உன்னைச்சொல்லி குற்றமில்லை
குத்தியதால் தானே தொல்லை

அடுக்கு மொழி நானும் சொல்வேன்
மகன் போனது மண்ணுக்குதானே
மனுஷி திங்க சோறு வேணும்
அமௌண்டை வெட்டி விடு நீனும்

உன் புள்ளையவன் பாக்கிய தரலை
கொடுத்தவனுக்கு வட்டியும் வரலை
விடுவானா வட்டிக்கடை சேட்டு
போடச்சொன்னான் அருவாள் வெட்டு

எதுக்கு இனி வெட்டிப்பேச்சு
வெட்டியது முடிஞ்சு போச்சு
வாரம் ஒண்ணும் ஆயாச்சு
வாங்கித்தாடா நீயும் காசு

போட்டேனே ஒரு போடுதான்
போனதே தலை தனியேதான்
நான் வெட்டுனேன் அது தப்புதான்
காரணம் எனக்கு மப்புதான்

இதோ உண்மையான பாடலின் யூட்டியூப் இணைப்பு

சிவாதாமஸ்அலி-
மூடையை கிளறியதா... இனி நாம மனதை திடப்படுத்திக்கோணும்.

46 கருத்துகள்:

  1. ஆங்ங்ங்ங்.. இங்கின மீதானே 1ஸ்ட்டூஊஉ?? இல்ல கில்லர்ஜி பப்ளிஸ் பண்ணாமல் நித்திரையாகிட்டாரோ கர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா நல்ல கொப்பியடிப்பாடல்:)).. நானும் இப்படித்தான் ஒன்று ரெடி ஆக்கிக்கொண்டிருக்கிறேன் இப்போ கொஞ்சக் காலமா:)) இன்னும் முடியுதில்லை:))...

    ஊசிக்குறிப்பு:
    தலைப்பைக் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.. நன்றியுள்ள ஜீவனை எதுக்கு தலைப்பில் போட்டு திட்டுறீங்க.. மனிதன் செய்யும் தவறுக்காக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது பாடலையும் வெளியிடுங்கள்.

      நான் நாயை திட்டவில்லையே... காலா படத்தில் நடித்த நாய்க்கு கோடிக்கணக்கில் விலை பேசப்படுகிறதாம்.

      நீக்கு
    2. ஓ இப்போ புரிஞ்சுபோச்சு கில்லர்ஜி.. நான் நினைத்தேன் அந்த தலையை வெட்டியவரின் கதறல் எனப் போட்டிருக்கிறீங்க என ஹா ஹா ஹா.. அவரைத்தான் அப்படித் திட்டுறீங்க என..

      நீக்கு
    3. வாங்க இப்பவாவது புரிந்ததே நன்றி

      நீக்கு
  3. பாடல் நல்லாத்தான் எழுதியிருக்கீங்க. ஏன் இந்தக் கொலைவெறி...ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வழக்கமாக ஜியெம்பி ஐயா சொல்வார்.

      இப்ப நீங்கள் முந்தி விட்டீர்கள்.

      நீக்கு
    2. என்னைப் போல் சொல்பவர்களும் இருக்கிறார்கள்

      நீக்கு
    3. வாங்க ஐயா ஹா.. ஹா.. இப்பவும் இதே கருத்துதானா ?

      நீக்கு
  4. இரண்டையும் இரசித்தேன் அருமை

    பதிலளிநீக்கு
  5. நல்ல இருக்கு.ஆனா "why this kola veri"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உங்களது கேள்வியில் விளைந்த பாடல் நேற்று பிறந்தது.

      ஆனால் ?

      இவை எழுதி வைத்தே மாமாங்கம் கடந்து விட்டதே...

      நீக்கு
  6. உங்கள் கவிதையை படித்தேன். காணொளி பாடலை கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இணைப்புக்கு சென்றமைக்கு நன்றி

      நீக்கு
  7. இப்படியெல்லாம் கூட நடக்குதா!...

    பாவம் அந்த நாய்!...
    போனாப் போவுது...ன்னு விட்டுருக்கலாம்!...

    பதிலளிநீக்கு
  8. அப்பவே இப்படி எழுதியிருக்கிறீங்க.அருமை.ரசித்தேன்
    சிவாதாமஸ் அலி சொன்னதை வழிமொழிகிறேன். ஹா..ஹா..

    பதிலளிநீக்கு
  9. தாயின் சபதம் படப்பாடலிலிருந்து இப்படி ஒரு கவிதையா!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    அழகான சிந்தனை. ஒரு தாயின் சபதம் பாடலை நான் இதுவரை கேட்டதில்லை. தாங்கள் கொடுத்த இணைப்பின் மூலம் கேட்டேன். அதற்கேற்றவாறு தாங்கள் எழுதிய பாடலும் பொருத்தமாக நன்றாக இருந்தது. ரசித்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இணைப்புக்கு சென்று கேட்டமைக்கு நன்றி

      நீக்கு
  11. பல சமயங்கள் இதெல்லாம் ஆச்சரியமா இருக்கு. ஶ்ரீராம் போடும் பல பாடல்கள், சினிமாக்கள், இப்போ நீங்க சொல்லும் ஒரு தாயின் சபதம்! இப்படி எல்லாம் படம் வந்திருக்கு? பாடல் வந்திருக்கு? அதுக்கும் காலா படத்துக்கும் தொடர்பு? எதுவுமே புரியலை போங்க! அந்தப் பாடலைக் கேட்டேன், இந்தப் பாடலைப் படித்தேன், ரசித்தேன்! நான் வேறே ஏதோ உலகில் வசிக்கிறேனோ? !!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இப்ப வந்த "காலா" படத்துக்கும், காலம்போன "ஒரு தாயின் சபதம்" படத்தையும் ஏன் ஒப்பிடுறீங்க ?

      நீக்கு
  12. அடுக்கு மொழி, ஆரவாரமான சொல்லாட்சி, செவிக்கினிய சந்தம் என்று கலக்கியிருக்கிறீர்கள். பழைய மூடையைப் பத்திரப்படுத்துங்கள். அதிலிருந்து பொறுக்கி எடுத்த கவிதைகளை அவ்வப்போது வெளியிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது அழகிய கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  13. மூடையை கிளறினா.... பழைய பொக்கிசங்கள் கிடைக்குது...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே வைரம், வைடூரியம் ஏதும் வரவில்லையே....

      நீக்கு
  14. எனக்கு பிடிச்ச பாட்டை இபாடி பண்ணிட்டீங்களே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானை பாசத்தையும், கோபத்தையும் பிடிச்ச இடத்தில்தான் காட்டும்.

      நீக்கு
    2. நீங்க நல்லாவே காட்டி இருக்கீங்க சகோ....வெட்டு ஒன்னு, துண்டு இரண்டு....

      நீக்கு
    3. ஆமாம் சகோ இதுதானே நம்மூர் பாணி.

      நீக்கு
  15. பாடல் அருமை
    கவிஞருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. நன்றாக இருக்கிறது கில்லர்ஜி ரசித்தோம். உங்களுக்கு கவிதை எழுத வருகிறது.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  17. பாடலாசிரியர் தயார் நிருபித்து விட்டிர்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு