ஒப்புக்கு
அழுதாள் ஒச்சாயி
அதை ஒப்பாரி என்றாள் ஒரு தாயி
கண்ணீரை செதுக்கினாள் ஒச்சாயி
செந்நீராய் கொதித்தாளே செல்லாயி
கள்ளக்கணவனின் பாடை கட்டி
கள்ளி அழுதாளே தொண்டை கட்டி
கதறி துடித்தாளே கருப்பாயி
கறுவிக் கொட்டினாள் கடுப்பாகி
தாடையை கட்டினர் நாடிமுட்டில்
பாடையை கட்டினர் நடுரோட்டில்
கோவிந்தன் எடுத்தான் தீச்சட்டி
கோவித்து நடந்தான் கோமுட்டி
தேவகோட்டை கில்லர்ஜி துபாய்
அதை ஒப்பாரி என்றாள் ஒரு தாயி
கண்ணீரை செதுக்கினாள் ஒச்சாயி
செந்நீராய் கொதித்தாளே செல்லாயி
கள்ளக்கணவனின் பாடை கட்டி
கள்ளி அழுதாளே தொண்டை கட்டி
கதறி துடித்தாளே கருப்பாயி
கறுவிக் கொட்டினாள் கடுப்பாகி
தாடையை கட்டினர் நாடிமுட்டில்
பாடையை கட்டினர் நடுரோட்டில்
கோவிந்தன் எடுத்தான் தீச்சட்டி
கோவித்து நடந்தான் கோமுட்டி
தேவகோட்டை கில்லர்ஜி துபாய்
கள்ளக் கணவனுக்கும் ஒப்பாரியா.. சரிதான்.
பதிலளிநீக்கு'கள்ளி அழுதாலே தொண்டை கட்டி' வரியில் ளே வரணுமோ...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? எப்படியிருக்கிறீர்கள்.? உங்களை முன்பு போல் அடிக்கடி பதிவுலகில் காண இயலவில்லையே..! வேலை பளுவோ.? உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும்.
கவிதை நன்றாக உள்ளது. இதில் ஒப்புக்கு அழுபவள்தான் உண்மையான மனைவியா? ஒச்சாயி, செல்லாயி, கருப்பாயி இந்த மூவரில் யாரவள்.? (சற்று புரியவில்லை அதனால் கேட்கிறேன்.)
எதையுமே வித்தியாசமாக யோசிக்கிறீர்கள். தாங்கள் வெளியிட்ட சென்ற பதிவின் குறுங்கவிகளையும் ரசித்துப் படித்தேன். மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நகைச்சுவை கலந்த பதிவு. சிறப்பு
பதிலளிநீக்குபல நாட்களுக்குப் பின் பதிவில் பார்க்கிறேன், அட! என்னையறியாமல் வந்த ரைமிங்!
பதிலளிநீக்கு