தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 01, 2024

தெய்வத்தின்ற பூமியில்...

கேரளாவில் திருச்சூரின் விஷ்ணு மாயா கோயிலில் திரைப்படக் கூத்தாடி திருமதி குஷ்பு அவர்களுக்கு கும்பமரியாதை. அதாவது வருடத்திற்கு ஒருமுறை ஒரு பெண்மணியை தேர்வு செய்து இப்படி மரியைதை சய்வது இக்கோயிலில் தொன்று தொட்டு நிகழும் நிகழ்வாம். இதில் கடந்த 03.10.2023 தேதியில் நடந்து இருக்கின்றது.
 
இது கோயில் நிர்வாகம் ஏற்பாடாம் இவர்களுக்கு பக்தி உண்மையிலேயே இருக்கிறது என்றால் இப்படி சக்தியின் வரம்பை மீறி செயல்படுவார்களா ? குஷ்பு யார் ? இவர் கண்ணகி பரம்பரையில் வந்தவரா ? அவர் வேற்று மதம் என்பதற்காக சொல்லவில்லை. இவரது பழைய வாழ்க்கை எப்படிப்பட்டது ? இதே குஷ்பு நாளையே ஒரு கொ.இ.க. கட்சியில் சேர்ந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம் உடனே இக்கட்சியின் அடிவருடிகள் அவரது மூன்று தலைமுறைகளை தோண்டி எடுத்து பேசுவார்கள்.
 
ஏண்டா தமிழ்நாட்டில்தான் இப்படி குஷ்புவுக்கு கோயில் கட்டிய கூத்துகள் நடக்கும் என்றால் கேரளாவிலுமா ? நீங்கள் அறிவாளிகள் என்றுதானே சர்வே சொல்கின்றது. விளக்கமாற்றுக்கு பட்டு குஞ்சம் என்பது போலுள்ளது, அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் தொடர்பு என்ன ? திருமணத்துக்கு முன்பு பெண்கள் எப்படியும் வாழலாம் என்று உங்கள் குஷ்பு சொன்னதை உங்களது வேதம் ஏற்றுக்கொள்கிறதா ?
 
எல்லா கூத்தாடிகளுமே நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள் ரசிகனும், தொண்டனும் உள்ளவரையில் இங்கு நாம் என்ன செய்தாலும் ரசிப்பார்கள் என்பதை... காவிரியில் தண்ணீர் விட கன்னட கூத்தாடிகள் எதிர்க்கின்றார்கள். அவர்கள் நடித்த திரைப்படங்களை தமிழ்நாட்டில் கொண்டாடுகின்றீர்கள். ஒருநாள் சோறு கிடைக்காது அன்று தெரியுமடா உங்களுக்கு பசியின் வலி. தெய்வம் நின்று கொல்லும் என்பார்களே அதன் வலியும் புரியும். சுந்தர்ச்சீ உன்னை எல்லாம் தமிழன் என்பதில் பெருமையே கிடையாதூ
 
கில்லர்ஜி புதாபி
 
 
சிவாதாமஸ்அலி-
யாருக்கும் வெட்கமில்லை எம்எஸ்வி பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
 
Chivas Regal சிவசம்போ-
நமக்கு தண்ணி வந்தால் சரிதான் அதுக்கு மட்டும் தடை செய்து பார்க்கட்டும், தமிழ்நாடு அதிரும்டா...

9 கருத்துகள்:

  1. சுந்தர்சி இதிலெங்கு வந்தார்? அவர் நல்லவர். அவருடைய வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். குஷ்புவை மனைவியாக ஏற்றுக்கொண்டது அவர் குற்றமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புல்லுக்கும் அங்கே பொசியுமாம்....

      நீக்கு
    2. வருக தமிழரே
      சுந்தர் சி நல்ல இயக்குனர் இதில் மாற்றுக்கருத்து இல்லை.

      அவர் குஷ்புவுக்கு கணவராக இல்லாமல் "மனைவி"யாக வாழ்வதுதான் இழுக்கு..
      குஷ்பு தனது மாமியாரை பெயர் சொல்லித்தான் அழைப்பாராம் இதை அந்த முடுமை மாமியாரே பெருமையாக பேட்டியில் சொல்லி மகிழ்கிறார்.. எல்லாம் பணம் படுத்தும் பாடு.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இதுவும் கூத்தாடன் வசனம் போல....

      நீக்கு
  3. இந்தப் பதிவு கண்ணில் தப்பி விட்டது. என்னடா கில்லர்ஜி போஸ்ட் எதுவும் போடலையான்னு இன்று செக் பண்ணியப்ப இது பட்டது!!!

    ஹாஹாஹா கில்லர்ஜி உங்க பி பி தான் எகிறும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் மாத்திரை போட்டுக்கொண்டு இருக்கிறேன்....

      நீக்கு
  4. நம்மை காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக அவர் சொல்லி இருக்கிறார்.
    அந்த சக்தி அவருக்கு ஒரு கெளரவம் கொடுத்து இருக்கிறது.
    அப்பர் தேவாரத்தில் "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே" என்ற பாடல் கேட்டு இருப்பீர்கள். அவர் ஆட்டுவிக்கிறார். அவர் ஆடுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு