தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 22, 2024

அன்பே ஆஷா

ழகியவளை
ழ விடாதே
 
சைப்படலாம்
ணவப்படாதே
 
ந்தியாவை
தயத்தில் வை
 
சனை காண
ரோடும் செல்
 
ன்னவளுக்கு
ணமையாயிரு
 
னமாயினும்
க்கத்தோடிரு
 
ள் விதைத்து
ண்ணையெடு
 
ர்வாடியில்
ரோட்டி வை
 
யப்பனிடம்
க்கியமாகு
 
ளியற்றதை
ழித்து விடு
 
வியாவோடு
டி விடாதே

வையோடு
தடம் நாடு
 
ஹி இஹி
ஹி இஹி
 
கில்லர்ஜி புதாபி

21 கருத்துகள்:

  1. அழகாக, ஆர்வமாக இயல்பாக ஈகையுடன் உறுதியாக ஊக்கமுடன் எப்படி ஏதோ ஒன்றை ஓசைநயத்துடன் ஒளவையார்போல அஃதேசுவாரஸ்யத்துடன் 

    எழுதி விடுகிறீர்கள்!  ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  2. ஐ விட்டுப்போனதால் திருத்தம்!

    அழகாக, ஆர்வமாக இயல்பாக ஈகையுடன் உறுதியாக ஊக்கமுடன் எப்படி ஏதோ ஐயமின்றி ஒன்றை ஓசைநயத்துடன் ஒளவையார்போல அஃதேசுவாரஸ்யத்துடன்.... 

    எழுதி விடுகிறீர்கள்!  ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கவிதை போன்ற கருத்தும் அருமை.

      ஏதோ விடுபட்டு இருக்கின்றது உடன் எழுதி விட்டேன் ஜி

      நீக்கு
    2. படித்து விட்டேன் ஜி. நன்று.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  3. உயிர் எழுத்தில் வரிசை படுத்தி கவிதை அருமை.உங்கள் கவிதைக்கு ஸ்ரீராமும் இசைபாட்டு பாடிவிட்டார்.
    தலைப்பு அன்பே ஆஷா, பழைய சினிமா திரையரங்கம் போல உள்ளது
    ஓவியாவோடு ஓடி விடாதே என்று யார் கவிதை எழுதி இருக்கிறார் ஆஷா தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாராட்டுக்கு நன்றி.

      சிறு அகவையில் பாம்பன் ஆயிஷா டூரிங் டாக்கீஸில் இப்படித்தான் அமர்ந்து படம் பார்த்து இருக்கிறேன்.

      நீக்கு
  4. உங்கள் ஆர்வம் பாராட்டத் தக்கது கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  5. ஓவியாவோடு ஓட இப்ப யாரேனும் ஆர்வமா இருக்காங்களா? ஓவியாவோட லேடஸ்ட் புகைப் படங்கள் பாத்தீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹூம் ஓவியானாலே அந்த ஓவியாதானா!!!!!

      கீதா

      நீக்கு
    2. அதானே... எங்கள் ஓரியூர் அத்தை மகள் ஓவியாவாக இருக்கக்கூடாதா ?

      நீக்கு
    3. சொல்ல வந்தேன் கில்லர்ஜி - கில்லர்ஜியின் அத்தை மகள்!!!! என்று..

      கீதா

      நீக்கு
  6. அ முதல் ஔ வரை அருமை!

    ஸ்ரீராம் பதிலிலேயே அ முதல் ஔ வரை சொல்லிட்டார் அதுவும் சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. உயிர் எழுத்துக்களை வைத்து ஒரு பதிவு - ஆஹா... ஸ்ரீராம் அவர்களின் பின்னூட்டமும் சிறப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உயிர் எழுத்துக்களை வைத்து எழுதிய கவிதை அருமை. படித்து ரசித்தேன். சுருக்கமாக ஆனால் அழகான வார்த்தைகளை அமைத்து, இப்படி எழுதுவது தங்களின் தனித்திறமை. தொடரட்டும் தங்களின் பதிவுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு