வணக்கம்
நண்பர்களே... ‘’மல்லிகை என் மன்னன் மயங்கும்’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி
இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
கண்ணான மடல் அல்லவோ
உன் வாரமும் என் பூசை போல்
கண் பூவைத்தான் தேடிக்கொள்ளவோ
கள்ளிகை உன் கண்ணன் தயங்கும்
கண்ணான மடல் அல்லவோ
மங்கள் தேனியை சொட்டு பாராட்டுது
தளிர் ஆற்றிலே பளிர் மாங்கொடி
கெஞ்சி வீசியே பண்பை ஆராட்டுது
உன் பஞ்சும் பஞ்சம்தான்
பையோடு நீ கிள்ளவோ
தன் ராமனே உன் சீதைதான்
அவ்வேளையில் என் சேவை சொல்லவோ
கள்ளிகை உன் கண்ணன் தயங்கும்
கண்ணான மடல் அல்லவோ
கொஞ்சும் தங்கமும் இன்றும்தான் வந்தது
ஈராயிரம் துன்ப காவியம்
எந்தன் கைகளில் கிள்ளித்தான் வந்தது
எம் உள்ளம் பள்ளம்தான்
இன்றோடு நன்றானது
உன் சந்தமும் அந்த சாந்தமும்
என்னோடுதான் சூடிக் கொண்டது
கண்ணான மடல் அல்லவோ
உன் வாரமும் என் பூசை போல்
கண் பூவைத்தான் தேடிக்கொள்ளவோ
கள்ளிகை உன் கண்ணன் தயங்கும்
கண்ணான மடல் அல்லவோ
படம்: தீர்க்க சுமங்கலி
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நான் அல்லவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்ப காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் உள்ளம் வெல்லம்தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
https://www.youtube.com/watch?v=oAeifBAU-Ns
நன்றி –கில்லர்ஜி தேவகோட்டை
ஆகா, நையாண்டியான பரிகாசம்!
பதிலளிநீக்குசூப்பர்!
வருக நண்பரே தங்களது உடனடி வருகைக்கு நன்றி.
நீக்குகண்ணான மடல் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதலைப்பு ஏன் அப்படி?
வருக சகோ எதிர்ப்பதாக வைத்தேன் அவ்வளவுதான்...
நீக்குதலைப்பு திடுக்கிட வைத்தது.... ஹா ஹா ஹா
பதிலளிநீக்குவருக தமிழரே நீங்களே இப்படி பயப்படலாமா ?
நீக்குநண்பரே,... உங்களுக்கு என்னுடைய ஒரு ஸ்மால் ரிக்கொஸ்ட்.!!..
பதிலளிநீக்குபழைய பாடல்களை உங்கள் பாணியில் மாற்றி எழுதுவதற்கு பதிலாக... நீங்களே புதியதாக சினிமாவுக்கு "வாலி"யைப்போல பாடல் எழுத முயற்சிக்கலாமே?!!... நாங்களும் உங்கள் பாடல் ஒலிப்பேழைகளில் ஒலிக்கும்போதெல்லாம் பார்ப்பவர்களிடம் இதோ இந்த பாடலை எழுதியது எங்கள் நண்பராகிய "கில்லர்ஜி"யாக்கும் என்று பெருமையாக பீற்றிக் கொல்வோமே... சாரி... கொள்வோமே... முயற்சி செய்வீர்களா???...
சிவா சகோ, இதை நானும் முன்னர் சொல்லியிருக்கிறேன் கருத்தில். கில்லர்ஜி நிறைய எழுதியிருக்கிறார் இங்கு பதிவாகவும். கும்மிப் பாட்டு, நாட்டுப்புறப்பாட்டுன்னு.....நானும் உங்கள் கருத்தைத்தான் சொல்லியிருந்தேன் இப்படி மாற்றி எழுதும் பதிவில்...
நீக்குகீதா
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குஆனால் யாராவது வாய்ப்பு வாங்கி வாருங்களேன்.
நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குமுயற்சி செய்கிறேன்.
கில்லர்ஜி, தலைப்பு ஆஆஆஆ.....
பதிலளிநீக்குவழக்கம் போல் உங்கள் பாணி!!! நல்லாருக்கு....
கீதா
வருக நன்றி
நீக்குஅருமை ஜி...
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபாடல் பதிவு அருமை. தலைப்பு கொஞ்சம் புதிதாக உள்ளது. தீர்க்க என்பதற்கு வேறு மாற்றுச்சொல் கண்டுபிடித்து இருக்கலாமே...!!
பாடலுக்கு தகுந்தபடி வார்த்தைகளை மாற்றி யோசித்திருப்பதற்கு வாழ்த்துகள். கருத்தில் சகோதர, சகோதரிகள் கூறியுள்ளபடி தாங்களும் ஒரு திரைப்பட பாடல் ஆசிரியராகி புகழ் அடையலாம். அதற்கான திறமை தங்களிடம் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குதலைப்பு இவ்வளவு பிரச்சனையை உண்டாக்கி விட்டதே...
தலைப்பு படித்ததும் ஏன் இப்படி? என நினைத்தேன்.
பதிலளிநீக்குவழமைபோல ஹா..ஹா.....
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஇந்தப் பாடலை எழுதியவர் வாலி..
பதிலளிநீக்குஅப்படியா ? இதோ மாற்றி விடுகிறேன் ஜி
நீக்குஜி பல இடங்களில் பார்த்து விட்டேன் இதுவே தகவல்.
நீக்குSong : Malligai En Mannan
Movie/Album Name : Dheerga Sumangali 1974
Star Cast : R. Muthuraman and K. R. Vijaya
Singer : Vani Jayaram
Music Composed by : M. S. Viswanathan
Lyrics written by : Kannadasan
இந்த முறை ஏனோ மனம் ரசிக்கவில்லை நண்பரே!..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
வருக ஜி
நீக்குஅடுத்த பாடலை இரசிக்கும்படி எழுதி விடலாம்.
மாற்றி எழுதுகிறேன் என்று ரசிக்கும்படியான வார்த்தைகள் இல்லாமல் எழுதாமல் சந்தத்துக்கு தகுந்தாற்போல் வருமாறு அர்த்தத்துடனேயே எழுத முயற்சிக்கலாமே நீங்கள்..
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி அப்படி எழுதினால் தனியாக பாடலாகத்தான் (அதாவது எனது பாடலாக) வரும்.
நீக்குதலைப்பு அதிர்ச்சி அடைய வைத்தது. :( பாடலில் மனம் லயிக்கவில்லை.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்கு