தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 18, 2026

ஒசூர், ஒப்பாரி ஒச்சாயி


ப்புக்கு அழுதாள் ஒச்சாயி
அதை ஒப்பாரி என்றாள் ஒரு தாயி
கண்ணீரை செதுக்கினாள் ஒச்சாயி
செந்நீராய் கொதித்தாளே செல்லாயி
 
கள்ளக்கணவனின் பாடை கட்டி
கள்ளி அழுதாளே தொண்டை கட்டி
கதறி துடித்தாளே கருப்பாயி
கறுவிக் கொட்டினாள் கடுப்பாகி
 
தாடையை கட்டினர் நாடிமுட்டில்
பாடையை கட்டினர் நடுரோட்டில்
கோவிந்தன் எடுத்தான் தீச்சட்டி
கோவித்து நடந்தான் கோமுட்டி
 
தேவகோட்டை கில்லர்ஜி துபாய் 

5 கருத்துகள்:

  1. கள்ளக் கணவனுக்கும் ஒப்பாரியா..  சரிதான்.

    பதிலளிநீக்கு
  2. 'கள்ளி அழுதாலே தொண்டை கட்டி' வரியில் ளே வரணுமோ...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    நலமா? எப்படியிருக்கிறீர்கள்.? உங்களை முன்பு போல் அடிக்கடி பதிவுலகில் காண இயலவில்லையே..! வேலை பளுவோ.? உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும்.

    கவிதை நன்றாக உள்ளது. இதில் ஒப்புக்கு அழுபவள்தான் உண்மையான மனைவியா? ஒச்சாயி, செல்லாயி, கருப்பாயி இந்த மூவரில் யாரவள்.? (சற்று புரியவில்லை அதனால் கேட்கிறேன்.)

    எதையுமே வித்தியாசமாக யோசிக்கிறீர்கள். தாங்கள் வெளியிட்ட சென்ற பதிவின் குறுங்கவிகளையும் ரசித்துப் படித்தேன். மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. நகைச்சுவை கலந்த பதிவு. சிறப்பு

    பதிலளிநீக்கு
  5. பல நாட்களுக்குப் பின் பதிவில் பார்க்கிறேன், அட! என்னையறியாமல் வந்த ரைமிங்!

    பதிலளிநீக்கு