தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 05, 2024

தம்பட்டம்

ணக்கம் நட்பூக்களே... நமது அரசியல்வாதிகள் எவ்வளவோ திட்டங்கள் தீட்டினோம் அதை சாதித்தோம், இதை சாதித்தோம் என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்றும், உலகத்திலேயே இரண்டாவது நாடு என்றும் சொல்கின்றார்கள், அடிப்படையில் மக்களுக்கு வேண்டியது என்ன ?
 
தம்பட்டம் அடிப்பதில் மத்திய, மாநில இரண்டு அரசுகளுமே சரி யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால் நாமெல்லாம் இளைத்தவர்கள். எந்த வேலை எந்த அரசைச் சேர்ந்தது என்பதும் மக்களுக்கு புரியவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் எதற்கு ? பாராளுமன்ற உறுப்பினர் எதற்கு ? இவர்களின் அன்றாட பணி என்ன ? இவர்கள் அவர்களை குற்றம் சுமற்றவும், அவர்கள் இவர்களை குற்றம் சுமற்றவும் காலங்கள் கடந்து விடுகின்றன. குற்றவாளிகள் யார் ? நிரபராதி யார் ? என்று மக்களுக்கு இறுதி வரையில் தீர்வு கிடைப்பதில்லை.
 
சரியாக ஐந்து ஆண்டுகள் முடிந்து விடவும் அரசியல்வாதிகளின் ஆட்டம் ஆரம்பமாகிறது. மக்களும் எல்லாவற்றையும் மறந்து மானங்கெட்டுப் போய் அவர்கள் போடும் பாவப்பணத்தை வாங்கி கொண்டு ஓட்டுப் போடுவது இதுதானே இந்தியா முழுவதும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. பிறகு நாடு சரியில்லை, வீடு சரியில்லை என்றால் ? முதலில் நீ சரியாக செயல்படுகிறாயா ? அதை சிந்திக்கும் திறன் இல்லை.
 
எப்படி இருக்கும் ? அறிவை மழுங்கடிப்பதற்குதான் மதுக்கடைகளை அரசே திறந்து வைக்கிறது. இரண்டு பெரிய கட்சிகளுக்கும் சாராய ஆலைகள் இருக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் கடைகளில் கொள்முதல் செய்து கொள்வது என்பது இவர்களின் எழுதப்படாத சட்டம்.
 
 பிறகு எப்படி... மேடைகளில் இவரை அவரும், அவரை இவரும் புழுதி வாறி தூற்றிக்கொண்டு பேசுகின்றார்கள் ? இதுதான் மக்களை மாங்காய் மடையர்களாக வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் சதுரங்க விளையாட்டு. இது மக்களுக்கு புரிவதேயில்லை. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் சிறுவனாக இருக்கும் பொழுது கள்ளு குடிப்பவர்களை காவல்துறையினர் விரட்டி வந்து பிடித்து போவார்கள். அன்று அந்தச் செயல் கேவலமாக பார்க்கப்பட்டது இன்று ? 
 
சந்திர மண்டலத்தில் இந்திய ராக்கெட்டை இறக்கட்டும், வெளிநாட்டு வர்த்தகங்கள் இங்கு கொடிகட்டி பறக்கட்டும். பிரதமர் அடிக்கடி சொந்த விமானத்தில் உலகம் சுற்று வந்து பெருமை சேர்க்கட்டும். ஸ்விட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில், அரசியல்வாதிகளும், திரைப்படக் கூத்தாடிகளும், தொழில் அதிபர்களும் மில்லியன் கணக்கில் பணத்தை கொட்டி வைத்து விட்டு வெளியுலகம் தெரியாமல் மறைந்து போகட்டும். அடித்தட்டு மக்களுக்கு அவசியமான பயன் அரிசி விலையை குறைப்பது மட்டுமே...  இதை செய்வது யார் ?
 
கில்லர்ஜி புதாபி
 
காணொளி

20 கருத்துகள்:

 1. நாம இப்படிப் பொலம்பிக்கிட்டே இருக்கவேண்டியதுதான். மக்களுக்கு எது தகுதியோ அந்த ஆட்சியை அவங்க தேர்ந்தெடுத்துக்கறாங்க.

  அது சரி ரேஷன் கடைலதான் விலையில்லா இருபது கிலோ அரிசி கிடைக்கிறதே. அரிசி விலை குறைப்புக்குப் பதிலா மளிகை சாமான், போன்றவற்றின் விலையைக் குறைக்கிறது..

  பதிலளிநீக்கு
 2. கில்லர்ஜி டிட்டோ!! ஆனா நோ யூஸ்!!!!

  காரணம் யாருங்க? நாம மக்கள்தாங்க

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் மக்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.

   நீக்கு
 3. பிரதமர் கணக்குப்படி 140 கோடியில் 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி தரப்படுகிறது. அப்படியும் அரிசி விலை உயரக் காரணம் புரியவில்லை. பதுக்கலாக இருக்குமோ? அம்மு கிருஷ்ணா அரிசி வாங்குகிறேன். 3 மாதத்தில் 60 ரூபாயில் இருந்து 78 ரூபாய் ஆகி விட்டது.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இனி கேட்பதற்கு நாதி இல்லை.

   நீக்கு
 4. நாம் புலம்பி கொண்டு இருக்க வேண்டியதுதான்.
  நடப்பது நடந்து கொண்டே இருக்கும். மாற்றம் வராது.
  பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகலாம், ஏழை ஏழையாகவே இருக்கலாம்.
  அரசியல்வாதி என்றும் அரசியல்வாதி தான், இந்த கட்சி இல்லையென்றால் அந்த கட்சி என்று அவர்கள் வாழ்க்கை நன்றாக போகும்.
  காணொளி நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ காணொளியை இரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 5. அவர்கள் உலகம் தனி உலகம்.  உங்களோடு பயணிப்பவர்கள் போலவே காட்டிக் கொள்வார்கள்.  ஆனால் அப்படி அல்ல.  உங்களால் அவர்களை பிடிக்க முடியாது!

  பதிலளிநீக்கு
 6. அவ்வப்போது இப்படிக் கதற வேண்டியது தான்..

  ஒன்ரும் நடக்கப் போவது இல்லை..

  பதிலளிநீக்கு
 7. அப்போது மன்னர்கள் மரங்களை நட்டதும் மக்கள் நன்மைக்காக..

  இப்போது குடியாட்சியில் மரங்களை வெட்டுவதும் மக்கள் நன்மைக்காக..

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. பதிவில் தாங்கள் கூறியிருப்பது உண்மையே..! விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. என்ன செய்வது? நாம் இப்படியே புலம்ப வேண்டியதுதான். வேறு வழி? பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 9. நாம் கதறினாலும் பதறினாலும் எதுவுமே நடப்பதில்லை மானங்கெட்டவர்கள் எப்போது மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்பதை உணர்கிறார்களோ ! அதுவரை இந்த நிலைமதான்.. நண்பரே

  பதிலளிநீக்கு
 10. புலம்புவது தவிர வேறு வழி ?

  பதிலளிநீக்கு