தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூன் 09, 2024

கிடைக்கும் அல்லது தெரியும்


   ணக்கம் நட்பூக்களே... நல்லவன் வாழ்வான் என்று நமக்கு சொல்லி தந்த முன்னோர்கள் கெட்டவன் சாவான் என்று சொல்லவில்லையே காரணம் என்ன ? முதற்காரணம் வாய்மொழி வாக்குகள் நல்லவைகளாக இருத்தல் அவசியம் அடுத்து நல்லவனாய் இருந்தால் வாழ்வான் என்ற விதையை நம்முள் விதைத்து விட்டனர். மேலும் நல்லவனோ, கெட்டவனோ மரணம் அனைவருக்கும் உறுதிதானே...
 
இன்றைய நிலையில் எங்கும் பாருங்கள் நல்லவர்கள் பெரும்பாலும் வாழ்வதாக தெரியவில்லையே... அதேநேரம் கெட்டவர்கள் ராஜவாழ்க்கை வாழத்தான் செய்கின்றனர். என்பதை நாம் கண் கூடாக காண்கிறோம். கொள்ளையடிக்காத அரசியல்வாதிகள் யாராவது இருக்கின்றார்களா ? கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை சுருட்டி வாழ்கின்றார்களே... இவர்களெல்லாம் நல்லவர்களா ? என்று நான் கேட்க போவதாக நினைப்பீர்கள் அதுதான் இல்லை இதுதான் உங்களுக்கே தெரியுமே...
 
எனக்கு தெரிந்த இந்த உலகம் அறியப்படாத எத்தனையோ நல்ல மனிதர்கள் தங்களது மரணகாலம்வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து மறைந்தார்களே இதற்கு காரணமென்ன ? புரியாத புதிர்தான் மனித வாழ்க்கை. நல்லவன் மரணத்திற்கு பின்பு இறைவனுக்கு பயப்பட தேவையில்லை. கெட்டவன் வாழும்போது இறைவனுக்கு பயப்படவில்லை. ஆனால் இருவருக்கும் இப்பொழுது நிலைமை மாறுகிறதே... இதுதான் விதி.
 
பாசத்துக்காக வாழ்ந்தவன் நிம்மதியின்றி வாழ்ந்து முடிக்கின்றான், பணத்துக்காக வாழ்ந்தவன், சுகபோகமாக வாழ்ந்து முடிக்கின்றான். இருவருக்குமான தீர்வு மரணத்திற்கு பிறகு நிச்சயமாக கிடைக்கும், அல்லது தெரியும். அது பரிசோ, தண்டனையோ... வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான். இதுவே இறைவனின் இறுதி தீர்ப்பு.
 
கில்லர்ஜி புதாபி
 
காணொளி

18 கருத்துகள்:

  1. மரணத்துக்குப் பின் என்ன என்று யாருக்கும் தெரியாது.  'அங்கு' பலன் கிடைக்கும் என்று மனிதன் நம்புகிறான்!   என்ன செய்ய, இதுபோன்ற மனத்தீர்வுகளால்தான் கொஞ்சமாவது நிமமதியுடன் வாழ முடிகிறது!

    பதிலளிநீக்கு
  2. கில்லர்ஜி, இந்த வாசகம் ஏற்புடையதாக இல்லையே கில்லர் ஜி. நல்லவர்களாக இருப்பவர்கள் நிம்மதியோடு வாழ்வதும் உண்டு. வாசகம் கொஞ்சம் முரண். நல்லவர்களின் மனசாட்சி அவர்களை நிம்மதியாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். நம் மகிழ்ச்சி நம் கையில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இன்றைய வாழ்க்கைச் சூழல் மாறி வருகிறதே...

      நீக்கு
  3. கில்லர்ஜி எனக்கும் இப்படியான எண்ணங்கள் இருந்ததுண்டு. பொதுவெளியிலும் சரி குடும்பத்திலும் சரி, ஆனால் யாரையும் திருத்தவோ மாற்றவோ முடியாது.
    மரணத்தின் பின் என்னாகும்னு யோசித்ததும் இல்லை. அதை அளவுகோலாக வைத்து நாம நல்லவங்களா இருக்கணும்னு யோசிப்பதும் இல்லை. யாரும் 100 % நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. நான் உட்பட. எனவே நாம் நம்மை மேம்படுத்திக் கொண்டே, தவறுகளை உணர்ந்தால் அதைத் திருத்திக் கொண்டு, இப்ப இந்த நிமிஷம் என்றும், உலகில் இருக்கும் வரை கூடியவரை நல்லவர்களாக இருக்க முயற்சி செய்வோம்னும் கடப்பது நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். நம் மகிழ்ச்சி நம் கையில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான, அழகிய கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. மரணத்தின் பின் என்னவோ?

    எங்கள் மன அமைதிக்காக நல்லவர்களாக வாழ முயற்சிப்போம்.

    பதிலளிநீக்கு
  5. நண்பரே! நல்லவன் தனக்கு என்று எதையும் சேர்த்து வைத்து கொள்ள மாட்டார்! வருவது வரட்டும் போவது போகட்டும் என பிறர் பணி செய்பவரே! நல்லவர்! எனவே கஷ்ட்டப்படுவதை தம் சிந்தனை செய்து கூட யோசிக்காதவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  6. நல்லதை நினைக்க வேண்டும், நல்லதே பேச வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னார்கள். கதைகள் மூலமும் நமக்கு சொன்னார்கள்.
    நம் மரணம் நம் கையில் இல்லை.

    பாசமாக இருப்பது போல நடிப்பவர்கள், நிறைந்த உலகம், உண்மையான பாசம் செலுத்தி எதிர்பக்கம் பாசம், அன்பு கிடைக்கவில்லை என்றால் அதை நினைத்து மனம் கஷ்ட படும், வேதனை படும்.

    கிடைக்காத இடத்தில் அதை தேடுவதை விட நம்மை விரும்புவர்கள் மேல் அன்பு செலுத்தி மகிழ்ச்சியாக வாழ பழகி கொள்வோம் ஜி.
    காணொளி கேட்டேன். பார்த்தவுடன் நினைவுக்கு வந்த பாடல்

    பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே!
    பாசம் வைத்து நேசம் வைத்தால் மிருகம் கூட தெய்வமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா உங்கள் கடைசி வரி எனக்கு பாரதியின் பாடலை நினைவூட்டியது. பகைவனுக்கருள்வாய் நன் நெஞ்சே பகைவனுக்கருள்வாய்.... புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே.... தின்னவரும் புலிதன்னையும் அன்போடு சிந்தையிற் போற்றிடுவாய் ...

      கீதா

      நீக்கு
    2. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  7. அந்த வாசகம் ஆழமான கருத்தைச் சொல்லி யோசிக்க வைக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அந்த வாசகமே பதிவுக்கு வித்தாகியது.

      நீக்கு
  8. நல்லதை மட்டுமே நினைப்போம். நல்லதையே செய்வோம்.

    பதிலளிநீக்கு